2 நாளாகமம் 10

2 Chronicles 10
அத்தியாயம் 10

இஸ்ரவேலர்கள் ரெகொபெயாமுக்கு விரோதமாகக் கலகம் செய்தல்

ரெகொபெயாமை ராஜாவாக்கும்படி இஸ்ரவேலர்கள் எல்லோரும் சீகேமுக்கு வந்திருந்ததால், அவனும் சீகேமுக்குப் போனான். 1 நாளாக 12:381 நாளாக 3:101 இராஜா 12:1-201 இராஜா 4:1ஆதி 12:6ஆதி 37:12-13நியாயாதி 9:1யோசு 20:7 ராஜாவாகிய சாலொமோனை விட்டு ஓடிப்போய், எகிப்திலிருந்த நேபாத்தின் மகனாகிய யெரொபெயாம் அதைக் கேட்டபோது, அவன் எகிப்திலிருந்து திரும்பிவந்தான். 1 இராஜா 11:401 இராஜா 11:261 இராஜா 11:281 இராஜா 12:2 ஆள் அனுப்பி அவனை அழைப்பித்தார்கள்; பின்பு யெரொபெயாமும் இஸ்ரவேலர்கள் அனைவரும் வந்து, ரெகொபெயாமை நோக்கி: 1 இராஜா 12:3 உம்முடைய தகப்பன் பாரமான சுமையை எங்கள்மேல் வைத்தார்; இப்போதும் நீர் உம்முடைய தகப்பன் சுமத்தின கடினமான வேலையையும், அவர் எங்கள்மேல் வைத்த பாரமான சுமையையும் எளிதாக்கும்; அப்பொழுது உமக்கு சேவை செய்வோம் என்றார்கள். 1 இராஜா 12:41 யோவா 5:31 இராஜா 4:201 இராஜா 4:251 இராஜா 5:151 இராஜா 9:221 சாமு 8:11-18யாத் 1:13-14 அதற்கு அவன்: நீங்கள் மூன்று நாட்களுக்குப்பின்பு திரும்ப என்னிடத்தில் வாருங்கள் என்றான்; அப்படியே மக்கள் போனார்கள். 1 இராஜா 12:5நீதி 3:28 அப்பொழுது ராஜாவாகிய ரெகொபெயாம் தன் தகப்பனாகிய சாலொமோன் உயிரோடிருக்கும்போது அவனுக்கு முன்பாகநின்ற முதியோர்களிடம் ஆலோசனைசெய்து, இந்த மக்களுக்கு மறுஉத்திரவு கொடுக்க நீங்கள் என்ன ஆலோசனை சொல்லுகிறீர்கள் என்று கேட்டான். யோபு 32:72 சாமு 16:202 சாமு 17:5-6எரே 42:2-5எரே 42:20யோபு 12:12-13யோபு 8:8-9நீதி 12:15 அதற்கு அவர்கள்: நீர் இந்த மக்களுக்கு தயவையும் ஆதரவையும் காண்பித்து, அவர்களுக்கு நல்வார்த்தைகளைச் சொல்வீரானால், என்றைக்கும் அவர்கள் உமக்கு ஊழியக்காரர்களாக இருப்பார்கள் என்றார்கள். நீதி 15:11 இராஜா 12:7ஆதி 49:212 சாமு 15:2-6 முதியோர் சொன்ன ஆலோசனையை அவன் தள்ளிவிட்டு, தன்னோடு வளர்ந்தவர்களும் தனக்கு முன்பாக நிற்கிறவர்களுமாகிய வாலிபர்களோடு ஆலோசனைசெய்து, 2 சாமு 17:14நீதி 1:252 நாளாக 25:15-16பிரச 10:16பிரச 10:2-3ஏசா 30:1நீதி 13:20நீதி 19:20 அவர்களை நோக்கி: உம்முடைய தகப்பன் எங்கள்மேல் வைத்த சுமையை எளிதாக்கும் என்று என்னிடத்தில் சொன்ன இந்த மக்களுக்கு மறுஉத்திரவு கொடுக்க நீங்கள் என்ன ஆலோசனை சொல்லுகிறீர்கள் என்று கேட்டான். 2 நாளாக 10:62 சாமு 17:5-61 இராஜா 22:6-8 அவனோடு வளர்ந்த வாலிபர்கள் அவனை நோக்கி: உம்முடைய தகப்பன் எங்கள் சுமையை பாரமாக்கினார், நீர் அதை எங்களுக்கு எளிதாக்கும் என்று உம்மிடத்தில் சொன்ன இந்த மக்களுக்கு நீர் சொல்லவேண்டியது என்னவென்றால்: என் சுண்டுவிரல் என் தகப்பனுடைய இடுப்பைப்பார்க்கிலும் பருமனாயிருக்கும். 1 இராஜா 12:10-112 சாமு 17:7-13ஏசா 19:11-13நீதி 10:14நீதி 13:16நீதி 14:16நீதி 18:6-7நீதி 21:30 இப்போதும் என் தகப்பன் பாரமான சுமையை உங்கள்மேல் வைத்தார், நான் உங்கள் சுமையை அதிக பாரமாக்குவேன்; என் தகப்பன் உங்களைச் சவுக்குகளினாலே தண்டித்தார், நான் உங்களைத் தேள்களினாலே தண்டிப்பேன் என்று சொல்லும் என்றார்கள். 1 சாமு 8:18யாத் 1:13-14யாத் 5:18யாத் 5:5-9ஏசா 47:6ஏசா 58:6எரே 28:13-14லூக் 10:19 மூன்றாம் நாள் என்னிடத்தில் வாருங்கள் என்று ராஜா சொல்லியிருந்தபடியே, யெரொபெயாமும் அனைத்து மக்களும் மூன்றாம் நாளிலே ரெகொபெயாமிடத்தில் வந்தார்கள். 1 இராஜா 12:12-152 நாளாக 10:5 ராஜாவாகிய ரெகொபெயாம் முதியோரின் ஆலோசனையைத் தள்ளிவிட்டு, அவர்களுக்குக் கடினமான பதில் கொடுத்தான். 1 இராஜா 20:6-111 சாமு 25:10-112 நாளாக 10:8யாத் 10:28ஆதி 42:30ஆதி 42:7நீதி 15:1நீதி 19:27 வாலிபர்களுடைய ஆலோசனையின்படியே அவர்களோடு பேசி, என் தகப்பன் உங்கள் சுமையை பாரமாக்கினார்; நான் அதை அதிக பாரமாக்குவேன்; என் தகப்பன் உங்களைச் சவுக்குகளினாலே தண்டித்தார், நான் உங்களைத் தேள்களினாலே தண்டிப்பேன் என்று சொன்னான். 2 நாளாக 10:10-112 நாளாக 22:4-5தானி 6:7பிரச 10:16பிரச 2:19பிரச 7:8யாக் 3:14நீதி 12:5 ராஜா, மக்கள் சொல்வதைக் கேட்காமற்போனான்; யெகோவா சீலோனியனான அகியாவைக்கொண்டு நேபாத்தின் மகனாகிய யெரொபெயாமுக்குச் சொன்ன தமது வார்த்தையை உறுதிப்படுத்த தேவனாலே இப்படி நடந்தது. 1 இராஜா 11:29-391 சாமு 2:252 நாளாக 25:16-20அப் 2:231 இராஜா 12:151 இராஜா 12:241 இராஜா 22:20ஏசா 19:14 தாங்கள் சொன்னதை ராஜா கேட்கவில்லை என்று இஸ்ரவேலர்கள் எல்லோரும் கண்டபோது, மக்கள் ராஜாவுக்கு மறுமொழியாக: “தாவீதோடு எங்களுக்குப் பங்கேது? ஈசாயின் மகனிடத்தில் எங்களுக்கு உரிமை இல்லை; இஸ்ரவேலே உன் கூடாரங்களுக்குப் போய்விடு; இப்போது தாவீதே, உன் சொந்த வீட்டைப் பார்த்துக்கொள் என்று சொல்லி,” இஸ்ரவேலர்கள் எல்லோரும் தங்கள் கூடாரங்களுக்குப் போய்விட்டார்கள். 2 நாளாக 10:192 சாமு 20:11 நாளாக 17:141 கொரி 15:251 இராஜா 11:131 இராஜா 11:34-391 இராஜா 12:16-171 சாமு 20:27

