ஆசாரிப்புக்கூடாரத்தில் ஆராதனை
அன்றியும், முதலாம் உடன்படிக்கையானது ஆராதனைக்குரிய முறைமைகளும் பூமிக்குரிய பரிசுத்த இடமும் உடையதாக இருந்தது. யாத் 25:8எபி 9:10-11எபி 8:2லேவி 18:30லேவி 18:3-4லேவி 22:9கொலோ 2:8எசேக் 43:11 எப்படியென்றால், ஒரு கூடாரம் உண்டாக்கப்பட்டிருந்தது; அதின் முந்தின பாகத்தில் குத்துவிளக்கும், மேஜையும், தேவ சமுகத்து அப்பங்களும் இருந்தன; அது பரிசுத்த இடம் எனப்படும். யாத் 40:4லேவி 24:5-8யாத் 26:35யாத் 26:33யாத் 40:18-20யாத் 40:22-24யாத் 25:23யாத் 25:8-9 இரண்டாம் திரைக்கு உள்ளே மகா பரிசுத்த இடம் என்று சொல்லப்பட்ட கூடாரம் இருந்தது. யாத் 26:31-33யாத் 40:21யாத் 40:3மத் 27:511 இராஜா 8:6எபி 9:82 நாளாக 3:14எபி 10:19-20 அதிலே தங்கத்தால் செய்த தூபகலசமும், முழுவதும் தங்கத்தகடு பதிக்கப்பட்ட உடன்படிக்கைப் பெட்டியும் இருந்தன; அந்தப் பெட்டியிலே மன்னா வைக்கப்பட்ட தங்கப்பாத்திரமும், ஆரோனுடைய துளிர்த்த கோலும், உடன்படிக்கையின் கற்பலகைகளும் இருந்தன. எண் 17:102 நாளாக 5:10யாத் 26:33யாத் 40:3லேவி 16:12யாத் 16:32-34யாத் 34:29யாத் 40:20-21 அதற்கு மேலே மகிமையுள்ள கேருபீன்கள் வைக்கப்பட்டுக் கிருபாசனத்தை நிழலிட்டிருந்தன; இவைகளைப்பற்றி விளக்கிச்சொல்ல இப்பொழுது நேரமில்லை. லேவி 16:2எண் 7:891 இராஜா 8:6-7யாத் 25:17-22லேவி 16:13சங் 80:1சங் 99:11 நாளாக 28:11 இவைகள் இவ்விதமாக ஆயத்தமாக்கப்பட்டிருக்க, ஆசாரியர்கள் ஆராதனை முறைமைகளை நிறைவேற்ற முதலாம் கூடாரத்திற்குள் எப்பொழுதும் பிரவேசிப்பார்கள். எண் 28:3யாத் 27:21லூக் 1:8-112 நாளாக 26:16-19தானி 8:11யாத் 30:7-8 இரண்டாம் கூடாரத்திற்குள் பிரதான ஆசாரியன்மட்டும் வருடத்திற்கு ஒருமுறை இரத்தத்தை எடுத்துக்கொண்டு உள்ளே பிரவேசித்து, அந்த இரத்தத்தைத் தனக்காகவும் மக்களுடைய தவறுகளுக்காகவும் செலுத்துவான். லேவி 16:34லேவி 5:18யாத் 30:10எபி 10:19-20எபி 7:27எபி 9:24-25ஓசி 4:12ஏசா 28:7 அதினாலே, முதலாம் கூடாரம் நிற்கும்வரைக்கும் மகா பரிசுத்த இடத்திற்குப் போகிற வழி இன்னும் வெளிப்படவில்லை என்று பரிசுத்த ஆவியானவர் தெரியப்படுத்தியிருக்கிறார். யோவா 14:6எபி 3:7எபே 2:18எபி 10:19-22யோவா 10:92 பேது 1:21கலா 3:8எபி 9:3 அந்தக் கூடாரம் இந்தக் காலத்திற்கு உதவுகிற ஒப்பனையாக இருக்கிறது; அதற்கேற்றபடி செலுத்தப்பட்டுவருகிற காணிக்கைகளும் பலிகளும் ஆராதனை செய்கிறவனுடைய மனச்சாட்சியைப் பூரணப்படுத்தமுடியாதவைகள். 1 பேது 3:21எபி 5:1எபி 10:11சங் 51:16-19ரோம 5:14கலா 3:21எபி 10:1-4எபி 11:19 உண்பதும், குடிப்பது, பலவிதமான குளியல்களும், சரீரத்திற்குரிய சடங்குகளேதவிர வேறோன்றும் இல்லை. இவைகள் சீர்திருத்தல் உண்டாகும் காலம்வரைக்கும் செய்வதற்கு கட்டளையிடப்பட்டது. கொலோ 2:16எபே 2:15எபி 7:16லேவி 11:2-47உபா 21:6உபா 23:11எபே 1:10யாத் 30:19-21
