2 நாளாகமம் 7

2 Chronicles 7
அத்தியாயம் 7

தேவாலயம் பிரதிஷ்டை செய்யப்படுதல்

சாலொமோன் ஜெபம்செய்து முடிக்கிறபோது, அக்கினி வானத்திலிருந்து இறங்கி, சர்வாங்க தகனபலியையும் மற்ற பலிகளையும் பட்சித்தது; யெகோவாவுடைய மகிமையும் ஆலயத்தை நிரப்பியது. 1 இராஜா 18:381 நாளாக 21:26லேவி 9:23-241 இராஜா 18:24எசேக் 43:5எசேக் 44:4ஆதி 15:17மல்கி 3:1-2 யெகோவாவுடைய மகிமை யெகோவாவுடைய ஆலயத்தை நிரப்பினதால், ஆசாரியர்கள் யெகோவாவுடைய ஆலயத்திற்குள் பிரவேசிக்க முடியாமலிருந்தது. வெளி 15:82 நாளாக 5:14யாத் 24:17ஏசா 6:5 அக்கினி இறங்குகிறதையும், யெகோவாவுடைய மகிமை ஆலயத்தின்மேல் தங்கியிருக்கிறதையும், இஸ்ரவேல் வம்சத்தார்கள் எல்லோரும் கண்டபோது, தளவரிசைமட்டும் தரையிலே முகங்குப்புறக் குனிந்து பணிந்து, யெகோவா நல்லவர், அவருடைய கிருபை என்றுமுள்ளது என்று சொல்லி, அவரைத் துதித்தார்கள். 2 நாளாக 5:132 நாளாக 20:21எபி 7:24-25லூக் 1:50எஸ்றா 3:11ஏசா 63:7யாத் 4:31சங் 136:1-26 அப்பொழுது ராஜாவும் அனைத்து மக்களும் யெகோவாவுடைய சந்நிதியில் பலிகளைச் செலுத்தினார்கள். 1 இராஜா 8:62-63 ராஜாவாகிய சாலொமோன் 22,000 மாடுகளையும், 1,20,000 ஆடுகளையும் பலியிட்டான்; இந்தவிதமாக ராஜாவும் அனைத்து மக்களும் தேவனுடைய ஆலயத்தைப் பிரதிஷ்டை செய்தார்கள். யோவா 10:222 நாளாக 30:24எசேக் 45:171 நாளாக 29:211 இராஜா 8:62-632 நாளாக 1:62 நாளாக 15:112 நாளாக 2:4 ஆசாரியர்கள் தங்கள் பணிவிடைகளைச் செய்து நின்றார்கள்; தாவீது ராஜா லேவியர்களைக்கொண்டு, யெகோவாவுடைய கிருபை என்றுமுள்ளது என்று அவரைத் துதித்துப் பாடுவதற்காகச் செய்யப்பட்ட யெகோவாவின் கீதவாத்தியங்களை அவர்களும் வாசித்து சேவித்து நின்றார்கள்; ஆசாரியர்கள் அவர்களுக்கு எதிராக நின்று பூரிகைகளை ஊதினார்கள்; இஸ்ரவேலர் எல்லோரும் நின்றுகொண்டிருந்தார்கள். 2 நாளாக 5:121 நாளாக 15:16-212 நாளாக 7:31 நாளாக 13:81 நாளாக 15:241 நாளாக 16:341 நாளாக 16:39-421 நாளாக 16:4-6 சாலொமோன் உண்டாக்கின வெண்கலப்பலிபீடம் சர்வாங்க தகனபலிகளையும் போஜன பலிகளையும் கொழுப்பையும் வைக்க போதுமானதாக இல்லாததால், யெகோவாவுடைய ஆலயத்திற்கு முன்னிருக்கிற பிராகாரத்தின் நடுமையத்தைச் சாலொமோன் பரிசுத்தப்படுத்தி, அங்கே சர்வாங்க தகனபலிகளையும் சமாதானபலிகளின் கொழுப்பையும் செலுத்தினான். 1 இராஜா 8:64-66எபி 13:10-122 நாளாக 36:142 நாளாக 4:1எண் 16:37-38 அக்காலத்தில்தானே சாலொமோனும், ஆமாத்தின் எல்லையிலிருந்து எகிப்தின் நதிவரை வந்து, அவனோடுகூட இருந்த மகா பெரிய கூட்டமாகிய இஸ்ரவேல் அனைத்தும் ஏழுநாட்கள்வரையும் பண்டிகையை ஆசரித்து, ஆதி 15:181 இராஜா 8:651 இராஜா 4:21-252 நாளாக 30:13ஆமோ 6:14உபா 16:13-15யோவா 7:2யோவா 7:27-39 எட்டாம் நாளை விசேஷித்த ஆசரிப்பு நாளாகக் கொண்டாடினார்கள்; ஏழுநாட்கள் பலிபீடத்துப் பிரதிஷ்டையையும், ஏழு நாட்கள் பண்டிகையையும் ஆசரித்தார்கள். லேவி 23:361 இராஜா 8:652 நாளாக 30:23உபா 16:8யோவே 1:14நெகே 8:18 ஏழாம் மாதத்தின் இருபத்துமூன்றாம் தேதியிலே தங்கள் தங்கள் கூடாரங்களுக்குப் போக மக்களுக்கு விடை கொடுத்தான்; யெகோவா தாவீதுக்கும், சாலொமோனுக்கும், தமது மக்களாகிய இஸ்ரவேலுக்கும் செய்த நன்மைக்காகச் சந்தோஷத்தோடும் மனமகிழ்ச்சியோடும் போனார்கள். 1 இராஜா 8:66சங் 100:22 நாளாக 29:362 நாளாக 30:262 நாளாக 6:41அப் 16:34அப் 2:46உபா 12:12

