1 பேதுரு 3

1 Peter 3

மனைவிகளே, அவ்வாறே நீங்களும் உங்கள் சொந்த கணவருக்கு பணிந்து நடவுங்கள். அப்பொழுது அவர்களில் யாராவது வசனத்தை ஏற்றுக்கொள்ளாதவர்களாய் இருந்தாலும், வசனமில்லாமலே அவர்களின் மனைவியின் நடத்தையினால் ஒருவேளை ஆதாயப்படுத்தக்கூடும். கொலோ 3:18எபே 5:33எபே 5:22-241 கொரி 11:3தீத் 2:3-61 கொரி 7:16ஆதி 3:161 பேது 3:7 தூய்மையும் பயபக்தியுமுள்ள உங்களுடைய வாழ்க்கையை அவர்கள் காணட்டும். 1 பேது 2:121 பேது 1:15பிலி 1:272 பேது 3:11எபே 5:331 பேது 3:15-161 பேது 3:5-6கொலோ 3:22 உங்கள் அழகு, வெளி அலங்காரத்தில் தங்கியிருக்கக் கூடாது. தலைமுடியைப் பின்னுதல், தங்க நகைகளை அணிதல், விலையுயர்ந்த உடைகளை உடுத்துதல் ஆகிய வெளியான அலங்காரத்தினாலல்ல. 1 தீமோ 2:9-10ரோம 12:2ஏசா 3:18-24தீத் 2:3-15ஏசா 61:10எரே 4:30எசேக் 16:7-13எரே 2:32 அது உங்கள் உள்ளத்தின் அழகாகவே இருக்கவேண்டும். சாந்தமும் அமைதியும் உள்ள ஆவியே, அழிந்துபோகாத அழகைக் கொடுக்கிறது. அவ்வித அழகே இறைவனின் பார்வையில் உயர்ந்த மதிப்புள்ளது. கொலோ 3:121 சாமு 16:7மத் 11:29ரோம 2:29தீத் 3:2மத் 23:26ரோம 7:222 கொரி 4:16 ஏனெனில் இறைவனில் நம்பிக்கையுள்ளவர்களாய், முற்காலத்தில் வாழ்ந்த பரிசுத்த பெண்கள் இவ்விதமாகவே தங்களை அலங்கரித்தார்கள். அவர்கள் தங்கள் சொந்தக் கணவர்களிடம் பணிவுடன் நடந்தார்கள். 1 தீமோ 5:5தீத் 2:3-41 தீமோ 2:151 தீமோ 5:10அப் 9:36லூக் 2:37லூக் 8:2-3நீதி 31:30 அவ்விதமாகவே சாராள் ஆபிரகாமைத் தனது எஜமான் என்று அழைத்தபோது, அவனுக்குக் கீழ்ப்படிந்து நடந்தாள். நீங்களும் நன்மையானதைப் பயமில்லாமல் செய்தால் அவளுடைய மகள்களாய் இருப்பீர்கள். ஆதி 18:12ரோம 9:7-9தானி 3:16-18ஏசா 57:11அப் 4:19மத் 26:69-751 பேது 3:14-15அப் 4:8-13

கணவர்களே, அதுபோலவே உங்கள் மனைவியுடன் சரியான புரிந்துகொள்ளுதலோடு, அக்கறையுடன் வாழ்க்கை நடத்துங்கள். அவர்கள் பலவீனமான இயல்புடையவர்களாயும் இறைவனின் கிருபையின் வாழ்வை உங்களுடனேகூட பெற்றுக்கொள்கிறவர்களாயும் இருப்பதனால், அவர்களை மதித்து நடவுங்கள். அப்படிச் செய்தால் உங்கள் மன்றாட்டுகளுக்கு எவ்விதத் தடையும் ஏற்படாது. கொலோ 3:19ஆதி 2:23-24எபே 5:25-28மத் 19:3-91 கொரி 7:3எபே 5:33மல்கி 2:14-16மத் 18:19

