எண்ணாகமம் 20

Numbers 20
அத்தியாயம் 20

கன்மலையிலிருந்து தண்ணீர்

இஸ்ரவேல் மக்களின் சபையார் எல்லோரும் முதலாம் மாதத்தில் சீன்வனாந்திரத்திலே சேர்ந்து, மக்கள் காதேசிலே தங்கியிருக்கும்போது, மிரியாம் மரணமடைந்து, அங்கே அடக்கம்செய்யப்பட்டாள். எண் 13:21யாத் 15:20எண் 33:36எண் 26:59எண் 27:14உபா 1:22-23உபா 2:14உபா 32:51 மக்களுக்குத் தண்ணீர் இல்லாமல் இருந்தது; அப்பொழுது அவர்கள் மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாகக் கூட்டம்கூடினார்கள். எண் 16:19எண் 16:42யாத் 15:23-241 கொரி 10:10-11யாத் 16:12யாத் 16:2யாத் 16:7யாத் 17:1-4 மக்கள் மோசேயோடு வாக்குவாதம்செய்து: “எங்களுடைய சகோதரர்கள் யெகோவாவுடைய சந்நிதியில் இறந்தபோது நாங்களும் இறந்துபோயிருந்தால் நலமாக இருக்கும். யாத் 17:2எண் 14:1-2எண் 16:31-35யாத் 16:2-3எண் 11:1எண் 11:33-34எண் 16:49யோபு 3:10-11 நாங்களும் எங்களுடைய மிருகங்களும் இங்கே இறக்கும்படி, நீங்கள் யெகோவாவின் சபையை இந்த வனாந்திரத்திலே கொண்டு வந்தது என்ன; யாத் 17:3சங் 106:21அப் 7:35அப் 7:39-40யாத் 14:11-12யாத் 16:3யாத் 5:21எண் 11:5 விதைப்பும், அத்திமரமும், திராட்சைச்செடியும், மாதுளஞ்செடியும், குடிக்கத்தண்ணீரும் இல்லாத இந்தக் கெட்ட இடத்தில் எங்களைக் கொண்டுவரும்படி, நீங்கள் எங்களை எகிப்திலிருந்து புறப்படச்செய்தது ஏன்” என்றார்கள். எண் 16:14உபா 8:15எசேக் 20:36எரே 2:2எரே 2:6நெகே 9:21 அப்பொழுது மோசேயும் ஆரோனும் சபையாரைவிட்டு, ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலில் போய், முகங்குப்புற விழுந்தார்கள்; யெகோவாவுடைய மகிமை அவர்களுக்குக் காணப்பட்டது. எண் 14:5எண் 16:19எண் 16:22எண் 16:4எண் 16:451 நாளாக 21:16யாத் 16:10யாத் 17:4 யெகோவா மோசேயை நோக்கி: “நீ கோலை எடுத்துக்கொண்டு, நீயும் உன்னுடைய சகோதரனாகிய ஆரோனும் சபையாரைக் கூடிவரச்செய்து, அவர்கள் கண்களுக்குமுன்னே கன்மலையைப் பார்த்துப் பேசுங்கள்; அப்பொழுது அது தன்னிடத்திலுள்ள தண்ணீரைக் கொடுக்கும்; இப்படி நீ அவர்களுக்குக் கன்மலையிலிருந்து தண்ணீர் புறப்படச்செய்து, சபையாருக்கும் அவர்களுடைய மிருகங்களுக்கும் குடிக்கக் கொடுப்பாய்” என்றார். யாத் 4:17ஏசா 43:20அப் 2:1-4யாத் 17:5-6ஏசா 48:21யோவா 16:24நெகே 9:15வெளி 22:17 அப்பொழுது மோசே தனக்குக் யெகோவா கட்டளையிட்டபடியே யெகோவாவுடைய சந்நிதியிலிருந்த கோலை எடுத்தான். எண் 17:10 மோசேயும் ஆரோனும் சபையாரைக் கன்மலைக்கு முன்பாகக் கூடிவரச்செய்தார்கள்; அப்பொழுது மோசே அவர்களை நோக்கி: “கலகக்காரரே, கேளுங்கள், உங்களுக்கு இந்தக் கன்மலையிலிருந்து நாங்கள் தண்ணீர் புறப்படச்செய்வோமோ” என்று சொல்லி, சங் 106:32-33அப் 14:9-15அப் 23:3-5அப் 3:12-16தானி 2:28-30உபா 9:24எபே 4:26ஆதி 40:8 தன்னுடைய கையை ஓங்கி, கன்மலையைத் தன்னுடைய கோலினால் இரண்டுமுறை அடித்தான்; உடனே தண்ணீர் ஏராளமாகப் புறப்பட்டது, சபையார் குடித்தார்கள்; அவர்கள் மிருகங்களும் குடித்தது. 1 கொரி 10:4யாத் 17:6உபா 8:15எண் 20:81 நாளாக 15:131 சாமு 15:24ஓசி 13:5யாக் 1:20 பின்பு யெகோவா மோசேயையும் ஆரோனையும் நோக்கி: “இஸ்ரவேல் மக்கள் கண்களுக்கு முன்பாக என்னைப் பரிசுத்தம்செய்யும்படி, நீங்கள் என்னை விசுவாசிக்காமல் போனதால், இந்தச் சபையாருக்கு நான் கொடுத்த தேசத்திற்குள் நீங்கள் அவர்களைக் கொண்டுபோவதில்லை” என்றார். உபா 1:37எண் 27:14எசேக் 36:23எண் 20:24உபா 3:23-27உபா 32:49-51உபா 34:4ஏசா 8:13 இங்கே இஸ்ரவேல் மக்கள் யேகோவாவோடு வாக்குவாதம் செய்ததினாலும், அவர்களுக்குள்ளே அவருடைய பரிசுத்தம் விளங்கினதினாலும் இது மேரிபாவின் 1 தண்ணீர் என்னப்பட்டது. யாத் 17:7சங் 95:8உபா 33:8உபா 32:51சங் 106:32-48எசேக் 20:41எசேக் 36:23எசேக் 38:16

