அபியா இறந்தபின், அவனைத் தாவீதின் நகரத்தில் அடக்கம்செய்தார்கள்; அவனுடைய இடத்தில் அவன் மகனாகிய ஆசா ராஜாவானான்; இவனுடைய நாட்களில் தேசம் பத்து வருடங்கள்வரை அமைதலாயிருந்தது. 1 நாளாக 3:101 இராஜா 14:311 இராஜா 15:8-241 இராஜா 2:102 நாளாக 9:31மத் 1:7-8
யூதாவின் ராஜாவாகிய ஆசா
ஆசா தன் தேவனாகிய யெகோவாவின் பார்வைக்கு நன்மையும் செம்மையுமானதைச் செய்தான். 1 இராஜா 15:111 இராஜா 15:142 நாளாக 31:20லூக் 1:75 அந்நிய தெய்வங்களின் பலிபீடங்களையும் மேடைகளையும் அகற்றி, சிலைகளை உடைத்து, விக்கிரகத்தோப்புகளை வெட்டி, உபா 7:52இராஜா 23:14யாத் 34:131 இராஜா 15:12-142 நாளாக 15:171 இராஜா 11:7-81 இராஜா 14:22-242 நாளாக 34:4 தங்கள் பிதாக்களின் தேவனாகிய யெகோவாவை தேடவும், நியாயப்பிரமாணத்தின்படியும் கற்பனையின்படியும் செய்யவும் யூதாவுக்குக் கற்றுக்கொடுத்து, 1 சாமு 3:132 நாளாக 11:162 நாளாக 29:212 நாளாக 29:272 நாளாக 29:302 நாளாக 30:122 நாளாக 30:192 நாளாக 33:16 யூதாவுடைய எல்லாப் பட்டணங்களிலுமிருந்து மேடைகளையும் விக்கிரகங்களையும் அகற்றினான்; அவனுக்கு முன்பாக ராஜ்ஜியம் அமைதலாயிருந்தது. 2 நாளாக 34:42 நாளாக 34:7 யெகோவா அவனுக்கு இளைப்பாறுதலைக் கட்டளையிட்டதால், அந்த வருடங்களில் அவனுக்கு விரோதமான போர் இல்லாமலிருந்தது; தேசம் அமைதலாயிருந்ததால் யூதாவிலே பாதுகாப்பான பட்டணங்களைக் கட்டினான். 2 நாளாக 15:151 நாளாக 22:92 நாளாக 11:5-12யோபு 34:291 இராஜா 5:42 நாளாக 8:2-6நியாயாதி 3:11நியாயாதி 3:30 அவன் யூதாவை நோக்கி: தேசம் நமக்கு முன்பாக அமைதலாயிருக்கும்போது, நாம் இந்தப் பட்டணங்களைக் கட்டி, அவைகளுக்கு கோட்டைச் சுவர்கள், கோபுரங்கள், வாசல்கள் உண்டாக்கி, தாழ்ப்பாள் போட்டுப் பலப்படுத்துவோமாக; நம்முடைய தேவனாகிய யெகோவாவை தேடினோம், தேடினபோது, சுற்றிலும் நமக்கு இளைப்பாறுதலைக் கட்டளையிட்டார் என்றான்; அப்படியே கட்டினார்கள்; அவர்களுக்குக் காரியம் வாய்த்தது. 1 பேது 3:122 நாளாக 14:61 நாளாக 28:9எரே 29:12-14யோவா 12:35-362 நாளாக 14:42 நாளாக 32:52 நாளாக 8:5 யூதாவிலே கேடகத்தையும் ஈட்டியும் பிடிக்கிற மூன்றுலட்சம்பேரும், பென்யமீனிலே கேடகம் பிடித்து வில்லை நாணேற்றுகிற இரண்டுலட்சத்து எண்பதாயிரம்பேருமான படை ஆசாவுக்கு இருந்தது, இவர்களெல்லோரும் பலசாலிகள். 