2 நாளாகமம் 4

2 Chronicles 4
அத்தியாயம் 4

தேவாலயத்திற்காகச் செய்யப்பட்ட பொருட்கள்

அன்றியும் இருபது முழநீளமும் இருபதுமுழ அகலமும் பத்துமுழ உயரமுமான வெண்கலப் பலிபீடத்தையும் செய்தான். 1 இராஜா 8:64எசேக் 43:13-171 இராஜா 8:221 இராஜா 9:252 நாளாக 1:52இராஜா 16:14-15யாத் 27:1-8 வெண்கலக் கடல்தொட்டியையும் வார்ப்பித்தான்; வட்டவடிவமான அதினுடைய ஒரு விளிம்பு தொடங்கி மறு விளிம்புவரை பத்துமுழ அகலமும், ஐந்துமுழ உயரமும், சுற்றளவு முப்பதுமுழ நூலளவுமாயிருந்தது. 1 இராஜா 7:23-26யாத் 30:18-21வெளி 7:14தீத் 3:5சகரி 13:1 அதின் கீழ்ப்புறமாக காளைகளின் உருவங்கள் ஒவ்வொரு முழத்திற்குப் பத்து உருவமாக அந்தக் கடல்தொட்டியின் சக்கரத்தில் இருந்தது; தொட்டியோடு ஒன்றாய் வார்க்கப்பட்ட அந்தக் காளைகளின் இரண்டு வரிசைகள் இருந்தது. 1 கொரி 9:9-101 இராஜா 7:24-26எசேக் 1:10எசேக் 10:14வெளி 4:7 அது பன்னிரண்டு காளைகளின்மேல் நின்றது; இவைகளில் மூன்று வடக்கேயும், மூன்று மேற்கேயும், மூன்று தெற்கேயும், மூன்று கிழக்கேயும் நோக்கியிருந்தது; கடல்தொட்டி அவைகளின்மேல் உயரமாக இருந்தது; அவைகளின் பின்பக்கமெல்லாம் உட்புறமாக இருந்தது. அப் 9:15எபே 2:20லூக் 24:46-47மத் 16:18மத் 28:19-20மாற் 16:15வெளி 21:14 அதின் கனம் நான்கு விரற்கடையும், அதின் விளிம்பு பானபாத்திரத்தின் விளிம்புபோலவும், லீலிபுஷ்பம்போலவும் இருந்தது; அது மூவாயிரம் குடம் தண்ணீர் பிடிக்கத்தக்கதாயிருந்தது. 1 இராஜா 7:26 கழுவுகிறதற்குப் பத்துக் கொப்பரைகளையும் உண்டாக்கி, ஐந்தை வலதுபுறத்திலும், ஐந்தை இடதுபுறத்திலும் வைத்தான்; சர்வாங்க தகனமாகிறவைகளை அவைகளில் அலசுவார்கள்; கடல்தொட்டியோ ஆசாரியர்கள் தங்களைச் சுத்தம்செய்துகொள்ளுகிறதற்காக இருந்தது. 1 இராஜா 7:38யாத் 30:18-211 இராஜா 7:40எசேக் 40:38சங் 51:21 கொரி 6:111 யோவா 1:72 நாளாக 4:2 பத்துப் பொன் விளக்குத்தண்டுகளையும், அவைகளுடைய முறையின்படி செய்வித்து, அவைகளை தேவாலயத்தில் வலதுபுறத்திலே ஐந்தும் இடதுபுறத்திலே ஐந்துமாக வைத்தான். 1 இராஜா 7:49யாத் 25:31-401 நாளாக 28:12யோவா 8:121 நாளாக 28:151 நாளாக 28:19எபி 8:5மத் 5:14-16 பத்து மேஜைகளையும் செய்து, அவைகளை தேவாலயத்தில் வலதுபுறத்திலே ஐந்தும் இடதுபுறத்திலே ஐந்துமாக வைத்து, நூறு பொன் கலங்களையும் செய்தான். 1 இராஜா 7:481 கொரி 10:21யாத் 25:23-30யாத் 37:10-16எசேக் 44:16ஏசா 25:6மல்கி 1:12சகரி 14:20 மேலும் ஆசாரியர்களின் பிராகாரத்தையும், பெரிய பிராகாரத்தையும், பிராகாரத்தின் வாசல்களையும் உண்டாக்கி, அவைகளின் கதவுகளை வெண்கலத்தால் மூடினான். 1 இராஜா 6:362இராஜா 21:51 இராஜா 7:12 கடல்தொட்டியைக் கீழ்த்திசையான வலதுபுறத்திலே தெற்குமுகமாக வைத்தான். 