ஏதோம் இஸ்ரவேலர்களுக்கு அனுமதி மறுத்தல்

பின்பு மோசே காதேசிலிருந்து ஏதோமின் ராஜாவினிடத்திற்கு தூதுவர்களை அனுப்பி: நியாயாதி 11:16-17உபா 23:7உபா 2:4-25ஆதி 32:3-4ஆதி 36:31-39யோசு 9:9மல்கி 1:2ஒபதி 1:10-12 எங்களுடைய முற்பிதாக்கள் எகிப்திற்குப் போனதும், நாங்கள் எகிப்திலே நெடுநாட்கள் வாசம்செய்ததும், எகிப்தியர்கள் எங்களையும் எங்களுடைய பிதாக்களையும் உபத்திரவப்படுத்தினதும், இவைகளினால் எங்களுக்கு நேரிட்ட எல்லா வருத்தமும் உமக்குத் தெரிந்திருக்கிறது. உபா 26:6யாத் 12:40ஆதி 46:6அப் 7:15ஆதி 15:13அப் 7:19யாத் 1:11-14யாத் 1:16 யெகோவாவை நோக்கி நாங்கள் மன்றாடினோம்; அவர் எங்களுக்குச் செவிகொடுத்து, ஒரு தூதனை அனுப்பி, எங்களை எகிப்திலிருந்து புறப்படச்செய்தார்; இப்பொழுது நாங்கள் உமது எல்லைக்கு உட்பட்ட காதேஸ் ஊரில் வந்திருக்கிறோம். யாத் 14:19யாத் 23:20யாத் 33:2யாத் 3:2-9யாத் 2:23-24யாத் 14:10யாத் 6:5 நாங்கள் உமது தேசத்தின் வழியாகக் கடந்துபோகும்படி அனுமதி கொடுக்கவேண்டும்; வயல்வெளிகள் வழியாகவும், திராட்சைத்தோட்டங்கள் வழியாகவும் நாங்கள் போகாமலும், கிணறுகளின் தண்ணீரைக் குடிக்காமலும், ராஜபாதையாகவே நடந்து, உமது எல்லையைக் கடந்துபோகும்வரை, வலதுபுறம் இடதுபுறம் சாயாமல் இருப்போம் என்று, உமது சகோதரனாகிய இஸ்ரவேல் சொல்லி அனுப்புகிறான்” என்று சொல்லச்சொன்னான். உபா 2:27உபா 2:1-4உபா 2:29எண் 21:1எண் 21:22-24 அதற்கு ஏதோம்: “நீ என்னுடைய தேசத்தின் வழியாகக் கடந்துபோக முடியாது; போனால் பட்டயத்தோடு உன்னை எதிர்க்கப் புறப்படுவேன் என்று அவனுக்குச் சொல்லச்சொன்னான். அப்பொழுது இஸ்ரவேல் மக்கள் அவனை நோக்கி: “நடப்பான பாதையின் வழியாகப் போவோம்; நாங்களும் எங்களுடைய மிருகங்களும் உன்னுடைய தண்ணீரைக் குடித்தால், அதற்குக் தகுந்த விலைகொடுப்போம்; வேறொன்றும் செய்யாமல், கால்நடையாக மட்டும் கடந்துபோவோம்” என்றார்கள். உபா 2:28உபா 2:6யாத் 12:38 அதற்கு அவன்: “நீ கடந்துபோக முடியாது” என்று சொல்லி, கணக்கற்ற மக்களோடும் பலத்த கரங்களோடும், படையோடும் அவர்களை எதிர்க்கப் புறப்பட்டான். ஆமோ 1:11நியாயாதி 11:17எசேக் 35:5-11ஆதி 27:41ஆதி 32:6நியாயாதி 11:20எண் 20:18ஒபதி 1:10-15 இப்படி ஏதோம் தன்னுடைய எல்லைவழியாகக் கடந்துபோகும்படி இஸ்ரவேலர்களுக்கு அனுமதி கொடுக்கவில்லை; ஆகையால் இஸ்ரவேலர்கள் அவனை விட்டு விலகிப் போனார்கள். நியாயாதி 11:18உபா 2:29உபா 2:27உபா 2:4-8உபா 23:7நியாயாதி 11:24

