யோனா 4

Jonah 4
அத்தியாயம் 4

யெகோவாவின் இரக்கத்தைக் குறித்த யோனாவின் கோபம்

யோனாவுக்கு இது மிகவும் வருத்தமாக இருந்தது; அவன் கடுங்கோபம் கொண்டு, யோனா 4:9லூக் 15:28மத் 20:15யோனா 4:4யாக் 4:5-6லூக் 7:39அப் 13:46 யெகோவாவை நோக்கி விண்ணப்பம்செய்து: ஆ யெகோவாவே, நான் என் தேசத்தில் இருக்கும்போதே நான் இதைச் சொல்லவில்லையா? இதினாலேயே நான் முன்னமே தர்ஷீசுக்கு ஓடிப்போனேன்; நீர் இரக்கமும் மன உருக்கமும் நீடிய சாந்தமும் மிகுந்த கிருபையுமுள்ளவரும், தீங்கிற்கு மனமிரங்குகிறவருமான தேவனென்று அறிவேன். சங் 86:15யாத் 34:6-7எண் 14:18-19யோவே 2:13-14சங் 145:8மீகா 7:18சங் 86:5யாத் 32:14 இப்போதும் யெகோவாவே, என் உயிரை என்னைவிட்டு எடுத்துக்கொள்ளும்; நான் உயிரோடு இருக்கிறதைவிட சாகிறது நலமாக இருக்கும் என்றான். 1 இராஜா 19:4பிரச 7:1எரே 20:14-18எண் 11:15யோனா 4:8எண் 20:31 கொரி 9:15யோபு 3:20-21 அதற்குக் யெகோவா: நீ எரிச்சலாக இருக்கிறது நல்லதோ என்றார். மத் 20:15யோனா 4:9சங் 106:32-33யாக் 1:19-20மீகா 6:3எண் 20:11-12எண் 20:24 பின்பு யோனா நகரத்திலிருந்து புறப்பட்டு, நகரத்திற்குக் கிழக்கே போய், அங்கே தனக்கு ஒரு குடிசையைப் போட்டு, நகரத்திற்கு நடக்கப்போகிறதைத் தான் பார்க்கும்வரைக்கும் அதின் கீழே நிழலில் உட்கார்ந்திருந்தான். 1 இராஜா 19:91 இராஜா 19:13ஆதி 19:27-28ஏசா 57:17எரே 17:15-16எரே 20:9யோனா 1:5லூக் 19:41-44 யோனாவுடைய தலையின்மேல் நிழலுண்டாயிருக்கவும், அவனை அவனுடைய மனவருத்தத்திற்கு நீங்கலாக்கவும் தேவனாகிய யெகோவா ஒரு ஆமணக்குச்செடியை முளைக்கக் கட்டளையிட்டு, அதை அவன்மேல் ஓங்கி வளரச்செய்தார்; அந்த ஆமணக்குச் செடியினால் யோனா மிகவும் சந்தோஷப்பட்டான். சங் 103:10-141 கொரி 7:30எஸ்த 5:9ஏசா 39:2யோனா 1:17லூக் 10:20ஆமோ 6:13நீதி 23:5 மறுநாளிலோ கிழக்கு வெளுக்கும் நேரத்தில் தேவன் ஒரு பூச்சிக்குக் கட்டளையிட்டார்; அது ஆமணக்குச் செடியை அரித்துப்போட்டது; அதினால் அது காய்ந்துபோனது. யோவே 1:12சங் 90:5-6ஏசா 40:6-8யோபு 1:21சங் 102:10சங் 30:6-7 சூரியன் உதித்தபோது தேவன் வெப்பமான கீழ்க்காற்றைக் கட்டளையிட்டார்; அப்பொழுது வெயில் யோனாவுடைய தலையில் படுகிறதினால் அவன் சோர்ந்துபோய், தனக்குள்ளே சாவை விரும்பி: நான் உயிரோடு இருக்கிறதைவிட சாகிறது நலமாக இருக்கும் என்றான். யோனா 4:3சங் 121:6எசேக் 19:12ஏசா 49:10வெளி 3:19வெளி 7:161 சாமு 3:182 சாமு 15:25-26 அப்பொழுது தேவன் யோனாவை நோக்கி: நீ ஆமணக்குச் செடிக்காக எரிச்சலாக இருக்கிறது நல்லதோ என்றார்; அதற்கு அவன்: நான் சாகும்வரைக்கும் எரிச்சலாக இருக்கிறது நல்லதுதான் என்றான். ஆதி 4:5-14நியாயாதி 16:16யோபு 18:4யோபு 40:4-5யோபு 5:22 கொரி 7:10மத் 26:38வெளி 9:6 அதற்குக் யெகோவா: நீ பிரயாசப்படாததும் நீ வளர்க்காததும், ஒரு இரவிலே முளைத்ததும், ஒரு இரவிலே அழிந்துபோனதுமான ஆமணக்குச் செடிக்காக மனதுருகுகிறாயே. 1 சாமு 20:31ஆதி 17:12 வலதுகைக்கும் இடதுகைக்கும் வித்தியாசம் தெரியாத இலட்சத்து இருபதினாயிரம்பேருக்கு அதிகமான மனிதர்களும் அநேக மிருகஜீவன்களும் இருக்கிற பெரிய நகரமாகிய நினிவேக்காக நான் மனதுருகாமல் இருப்பேனோ என்றார். மத் 18:33லூக் 15:28-32யோனா 1:2சங் 145:8-9சங் 36:6உபா 1:39ஏசா 1:18சங் 104:14