ஆனாலும் யூதாவின் பட்டணங்களிலே குடியிருந்த இஸ்ரவேல் மக்கள்மேல் ரெகொபெயாம் ராஜாவாயிருந்தான். 1 இராஜா 11:361 இராஜா 12:172 நாளாக 11:1 பின்பு ராஜாவாகிய ரெகொபெயாம் கட்டாய வேலைக்காரர்களின் தலைவனாகிய அதோராமை அனுப்பினான்; இஸ்ரவேல் மக்கள் அவனைக் கல்லெறிந்து கொன்றார்கள்; அப்பொழுது ராஜாவாகிய ரெகொபெயாம் விரைவாக இரதத்தின்மேல் ஏறி எருசலேமுக்கு ஓடிப்போனான். 1 இராஜா 5:141 இராஜா 4:62 நாளாக 24:21அப் 7:57-58 அப்படியே இந்நாள்வரைக்கும் இருக்கிறபடி இஸ்ரவேலர்கள் தாவீதின் வம்சத்தைவிட்டுக் கலகம்செய்து பிரிந்துபோயிருக்கிறார்கள். 1 இராஜா 12:19-202 நாளாக 10:162 நாளாக 13:5-72 நாளாக 5:92இராஜா 17:21-23எஸ்றா 9:7யோசு 4:9சங் 89:30