1 பேதுரு 4

1 Peter 4

இறைவனுக்காக வாழ்வது

எனவே, கிறிஸ்து தமது மாம்சத்தில் துன்பத்தை அனுபவித்ததினால், நீங்களும் அதேவிதமான மனநிலை உடையவர்களாய் இருங்கள். ஏனெனில், மாம்சத்தில் துன்பப்படுகிறவர்கள் பாவத்துடனான தொடர்பைத் துண்டித்துக் கொள்கிறார்கள். கலா 5:241 பேது 3:18கொலோ 3:3-5ரோம 6:11கலா 2:20ரோம 6:7எபே 6:13எபி 12:3 அதன் பிரதிபலனாகவே, அவர்கள் பூமியில் தொடர்ந்து தாங்கள் வாழும் வாழ்க்கையை, மாம்சத்தில் எழும் தீய ஆசைகளுக்காக வாழ்வதில்லை. இறைவனுடைய சித்தத்தைச் செய்வதற்காகவே, அவர்கள் வாழ்வார்கள். எபே 4:22-241 பேது 1:14எபே 6:6ரோம 6:11தீத் 3:3-82 கொரி 5:15ரோம 6:2எபே 2:3 கடந்த காலத்தில் போதிய அளவு நேரத்தை இறைவனை அறியாத மக்கள் செய்யும் செயல்களில் ஈடுபட்டுக் கழித்தீர்களே! காமவேறிகளிலும், பேராசைகளிலும், மதுவெறியிலும், கேளிக்கைகளிலும், மதுபான விருந்துகளிலும், அருவருப்பான விக்கிரக வழிபாட்டிலும் வாழ்ந்தீர்கள். 1 கொரி 6:11எபே 5:181 தெச 4:51 பேது 1:14எபே 2:2-3எபே 4:17-19கலா 5:21எசேக் 45:9 ஆனால் உங்கள் பழைய நண்பர்களோ, நீங்கள் இப்பொழுது தொடர்ந்து அதேவிதமான ஊதாரித்தனம் நிறைந்த வாழ்க்கையில், அவர்களுடன் சேர்ந்து அமிழ்ந்து போகாதிருப்பதைக் கண்டு வியப்படைகிறார்கள். அதனால் அவர்கள் உங்களைக்குறித்து அவதூறாய் பேசுகிறார்கள். 1 பேது 3:161 பேது 2:12அப் 18:6யூதா 1:10அப் 13:452 பேது 2:122 பேது 2:22லூக் 15:13 ஆனால் அவர்கள் உயிர் வாழ்கிறவர்களையும் இறந்து போனவர்களையும் நியாயந்தீர்க்க ஆயத்தமாய் இருப்பவருக்கு கணக்குக் கொடுக்கவேண்டும். யாக் 5:92 தீமோ 4:1அப் 10:42ரோம 14:10-12யோவா 5:22-23மத் 12:36அப் 17:31யூதா 1:14-15 இதன் காரணமாகவே, இப்பொழுது இறந்துபோனவர்களுக்குங்கூட, அவர்கள் உயிரோடிருக்கையில் நற்செய்தி பிரசங்கிக்கப்பட்டது. அதனால் அவர்களின் உடலைப் பொறுத்தவரையில், எல்லா மனிதருக்கும் ஏற்படுகிற நியாயத்தீர்ப்பின்படி அவர்கள் மரணம் அடைந்திருந்தாலும், ஆவியைப் பொறுத்தவரையில் அவர்கள் இறைவனுடைய சித்தப்படி இன்னும் வாழமுடியும். ரோம 8:21 பேது 3:19ரோம 8:9-11யோவா 5:25-26எபே 2:3-5தீத் 3:3-71 பேது 4:1-2கலா 5:25

எல்லாக் காரியங்களுக்கும் முடிவு நெருங்கிவிட்டது. ஆகையால் நீங்கள் மன்றாடுவதற்கு ஏற்றவாறு மனத்தெளிவுடையவர்களாயும், தன்னடக்கமுடையவர்களாயும் இருங்கள். யாக் 5:8-91 பேது 1:131 பேது 5:82 தீமோ 4:5லூக் 21:34எபி 10:25கொலோ 4:21 தெச 5:6-8 எல்லாவற்றுக்கும் மேலாக, ஒருவரில் ஒருவர் ஊக்கமான அன்புள்ளவர்களாயிருங்கள். ஏனெனில் அன்பு, அநேக பாவங்களை மூடுகிறது. நீதி 10:12கொலோ 3:14நீதி 17:9யாக் 5:201 பேது 1:221 கொரி 13:11 தெச 3:121 தெச 4:9-10 முறுமுறுக்காமல் ஒருவரையொருவர் உபசரித்து நடவுங்கள். எபி 13:2ரோம 12:13பிலி 2:14எபி 13:161 தீமோ 3:22 கொரி 9:7தீத் 1:8யாக் 5:9 நீங்கள் ஒவ்வொருவரும் இறைவனிடமிருந்து பெற்றுக்கொண்ட வரத்தை உபயோகித்து, ஒருவருக்கொருவர் பணிசெய்யுங்கள். இவ்வாறு, வெவ்வேறு விதங்களில் வரும் இறைவனுடைய கிருபையை, உண்மையுடன் நிர்வகிக்கிறவர்களாக இருங்கள். ரோம 12:6-81 கொரி 12:4-111 கொரி 4:1-2மாற் 10:45எபி 6:101 கொரி 15:101 கொரி 3:10ரோம 15:27 பேசுகின்ற வரத்தையுடையவன், இறைவனுடைய சொந்த வார்த்தையைப் பேசுகிறேன் என்றே பேசவேண்டும். ஊழியம் செய்கிறவன் இறைவன் கொடுக்கும் பெலத்தின்படியே அதைச் செய்யவேண்டும். அப்பொழுது எல்லாக் காரியங்களிலும், இயேசுகிறிஸ்துவின் மூலமாக இறைவன் துதிக்கப்படுவார். அவருக்கே மகிமையும் வல்லமையும் என்றென்றும் உண்டாயிருப்பதாக. ஆமென். 1 கொரி 10:311 பேது 4:10எபே 6:101 கொரி 12:4எபே 4:291 பேது 2:5அப் 7:38கொலோ 4:6

