1 நாளாகமம் 2

1 Chronicles 2

இஸ்ரயேலின் சந்ததிகள்

இஸ்ரயேலின் மகன்கள்: ரூபன், சிமியோன், லேவி, யூதா, இசக்கார், செபுலோன், ஆதி 32:28வெளி 7:5-8ஆதி 35:22-26யாத் 1:2-4ஆதி 35:18ஆதி 46:8-27ஆதி 49:2ஆதி 49:4-28 தாண், யோசேப்பு, பென்யமீன், நப்தலி, காத், ஆசேர் என்பவர்கள்.

யூதா

எஸ்ரோனின் மகன்கள்

யூதாவின் மகன்கள்: ஆதி 38:2-10ஆதி 46:12எண் 26:191 நாளாக 9:5

ஏர், ஓனான், சேலா என்பவர்கள்; இந்த மூவரும் சூவாவின் மகளான கானானிய பெண்ணின் மகன்கள்.

யூதாவின் மூத்த மகன் ஏர் என்பவன் யெகோவாவின் பார்வையில் கொடுமையானவனாய் இருந்தான். அதனால் யெகோவா அவனைக் கொன்றுபோட்டார்.

யூதாவின் மருமகள் தாமார் என்பவள் யூதாவுக்கு பேரேஸ், சேரா என்பவர்களைப் பெற்றாள். மத் 1:3ஆதி 38:13-301 நாளாக 9:41 நாளாக 9:6ஆதி 38:11லூக் 3:33நெகே 11:24நெகே 11:4

யூதாவிற்கு மொத்தம் ஐந்து மகன்கள் இருந்தார்கள்.

பேரேஸின் மகன்கள்: ஆதி 46:12எண் 26:21ரூத் 4:18லூக் 3:33மத் 1:3

எஸ்ரோன், ஆமூல்.

சேராவின் மகன்கள்: 1 இராஜா 4:31யோசு 7:1யோசு 7:17-18

சிம்ரி, ஏத்தான், ஏமான், கல்கோல், தாரா என்னும் ஐந்துபேர்.

கர்மீயின் மகன்: யோசு 6:18உபா 13:17உபா 7:26யோசு 22:20யோசு 7:1-5யோசு 7:11-15யோசு 7:251 நாளாக 4:1

ஆகார், இவன் யெகோவாவுக்கென விலக்கப்பட்ட பொருட்களை எடுத்ததால், இஸ்ரயேலுக்குக் கேட்டை உண்டுபண்ணினான்.

ஏத்தானின் மகன்:

அசரியா.

எஸ்ரோனின் மகன்கள்: 1 நாளாக 2:42மத் 1:3ரூத் 4:191 நாளாக 2:18-191 நாளாக 2:24லூக் 3:3

யெராமியேல், ராம், காலேப்.

எஸ்ரோனின் மகனான ராமின் சந்ததி

ராம் அம்மினதாபின் தகப்பன், மத் 1:4எண் 1:7லூக் 3:32-33எண் 2:3ரூத் 4:19-20எண் 10:14எண் 7:12எண் 7:17

அம்மினதாப் யூதா மக்களுக்குத் தலைவனாக இருந்த நகசோனின் தகப்பன்.

நகசோன் சல்மாவின் தகப்பன், ரூத் 4:21மத் 1:4-5லூக் 3:32

சல்மா போவாஸின் தகப்பன்,

போவாஸ் ஓபேத்தின் தகப்பன், 1 நாளாக 10:141 சாமு 16:1ஏசா 11:1ஏசா 11:10ரோம 15:12ரூத் 4:22அப் 13:22லூக் 3:32

ஓபேத் ஈசாயின் தகப்பன்.

ஈசாய்க்குப் பிறந்தவர்கள்: 1 சாமு 17:131 நாளாக 20:71 நாளாக 27:181 சாமு 16:6-131 சாமு 17:28

மூத்த மகன் எலியாப், இரண்டாவது மகன் அபினதாப்,

மூன்றாவது மகன் சிமெயா, நான்காவது மகன் நெதனெயேல்,

ஐந்தாவது மகன் ரதாயி, ஆறாவது மகன் ஓத்சேம், 1 சாமு 16:10-111 சாமு 17:12-14

ஏழாவது மகன் தாவீது.

அவர்களின் சகோதரிகள் செருயாள், அபிகாயில். 1 சாமு 26:62 சாமு 16:9-112 சாமு 19:222 சாமு 2:18-232 சாமு 3:39

செருயாளின் மூன்று மகன்கள் அபிசாய், யோவாப், ஆசகேல் என்பவர்கள்.

