2 பேதுரு

2 Peter · 3 அதிகாரங்கள்

அதிகாரங்கள் · Chapters

  1. 1
  2. 2
  3. 3

முன்னுரை

ஆசிரியர்

1 பேது 1:1 ல் குறிப்பிடப்பட்டுள்ளபடி, 2 பேதுருவின் ஆசிரியர் அப்போஸ்தலனாகிய பேதுரு ஆவார். 2 பேதுரு 3:1 ல், 2 பேதுருவின் ஆசிரியர் இயேசுவின் மறுரூப நிலைக்கு சாட்சியாக இருப்பதாக கூறுகிறார் (1:16-18). ஒருநோக்கு சுவிசேஷ புத்தகங்கள் கூறுகிறபடி, பேதுரு, இயேசுவோடு இருந்த மூன்று சீடர்களில் ஒருவராக இருந்தார் (மற்ற இரண்டு பேரும் யாக்கோபும் யோவானும் ஆவர்). 2 பேதுருவின் ஆசிரியர், இரத்தசாட்சியாக மரிக்கவேண்டும் என்ற உண்மையை (1:14) அவர் குறிப்பிடுகிறார் என்பதையும்; யோவான் 21:18-19 ல் இயேசு, பேதுரு கைதியாகக் கட்டப்பட்டப்பின் இரத்தசாட்சியாக மரிப்பார் என்று முன்னறிந்தார்.

எழுதப்பட்ட காலம் மற்றும் இடம்

ஏறக்குறைய கிபி 65-68 க்கு இடையில் எழுதப்பட்டது.

இதை அப்போஸ்தலன் தன் வாழ்நாளின் இறுதி வருடங்களில் ரோமிலிருந்து எழுதியிருக்கலாம்.

யாருக்காக எழுதப்பட்டது

முதல் பேதுருவைப் போலவே இது வடக்கு ஆசியா மைனரிலிருந்த அதே வாசகர்களுக்கு எழுதப்பட்டிருக்கலாம்.

எழுதப்பட்ட நோக்கம்

கிறிஸ்தவ விசுவாசத்தின் அடிப்படையை நினைவூட்டுவதற்காக (1:12-13, 16-21), விசுவாசத்தின் எதிர்கால தலைமுறையினரை அறிவுறுத்துவதற்காக (1:15) அதன் அப்போஸ்தல பாரம்பரியத்தை உறுதிப்படுத்துவதற்காக (1:13-14; 2:1-3) பேதுரு எழுதினார், தனது நாட்கள் குறுகியது என்று அவர் அறிந்ததினாலும், தேவ மக்கள் அநேக ஆபத்துக்களை சந்திக்கிறதினாலும் பேதுரு இதை எழுதினார். தேவனுடைய வருகையை மறுதலிக்கிற கள்ளப் போதகர்களின் வருகையைக் குறித்து தன்னுடைய வாசகர்களை எச்சரிக்கும்படி பேதுரு எழுதினார் (2:1-22) (3:3-4).

மையக் கருத்து

தவறான ஆசிரியர்களுக்கு எதிராக எச்சரிக்கை

பொருளடக்கம்

1. வாழ்த்துரை — 1:1, 2

2. கிறிஸ்தவ நல்லொழுக்கங்களில் வளர்ச்சியடைதல் — 1:3-11

3. பேதுருவின் செய்தி நோக்கம் — 1:12-21

4. தவறான ஆசிரியர்களுக்கு எதிராக எச்சரிக்கை — 2:1-22

5. கிறிஸ்துவின் வருகை — 3:1-16

6. முடிவுரை — 3:17, 18