2 இராஜாக்கள்

2 Kings · 25 அதிகாரங்கள்

அதிகாரங்கள் · Chapters

  1. 1
  2. 2
  3. 3
  4. 4
  5. 5
  6. 6
  7. 7
  8. 8
  9. 9
  10. 10
  11. 11
  12. 12
  13. 13
  14. 14
  15. 15
  16. 16
  17. 17
  18. 18
  19. 19
  20. 20
  21. 21
  22. 22
  23. 23
  24. 24
  25. 25

முன்னுரை

ஆசிரியர்

ஆதியிலே 1 மற்றும் 2 இராஜாக்கள் புத்ததகங்கள் ஒரே புத்தகமாக இருந்தது. யூத பாரம்பரியம் எரேமியா தீர்க்கதரிசிதான் இதை எழுதியிருக்கிறான் என்று கருதுகிறது. ஆனால் தற்கால வேத வல்லுனர்கள் இதை அநேகர் சேர்ந்து குழுவாக எழுதியிருக்கலாம் என்கிறார்கள். உபாகமத்தின் நோக்கமான கர்த்தருக்கு கீழ்படிதல் ஆசிர்வாதங்களையும் கீழ்படியாமை, சாபங்களை கொண்டு வருகிறது என்பதை ஆணித்தரமாக இது தெளிவாக விவரிக்கிறது.

எழுதப்பட்ட காலம் மற்றும் இடம்

ஏறக்குறைய கிமு 590 க்கும் 538 க்கும். இடையில் எழுதப்பட்டதாக கருதப்படுகிறது.

முதல் ஆலயம் நிற்கும்போது இது எழுதப்பட்டது (1 இராஜாக்கள் 8: 8)

யாருக்காக எழுதப்பட்டது

இஸ்ரவேல் ஜனங்களுக்கும் வேதத்தை வாசிக்கிற அனைவருக்கும் எழுதப்பட்டது.

எழுதப்பட்ட நோக்கம்

2 இராஜாக்கள் புத்தகம் 1 இராஜாக்கள் புத்தகத்தின் தொடர்ச்சி ஆகும். பிரிக்கப்பட்ட யூதா, இஸ்ரவேல் இராஜ்ஜியங்களின் இராஜாக்களின் சரித்திரங்களை விவரிக்கிறது. 2 இராஜாக்கள் புத்தகம் யூத ஜனங்கள் பாபிலேனுக்கும் இஸ்ரவேல் கோத்திரத்தின் ஜனங்கள் அசீரியா தேசத்திற்கும் சிறையாக கொண்டுபோகப்பட்டார்கள் என்று முடிக்கிறது.

மையக் கருத்து

சிதறடிக்கபடுதல்.

பொருளடக்கம்

1. எலிசாவின் ஊழியம் — 1:1-8:29

2. ஆகாபின் வம்சம் ஒழிக்கப்பட்டது — 9:1-11:21

3. யோவாசின் முதல் இஸ்ரவேல் தேசத்தின் சிறையிருப்பு வரை — 12:1-17:41

4. எசேக்கியா இராஜா முதல் யூத தேசத்தின் சிறையிருப்பு வரை — 18:1-25:30