அபிகாயில் அமாசாயின் தாய்; அமாசாவின் தகப்பன் இஸ்மயேலியனாகிய யெத்தேர் என்பவன். 2 சாமு 17:251 இராஜா 2:321 இராஜா 2:52 சாமு 19:132 சாமு 20:4-12

எஸ்ரோனின் மகன் காலேப்

எஸ்ரோனின் மகன் காலேப் 1 எரீயோத் எனப்பட்ட தன் மனைவியாகிய அசுபாளின்மூலம் பெற்ற மகன்கள்:

ஏசேர், ஷோபாப், அர்தோன்.

அசுபாள் இறந்தபின்பு காலேப் எப்ராத்தைத் திருமணம் செய்தான். அவள் அவனுக்கு ஊர் என்பவனைப் பெற்றாள். 1 நாளாக 2:501 நாளாக 2:241 நாளாக 4:4மீகா 5:2

ஊர் ஊரியின் தகப்பன், ஊரி பெசலெயேலின் தகப்பன். யாத் 31:22 நாளாக 1:5யாத் 36:1-2யாத் 37:1யாத் 38:22

பின்பு எஸ்ரோன் அறுபது வயதானபோது கீலேயாத்தின் தகப்பன் மாகீரின் மகளைத் திருமணம் செய்து அவளுடன் உறவுகொண்டான். அவள் அவனுக்கு செகூப்பைப் பெற்றாள். எண் 27:1உபா 3:15ஆதி 50:23எண் 26:29எண் 32:39-40

செகூப் யாவீரின் தகப்பன்; இவன் கீலேயாத்திலே இருபத்துமூன்று பட்டணங்களைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தான். உபா 3:14யோசு 13:30எண் 32:41

ஆனால் கேசூர், ஆராம் என்பவர்கள் யாவீரின் கிராமங்களையும், கேனாத்தையும் அதைச் சூழ்ந்திருந்த குடியிருப்புகளான அறுபது ஊர்களையும் கைப்பற்றினார்கள். 2 சாமு 13:38உபா 3:14யோசு 13:13யோசு 13:30எண் 32:41-42

இவர்கள் எல்லோரும் கீலேயாத்தின் தகப்பனான மாகீரின் சந்ததிகள்.

எஸ்ரோன் காலேபின் ஊரான எப்பிராத்தாவில் இறந்தபின், அவனுடைய மனைவி அபியாள் அவனுக்கு தெக்கோவாவின் தலைவனான அசூரைப் பெற்றாள். 1 நாளாக 4:51 நாளாக 2:18-191 நாளாக 2:91 சாமு 30:142 சாமு 14:2ஆமோ 1:1

எஸ்ரோனின் மகன் யெராமியேல்

எஸ்ரோனின் முதற்பேறான யெராமியேலின் மகன்கள்:

முதற்பேறானவன் ராம், மற்றவர்கள் பூனா, ஓரேன், ஓத்சேம், அகியா. யெராமியேலுக்கு அத்தாராள் என்னும் வேறோரு மனைவியும் இருந்தாள்; இவள் ஓனாம் என்பவனின் தாய்.

யெராமியேலின் முதற்பேறானவனான ராமின் மகன்கள்:

மாஸ், யாமின், எக்கேர்.

ஓனாமின் மகன்கள்:

சம்மாய், யாதா.

சம்மாயின் மகன்கள்:

நாதாப், அபிசூர். அபிசூருடைய மனைவியின் பெயர் அபியாயேல். அவள் அவனுக்கு அக்பான், மோளித் என்பவர்களைப் பெற்றாள்.

நாதாபின் மகன்கள்:

சேலேத், அப்பாயிம். சேலேத் பிள்ளைகள் இல்லாமல் இறந்துபோனான்.

அப்பாயிமின் மகன்: 1 நாளாக 2:34-35

இஷி, அவன் சேசானின் தகப்பன், சேசான் அக்லாயின் தகப்பன்.

சம்மாயின் சகோதரனான யாதாவின் மகன்கள்:

யெத்தெர், யோனத்தான். யெத்தெர் பிள்ளைகள் இல்லாமல் இறந்துபோனான்.

யோனத்தானின் மகன்கள்:

பெலெத், சாசா.

இவர்கள் யெராமியேலின் சந்ததிகள்.

சேசானுக்கு மகன்கள் இல்லை; மகள்கள் மட்டுமே இருந்தார்கள்.

சேசானுக்கு எகிப்தைச் சேர்ந்த யர்கா என்னும் வேலைக்காரன் ஒருவன் இருந்தான். சேசான் தனது மகளை அவனுடைய வேலைக்காரனாகிய யர்காவுக்குத் திருமணம் செய்துகொடுத்தான். அவர்களுக்கு அத்தாயி என்ற மகன் இருந்தான்.

அத்தாயி நாத்தானின் தகப்பன்; 1 நாளாக 11:41

நாத்தான் சாபாதின் தகப்பன்.

சாபாத் எப்லாலின் தகப்பன்;

எப்லால் ஓபேத்தின் தகப்பன்.

