நகோமியும் ரூத்தும்
நியாயாதிபதிகள் 1 நியாயம் விசாரித்துவந்த நாட்களில், தேசத்தில் பஞ்சம் உண்டானது; அப்பொழுது யூதாவிலுள்ள பெத்லெகேம் 2 ஊரைச்சேர்ந்த ஒரு மனிதன் தன்னுடைய மனைவியோடும், இரண்டு மகன்களோடும் மோவாப் தேசத்திற்குப் போய் குடியிருந்தான். ஆதி 12:10ஆதி 26:1எசேக் 14:132இராஜா 8:1-2உபா 28:38ஆதி 43:1நியாயாதி 17:8யோவே 1:16-20 அந்த மனிதனுடைய பெயர் எலிமெலேக்கு 3, அவனுடைய மனைவியின் பெயர் நகோமி 4, அவனுடைய இரண்டு மகன்களில் ஒருவன் பெயர் மக்லோன் 5, மற்றொருவன் பெயர் கிலியோன் 6; யூதாவிலுள்ள பெத்லெகேம் ஊராகிய எப்பிராத்தியர்களாகிய அவர்கள் மோவாப் தேசத்திற்குப் போய், அங்கே இருந்துவிட்டார்கள். ஆதி 35:191 சாமு 17:21மீகா 5:21 சாமு 1:1 நகோமியின் கணவனாகிய எலிமெலேக்கு இறந்துபோனான்; அவளும் அவளுடைய இரண்டு மகன்கள்மட்டும் இருந்தார்கள். சங் 34:192இராஜா 4:1எபி 12:10-11எபி 12:6 இவர்கள் மோவாபியப் பெண்களைத் திருமணம் செய்தார்கள்; அவர்களில் ஒருத்தியின் பெயர் ஒர்பாள் 7, மற்றவளுடைய பெயர் ரூத் 8; அங்கே ஏறக்குறைய 10 வருடங்கள் வாழ்ந்தார்கள். மத் 1:5உபா 7:31 இராஜா 11:1-2உபா 23:3 பின்பு மக்லோன் கிலியோன் என்ற அவர்கள் இருவரும் இறந்துபோனார்கள்; அந்தப் பெண் தன்னுடைய மகன்கள் இருவரையும் தன்னுடைய கணவனையும் இழந்து தனிமையானாள். உபா 32:39சங் 89:30-32ஏசா 49:21எரே 2:19லூக் 7:12மத் 22:25-27 யெகோவா தம்முடைய மக்களைச் சந்தித்து, அவர்களுக்கு ஆகாரம் அருளினார் என்று அவள் மோவாப்தேசத்திலே கேள்விப்பட்டு; தன்னுடைய மருமகள்களோடு மோவாப் தேசத்திலிருந்து திரும்பிவரும்படி எழுந்து, சங் 132:15சங் 111:5யாத் 3:16யாத் 4:311 சாமு 2:21யாத் 16:4-6ஏசா 55:10எரே 29:10 தன்னுடைய இரண்டு மருமகள்களோடு தான் இருந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டாள். யூதா தேசத்திற்குத் திரும்பிப்போக, அவர்கள் வழியிலே நடந்துபோகும்போது, 2இராஜா 8:3யாத் 18:27ரூத் 1:10ரூத் 1:14 நகோமி தன்னுடைய இரண்டு மருமகள்களையும் நோக்கி: நீங்கள் இருவரும் உங்கள் தாய்வீட்டிற்குத் திரும்பிப்போங்கள்; இறந்துபோனவர்களுக்கும் எனக்கும் நீங்கள் தயவுசெய்ததுபோல, யெகோவா உங்களுக்கும் தயவுசெய்வாராக. ரூத் 1:5ரூத் 2:20கொலோ 3:18கொலோ 3:24எபே 6:2-3எபே 5:22யோசு 24:15-282 தீமோ 1:16-18 யெகோவா உங்கள் இருவருக்கும் கிடைக்கும் கணவனுடைய வீட்டிலே நீங்கள் சுகமாக வாழச் செய்வாராக என்று சொல்லி, அவர்களை முத்தமிட்டாள். அப்பொழுது அவர்கள் சத்தமிட்டு அழுது, அவளைப் பார்த்து: ரூத் 3:1அப் 20:37ஆதி 29:11ஆதி 27:27ஆதி 45:15 உம்முடைய மக்களிடத்திற்கு உம்மோடு நாங்களும் வருவோம் என்றார்கள். சகரி 8:23சங் 119:63சங் 16:3 அதற்கு நகோமி: என் பிள்ளைகளே, நீங்கள் திரும்பிப்போங்கள்; என்னோடு ஏன் வருகிறீர்கள்? உங்களுக்குக் கணவனாவதற்கு, இனிமேல் என் கர்ப்பத்தில் எனக்கு மகன்கள் பிறப்பார்களோ? உபா 25:5ஆதி 38:11 என் பிள்ளைகளே, திரும்பிப்போங்கள்; நான் வயதானவள்; ஒரு கணவனோடு வாழத் தகுதியுள்ளவள் அல்ல; அப்படிப்பட்ட நம்பிக்கை எனக்கு உண்டாகி, நான் இன்று