ஆரோனின் மரணம்

இஸ்ரவேல் மக்களான சபையார் எல்லோரும் காதேசை விட்டுப் பயணப்பட்டு, ஓர் என்னும் மலைக்குப் போனார்கள். எண் 20:1எண் 20:14எண் 21:4எசேக் 47:19எசேக் 48:28எண் 13:26எண் 20:16எண் 33:36-38 ஏதோம் தேசத்தின் எல்லைக்கு அருகான ஓர் என்னும் மலையிலே யெகோவா மோசேயையும் ஆரோனையும் நோக்கி: எண் 33:37 “ஆரோன் தன்னுடைய மக்களோடு சேர்க்கப்படுவான். மேரிபாவின் தண்ணீரைப்பற்றிய காரியத்தில் நீங்கள் என்னுடைய வாக்குக்குக் கீழ்ப்படியாமல் போனபடியால், நான் இஸ்ரவேல் மக்களுக்குக் கொடுக்கிற தேசத்தில் அவன் நுழைவதில்லை. ஆதி 25:8உபா 32:502 நாளாக 34:28எண் 20:10-12எண் 27:13எண் 31:2ஆதி 15:15ஆதி 25:17 நீ ஆரோனையும் அவனுடைய மகனாகிய எலெயாசாரையும் கூட்டிக்கொண்டு, அவர்களை ஓர் என்னும் மலையில் ஏறச்செய்து, எண் 33:38-39 ஆரோன் உடுத்தியிருக்கிற ஆடைகளைக் கழற்றி, அவைகளை அவனுடைய மகனாகிய எலெயாசாருக்கு உடுத்து; ஆரோன் அங்கே மரித்து, தன்னுடைய மக்களோடு சேர்க்கப்படுவான்” என்றார். எண் 20:24யாத் 29:29-30எபி 7:11எபி 7:23-24ஏசா 22:21-22 யெகோவா கட்டளையிட்டபடியே மோசே செய்தான்; சபையார் எல்லோரும் பார்க்க, அவர்கள் ஓர் என்னும் மலையில் ஏறினார்கள். அங்கே ஆரோன் உடுத்தியிருந்த ஆடைகளை மோசே கழற்றி, அவைகளை அவனுடைய மகனாகிய எலெயாசாருக்கு உடுத்தினான்; அப்பொழுது ஆரோன் அங்கே மலையின் உச்சியிலே இறந்தான்; பின்பு மோசேயும் எலெயாசாரும் மலையிலிருந்து இறங்கினார்கள். உபா 10:6யாத் 29:29-301 நாளாக 22:11-121 நாளாக 22:171 நாளாக 28:5-92 பேது 1:15அப் 20:25-29உபா 31:7-8 ஆரோன் இறந்துபோனான் என்பதைச் சபையார் எல்லோரும் கண்டபோது, இஸ்ரவேல் வம்சத்தார் எல்லோரும் ஆரோனுக்காக 30 நாட்கள் துக்கம்கொண்டாடினார்கள். உபா 34:82 நாளாக 35:24-25அப் 8:2ஆதி 1:10