கலாத்தியர்

Galatians · 6 அதிகாரங்கள்

அதிகாரங்கள் · Chapters

  1. 1
  2. 2
  3. 3
  4. 4
  5. 5
  6. 6

முன்னுரை

ஆசிரியர்

அப்போஸ்தலனாகிய பவுல் இந்த நிருபத்தின் ஆசிரியர் ஆவார், ஆரம்பகால சபையின் ஒருமித்த கருத்தாக இது இருந்தது. ஆசியா மைனருக்கு தனது முதல் மிஷனரி பயணத்தின்போது அவைகளைத் தொடங்குவதற்கு உதவிசெய்த பிறகு, தெற்கு கலாத்தியாவிலுள்ள சபைகளுக்கு பவுல் எழுதினார். ரோமாபுரி அல்லது கொரிந்து போல கலாத்தியா ஒரு நகரம் அல்ல, மாறாக ரோம மாகாணத்தில் பல நகரங்களும் ஏராளமான சபைகளும் இருந்தன. கலாத்தியர் நிருபமானது யாருக்காக எழுதப்பட்டதோ அந்தக் கலாத்தியர்கள் பவுலினால் மனந்திரும்பியவர்கள் ஆவர்.

எழுதப்பட்ட காலம் மற்றும் இடம்

ஏறக்குறைய கிபி. 48 க்கு இடையில் எழுதப்பட்டது.

அனேகமாக பவுல், அந்தியோகியாவிலிருந்து கலாத்தியர் நிருபத்தை எழுதினார், ஏனெனில் இது அவருடைய சொந்த வீடுபோல இருந்தது.

யாருக்காக எழுதப்பட்டது

கலாத்தியர் நிருபம் கலாத்தியாவிலுள்ள சபைகளின் உறுப்பினர்களுக்கு எழுதப்பட்டது (கலா. 1: 1-2).

எழுதப்பட்ட நோக்கம்

யூத மார்க்கத்தமைந்தவர்களின் பொய் சுவிசேஷத்தை மறுப்பதே இந்த கடிதத்தின் நோக்கம், ஏனென்றால் விருத்தசேதனம் என்பது இரட்சிப்புக்கு இன்றியமையாதது என இந்த யூத கிறிஸ்தவர்கள் நினைத்தனர். அவர்களுடைய இரட்சிப்பின் உண்மையான அடித்தளத்தை கலாத்தியர்களுக்கு ஞாபகப்படுத்துவதும் இந்த நிருபத்தின் நோக்கமாகும். பவுல் தன்னுடைய அப்போஸ்தல அதிகாரத்தை தெளிவாக உறுதிப்படுத்தியதன் மூலம் பதிலளித்தார், அதோடு அவர் பிரசங்கித்த சுவிசேஷத்தை உறுதிப்படுத்தினார். கிருபையினால் விசுவாசத்தின் மூலம் மக்கள் நீதிமான்களாக்கப்படுகிறார்கள், விசுவாசத்தினால் மட்டுமே அவர்கள் ஆவிக்குரிய சுதந்திரத்தில் தங்கள் புதிய வாழ்வை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

மையக் கருத்து

கிறிஸ்துவில் சுதந்திரம்

பொருளடக்கம்

1. அறிமுகம் — 1:1-10

2. நற்செய்தி அங்கீகாரம் — 1:11-2:21

3. விசுவாசத்தின் மூலம் நீதிமானாக்கப்படுதல் — 3:1-4:31

4. விசுவாசம் மற்றும் சுதந்திரத்தின் வாழ்க்கையை அப்பியாசப்படுத்துதல் — 3:1-4:31