கிறிஸ்துவுக்காக துன்பம்

பிரியமானவர்களே, நீங்கள் அனுபவிக்கும் துன்பங்களைக்குறித்து, ஏதோ விசித்திரமான ஒரு காரியம் உங்களுக்கு ஏற்பட்டுவிட்டதென எண்ணி வியப்படைய வேண்டாம். 2 தீமோ 3:121 பேது 1:6-71 பேது 5:91 தெச 3:2-4தானி 11:351 கொரி 10:131 கொரி 3:131 பேது 4:4 கிறிஸ்துவினுடைய துன்பங்களில் நீங்களும் பங்குகொள்கிறீர்கள் என்று சந்தோஷப்படுங்கள். அப்பொழுது அவருடைய மகிமை வெளிப்படுகையில், நீங்கள் இன்னும் அதிக மகிழ்ச்சியடைவீர்கள். ரோம 8:17யாக் 1:2-3ரோம 5:3பிலி 3:102 கொரி 1:71 பேது 5:102 கொரி 4:101 பேது 1:5-8 கிறிஸ்துவின் பெயருக்காக நீங்கள் அவமதிக்கப்பட்டால், நீங்கள் ஆசீர்வதிகப்பட்டவர்கள்; ஏனெனில் இறைவனின் ஆவியானவர் மகிமையுடன் உங்களில் தங்கி வாழ்கிறாரே. 1 பேது 3:14லூக் 6:22மத் 5:111 பேது 3:16யாக் 1:12சங் 146:51 பேது 2:19-202 கொரி 12:10 ஆதலால் நீங்கள் ஒரு கொலைகாரனாகவோ, திருடனாகவோ, வேறுவிதமான குற்றம் செய்தவனாகவோ அல்லது தேவையின்றி பிறர் விஷயத்தில் தலையிட்டவனாகவோ துன்பம் அனுபவிக்கக்கூடாது. 2 தெச 3:111 தெச 4:111 பேது 2:19-201 தீமோ 5:131 பேது 3:172 தீமோ 2:9மத் 5:11 ஆனால் கிறிஸ்துவைப் பின்பற்றும் காரணத்திற்காக நீங்கள் வேதனையை அனுபவித்தால், அதைக்குறித்து வெட்கமடைய வேண்டாம். அந்தப் பெயருடையவர்களாய் நீங்கள் இருப்பதைக்குறித்து இறைவனைத் துதியுங்கள். 1 பேது 3:17-18பிலி 1:291 பேது 4:19யாக் 1:2-42 தீமோ 1:12அப் 5:41எபே 3:13-15பிலி 1:20 ஏனெனில், நியாயத்தீர்ப்பு தொடங்கும் காலம் வந்துவிட்டது. அது இறைவனுடைய குடும்பத்தினரிடமே முதலில் தொடங்கும்; நியாயத்தீர்ப்பு நம்மிடத்தில் தொடங்குமானால், இறைவனுடைய நற்செய்திக்குக் கீழ்ப்படியாதவர்களின் முடிவு என்னவாயிருக்கும்! எரே 25:292 தெச 1:8ரோம 2:9எசேக் 9:61 பேது 2:8லூக் 12:47-48மல்கி 3:5எபி 12:24-25 வேதவசனத்தின்படி, நீதி 11:31எசேக் 18:24லூக் 23:312 பேது 2:5-6யூதா 1:151 கொரி 10:12அப் 14:22எபி 10:38-39

“நீதியுள்ளவர்கள் இரட்சிக்கப்படுவது கஷ்டம் என்றால்,

இறை பக்தியற்றவர்களுக்கும், பாவிகளுக்குமான நிலை என்னவாகும்?” 1

ஆகவே இறைவனுடைய திட்டத்தின்படி துன்பம் அனுபவிக்கிறவர்கள், உண்மையுள்ளவரான தங்களைப் படைத்த இறைவனிடம் தங்களை ஒப்புக்கொடுத்து, தொடர்ந்து நன்மை செய்யவேண்டும். சங் 37:52 தீமோ 1:121 பேது 3:17சங் 138:8சங் 146:5-61 பேது 4:12-16சங் 31:5ரோம 2:7