லேவியர்கள்
தாவீது வயதுசென்று முதியவனானபோது, தனது மகன் சாலொமோனை இஸ்ரயேலுக்கு அரசனாக்கினான். 1 நாளாக 29:281 நாளாக 28:51 இராஜா 1:33-391 நாளாக 29:22-251 இராஜா 1:11 இராஜா 1:30ஆதி 25:8ஆதி 35:29
அதோடு இஸ்ரயேலரின் எல்லாத் தலைவர்களையும், ஆசாரியர்களையும், லேவியர்களையும் ஒன்றுகூட்டினான். 1 நாளாக 13:11 நாளாக 28:12 நாளாக 34:29-30யோசு 23:2யோசு 24:1 லேவியர்களுள் முப்பது வயதுமுதல் அதற்கு மேற்பட்டவர்கள் எண்ணப்பட்டபோது, அவர்களுடைய எண்ணிக்கை முப்பத்தெட்டாயிரமாயிருந்தது. 1 நாளாக 23:24எண் 4:2-49 அப்பொழுது தாவீது, “இவர்களில் இருபத்து நாலாயிரம்பேர் யெகோவாவினுடைய ஆலயத்தின் வேலைகளை மேற்பார்வை செய்பவர்களாகவும், ஆறாயிரம்பேர் அதிகாரிகளாகவும் நீதிபதிகளாகவும் இருக்கட்டும். 2 நாளாக 19:8உபா 16:181 நாளாக 23:28-321 நாளாக 26:20-271 நாளாக 26:29-311 நாளாக 6:481 நாளாக 9:28-32அப் 20:28 அதோடு நாலாயிரம்பேர் வாசல் காவலர்களாகவும், மற்ற நாலாயிரம்பேர் நான் யெகோவாவைத் துதிப்பதற்கென செய்துவைத்திருந்த இசைக்கருவிகளுடன் யெகோவாவைத் துதிக்கவும் வேண்டும்” என்றான். 2 நாளாக 29:25-262 நாளாக 8:14ஆமோ 6:5சங் 87:71 நாளாக 15:16-241 நாளாக 16:381 நாளாக 16:41-421 நாளாக 25:1-7
பின்பு தாவீது லேவியர்களின் மகன்களான கெர்சோன், கோகாத், மெராரி என்பவர்களுடைய வகுப்புகளின்படி அவர்களைக் குழுக்களாகப் பிரித்தான். 1 நாளாக 6:12 நாளாக 8:141 நாளாக 6:162 நாளாக 29:25எஸ்றா 6:181 நாளாக 24:11 நாளாக 26:12 நாளாக 31:2
கெர்சோனியர்
கெர்சோனியரில் 1 நாளாக 26:211 நாளாக 15:71 நாளாக 6:17-20யாத் 6:17
லாதானும் சீமேயியும் இருந்தார்கள்.
லாதானின் மகன்கள்: 1 நாளாக 15:111 நாளாக 15:17-181 நாளாக 15:20-211 நாளாக 15:71 நாளாக 6:33-34
மூத்தவனான யெகியேல், சேத்தாம், யோயேல் ஆகிய மூன்றுபேர்.
சீமேயியின் மகன்கள்:
செலோமோத், ஆசியேல், ஆரான் ஆகிய மூன்றுபேர்;
இவர்கள் லாதானின் குடும்பங்களில் தலைவர்களாய் இருந்தார்கள்.
சீமேயியின் மற்ற மகன்கள்:
யாகாத், சீனா, எயூஷ், பெரீயா
ஆகிய இவர்களும் சீமேயியின் நான்கு மகன்கள்.
இவர்களில் யாகாத் மூத்தவன்; சீசா இரண்டாம் மகன். ஆனால் எயூஷூக்கும், பெரீயாவுக்கும் அதிக மகன்கள் இல்லாதபடியினால் அவர்கள் ஒரே முற்பிதாவின் குடும்பமாகக் கணக்கிடப்பட்டு, ஒரே பொறுப்புகளும் வழங்கப்பட்டன.
