மொர்தெகாயின் மேன்மை
ராஜாவாகிய அகாஸ்வேரு தேசத்தின்மேலும், மத்திய தரைக் கடலிலுள்ள தீவுகளின்மேலும், வரியை ஏற்படுத்தினான். ஏசா 24:15சங் 72:10தானி 11:18எஸ்த 1:1எஸ்த 8:9ஆதி 10:5ஏசா 11:11லூக் 2:1 பலமும் வல்லமையுமான அவனுடைய எல்லா செயல்களும், ராஜா பெரியவனாக்கின மொர்தெகாயினுடைய மேன்மையின் மகத்துவமும், மேதியா பெர்சியா ராஜாக்களின் நாளாகம புத்தகத்தில் எழுதியிருக்கிறது. எஸ்த 8:15எஸ்த 2:23எஸ்த 9:4எஸ்த 6:11 இராஜா 11:411 இராஜா 14:191 இராஜா 22:39தானி 2:48 யூதனாகிய மொர்தெகாய் ராஜாவாகிய அகாஸ்வேருவுக்கு இரண்டாவதாக இருந்தவனும், யூதர்களுக்குள் பெரியவனும், தன்னுடைய திரளான சகோதரர்களுக்குப் பிரியமானவனுமாக இருந்ததும் அன்றி தன்னுடைய மக்களுடைய நன்மையைத்தேடி, தன்னுடைய மக்களுக்கெல்லாம் சமாதானமுண்டாகப் பேசுகிறவனுமாக இருந்தான். நெகே 2:10ரோம 10:1ரோம 14:182 நாளாக 28:7தானி 5:29ஆதி 41:40ஆதி 41:43-44சங் 122:6-9