இஸ்ரவேல் மோவாபியப் பெண்களோடு விபசாரம் செய்தல்
இஸ்ரவேல் சித்தீமிலே தங்கியிருக்கும்போது, மக்கள் மோவாபின் மகள்களோடு விபசாரம் செய்யத் தொடங்கினார்கள். 1 கொரி 10:8யோசு 2:1எண் 33:49மீகா 6:5வெளி 2:14யோசு 3:1எண் 31:15-16பிரச 7:26 அவர்கள் தங்களுடைய தெய்வங்களுக்கு செலுத்திய பலிகளை விருந்துண்ணும்படி மக்களை அழைத்தார்கள்; மக்கள் போய் சாப்பிட்டு, அவர்கள் தெய்வங்களைப் பணிந்துகொண்டார்கள். 1 கொரி 10:20யாத் 20:5யாத் 34:15-16ஓசி 9:10சங் 106:281 இராஜா 11:1-8யோசு 22:17வெளி 2:14 இப்படி இஸ்ரவேலர்கள் பாகால்பேயோரைப் பற்றிக்கொண்டார்கள்; அதனால் இஸ்ரவேலர்கள்மேல் யெகோவாவுடைய கோபம் வந்தது. ஓசி 9:10யோசு 22:17சங் 106:28-29உபா 4:3-4நியாயாதி 2:14நியாயாதி 2:20எரே 17:4எண் 25:5 யெகோவா மோசேயை நோக்கி: “யெகோவாவுடைய கடுமையான கோபம் இஸ்ரவேலை விட்டு நீங்கும்படி நீ மக்களின் தலைவர் எல்லோரையும் கூட்டிக்கொண்டு, அப்படிச் செய்தவர்களைச் சூரிய வெளிச்சத்திலே யெகோவாவுடைய சந்நிதானத்தில் 1 தூக்கில்போடும்படி செய் என்றார். உபா 13:17உபா 4:32 சாமு 21:6உபா 21:23எண் 25:112 சாமு 21:9உபா 13:13உபா 13:15 அப்படியே மோசே இஸ்ரவேலின் நியாயாதிபதிகளை நோக்கி: “நீங்கள் அவரவர் பாகால்பேயோரைப் பற்றிக்கொண்ட உங்களுடைய மனிதர்களைக் கொன்றுபோடுங்கள்” என்றான். 1 இராஜா 18:40யாத் 18:21உபா 13:13உபா 13:15உபா 13:6உபா 13:9உபா 17:3-5யாத் 18:25-26 அப்பொழுது மோசேயும் இஸ்ரவேல் மக்களாகிய சபையார் அனைவரும் ஆசரிப்புக் கூடாரத்தின்வாசலுக்கு முன்பாக அழுதுகொண்டு நிற்கும்போது, அவர்கள் கண்களுக்கு முன்பாக இஸ்ரவேல் மக்களில் ஒருவன் ஒரு மீதியானிய பெண்ணைத் தன்னுடைய சகோதரர்களிடம் அழைத்துக்கொண்டுவந்தான். யோவே 2:17எண் 22:42 பேது 2:13-15உபா 29:19-21எசேக் 9:4-6எஸ்றா 10:6-9எஸ்றா 9:1-4ஏசா 22:12 அதை ஆசாரியனாகிய ஆரோனின் மகனான எலெயாசாரின் மகன் பினெகாஸ் பார்த்தபோது, அவன் நடுச்சபையிலிருந்து எழுந்து, ஒரு ஈட்டியைத் தன்னுடைய கையிலே பிடித்து, யாத் 6:251 சாமு 18:10-111 சாமு 19:9நியாயாதி 20:28யோசு 22:30-31சங் 106:30 இஸ்ரவேலனாகிய அந்த மனிதன் விபசாரம்செய்யும் அறையிலே அவன் பின்னாலே போய், இஸ்ரவேல் மனிதனும் அந்த பெண்ணுமாகிய இருவருடைய வயிற்றிலும் ஈட்டி வெளியே போகுமளவுக்கு அவர்களைக் குத்திப்போட்டான்; அப்பொழுது இஸ்ரவேல் மக்களில் உண்டான வாதை நின்றுபோயிற்று. எண் 16:46-48சங் 106:29-311 நாளாக 21:222 சாமு 24:25எண் 25:11எண் 25:5 அந்த வாதையால் இறந்தவர்கள் 24,000 பேர். 1 கொரி 10:8உபா 4:3-4எண் 25:4-5எண் 14:37எண் 16:49-50எண் 31:16 யெகோவா மோசேயை நோக்கி: “நான் என்னுடைய எரிச்சலில் இஸ்ரவேல் மக்களை அழிக்காதபடி, ஆசாரியனாகிய ஆரோனின் மகனான எலெயாசாரின் மகன் பினெகாஸ், எனக்காக அவர்கள் நடுவில் பக்திவைராக்கியம் காண்பித்ததினால், இஸ்ரவேல் மக்கள்மேல் உண்டான என்னுடைய கடுங்கோபத்தை திருப்பினான். உபா 32:16உபா 32:21சங் 78:581 கொரி 10:221 இராஜா 14:222 கொரி 11:2யாத் 20:5செப்ப 1:18 ஆகையால், “இதோ, அவனுக்கு என்னுடைய சமாதானத்தின் உடன்படிக்கையைக் கட்டளையிடுகிறேன். மல்கி 2:4-5ஏசா 54:10மல்கி 3:1எண் 13:29எசேக் 34:25 அவன் தன்னுடைய தேவனுக்காக பக்திவைராக்கியம் காண்பித்து, இஸ்ரவேல் மக்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்தபடியினால், அவனுக்கும் அவனுக்குப் பின்பு அவன் சந்ததிக்கும் நிரந்தர ஆசாரிய பட்டத்திற்குரிய உடன்படிக்கை உண்டாயிருக்கும் என்று சொல்” என்றார். எபி 2:171 நாளாக 6:4-151 பேது 2:5யாத் 40:15எரே 33:18எரே 33:22சங் 106:31ரோம 10:2-4 மீதியானிய பெண்ணோடு குத்தப்பட்டு இறந்த இஸ்ரவேல் மனிதனுடைய பெயர் சிம்ரி; அவன் சல்லூவின் மகனும், சிமியோனியர்களின் தகப்பன் வம்சத்தில் ஒரு பிரபுவாகவும் இருந்தான். 2 நாளாக 19:7எண் 1:23எண் 25:4-5எண் 26:14 குத்தப்பட்ட மீதியானிய பெண்ணின் பெயர் கஸ்பி, அவள் சூரின் மகள், அவன் மீதியானியர்களுடைய தகப்பன் வம்சத்தாரான மக்களுக்குத் தலைவனாக இருந்தான். எண் 31:8யோசு 13:21எண் 25:18 யெகோவா மோசேயை நோக்கி: “மீதியானியர்களை வீழ்த்தி அவர்களை வெட்டிப்போடுங்கள். எண் 31:1-3வெளி 18:6 பேயோரின் காரியத்திலும் பேயோரினால் வாதை உண்டான நாளிலே குத்தப்பட்ட அவர்களுடைய சகோதரியாகிய கஸ்பி என்னும் மீதியான் பிரபுவினுடைய மகளின் காரியத்திலும், அவர்கள் உங்களுக்குச் செய்த துரோகங்களினால் உங்களை மோசம்போக்கி நெருக்கினார்களே” என்றார். வெளி 2:142 கொரி 11:32 பேது 2:14-152 பேது 2:18யாத் 32:21யாத் 32:35ஆதி 26:10ஆதி 3:13