1 சாமுவேல் 22

1 Samuel 22
அத்தியாயம் 22

அதுல்லாம் மற்றும் மிஸ்பாவில் தாவீது

தாவீது அந்த இடத்தைவிட்டுத் தப்பி, அதுல்லாம் என்னும் குகைக்குப் போனான்; அதை அவன் சகோதரர்களும் அவன் தகப்பன் வீட்டார்கள் அனைவரும் கேட்டு, அங்கே அவனிடத்திற்குப் போனார்கள். சங் 57:1-111 நாளாக 11:15சங் 142:1-7சங் 34:1எபி 11:38யோசு 12:151 சாமு 21:10-152 சாமு 23:13-14 ஒடுக்கப்பட்டவர்கள், கடன்பட்டவர்கள், முறுமுறுக்கிறவர்கள் யாவரும் அவனோடு கூடிக்கொண்டார்கள்; அவன் அவர்களுக்குத் தலைவனானான்; இந்தப் படியாக ஏறக்குறைய 400 பேர் அவனோடு இருந்தார்கள். மத் 11:28சங் 72:12-141 சாமு 1:101 சாமு 25:131 சாமு 30:22-241 சாமு 30:61 சாமு 25:15-161 சாமு 23:13 தாவீது அந்த இடத்தைவிட்டு மோவாபியர்களைச் சேர்ந்த மிஸ்பேக்குப் போய், மோவாபின் ராஜாவைப் பார்த்து: தேவன் என்னை எப்படி நடத்துவார் என்று நான் அறியும் வரை, என்னுடைய தகப்பனும் என்னுடைய தாயும் உங்களிடத்திலே தங்கியிருக்கும்படி தயை செய்யும் என்று சொல்லி, 1 சாமு 14:471 சாமு 3:182 சாமு 15:25-26யாத் 20:12ஆதி 47:11நியாயாதி 11:29மத் 15:4-6பிலி 2:23-24 அவர்களை மோவாபின் ராஜாவிடத்தில் அழைத்துக்கொண்டு போய்விட்டான்; தாவீது கோட்டையில் இருந்த நாளெல்லாம் அவர்கள் அங்கே அவனோடிருந்தார்கள். சங் 11:11 நாளாக 12:161 நாளாக 21:91 நாளாக 29:291 சாமு 23:1-62 நாளாக 29:252 சாமு 23:13-142 சாமு 24:11 பின்பு காத் என்னும் தீர்க்கதரிசி தாவீதைப் பார்த்து: நீர் கோட்டையில் இருக்காமல் யூதா தேசத்திற்குப் புறப்பட்டு வாரும் என்றான்; அப்பொழுது தாவீது புறப்பட்டு ஆரேத் என்னும் காட்டிற்கு போனான். 1 நாளாக 21:91 நாளாக 29:292 நாளாக 29:252 சாமு 24:11