யெகோவா சாலொமோனுக்குக் காட்சியளித்தல்

இந்தவிதமாக சாலொமோன் யெகோவாவுடைய ஆலயத்தையும், ராஜ அரண்மனையையும் கட்டி முடித்தான்; யெகோவாவுடைய ஆலயத்திலும், தன் அரண்மனையிலும் சாலொமோன் செய்ய மனதாயிருந்ததெல்லாம் அனுகூலமானது. 1 இராஜா 9:1-92 நாளாக 2:1பிரச 2:10-11பிரச 2:4 யெகோவா இரவிலே சாலொமோனுக்குக் காட்சியளித்து: நான் உன் விண்ணப்பத்தைக் கேட்டு, இந்த இடத்தை எனக்கு பலியிடும் ஆலயமாகத் தெரிந்துகொண்டேன். ஆதி 17:11 இராஜா 9:22 நாளாக 1:72 நாளாக 7:161 யோவா 5:14-152இராஜா 20:5அப் 10:31உபா 12:11 நான் மழையில்லாதபடிக்கு வானத்தை அடைத்து அல்லது தேசத்தை அழிக்க வெட்டுக்கிளிகளுக்குக் கட்டளையிட்டு அல்லது என் மக்களுக்குள் கொள்ளை நோயை அனுப்பும்போது, 2 நாளாக 6:26-28உபா 11:17வெளி 11:6வெளி 3:72 சாமு 24:13-15யாத் 10:4-6எசேக் 14:19-21யோபு 12:14 என் நாமம் சூட்டப்பட்ட என் மக்கள் தங்களைத் தாழ்த்தி, ஜெபம்செய்து, என் முகத்தைத் தேடி, தங்கள் பொல்லாத வழிகளைவிட்டுத் திரும்பினால், அப்பொழுது பரலோகத்திலிருக்கிற நான் கேட்டு, அவர்களுடைய பாவத்தை மன்னித்து, அவர்களுடைய தேசத்திற்கு செழிப்பைக் கொடுப்பேன். புலம் 3:40-41ஏசா 55:6-7யாக் 4:9-10நீதி 28:132 நாளாக 6:37-39உபா 4:29-30எரே 33:62 நாளாக 33:12-13 இந்த இடத்திலே செய்யப்படும் ஜெபத்திற்கு, என் கண்கள் திறந்தவைகளும், என் காதுகள் கவனிக்கிறவைகளுமாக இருக்கும். 1 பேது 3:122 நாளாக 6:402 நாளாக 6:20நெகே 1:6உபா 11:12சங் 65:2சங் 130:2 என் நாமம் இந்த ஆலயத்தில் என்றென்றைக்கும் இருக்கும்படி, நான் இதைத் தெரிந்துகொண்டு பரிசுத்தப்படுத்தினேன்; என் கண்களும் என் இருதயமும் எந்நாளும் இங்கே இருக்கும். 