2 நாளாக 13:32 நாளாக 11:12 நாளாக 17:14-192 நாளாக 25:5 அவர்களுக்கு விரோதமாக எத்தியோப்பியனாகிய சேரா பத்துலட்சம்பேர் சேர்ந்த படையோடும் முந்நூறு இரதங்களோடும் புறப்பட்டு மரேஷாவரை வந்தான். 2 நாளாக 16:82 நாளாக 11:82 நாளாக 12:2-3யோசு 15:442இராஜா 19:9எசேக் 30:5ஏசா 8:9-10மீகா 1:15 அப்பொழுது ஆசா அவனுக்கு எதிராகப் புறப்பட்டான்; மரேஷாவுக்கு அடுத்த செப்பத்தா என்னும் பள்ளத்தாக்கில் போருக்கு அணிவகுத்து நின்றார்கள். நியாயாதி 1:17யோசு 19:4 ஆசா தன் தேவனாகிய யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டு: யெகோவாவே, பலமுள்ளவனுக்காகிலும் பலமில்லாதவனுக்காகிலும் உதவிசெய்கிறது உமக்கு லேசான காரியம்; எங்கள் தேவனாகிய யெகோவாவே, எங்களுக்குத் துணையாக நில்லும்; உம்மைச் சார்ந்து உம்முடைய நாமத்தில் ஏராளமான இந்தக் கூட்டத்திற்கு எதிராக வந்தோம்; யெகோவாவே, நீர் எங்கள் தேவன்; மனிதன் உம்மை மேற்கொள்ளவிடாதேயும் என்றான். எரே 1:192 கொரி 12:9-10சங் 22:5சங் 20:72 நாளாக 13:14ரோம 8:31அப் 2:211 சாமு 14:6 அப்பொழுது யெகோவா அந்த எத்தியோப்பியர்களை ஆசாவுக்கும் யூதாவுக்கும் முன்பாகத் தோற்கடித்ததால் எத்தியோப்பியர்கள் ஓடிப்போனார்கள். 2 நாளாக 13:151 கொரி 15:571 கொரி 9:26உபா 28:7உபா 32:39யாத் 14:25யோசு 10:10சங் 136:17-18 அவர்களை ஆசாவும் அவனோடிருந்த மக்களும் கேரார்வரை துரத்தினார்கள்; எத்தியோப்பியர்கள் திரும்ப பலங்கொள்ளாதபடிக்கு முற்றிலும் அழிக்கப்பட்டார்கள்; யெகோவாவுக்கும் அவருடைய படைக்கும் முன்பாக நொறுங்கிப்போனார்கள்; அவர்கள் மிகுதியாகக் கொள்ளையடித்து, ஆதி 10:19ஆதி 20:1ஆதி 26:12 நாளாக 14:141 நாளாக 12:221 சாமு 25:282 தெச 1:9ஆதி 10:1 கேராரின் சுற்றுப்பட்டணங்களையெல்லாம் தோற்கடித்தார்கள்; கர்த்தரால் அவர்களுக்குப் பயங்கரம் உண்டானது; அந்தப் பட்டணங்களையெல்லாம் கொள்ளையிட்டார்கள், அவைகளில் கொள்ளை மிகுதியாக அகப்பட்டது. 2 நாளாக 17:10ஆதி 35:52 நாளாக 20:291 சாமு 14:152 நாளாக 20:252இராஜா 7:162இராஜா 7:6-8உபா 2:25 மிருகஜீவன்கள் இருந்த கொட்டகைகளையும் அவர்கள் இடித்துப்போட்டு, திரளான ஆடுகளையும் ஒட்டகங்களையும் ஓட்டிக்கொண்டு எருசலேமுக்குத் திரும்பினார்கள். 1 நாளாக 4:411 நாளாக 5:211 சாமு 30:20எண் 31:30-47எண் 31:9