கிறிஸ்துவின் இரத்தம்
கிறிஸ்துவானவர் வரப்போகிற நன்மைகளுக்குரிய பிரதான ஆசாரியராக வெளிப்பட்டு, கையினால் செய்யப்பட்டதாகிய இந்தப் படைப்பு சம்பந்தமான கூடாரத்தின்வழியாக அல்ல, பெரிதும் உத்தமுமான கூடாரத்தின்வழியாகவும், எபி 9:23-242 கொரி 5:1அப் 17:24-25எபி 8:1-2எபி 10:11 யோவா 5:20அப் 7:48எபி 2:17 வெள்ளாட்டுக்கடா, இளங்காளை இவைகளுடைய இரத்தத்தினாலே அல்ல, தம்முடைய சொந்த இரத்தத்தினாலும் ஒரேமுறை மகா பரிசுத்த இடத்திற்குள் நுழைந்து, நித்திய மீட்பை உண்டுபண்ணினார். எபி 10:41 பேது 1:18-19எபி 9:15எபே 1:7எபி 5:9எபி 9:24-26கலா 3:13-14லேவி 9:15 அது எப்படியென்றால், காளை வெள்ளாட்டுக்கடா இவைகளின் இரத்தமும், தீட்டுப்பட்டவர்கள்மேல் தெளிக்கப்பட்ட கடாரியின் சாம்பலும், சரீரசுத்தம் உண்டாகப் பரிசுத்தப்படுத்துமென்றால், எண் 19:2-21லேவி 16:14-16அப் 15:91 பேது 1:222 நாளாக 30:19சங் 51:7எண் 8:7 நித்திய ஆவியானவராலே தம்மைத்தாமே பழுதில்லாத பலியாக தேவனுக்கு ஒப்புக்கொடுத்த கிறிஸ்துவினுடைய இரத்தம் ஜீவனுள்ள தேவனுக்கு ஊழியம் செய்வதற்கு உங்களுடைய மனச்சாட்சியைச் செத்த செயல்கள் இல்லாமல் சுத்திகரிப்பது எவ்வளவு நிச்சயம்! எபி 10:221 பேது 1:191 யோவா 1:7எபி 9:121 பேது 2:241 பேது 3:18தீத் 2:141 பேது 4:2 ஆகவே, முதலாம் உடன்படிக்கையின் காலத்திலே நடந்த அக்கிரமங்களை நீக்குவதற்காக அவர் மரணமடைந்து, அழைக்கப்பட்டவர்கள் வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட நித்திய சுதந்திரத்தை அடைந்துகொள்வதற்காக, புதிய உடன்படிக்கையின் மத்தியஸ்தராக இருக்கிறார். ரோம 3:24-26ரோம 8:30எபி 9:12ரோம 8:28எபி 10:361 தீமோ 2:5எபி 12:241 பேது 3:18 ஏனென்றால், எங்கே மரணசாசனம் உண்டோ, அங்கே அந்த சாசனத்தை எழுதினவனுடைய மரணமும் உண்டாகவேண்டும். யாக் 2:101 கொரி 15:22ரோம 5:12ரோம 6:23 எப்படியென்றால், மரணம் உண்டான பின்பே மரணசாசனம் உறுதிப்படும்; அதை எழுதினவன் உயிரோடு இருக்கும்போது அதற்குப் பயன் இல்லையே. ஆதி 48:21கலா 3:15யோவா 14:27 அப்படியே, முதலாம் உடன்படிக்கையும் இரத்தம் இல்லாமல் உறுதி செய்யப்படவில்லை. யாத் 24:3-8எபி 8:7-9எபி 9:14எபி 9:22யாத் 12:22 எப்படியென்றால், மோசே, நியாயப்பிரமாணத்தினால், எல்லா மக்களுக்கும் எல்லாக் கட்டளைகளையும் சொன்னபின்பு, இளங்காளை, வெள்ளாட்டுக்கடா இவைகளின் இரத்தத்தைத் தண்ணீரோடும், சிவப்பான