கோகாத்தியர்
கோகாத்தின் மகன்கள்: யாத் 6:181 நாளாக 6:2எண் 26:58எண் 3:27
அம்ராம், இத்சார், எப்ரோன், ஊசியேல் என்னும் நான்குபேர்.
அம்ராமின் மகன்கள்: உபா 21:5யாத் 6:201 சாமு 2:28யாத் 30:6-101 நாளாக 6:32 நாளாக 26:18-21அப் 13:2யாத் 28:1-14
ஆரோன், மோசே.
ஆரோனும், அவனுடைய வழித்தோன்றல்களும் என்றென்றைக்கும் மகா பரிசுத்த இடத்தை தூய்மையாக வைத்திருப்பதற்கும், யெகோவாவுக்கு பலியிடுவதற்கும், அவருக்குப் பணிசெய்வதற்கும், அவருடைய பெயரில் ஆசீர்வதிப்பதற்குமென வேறுபிரிக்கப்பட்டனர். இறைவனின் மனிதனாகிய மோசேயின் மகன்கள் லேவி கோத்திரத்தோடு சேர்த்துக் கணக்கிடப்பட்டனர். உபா 33:11 நாளாக 26:23-25சங் 90:1
மோசேயின் மகன்கள்: யாத் 18:3-4யாத் 2:22யாத் 4:20
கெர்சோம், எலியேசர்.
கெர்சோனின் சந்ததிகள்: 1 நாளாக 26:241 நாளாக 24:201 நாளாக 25:20
செபுயேல் மூத்தவனாயிருந்தான்.
எலியேசரின் சந்ததிகள்: 1 நாளாக 26:25
ரெகேபியா மூத்தவன்.
எலியேசருக்கு வேறு மகன்கள் இருக்கவில்லை. ஆனால் ரெகபியாவுக்கு அநேகம் மகன்கள் இருந்தனர்.
இத்சாரின் மகன்கள்: 1 நாளாக 24:221 நாளாக 26:26
செலோமித் மூத்தவனாயிருந்தான்.
எப்ரோனின் மகன்கள்: 1 நாளாக 24:231 நாளாக 15:91 நாளாக 23:12
யெரியா மூத்தவன், இரண்டாவது அமரியா,
மூன்றாவது யாகாசியேல், நான்காவது எக்காமியாம்.
ஊசியேலின் மகன்கள்:
மூத்த மகன் மீகா, இரண்டாவது மகன் இஷியா.
மெராரியர்
மெராரியின் மகன்கள்: யாத் 6:191 நாளாக 23:61 நாளாக 24:26-301 நாளாக 6:201 நாளாக 6:30
மகேலி, மூஷி.
மகேலியின் மகன்கள்:
எலெயாசார், கீஸ்.
எலெயாசாருக்கு மகன்கள் இல்லாமலே அவன் இறந்துபோனான். அவனுக்கு மகள்கள் மாத்திரமே இருந்தார்கள். அவர்களுடைய ஒன்றுவிட்ட சகோதரர்களான கீஸின் மகன்கள் அவர்களைத் திருமணம் செய்துகொண்டார்கள். 1 நாளாக 24:28எண் 36:6-8
மூஷியின் மகன்கள்: 1 நாளாக 24:30
மகேலி, ஏதேர், எரேமோத்.