நல்லவை செய்வதால் துன்பம்

இறுதியாக, நீங்கள் எல்லோரும் ஒருவரோடொருவர் ஒருமனப்பட்டிருங்கள். இரக்கமுள்ளவர்களாயும், சகோதரரைப்போல் அன்பு காட்டுகிறவர்களாயும் இருங்கள். அனுதாபம் காட்டுங்கள். தாழ்மையுடையவர்களாய் இருங்கள். ரோம 12:10எபே 4:311 பேது 1:22பிலி 4:8-9யாக் 3:17எபே 4:2சகரி 7:9கொலோ 3:12 தீமைக்குப் பதிலாக தீமை செய்யவேண்டாம்; ஏளனத்திற்கு பதிலாக ஏளனம் செய்யவேண்டாம். மாறாக, அவர்களை ஆசீர்வதியுங்கள். ஏனெனில் நீங்கள் ஆசீர்வாதத்தை உரிமையாக்கவே அழைக்கப்பட்டீர்கள். ரோம 12:17நீதி 20:22ரோம 12:14ரோம 12:19-211 தெச 5:15லூக் 6:27-29மத் 5:44நீதி 17:13 ஏனெனில் வேதவசனத்தில் சொல்லியிருக்கிறதாவது: சங் 34:12-16யாக் 1:261 பேது 2:11 பேது 2:22வெளி 14:5யாக் 3:1-10யோவா 1:47யோவா 12:25

“வாழ்வை நேசித்து,

நல்ல நாட்களைக் காணவிரும்புகிறவன் எவனோ,

அவன் தனது நாவைத் தீமையிலிருந்து விலக்கி,

தனது உதடுகளை ஏமாற்றுப் பேச்சுகளிலிருந்தும் காத்துக்கொள்ள வேண்டும்.

அவன் தீமையிலிருந்து விலகி, நன்மை செய்யவேண்டும்; மத் 5:9எபி 12:14சங் 34:14கொலோ 3:15ரோம 14:19யாக் 4:17ரோம 14:173 யோவா 1:11

சமாதானத்தைத் தேடி, அதை நாடிச்செல்ல வேண்டும்.

ஏனெனில், கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள்மேல் இருக்கின்றன. சங் 34:15-16யோவா 9:31நீதி 15:29நீதி 15:32 நாளாக 7:15யாக் 5:16நீதி 15:82 நாளாக 16:9

அவருடைய காதுகள் அவர்களுடைய மன்றாட்டைக் கவனமாய் கேட்கின்றன.

