செப்பனியா

Zephaniah · 3 அதிகாரங்கள்

அதிகாரங்கள் · Chapters

  1. 1
  2. 2
  3. 3

முன்னுரை

ஆசிரியர்

அதிகாரம் 1:1 ல் செப்பனியா ஆசிரியர் தன்னை, எஸ்கியாவின் குமாரனாகிய ஆமரியாவுக்கு குமாரனான கெதலியா என்பவனுடைய மகனாகிய கூசின் குமாரன் செப்பனியா என்று தன்னை அறிமுகப்படுத்துகிறான். செப்பனியா என்பதற்கு தேவன் என்னை பாதுகாக்கிறவர் என்று அர்த்தம். எரேமியா காலத்தில் இருந்த ஒரு முக்கியமான ஆசாரியன் (21:1; 29:25, 29; 37:3; 52:24). அவனுடைய குடும்பம் ராஜாவம்சத்தோடு சம்பந்தபட்டவனாக இருக்கிறது. ஏசாயா, மீகா பிறகு, யூதாவுக்கு விரோதமான தீர்க்கதரிசனம் சொன்னவன் இவன்தான்.

எழுதப்பட்ட காலம் மற்றும் இடம்

ஏறக்குறைய கிமு 464 க்கும் 331 கிமு. க்கும். இடையில் எழுதப்பட்டது.

யோசியா என்னும் யூதா ராஜாவின் நாட்களில் தீர்க்கதரிசனம் சொன்னான் என்று 1:1 ல் எழுதியிருக்கிறது.

யாருக்காக எழுதப்பட்டது

யூதா ஜனங்களுக்கும் உலகத்தில் வேதம் வாசிக்கிற எல்லா தேவனுடைய ஜனங்களுக்கும் எழுதப்பட்டது.

எழுதப்பட்ட நோக்கம்

தேவன் சர்வ வல்லவர், பாவம் செய்கிறவர்கள் தண்டிக்கப்படுவார்கள், நீதிமான்கள் நியாயதீர்ப்பு நாளில் பாதுகாக்கப்படுவார்கள் என்ற மூன்று கருத்துக்களையும் மனம்திரும்புகிறவர்களை, தேவன் ஆசிர்வதிக்கிறார் என்று இந்த புத்தகத்தில் உறுதிப்படுத்துகிறார்.

மையக் கருத்து

ஆண்டவரின் உக்கிரத்தின் நாள்.

பொருளடக்கம்

1. ஆண்டவரின் உக்கிரத்தின் நாளில் ஏற்படும் அழிவு. — 1:1-18

2. அழிவின் இடையிலும் நம்பிக்கை — 2:1-3

3. மற்ற தேசங்களின் அழிவு — 2:4-15

4. எருசலேமின் அழிவு. — 3:1-7

5. நம்பிக்கை, திரும்ப வருதல் — 3:8-20