1 இராஜா 7:39 ஈராம் செப்புச்சட்டிகளையும், சாம்பலெடுக்கிற கரண்டிகளையும், கலங்களையும் செய்தான்; இந்தவிதமாக ஈராம் யெகோவாவுடைய ஆலயத்திற்காக ராஜாவாகிய சாலொமோனுக்குச் செய்யவேண்டிய வேலையைச் செய்துமுடித்தான். 1 இராஜா 7:141 இராஜா 7:40-51 அவைகள் என்னவெனில், இரண்டு தூண்களும், இரண்டு தூண்களுடைய முனையின்மேலிருக்கிற கும்பங்களும், குமிழ்களும், தூண்களுடைய முனையின் மேலிருக்கிற குமிழ்களான இரண்டு கும்பங்களை மூடுகிறதற்கு இரண்டு வலைப்பின்னல்களும், 1 இராஜா 7:412 நாளாக 3:15-17 தூண்களின்மேலுள்ள குமிழ்களான இரண்டு கும்பங்களை மூடுகிறதற்கு, ஒவ்வொரு வலைப்பின்னலின் இரண்டு வரிசை மாதுளம்பழங்களாக, இரண்டு வலைப்பின்னல்களிலும் இருக்கிற நானூறு மாதுளம்பழங்களுமே. 1 இராஜா 7:201 இராஜா 7:42யாத் 28:33-34எரே 52:23உன்னத 4:13 ஆதாரங்களையும், ஆதாரங்களின்மேலிருக்கும் கொப்பரைகளையும், 1 இராஜா 7:27-43 ஒரு கடல்தொட்டியையும், அதின் கீழிருக்கும் பன்னிரண்டு காளைகளையும், செப்புச்சட்டிகளையும், சாம்பல் கரண்டிகளையும், முள்துறடுகள் முதலான பணிமுட்டுகளையும், ஈராம் அபி, ராஜாவாகிய சாலொமோனுக்குக் யெகோவாவின் ஆலயத்திற்காக சுத்தமான வெண்கலத்தால் செய்தான். 2 நாளாக 2:131 நாளாக 28:171 இராஜா 7:13-142 நாளாக 4:111 இராஜா 7:451 சாமு 2:13-14யாத் 27:3யாத் 38:3 யோர்தானைச்சார்ந்த சமனான பூமியில் சுக்கோத்திற்கும் சரேத்தாவுக்கும் நடுவே களிமண் தரையிலே ராஜா அவைகளை வார்ப்பித்தான். 1 இராஜா 7:46 இந்தப் பணிமுட்டுகளையெல்லாம் சாலொமோன் வெகு ஏராளமாக உண்டாக்கினான்; வெண்கலத்தின் எடை தொகைக்கு அடங்காததாயிருந்தது. 1 இராஜா 7:47எரே 52:201 நாளாக 22:141 நாளாக 22:3 தேவனுடைய ஆலயத்திற்கு வேண்டிய அனைத்து பணிமுட்டுகளையும்; பொற்பீடத்தையும், சமுகத்து அப்பங்களை வைக்கும் மேஜைகளையும், வெளி 9:131 நாளாக 28:161 இராஜா 7:48-502 நாளாக 26:16-182 நாளாக 36:102 நாளாக 36:182 நாளாக 4:82இராஜா 24:13 முறையின்படியே சந்நிதிக்கு முன்பாக விளக்குக் கொளுத்துகிறதற்குப் பசும்பொன் விளக்குத்தண்டுகளையும், அவைகளின் விளக்குகளையும், 2 நாளாக 4:7யாத் 25:31-371 இராஜா 6:16-171 இராஜா 6:51 இராஜா 8:6யாத் 27:20-21சங் 28:2 சுத்தத் தங்கத்தால் செய்த பூக்களையும், விளக்குகளையும், கத்தரிகளையும், 1 இராஜா 6:181 இராஜா 6:291 இராஜா 6:352 நாளாக 4:5யாத் 25:31-40யாத் 37:20 பசும்பொன் கத்திகளையும், கலங்களையும், கலயங்களையும், தூபகலசங்களையும் சாலொமோன் செய்தான்; மகா பரிசுத்தஸ்தலத்தின் உட்கதவுகளும், ஆலயமாகிய வீட்டின் கதவுகளும், ஆலயத்தின் வாசல் கதவுகளும் அனைத்தும் பொன்னாயிருந்தது. 1 இராஜா 6:31-321 இராஜா 7:502இராஜா 12:132இராஜா 25:14யாத் 37:23எரே 52:18