உபாகமம்

Deuteronomy · 34 அதிகாரங்கள்

அதிகாரங்கள் · Chapters

  1. 1
  2. 2
  3. 3
  4. 4
  5. 5
  6. 6
  7. 7
  8. 8
  9. 9
  10. 10
  11. 11
  12. 12
  13. 13
  14. 14
  15. 15
  16. 16
  17. 17
  18. 18
  19. 19
  20. 20
  21. 21
  22. 22
  23. 23
  24. 24
  25. 25
  26. 26
  27. 27
  28. 28
  29. 29
  30. 30
  31. 31
  32. 32
  33. 33
  34. 34

முன்னுரை

ஆசிரியர்

மோசே தான் இந்த புத்தகத்தின் ஆசிரியர். யோர்தான் நதியை கடக்கும் முன் இஸ்ரவேல் ஜனங்களுக்கு மோசே செய்த உபதேசங்களின் தொகுப்புகள் அதிகமாக பதியப்பட்டு இருக்கிறது. 1:2, மோசே இஸ்ரவேலர் எல்லோரையும் நோக்கிச் சொன்ன வசனங்களாவன. கடைசி அதிகாரம் அனேகமாக யோசுவாவினால் எழுதப்பட்டதாக கருதப்படுகிறது. மோசே தான் இந்த புத்தகத்தின் ஆசிரியர் என்று புத்தகம் முழுவதிலும் நிறைய ஆதாரங்கள் காணப்படுகிறது. 1:2, 4, 31:24. மோசேயும் இஸ்ரவேல் ஜனங்களும் யோர்தான் நதிக்கு இப்புறத்தில் இருக்கிற மோவாபின் தேசத்தில் இருந்ததை இந்த புத்தகம் காண்பிக்கிறது. 1:5. உபாகமம் என்ற பதத்தின் பொருள் இரண்டாவது நியாயபிரமாணம். தேவனுக்கும் அவருடைய ஜனங்களான இஸ்ரவேலர்களுக்கும் நடுவில் செய்யப்பட்ட உடன்படிக்கை பிரமாணங்களை மறுபடியும் இந்த புத்தகத்தில் கூறப்பட்டிருக்கிறது.

எழுதப்பட்ட காலம் மற்றும் இடம்

ஏறக்குறைய கி. மு. 1,446 க்கும் 1,405 க்கும். இடையில் எழுதப்பட்டது.

இஸ்ரவேலர் கானான் தேசத்திற்குள் பிரவேசிக்கவிருந்த 40 நாட்களில் எழுதப்பட்டது.

யாருக்காக எழுதப்பட்டது

எகிப்து தேசத்தின் அடிமைத்தினத்திலிருந்து விடுதலையான இஸ்ரவேலர்கள், 40 வருடங்கள் அலைந்து திரிந்து இறந்தபின்பு, கானான் தேசத்தில் பிரவேசிக்க ஆயத்தமாக இருந்த இளைய சந்ததியான இஸ்ரவேலர்களுக்கும், மற்றும் வேத புத்தகத்தை வாசிப்பவர்களுக்கும் எழுதப்பட்டது.

எழுதப்பட்ட நோக்கம்

இஸ்ரவேல் தேசத்திற்கு மோசே கொடுத்த வழியனுப்பும் செய்திகள். இஸ்ரவேல் வாக்குதத்தம் செய்யப்பட்ட தேசத்தில் பிரவேசிக்க ஆயுத்தமாக இருந்தார்கள். எகிப்தை விட்டு நாற்பது வருடங்கள் வனாந்திரத்தில் சுற்றி, இப்போது யோர்தான் நதியை கடந்து கானான் தேசத்தை சொந்தமாக்கும் நாட்களில் இருந்தார்கள். ஆனாலும் மோசே தேசத்தில் பிரவேசிக்காமல் மரணத்தில் பிரவேசிக்க இருந்த நாட்களில் பேசின செய்திகள் பிரவேசிக்க போகிற புதிய தேசத்தில், சுகமாயிருக்கும்படி தேவனுடைய கட்டளைகளுக்கு கீழ்படிய அன்பாய் மோசேயினால் கேட்டுக் கொள்ளப்பட்ட வழியனுப்பும் செய்திகள். இந்த இஸ்ரவேலின் தேவன் யார் என்றும் இஸ்ரவேலர்களுக்கு என்ன செய்தார் என்றும் ஜனங்களுக்கு நினைப்பூட்டும் செய்திகளை அளித்தான். 6:4, 10-12; 20-23. அதுமாத்திரமில்லாமல் பின்வரும் சந்ததிக்கும் இந்த கட்டளைகளை கைக்கொள்ள கற்றுக் கொடுக்கும்படி மன்றாடுகிறான். 6:6-9.

மையக் கருத்து

கீழ்படிதல்

பொருளடக்கம்

1. இஸ்ரவேலர் எகிப்திலிருந்து செய்த பிரயாணங்கள் — 1:1-3:29

2. தேவனுடன் இஸ்ரவேலுக்கு உள்ள உறவுகள் — 4:1-5:33

3. தேவனுக்கு விசுவாசமாய் இருப்பதின் அவசியம் — 6:1-11:32

4. தேவனிடத்தில் அன்புகூறுவதும் அவருடைய கட்டளைக்களுக்கு கீழ்படிவதும் — 12:1-26:19

5. ஆசிர்வாதங்களும் சாபங்களும் — 27:1-30:20

6. கடைசி செய்திகளும் மோசேயின் மரணமும் — 31:1-34:12