இரவில் ஒரு கணவனுக்கு வாழ்க்கைப்பட்டு, மகன்களைப் பெற்றெடுத்தாலும், ஆதி 17:171 தீமோ 5:9 அவர்கள் பெரியவர்களாகும்வரை, கணவனுக்கு வாழ்க்கைப்படாமல் நீங்கள் பொறுத்திருப்பீர்களோ? அது முடியாது; என் பிள்ளைகளே, யெகோவாவுடைய கை எனக்கு விரோதமாக இருக்கிறதினால், உங்களைக் குறித்து எனக்கு மிகுந்த துக்கம் இருக்கிறது என்றாள். யோபு 19:21சங் 32:4நியாயாதி 2:15சங் 38:2சங் 39:9-101 சாமு 5:11உபா 2:15 அப்பொழுது அவர்கள் சத்தமிட்டு அதிகமாக அழுதார்கள்; ஒர்பாள் தன்னுடைய மாமியாரை முத்தம் செய்துவிட்டுக் கடந்துபோனாள்; ரூத்தோ மாமியாரை விடாமல் பற்றிக்கொண்டாள். நீதி 18:24மத் 16:24மத் 10:37எபி 10:39யோவா 6:66-69மத் 19:221 இராஜா 19:20உபா 10:20 அப்பொழுது அவள்: இதோ, உன்னுடைய சகோதரி தன்னுடைய மக்களிடத்திற்கும் தன்னுடைய தெய்வங்களிடத்திற்கும் திரும்பிப்போய்விட்டாளே; நீயும் உன் சகோதரியின் பின்னே திரும்பிப்போ என்றாள். நியாயாதி 11:24செப்ப 1:62இராஜா 2:2யோசு 24:15சங் 125:51 யோவா 2:192 சாமு 15:19-20எபி 10:38 அதற்கு ரூத்: நான் உம்மைப் பின்பற்றாமல் உம்மைவிட்டுத் திரும்பிப் போவதைக்குறித்து, என்னோடு பேசவேண்டாம்; நீர் போகும் இடத்திற்கு நானும் வருவேன்; நீர் தங்கும் இடத்திலே நானும் தங்குவேன்; உம்முடைய மக்கள் என்னுடைய மக்கள்; உம்முடைய தேவன் என்னுடைய தேவன். 2 சாமு 15:21ரூத் 2:11-122இராஜா 2:2-6சங் 45:10மத் 8:19யோவா 13:371 தெச 1:9ஏசா 14:1 நீர் மரணமடையும் இடத்தில் நானும் மரணமடைந்து, அங்கே அடக்கம்செய்யப்படுவேன்; மரணத்தைத்தவிர வேறொன்றும் உம்மை விட்டு என்னைப் பிரித்தால், யெகோவா அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் எனக்குச் செய்யக்கடவர் என்றாள். 1 சாமு 3:171 இராஜா 2:232இராஜா 6:312 சாமு 19:131 இராஜா 20:101 சாமு 25:222 சாமு 3:351 இராஜா 19:2 அவள் தன்னோடு வர மனஉறுதியாக இருக்கிறதைக் கண்டு, அதன்பின்பு அதைக்குறித்து அவளோடு ஒன்றும் பேசவில்லை. அப் 21:14அப் 2:42எபே 6:10 அப்படியே இருவரும் பெத்லெகேம்வரைக்கும் நடந்துபோனார்கள்; அவர்கள் பெத்லெகேமுக்கு வந்தபோது, ஊர் மக்கள் எல்லோரும் அவர்களைக் குறித்து ஆச்சரியப்பட்டு, இவள் நகோமியோ என்று பேசிக்கொண்டார்கள். மத் 21:10ஏசா 23:7புலம் 2:15 அதற்கு அவள்: நீங்கள் என்னை நகோமி என்று சொல்லாமல், மாராள் 9 என்று சொல்லுங்கள்; சர்வவல்லவர் எனக்கு மிகுந்த கசப்பைக் கட்டளையிட்டார். யோபு 6:4எபி 12:11சங் 88:15ஏசா 38:13யோபு 19:6புலம் 3:1-20சங் 73:14யோபு 5:17 நான் நிறைவுள்ளவளாகப் போனேன்; யெகோவா என்னை வெறுமையாகத் திரும்பிவரச்செய்தார்; யெகோவா என்னைச் சிறுமைப்படுத்தி, சர்வவல்லவர் என்னை வருத்தப்படுத்தியிருக்கும்போது, நீங்கள் என்னை நகோமி என்று சொல்வது ஏன் என்றாள். 1 சாமு 2:7-8யோபு 1:21யோபு 13:26யோபு 16:8யோபு 10:17மல்கி 3:5 இப்படி, நகோமி மோவாபியப் பெண்ணாகிய தன்னுடைய மருமகள் ரூத்தோடு மோவாப் தேசத்திலிருந்து திரும்பிவந்தாள்; வாற்கோதுமை அறுப்பின் துவக்கத்தில் அவர்கள் பெத்லெகேமிற்கு வந்தார்கள். ரூத் 2:232 சாமு 21:9யாத் 9:31-32