2 நாளாக 7:152 நாளாக 7:122 நாளாக 6:5-61 இராஜா 9:32 நாளாக 6:20கொலோ 2:9யோவா 2:19-212 நாளாக 33:4-7 உன் தகப்பனாகிய தாவீது நடந்ததுபோல, நீ எனக்கு முன்பாக நடந்து, நான் உனக்குக் கற்பித்தபடியெல்லாம் செய்து, என் கட்டளைகளையும் என் நியாயங்களையும் கைக்கொள்வாயானால், 1 இராஜா 11:38உபா 4:40எசேக் 36:27சகரி 3:71 நாளாக 28:91 இராஜா 2:31 இராஜா 3:141 இராஜா 8:25 அப்பொழுது இஸ்ரவேலை அரசாளுபவன் உனக்கு இல்லாமற்போவதில்லை என்று நான் உன் தகப்பனாகிய தாவீதோடு உடன்படிக்கை செய்தபடியே, உன் ராஜ்யபாரத்தின் சிங்காசனத்தை நிலைக்கச்செய்வேன். 2 நாளாக 6:162 சாமு 7:13-16எரே 33:20-211 இராஜா 9:5எரே 33:25-26சங் 132:11-12சங் 89:28-40 நீங்கள் வழிவிலகி, நான் உங்களுக்கு முன்பாக வைத்த என் கட்டளைகளையும் என் கற்பனைகளையும்விட்டு, வேறே தெய்வங்களைச் சேவித்து, அவர்களைப் பணிந்துகொள்வீர்களென்றால், உபா 28:15லேவி 26:14லேவி 26:33-461 நாளாக 28:91 இராஜா 11:4-81 இராஜா 9:6-71 சாமு 12:25உபா 28:36-68 நான் அவர்களுக்குக் கொடுத்த என் தேசத்திலிருந்து அவர்களைப் பிடுங்கி, என் நாமத்திற்கென்று நான் பரிசுத்தப்படுத்தின இந்த ஆலயத்தை என் சமுகத்தைவிட்டுத் தள்ளி, அதை அனைத்து மக்களுக்குள்ளும் பழமொழியாகவும் பரியாசச் சொல்லாகவும் வைப்பேன். 2இராஜா 17:20உபா 28:371 இராஜா 14:151 இராஜா 9:7உபா 29:28எரே 24:9எரே 45:4எரே 31:28 அப்பொழுது உன்னதமாயிருக்கிற இந்த ஆலயத்தைக் கடந்துபோகிறவன் எவனும் பிரமித்து: யெகோவா இந்த தேசத்திற்கும் இந்த ஆலயத்திற்கும் இப்படிச் செய்தது என்ன என்று கேட்பான். எரே 22:8-9எரே 16:10-12எரே 19:81 இராஜா 9:8-92 நாளாக 29:8உபா 29:24-28எரே 13:22எரே 22:28 அதற்கு அவர்கள்: தங்கள் முற்பிதாக்களை எகிப்து தேசத்திலிருந்து புறப்படச்செய்த தங்கள் தேவனாகிய யெகோவாவைவிட்டு, வேறே தெய்வங்களைப் பற்றிக்கொண்டு, அவைகளை வணங்கி, சேவித்ததால், யெகோவா இந்தத் தீங்கையெல்லாம் அவர்கள்மேல் வரச்செய்தார் என்று சொல்லுவார்கள் என்றார். தானி 9:12புலம் 4:13-152 நாளாக 36:17எசேக் 14:23எசேக் 36:17-20நியாயாதி 2:12-13எரே 1:16புலம் 2:16-17