நியாயாதிபதிகள்

Judges · 21 அதிகாரங்கள்

அதிகாரங்கள் · Chapters

  1. 1
  2. 2
  3. 3
  4. 4
  5. 5
  6. 6
  7. 7
  8. 8
  9. 9
  10. 10
  11. 11
  12. 12
  13. 13
  14. 14
  15. 15
  16. 16
  17. 17
  18. 18
  19. 19
  20. 20
  21. 21

முன்னுரை

ஆசிரியர்

இந்த புத்தகத்தில் ஆசிரியரைப்பற்றி எதுவும் சரியாக குறிப்பிடவில்லை. ஆனாலும் சாமுவேல் தான் எழுதியிருக்க வேண்டும் என்று யூத பாரம்பரியம் சொல்கிறது. சாமுவேல் கடைசி நியாயதிபதியாக இருந்தான். மன்னர் ஆட்சிக் காலத்தின் தொடக்கத்தில் இந்த ஆசிரியர் வாழ்ந்திருக்கிறான். “அந்நாட்களில் இஸ்ரவேலிலே ராஜா இல்லை, அவனவன் தன் தன் பார்வைக்கு சரிப்போனபடி செய்துவந்தான்” 17:6, 18:1, 19:1, 21:25. இந்த வரத்தைகள் அடிக்கடி எழுதப்பட்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சி நடந்த நாட்களுக்கும் எழுதின காலத்திற்கும் முரண்பாடாக இருக்கிறது. நியாயதிபதிகள் அர்த்தம் விடுவிக்கிறரவர்கள்/ மீட்பார்கள். இஸ்ரவேலர்கள் அந்நிய ராஜாக்களால் அடிமைப்படுத்தப்பட்டப்போது மீட்பர்கள் அவர்களை விடுவித்தார்கள். சிலர் மற்ற பிரச்சனைகளையும் தீர்த்து வைத்தார்கள்.

எழுதப்பட்ட காலம் மற்றும் இடம்

ஏறக்குறைய கிமு 1,043 க்கும் 1,000 கிமு. க்கும். இடையில் எழுதப்பட்டது. தாவீது இராஜாவின் காலத்தில் இந்த புத்தகம் தொகுக்கப்பட்டதாக கருதப்படுகிறது. மனித நோக்கம் என்னவென்றால் யோசுவா மரித்தபின் மன்னர் ஆட்சியின் தேவையை உணரத்தக்கதாக எழுதப்பட்டது என்று கணிக்கப்படுகிறது.

யாருக்காக எழுதப்பட்டது

இஸ்ரவேலர்களுக்கும் வேதத்தை வாசிப்பவர்களுக்கும் எழுதப்பட்டது.

எழுதப்பட்ட நோக்கம்

கானான் தேசத்தை சொந்தமாக்கியப் பிறகு இஸ்ரவேலின் இராஜா வரை உள்ள சரித்திர குறிப்புகள். வெறும் சரித்திர பதிவுக்காக மாத்திரம் அல்ல தேவன் அவர்கள் மத்தியில் செய்த கிரியைகளை அறியவும் எழுதப்பட்டது (24:14-28; 2:6-13), இஸ்ரவேலர்கள் உடன்படிக்கையை மீறினப் பிறகும் யெகோவா, தான், ஆபிரகாமுக்கு செய்த உடன்படிக்கைக்கு உண்மையுள்ளவராய் இருந்தார். ஒவ்வொரு சந்ததியிலும் தீமையோடு போராட தேவன் ஒருவரை எழுப்புவதால் இருந்தால் அனேக நியாயதிபதிகள் எழும்பியிருக்கவேண்டும்.

மையக் கருத்து

மோசமான நிலமைகளும் விடுதலைகளும்

பொருளடக்கம்

1. நியாயதிபதிகளின் காலத்தில், இஸ்ரவேலின் நிலைமை — 1:1-3:6

2. இஸ்ரவேலின் நியயாபதிகள் — 3:7-16:31

3. இஸ்ரவேலின் பாவத்தின் காரியங்களைக் காட்டும் நிகழ்ச்சிகள் — 17:1-21:25