ஓபேத் ஏகூவின் தகப்பன்;

ஏகூ அசரியாவின் தகப்பன்.

அசரியா ஏலேஸின் தகப்பன்;

ஏலேஸ் எலெயாசாவின் தகப்பன்.

எலெயாசா சிஸ்மாயின் தகப்பன்.

சிஸ்மாய் சல்லூமின் தகப்பன்.

சல்லூம் எக்கமியாவின் தகப்பன்;

எக்கமியா எலிஷாமாவின் தகப்பன்.

காலேபின் வம்சங்கள்

யெராமியேலின் சகோதரனான காலேபின் மகன்கள்: 1 நாளாக 2:18-191 நாளாக 2:23-241 நாளாக 2:451 நாளாக 2:491 நாளாக 2:521 நாளாக 8:291 சாமு 23:191 சாமு 26:1

சீப்பின் தகப்பனாகிய மேசா என்னும் முதற்பேறானவனும்,

எப்ரோனின் தகப்பனாகிய மரேஷாவின் மகன்களுமே.

எப்ரோனின் மகன்கள்:

கோராகு, தப்புவா, ரெகெம், செமா.

செமா ரேகேமின் தகப்பன்;

ரேகேம் யோர்க்கேயாமின் தகப்பனான ரெக்கேமின் தகப்பன்.

ரெகெம் சம்மாயின் தகப்பன்.

சம்மாயின் மகன் மாகோன்; யோசு 15:58

மாகோன் பெத்சூரின் தகப்பன்.

காலேபின் மறுமனையாட்டி எப்பா என்பவள் 1 நாளாக 2:18-191 நாளாக 2:48

ஆரான், மோசா, காசேஸ் என்பவர்களின் தாய்.

ஆரான் காசேஸின் தகப்பன்.

யாதாயின் மகன்கள்:

ரேகேம், யோதாம், கேசான், பெலெத், எப்பா, சாகாப்.

காலேபின் மறுமனையாட்டி மாக்காள் என்பவள் 1 நாளாக 2:46ஆதி 25:5-6

சேபேர், திர்கானா ஆகியோரின் தாய்.

அதோடு அவள் மத்மன்னாவின் தகப்பன் சாகாபையும், மக்பேனாவினதும் யோசு 15:311 நாளாக 2:422 சாமு 21:6ஏசா 10:31யோசு 15:57

கிபியாவினதும் தகப்பனான சேவாவையும் பெற்றாள்.

அக்சாள் என்பவள் காலேபின் மகள்.

இவர்கள் எல்லோரும் காலேபின் சந்ததிகளாவர். 1 நாளாக 13:5-61 நாளாக 2:19-201 நாளாக 2:531 நாளாக 4:41 சாமு 7:1யோசு 15:60யோசு 15:9

எப்ராத்தாளின் முதற்பேறானவனான ஊரின் மகன்கள்:

கீரியாத்யாரீமின் தகப்பனான சோபால், பெத்லெகேமின் தகப்பனான சல்மா, பெத்காதேரின் தகப்பனான ஆரேப். 1 நாளாக 4:4ஆதி 35:19யோவா 7:42மத் 2:1மத் 2:6ரூத் 1:19ரூத் 2:4ரூத் 4:11

கீரியாத்யாரீமின் தகப்பனான சோபாலின் சந்ததிகளாவன: 1 நாளாக 4:2

ஆரோயேயும், மெனுகோத்தியரின் அரைப்பகுதியினரும். கீரியாத்யாரீமின் குடும்பங்களாவன: இத்திரியர், பூகியர், சுமாத்தியர், மிஸ்ராவியர் ஆகியோரே. இவர்களில் இருந்தே சோராத்தியர், எஸ்தாவோலியர் ஆகிய சந்ததிகள் வந்தனர். 2 சாமு 23:38நியாயாதி 13:2நியாயாதி 13:25யோசு 15:331 நாளாக 11:40யோசு 19:41நியாயாதி 16:31

சல்மாவின் சந்ததிகள்: எஸ்றா 2:22நெகே 12:28நெகே 7:261 நாளாக 11:302 சாமு 23:29யோசு 16:2

பெத்லெகேமியர், நெத்தோபாத்தியர், அதரோத் பெத்யோவாப்பியர், மானாத்தியரின் அரைப்பகுதியினர், சோரியர் ஆகியோரே. அத்துடன் யாபேஸில் குடியிருந்த எழுத்தாளரின் வம்சங்கள்: திராத்தியர், சிமாத்தியர், சுக்காத்தியர். இவர்கள் ஆமாத்திலிருந்து வந்த ரேகாப்பின் தகப்பனின் சந்ததியான கேனியர். 2இராஜா 10:15நியாயாதி 1:16நியாயாதி 4:11எரே 35:19எரே 35:2-81 சாமு 15:61 நாளாக 4:9-10எஸ்றா 7:6