சவுல் அகிமெலேக்கின் குடும்பத்தை அழித்தல்

தாவீதும் அவனோடிருந்த மனிதர்களும் காணப்பட்ட செய்தியை சவுல் கேள்விப்பட்டான்; சவுல் கிபியாவைச் சேர்ந்த ராமாவில் ஒரு தோப்பிலே உட்கார்ந்து, தன்னுடைய ஊழியக்காரர்கள் எல்லோரும் தன்னைச் சூழ்ந்து நிற்க, தன் ஈட்டியைத் தன் கையிலே பிடித்துக்கொண்டிருக்கும்போது, 1 சாமு 18:101 சாமு 19:91 சாமு 20:33ஆதி 21:33நியாயாதி 4:5 சவுல் தன்னுடைய அருகில் நிற்கிற தன் ஊழியக்காரர்களைப் பார்த்து: பென்யமீன் மக்களே, கேளுங்கள்; ஈசாயின் மகன் உங்கள் எல்லோருக்கும் வயல்களையும் திராட்சைத்தோட்டங்களையும் கொடுப்பானோ? உங்களெல்லோரையும் ஆயிரத்திற்கு அதிபதிகளும் நூற்றுக்கு அதிபதிகளுமாக வைப்பானோ? 1 இராஜா 12:161 சாமு 8:14-151 சாமு 18:141 சாமு 20:271 சாமு 20:301 சாமு 22:131 சாமு 22:91 சாமு 25:10 நீங்களெல்லோரும் எனக்கு எதிராக சதி செய்தது என்ன? ஈசாயின் மகனுடனே என் குமாரன் உடன்படிக்கை செய்யும்போது, என் செவிக்கு அதை ஒருவனும் வெளிப்படுத்தவில்லை; எனக்காகப் பரிதாபப்பட்டு, என் செவிக்கு அதை வெளிப்படுத்த உங்களில் ஒருவன் கூட இல்லையா? இந்த நாளில் இருக்கிறபடி எனக்குச் சதிசெய்ய, என்னுடைய மகன் என்னுடைய வேலைக்காரனை எனக்கு விரோதமாக தூண்டிவிட்டானே என்றான். 1 சாமு 18:31 சாமு 23:211 சாமு 20:13-171 சாமு 20:21 சாமு 20:30-341 சாமு 20:421 சாமு 20:81 சாமு 23:16-18 அப்பொழுது சவுலின் ஊழியக்காரர்களோடு நின்ற ஏதோமியனாகிய தோவேக்கு பதிலாக: ஈசாயின் மகனை நோபிலிருக்கிற அகிதூபின் மகனான அகிமெலேக்கிடத்தில் வரக்கண்டேன். சங் 52:1-91 சாமு 14:31 சாமு 21:1-15எசேக் 22:9மத் 26:59-61நீதி 19:5நீதி 29:12 இவன் அவனுக்காகக் யெகோவாவிடத்தில் விசாரித்து, அவனுக்கு வழிக்கு ஆகாரம் கொடுத்து, பெலிஸ்தனாகிய கோலியாத்தின் பட்டயத்தையும் அவனுக்குக் கொடுத்தான் என்றான். எண் 27:211 சாமு 23:21 சாமு 23:41 சாமு 30:81 சாமு 10:221 சாமு 21:6-91 சாமு 22:131 சாமு 22:15 அப்பொழுது ராஜா: அகிதூபின் மகனான அகிமெலேக் என்னும் ஆசாரியனையும், நோபிலிருக்கிற அவன் தகப்பன் வீட்டார்களாகிய எல்லா ஆசாரியர்களையும் அழைத்தான்; அவர்கள் எல்லாரும் ராஜாவினிடத்தில் வந்தார்கள். ரோம 3:15 அப்பொழுது சவுல்: அகிதூபின் மகனே கேள் என்று சொல்ல, அவன்: இதோ, இருக்கிறேன் என்னுடைய ஆண்டவனே என்றான். 1 சாமு 22:131 சாமு 22:72 சாமு 9:6ஏசா 65:1 அப்பொழுது சவுல் அவனை நோக்கி: நீயும் ஈசாயின் மகனும் எனக்கு விரோதமாக சதிசெய்து, இந்நாளில் இருக்கிறபடி எனக்குச் சதிசெய்ய அவன் எனக்கு எதிராக எழும்பும்படி, நீ அவனுக்கு ரொட்டியும் பட்டயமும் கொடுத்து, தேவசந்நிதியில் அவனுக்காக விசாரித்தது என்ன என்றான். 1 சாமு 22:8ஆமோ 7:10லூக் 23:2-5சங் 119:69 அகிமெலேக் ராஜாவுக்குப் பதிலாக: உம்முடைய எல்லா ஊழியக்காரர்களிலும் தாவீதைப் போல, ராஜாவுக்கு மருமகனும், உம்முடைய கட்டளைகளின்படி செய்து வருகிறவனும், உம்முடைய வீட்டிலே கனமுள்ளவனுமாயிருக்கிற உண்மையுள்ளவன் யார்? 