லேவியராகமம்

Leviticus · 27 அதிகாரங்கள்

அதிகாரங்கள் · Chapters

  1. 1
  2. 2
  3. 3
  4. 4
  5. 5
  6. 6
  7. 7
  8. 8
  9. 9
  10. 10
  11. 11
  12. 12
  13. 13
  14. 14
  15. 15
  16. 16
  17. 17
  18. 18
  19. 19
  20. 20
  21. 21
  22. 22
  23. 23
  24. 24
  25. 25
  26. 26
  27. 27

முன்னுரை

ஆசிரியர்

இந்த புத்தகத்தில் கொடுக்கப்பட்ட வசனங்கள் மூலமாக மோசே தான் இதை எழிதினான் என்று உறுதிப்படுத்திக் கொள்ளுகிறோம். அதிகாரம் 1:1, 2 வசனங்கள் இவைகள் இஸ்ரவேல் புத்திரருக்கு சொல்லும்படி யெகோவா சீனாய் மலையில் மோசேக்கு விதித்த கட்டளைகள் ஆகும் என்று சொல்கிறது. (27:34, ஒப்பிடுக 7:38; 25:1; 26:46) இந்த புத்தகத்தில் அனேக பிரமாணங்களுக்கு சம்பந்தப்பட்ட சரித்திரக் காரியங்கள் விவரிக்கப்பட்டுள்ளது. (8:10; 24:10-23) லேவியராகமம் என்ற பதம் லேவி கோத்திரத்திலிருந்து வருகிறது. லேவியர்கள் ஆசாரிய ஊழியத்திற்கும் ஆராதனை செய்திடவும் வேறு பிரிக்கப்பட்டவர்கள் ஆவார்கள். ஜனங்கள் எப்படி பரிசுத்த வாழ்க்கை வாழவேண்டும் என்றும், லேவியர்கள் மக்களுக்கு ஆராதனையில் எப்படி வழி நடத்த உதவ வேண்டும் என்றும் அதிகமாக சொல்லப்பட்டு இருக்கிறது.

எழுதப்பட்ட காலம் மற்றும் இடம்

ஏறக்குறைய கி. மு. 1,446 க்கும் 1,405 க்கும் இடையில் எழுதப்பட்டது.

இஸ்ரவேல் ஜனங்கள் சீனாய் மலைப் பகுதியில் பாளையம் இறங்கி இருந்த நாட்களில் எழுதப்பட்டது.

யாருக்காக எழுதப்பட்டது

இந்த புத்தகம் ஆசாரியர்களுக்கும், லேவேயர்களுக்கும் இஸ்ரவேல் ஜனங்களுக்கும் அவர்களுடைய பின்வரும் சந்ததிக்கும் எழுதப்பட்டது.

எழுதப்பட்ட நோக்கம்

லேவியராகமம் புத்தகம், தேவன் மோசேயை ஆசரிப்பு கூடாரத்திலிருந்து அழைத்தது முதல் தொடங்குகிறது. மீட்கப்பட்ட ஜனங்கள், தங்கள் மத்தயில் வாசம் செய்யும் மகிமையான தேவனோடு எப்படி ஐக்கியம் வைத்துக்கொள்ளவேண்டும் என்று இந்த புத்தகம் விளக்குகிறது. இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்தையும் அவர்களுடைய கலாச்சாரத்தையும் மத வழிபாடுகளையும் விட்டு வாக்குதத்தம் பண்ணப்பட்ட கானான் தேசத்தில் இருக்கிற கலாச்சாரத்தையும் மத வழிபாடுகளையும் பின்பற்றாமல் யெகோவா தேவனுக்கு உண்மையாய் வாழும்படி போதிக்கிறது. இப்படிப்பட்ட கலாச்சாரத்திலிருந்து யெகோவாவுக்கா பிரித்தெடுத்த வாழ்க்கையை உண்மையாய் வாழ இந்த புத்தகம் நிபந்தனைகளை கொடுக்கிறது.

மையக் கருத்து

உபதேசம்

பொருளடக்கம்

1. பலிகளைக்குறித்த விதிமுறைகள் — 1:1-7:38

2. தேவனுடைய ஆசாரியர்களுக்கு கொடுக்கபட்ட விதிமுறைகள் — 8:1-10:20

3. தேவனுடைய ஜனங்களுக்கு அளிக்கப்பட விதிமுறைகள் — 11:1-15:33

4. பலிபீடத்திற்க்கான விதிமுறைகளும் பாவநிவிர்த்தியின் நாளுக்கான விதிமுறைகளும் — 16:1-34

5. நடைமுறை பரிசுத்ததிற்கான விதிமுறைகள் — 17:1-22:33

6. ஓய்வு நாட்களுக்கான, பண்டிகைக்களுக்கான விதிமுறைகள் — 23:1-25:55

7. தேவனுடைய ஆசிர்வாதங்களை பெற்றுக்கொள்ள கடைப்பிடிக்கவேண்டிய நிபந்தனைகள் — 26:1-27:34