ஆனால் கர்த்தருடைய முகமோ தீமை செய்கிறவர்களுக்கு எதிராய் இருக்கிறது.” 1

நீங்கள் நன்மைசெய்ய ஆவலுள்ளவர்களாய் இருந்தால், யார் உங்களுக்குத் தீமை செய்வான்? நீதி 16:7ரோம 8:281 தெச 5:153 யோவா 1:11சங் 38:201 கொரி 14:11 தீமோ 5:10எபே 5:1 ஆனால் நீங்கள் நீதியானதைச் செய்வதனால் துன்பத்தை அனுபவித்தாலும், நீங்கள் இறைவனால் ஆசீர்வதிக்கப்படுவீர்கள். எனவே, “அவர்களுடைய பயமுறுத்துதலுக்கு நீங்கள் பயப்படவேண்டாம்; கலக்கமடையவும் வேண்டாம்.” 2 மத் 10:281 பேது 2:19-20மத் 5:10-12ஏசா 41:10-14ஏசா 8:12-131 பேது 4:13-162 கொரி 12:10யாக் 1:12 ஆனால் உங்கள் இருதயங்களில் கிறிஸ்துவை கர்த்தராக ஏற்று, அவரை கனம்பண்ணுங்கள். நீங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கைக்கான காரணம் என்னவென்று உங்களிடம் கேட்கிற ஒவ்வொருவருக்கும் பதில்சொல்வதற்கு எப்பொழுதும் ஆயத்தமுள்ளவர்களாய் இருங்கள்; ஆனால் தயவுடனும் மதிப்புடனுமே நீங்கள் பதில் சொல்லவேண்டும். கொலோ 4:62 தீமோ 2:25-26லூக் 21:14-151 பேது 3:2மத் 10:18-20எபி 6:1சங் 119:46தீத் 1:2 நீங்கள் நல்மனசாட்சி உடையவர்களாயும் இருக்கவேண்டும்; அப்பொழுது கிறிஸ்துவில் உங்களுக்கிருக்கும் நல்ல நடத்தைக்கு எதிராக, தீய எண்ணத்துடன் பேசுகிறவர்கள், தங்கள் அவதூறுப் பேச்சைக்குறித்து வெட்கமடைவார்கள். 1 பேது 2:121 பேது 2:15எபி 13:18தீத் 2:8மத் 5:111 பேது 2:191 தீமோ 1:5அப் 24:16 தீமை செய்து துன்பப்படுவதைப் பார்க்கிலும், இறைவனுக்கு சித்தமானால் நன்மை செய்து துன்பப்படுவதே சிறந்தது. 1 பேது 3:141 பேது 4:19மத் 26:391 பேது 2:151 பேது 2:20அப் 21:14மத் 26:421 பேது 4:15 ஏனெனில், கிறிஸ்து பாவங்களுக்காக ஒரே முறையாக இறந்தார். உங்களை இறைவனிடம் கொண்டுவரும்படியாக, நீதிமானான அவர், நீதியற்றவர்களுக்காக இறந்தார். அவரது உடல் கொல்லப்பட்டது, ஆனால் ஆவியில் உயிர்ப்பிக்கப்பட்டார். எபி 9:28எபி 9:262 கொரி 5:211 பேது 4:6தீத் 2:14ரோம 5:6-81 யோவா 1:9கொலோ 1:21-22 அந்த ஆவியிலே அவர் போய், சிறையில் இருந்த ஆவிகளுக்குப் பிரசங்கம் செய்தார். 1 பேது 4:6ஏசா 61:1ஏசா 42:7ஏசா 49:9நெகே 9:30வெளி 20:71 பேது 1:11-12வெளி 19:10 அந்த ஆவிகளே வெகுகாலத்திற்கு முன்பு, நோவா பேழை செய்துகொண்டிருந்த நாட்களில், இறைவன் பொறுமையோடு இருந்தும் கீழ்ப்படியாதவைகள். அந்தப் பேழையில், எல்லாமாக எட்டுப் பேராகிய சிலரே தண்ணீரின் வழியாகக் காப்பாற்றப்பட்டார்கள். எபி 11:72 பேது 2:5ஆதி 6:3ஆதி 6:5ஆதி 8:18ஆதி 6:13ரோம 2:4-5ஆதி 7:13 அதற்கு ஒப்பான இந்த திருமுழுக்கு உடலில் அழுக்கை நீக்குவதற்கு அல்ல, அது இறைவனைப் பற்றும் தெளிவான மனசாட்சியுடன் இருப்போம் என செய்துகொள்ளும் வாக்குறுதியாகும். இந்த திருமுழுக்கு இப்பொழுது இயேசுகிறிஸ்துவினுடைய உயிர்த்தெழுதலினாலே, உங்களை இரட்சிக்கிறது என்பதைக் காட்டுகிறது. மாற் 16:16எசேக் 36:25-26அப் 2:38அப் 22:16கலா 3:27எபே 5:26ரோம 10:9-101 பேது 1:3 கிறிஸ்து பரலோகத்திற்குப் போய், இறைவனுடைய வலதுபக்கத்தில் இருக்கிறார். இறைத்தூதர்களும், அதிகாரங்களும், வல்லமைகளும் அவருக்கு அடங்கியிருக்கின்றன. எபி 9:24எபி 12:2எபி 10:12எபே 1:20-21மாற் 16:19ரோம 8:34எபி 6:20எபி 8:1