1 சாமு 19:4-51 சாமு 20:321 சாமு 17:251 சாமு 18:131 சாமு 18:271 சாமு 21:21 சாமு 22:131 சாமு 24:11 இன்றையதினம் அவனுக்காக தேவனிடத்தில் வேண்டுதல் செய்யத் தொடங்கினேனோ? அது எனக்குத் தூரமாயிருப்பதாக; ராஜா தம்முடைய அடியானாகிய என்மேலாவது என்னுடைய தகப்பன் வீட்டார்களில் எவன் மேலாவது குற்றம் சுமத்தவேண்டாம்; உம்முடைய அடியான் இவைகளிலெல்லாம் ஒரு சிறிய காரியமாகிலும் பெரிய காரியமாகிலும் அறிந்ததில்லை என்றான். 1 பேது 3:16-171 சாமு 25:362 கொரி 1:122 சாமு 15:11ஆதி 20:5-6 ராஜாவோ: அகிமெலேக்கே, நீயும் உன்னுடைய தகப்பன் வீட்டார்கள் அனைவரும் நிச்சயமாக சாகவேண்டும் என்றான். நீதி 28:151 இராஜா 18:41 இராஜா 19:21 சாமு 14:441 சாமு 20:31அப் 12:19தானி 2:12தானி 2:5 பின்பு ராஜா தன்னருகில் நிற்கிற காவலர்களை பார்த்து: நீங்கள் போய், யெகோவாவுடைய ஆசாரியர்களைக் கொல்லுங்கள்; அவர்கள் கையும் தாவீதோடே இருக்கிறது; அவன் ஓடிப்போகிறதை அவர்கள் அறிந்திருந்தும், அதை எனக்கு வெளிப்படுத்தவில்லை என்றான்; ராஜாவின் வேலைக்காரர்களோ, யெகோவாவுடைய ஆசாரியர்களைக் கொல்லத் தங்கள் கைகளை நீட்ட சம்மதிக்கவில்லை. யாத் 1:171 சாமு 14:452இராஜா 1:13-141 இராஜா 1:51 இராஜா 18:41 சாமு 20:331 சாமு 22:131 சாமு 25:17 அப்பொழுது ராஜா தோவேக்கை நோக்கி: நீ போய் ஆசாரியர்களைக் கொன்றுபோடு என்றான்; ஏதோமியனாகிய தோவேக்கு ஆசாரியர்கள்மேல் விழுந்து, சணல் நூல் ஏபோத்தை அணிந்திருக்கும் 85 பேரை அன்றையதினம் கொன்றான். அப் 26:10-111 சாமு 2:181 சாமு 2:281 சாமு 2:361 சாமு 3:12-142 நாளாக 24:21யாத் 28:40ஓசி 5:11 ஆசாரியர்களின் பட்டணமாகிய நோபிலுமுள்ள ஆண்களையும், பெண்களையும், குழந்தைகளையும், கைக் குழந்தைகளையும், மாடுகளையும், கழுதைகளையும், ஆடுகளையும் கூர்மையான பட்டயத்தால் வெட்டிப்போட்டான். 1 சாமு 15:3யாக் 2:131 சாமு 15:91 சாமு 21:11 சாமு 22:111 சாமு 22:9ஓசி 10:14ஏசா 10:32 அகிதூபின் மகனான அகிமெலேக்கின் மகன்களில் அபியத்தார் என்னும் பெயருள்ள ஒருவன் தப்பி, தாவீது இருக்கும் இடத்திற்கு ஓடிப்போய், 1 சாமு 23:61 சாமு 30:71 இராஜா 2:26-271 சாமு 2:331 சாமு 23:91 சாமு 4:12யோபு 1:192 சாமு 20:25 சவுல் யெகோவாவுடைய ஆசாரியர்களைக் கொன்றுபோட்ட செய்தியை தாவீதுக்கு அறிவித்தான். அப்பொழுது தாவீது அபியத்தாரைப் பார்த்து: ஏதோமியனாகிய தோவேக்கு அங்கே இருந்ததாலே, அவன் எப்படியாகிலும் சவுலுக்கு அதை அறிவிப்பான் என்று அன்றையதினமே அறிந்திருந்தேன்; உன்னுடைய தகப்பன் வீட்டார்களாகிய எல்லோருடைய மரணத்திற்கும் காரணம் நானே. 1 சாமு 21:1-9சங் 44:22 நீ என்னிடத்தில் இரு, பயப்படவேண்டாம்; என் உயிரை வாங்கத்தேடுகிறவனே உன்னுடைய உயிரையும் வாங்கத்தேடுகிறான்; நீ என்னுடைய ஆதரவிலே இரு என்றான். யோவா 10:28-301 இராஜா 2:26எபி 12:1-3யோவா 18:9யோவா 15:20யோவா 17:12மத் 24:9யோவா 16:2-3