ஆட்டு முடியோடும், ஈசோப்போடும் எடுத்து, புத்தகத்தின் மேலும் மக்கள் எல்லோர்மேலும் தெளித்து: யாத் 24:5-11எசேக் 36:25எபி 10:4எபி 9:12எண் 19:18எண் 19:61 பேது 1:2லேவி 14:4-7 தேவன் உங்களுக்குக் கட்டளையிட்ட உடன்படிக்கையின் இரத்தம் இதுவே என்று சொன்னான். யாத் 24:8மத் 26:28எபி 13:20உபா 29:12சகரி 9:11யோசு 9:6 இவ்விதமாக, கூடாரத்தின்மேலும் ஆராதனைக்குரிய எல்லாப் பணிமுட்டுகளின்மேலும் இரத்தத்தைத் தெளித்தான். லேவி 8:15லேவி 8:19யாத் 29:12யாத் 29:36எசேக் 43:18-26லேவி 16:14-19லேவி 9:18லேவி 9:8-9 நியாயப்பிரமாணத்தின்படி ஏறக்குறைய எல்லாம் இரத்தத்தினாலே சுத்திகரிக்கப்படும்; இரத்தம் சிந்துதல் இல்லாமல் மன்னிப்பு உண்டாகாது. லேவி 17:11லேவி 6:7லேவி 4:35லேவி 5:18லேவி 14:14லேவி 14:6லேவி 5:10லேவி 4:20 ஆகவே, பரலோகத்தில் உள்ளவைகளுக்குச் சாயலானவைகள் இப்படிப்பட்ட பலிகளினாலே சுத்திகரிக்கப்பட வேண்டியதாக இருந்தது; பரலோகத்தில் உள்ளவைகளோ இவைகளிலும் விசேஷித்த பலிகளாலே சுத்திகரிக்கப்படவேண்டியவைகள். 1 பேது 1:19-21எபி 10:4எபி 9:14எபி 9:9-12எபி 9:24எபி 8:5வெளி 5:9கொலோ 2:17 அப்படியே, உண்மையான பரிசுத்த இடத்திற்கு அடையாளமான கையினால் செய்யப்பட்ட பரிசுத்த இடத்திலே கிறிஸ்துவானவர் நுழையாமல், பரலோகத்திலே இப்பொழுது நமக்காக தேவனுடைய சமூகத்தில் வேண்டுதல் செய்வதற்காக நுழைந்திருக்கிறார். எபி 12:2எபி 9:11-12எபி 9:23எபி 8:2யோவா 16:28அப் 3:21கொலோ 3:2எபே 1:20-22 பிரதான ஆசாரியன் மற்றவர்களுடைய இரத்தத்தோடு ஒவ்வொரு வருடமும் பரிசுத்த இடத்திற்குள் நுழைவதுபோல, அவர் அநேகமுறை தம்மைப் பலியிடுவதற்காக நுழையவில்லை. எபி 9:12எபி 9:7எபி 9:14எபி 10:19எபி 9:26யாத் 30:10எபி 10:10லேவி 16:2-34 அப்படியிருந்தால், உலகம் உண்டானதுமுதல் அவர் அநேகமுறை பாடுபடவேண்டியதாக இருக்குமே; அப்படி இல்லை, அவர் தம்மைத்தாமே பலியிடுகிறதினாலே பாவங்களை நீக்க இந்தக் கடைசிகாலத்தில் ஒரேமுறை வெளிப்பட்டார். 1 பேது 1:20எபி 9:12எபி 1:21 பேது 3:18எபி 10:4மத் 25:341 யோவா 3:51 பேது 2:24 அன்றியும், ஒரேமுறை இறப்பதும், பின்பு நியாயத்தீர்ப்பு அடைவதும், மனிதர்களுக்கு நியமிக்கப்பட்டிருக்கிறபடியே, 2 கொரி 5:10பிரச 12:14பிரச 12:7அப் 17:312 சாமு 14:14யோவா 5:26-29பிரச 9:5யூதா 1:15 கிறிஸ்துவும் அநேகருடைய பாவங்களைச் சுமந்து தீர்ப்பதற்காக ஒரேமுறை பலியிடப்பட்டு, தமக்காகக் காத்துக்கொண்டு இருக்கிறவர்களுக்கு இரட்சிப்பை அருளும்படி இரண்டாவதுமுறை பாவம் இல்லாமல் தரிசனமாவார். தீத் 2:131 பேது 2:24ஏசா 25:9ரோம 6:102 தீமோ 4:8ரோம 8:231 யோவா 3:21 தெச 1:10