இவர்கள் குடும்பங்களின்படி பிரிக்கப்பட்ட லேவியின் சந்ததிகள். குடும்பத் தலைவர்கள் தனித்தனியே கணக்கிடப்பட்டு, குடும்பப் பட்டியலின்கீழ் பதிவு செய்யப்பட்டார்கள். இருபது வயதும் அதற்கு மேற்பட்டவர்களுமான இவர்கள் யெகோவாவின் ஆலயத்தில் பணிசெய்தனர். 1 நாளாக 23:3எண் 10:17எண் 10:21எண் 4:3எஸ்றா 3:8எண் 8:241 நாளாக 23:27எண் 1:18 அப்பொழுது தாவீது, “இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவா தனது மக்களுக்கு அமைதியைக் கொடுத்து எருசலேமில் என்றென்றைக்கும் வசிக்க வந்திருக்கிறார் 1. 1 நாளாக 22:182 சாமு 7:11சங் 132:13-142 சாமு 7:1சங் 135:21சகரி 8:32 கொரி 6:16கொலோ 2:9 ஆதலால் லேவியர்கள் இனிமேல் பரிசுத்த வழிபாட்டுக் கூடாரங்களையோ, அதன் பணிக்குப் பயன்படுத்தத் தேவையான பொருட்களையோ தூக்கிச் சுமக்க வேண்டியதில்லை” எனச் சொன்னான். எண் 4:5எண் 7:9எண் 4:15உபா 10:8எண் 4:49 தாவீதின் இறுதி அறிவுறுத்தலின்படி கணக்கிடப்பட்ட லேவியர் இருபது வயதும் அதற்கு மேற்பட்டவர்களுமே. 1 நாளாக 23:241 நாளாக 23:32 சாமு 23:1சங் 72:20
யெகோவாவின் பரிசுத்த ஆலயத்தில் பணிசெய்யும் ஆரோனின் சந்ததிகளுக்கு உதவி செய்வதே, லேவியர்களாகிய இவர்களின் கடமையாயிருந்தது. அவையாவன: வெளிமுற்றத்திற்கும், அருகிலுள்ள அறைகளுக்கும் பொறுப்பாயிருத்தல், இறைவனுடைய ஆலயத்தில் பரிசுத்த பொருட்களை சுத்திகரிப்பதற்கும், மற்றும் அங்கு செய்யவேண்டிய எல்லா வேலைகளையும் செய்வதற்கும் பொறுப்பாயிருத்தல், 2 நாளாக 31:112 நாளாக 35:11-142 நாளாக 35:3-6நெகே 13:91 நாளாக 18:171 நாளாக 23:41 நாளாக 28:131 நாளாக 9:28-29 அதோடு மேஜையில் வைக்கும் அப்பங்கள், தானிய காணிக்கைக்குத் தேவையான மிருதுவான மாவு, புளிப்பற்ற அப்பங்கள் ஆகியவற்றைப் பிசையவும், சுடவும், நிறுக்கவும், அத்துடன் அதன் தொகையையும், பருமனையும் கவனிப்பதற்கும் பொறுப்பாயிருத்தல். லேவி 19:35-36யாத் 25:30லேவி 2:4-7லேவி 24:5-9லேவி 6:20-231 நாளாக 9:29-341 இராஜா 7:482 நாளாக 13:11 அவர்கள் ஒவ்வொருநாள் காலையிலும் யெகோவாவுக்கு நன்றிகூறி துதிக்கவேண்டும். அப்படியே மாலையிலும் செய்யவேண்டும். சங் 92:1-31 நாளாக 9:33எஸ்றா 3:10-111 நாளாக 16:37-421 நாளாக 25:1-71 நாளாக 6:31-332 நாளாக 29:25-282 நாளாக 31:2 அத்துடன் ஓய்வுநாட்களிலும், அமாவாசை நாட்களிலும் குறிப்பிட்ட பண்டிகை நாட்களிலும் யெகோவாவுக்குத் தகன காணிக்கைகளைச் செலுத்தும் போதெல்லாம் அவ்வாறே துதிக்கவேண்டும். அவர்கள் யெகோவாவுக்கு முன்குறிப்பிட்ட எண்ணிக்கையின்படியும், கட்டளைப்படியும் ஒழுங்காக பணிசெய்ய வேண்டும். ஏசா 1:13-14லேவி 23:1-17லேவி 23:24லேவி 23:39எண் 10:10எண் 28:1-29சங் 81:1-4
எனவே லேவியரான இவர்கள் ஆரோனின் சந்ததிகளான தங்கள் சகோதரர்களின் தலைமையின்கீழ், யெகோவாவின் ஆலயப் பணியில் நியமிக்கப்பட்ட ஆசரிப்புக் கூடாரத்திற்கும், மகா பரிசுத்த இடத்திற்கும் பொறுப்புகளைச் செய்தார்கள். எண் 1:53எண் 3:38எண் 3:6-91 நாளாக 9:271 இராஜா 8:4