2 நாளாகமம் 27

2 Chronicles 27
அத்தியாயம் 27

யூதாவின் ராஜாவாகிய யோதாம்

யோதாம் ராஜாவாகிறபோது இருபத்தைந்து வயதாயிருந்து, பதினாறு வருடங்கள் எருசலேமிலே ஆட்சிசெய்தான்; சாதோக்கின் மகளாகிய அவனுடைய தாயின் பெயர் எருசாள். 1 நாளாக 3:122இராஜா 15:32-38ஓசி 1:1ஏசா 1:1மத் 1:9மீகா 1:1 அவன் தன் தகப்பனாகிய உசியா செய்தபடியெல்லாம் யெகோவாவின் பார்வைக்கு செம்மையானதைச் செய்தான்; ஆனாலும் அவனைப்போல யெகோவாவின் ஆலயத்திற்குள் பிரவேசியாதிருந்தான்; மக்கள் இன்னும் தங்களைக் கெடுத்துக்கொண்டிருந்தார்கள். 2இராஜா 15:34-352 நாளாக 26:16-212 நாளாக 26:4அப் 5:13சங் 119:120 அவன் யெகோவாவுடைய ஆலயத்தின் உயர்ந்த வாசலைக் கட்டினதுமல்லாமல், ஓபேலின் மதிலின்மேல் அநேக கட்டிடங்களையும் கட்டினான். 2 நாளாக 33:14நெகே 3:26-272 நாளாக 23:20எரே 20:2 யூதாவின் மலைகளிலே பட்டணங்களையும், காடுகளிலே கோட்டைகளையும் கோபுரங்களையும் கட்டினான். 2 நாளாக 11:5-102 நாளாக 14:72 நாளாக 26:9-10யோசு 14:12-13லூக் 1:39 அவன் அம்மோனியருடைய ராஜாவோடு போர்செய்து அவர்களை மேற்கொண்டான்; ஆதலால் அம்மோனியர்கள் அவனுக்கு அந்த வருடத்திலே நூறு தாலந்து வெள்ளியையும், பத்தாயிரம் கலம் கோதுமையையும், பத்தாயிரம் கலம் வாற்கோதுமையையும் கொடுத்தார்கள்; இரண்டாம் மூன்றாம் வருடத்திலும் அம்மோனியர்கள் அப்படியே அவனுக்கு செலுத்தினார்கள். 2 நாளாக 20:12 சாமு 10:1-14நியாயாதி 11:4-33எரே 49:1-6 யோதாம் தன்னுடைய வழிகளைத் தன் தேவனாகிய யெகோவாவுக்கு முன்பாக ஒழுங்குபடுத்தியதால் பலப்பட்டான். 2 நாளாக 26:52 நாளாக 19:3 யோதாமின் மற்ற காரியங்களும், அவனுடைய அனைத்து போர்களும், அவனுடைய செயல்களும், இஸ்ரவேல் மற்றும் யூதா ராஜாக்களின் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது. 2 நாளாக 20:342 நாளாக 26:22-232 நாளாக 32:32-332இராஜா 15:36 அவன் ராஜாவாகிறபோது இருபத்தைந்து வயதாயிருந்து, பதினாறு வருடங்கள் எருசலேமில் ஆட்சிசெய்தான். 2 நாளாக 27:1 யோதாம் இறந்தபின்பு, அவனை தாவீதின் நகரத்திலே அடக்கம்செய்தார்கள்; அவன் மகனாகிய ஆகாஸ் அவனுடைய இடத்தில் ராஜாவானான். 2இராஜா 15:38