1 தீமோத்தேயு 3

1 Timothy 3

மேற்பார்வையாளரின் பண்புகள்

யாராவது திருச்சபையின் மேற்பார்வையாளனாக இருக்க விரும்பினால், அவன் நல்ல பணியை விரும்புகிறான். அது உண்மையான நம்பத்தகுந்த வாக்கு. தீத் 1:7அப் 20:281 பேது 5:21 பேது 2:251 தீமோ 1:15யாக் 5:19-201 தீமோ 3:2-71 தீமோ 4:9 திருச்சபையின் மேற்பார்வையாளனாக இருக்கவேண்டியவன், குற்றம் காணப்படாதவனாகவும், ஒரு மனைவியை மட்டும் உடைய கணவனாகவும், சுயக்கட்டுப்பாடு உடையவனாகவும், எல்லாவற்றிலும் கட்டுப்பாடு உடையவனாகவும், மதிப்புக்குரியவனாகவும், உபசரிக்கும் பண்பு உடையவனாகவும், போதிக்கும் ஆற்றல் உடையவனாகவும் இருக்கவேண்டும். தீத் 1:6-92 தீமோ 2:24ரோம 12:131 தீமோ 5:91 பேது 4:91 பேது 5:81 தீமோ 3:10-11தீத் 2:2 அவன் மதுபான வெறிகொள்ளும் பழக்கம் இல்லாதவனாகவும், கலகக்காரனாக இல்லாமல், கனிவு உடையவனாகவும் இருக்கவேண்டும். அவன் வாக்குவாதம் செய்யாதவனாகவும், பண ஆசை இல்லாதவனாகவும் இருக்கவேண்டும். தீத் 1:7தீத் 3:21 தீமோ 3:8எபே 5:18ஏசா 28:7யாக் 4:11 பேது 5:2எபி 13:5 அவன் தனது சொந்த குடும்பத்தை நல்லமுறையில் நடத்தவேண்டும். அவனது பிள்ளைகள் அவனுக்கு மதிப்புக்கொடுத்து, கீழ்ப்படியும்படி பார்த்துக்கொள்ளவும் வேண்டும். தீத் 1:61 தீமோ 3:12ஆதி 18:19தீத் 2:2அப் 10:2யோசு 24:15சங் 101:2-8தீத் 2:7 தனது சொந்தக் குடும்பத்தைப் பராமரிப்பது எப்படியெனத் தெரியாதவன் இறைவனின் திருச்சபையை எப்படி பராமரிக்க முடியும்? 1 சாமு 3:13எபே 5:24அப் 20:28எபே 5:321 தீமோ 3:15எபே 1:221 சாமு 2:29-301 கொரி 10:32 அவன் ஒரு புதிதாக மனமாற்றம் அடைந்த விசுவாசியாய் இருக்கக்கூடாது. அப்படியிருந்தால், அவன் வீண்பெருமை அடைந்து, பிசாசு அடைந்த நியாயத்தீர்ப்புக்குள் விழக்கூடும். 1 தீமோ 6:4எபி 5:12-131 பேது 5:51 பேது 2:21 கொரி 3:11 கொரி 4:6-81 கொரி 8:12 கொரி 12:7 அவன் திருச்சபையைச் சேராதவர்கள் மத்தியிலும் நற்பெயர் பெற்றவனாயிருக்க வேண்டும். இல்லாவிட்டால் அவன் அவமானத்துக்குள்ளாகி, பிசாசின் கண்ணியில் விழுந்துபோக நேரிடலாம். 2 கொரி 8:212 தீமோ 2:26கொலோ 4:51 கொரி 10:321 தெச 4:121 தீமோ 6:92 கொரி 6:3அப் 6:3

அதேபோல் திருச்சபையின் உதவி ஊழியரும் மதிப்புக்குரியவர்களாகவும், உண்மைத்தனம் உள்ளவர்களாகவும் இருக்கவேண்டும். அவர்கள் மதுபானத்தால் வெறிகொள்கிறவர்களாகவோ, நீதியற்ற முறையில் இலாபத்தைத் தேடுகிறவர்களாகவோ இருக்கக்கூடாது. பிலி 1:1அப் 6:3-61 தீமோ 3:31 தீமோ 5:23தீத் 2:3லேவி 10:91 தீமோ 3:12எசேக் 44:21 அவர்கள் விசுவாசத்தின் ஆழமான இரகசியத்தை நல்ல மனசாட்சியுடன் பற்றிப்பிடித்துக் கொள்கிறவர்களாய் இருக்கவேண்டும். 1 தீமோ 1:192 யோவா 1:9-101 தீமோ 1:51 தீமோ 3:16 முதலாவது அவர்களை சோதித்துப் பார்க்கவேண்டும்; அதற்குப் பின்பு அவர்களுக்கெதிராக குற்றம் ஒன்றும் இல்லையானால், அவர்கள் உதவி ஊழியராகப் பணிசெய்யலாம். 1 தீமோ 5:221 தீமோ 3:13தீத் 1:6-71 கொரி 1:81 தீமோ 3:21 தீமோ 3:6அப் 6:1-21 யோவா 4:1

அதேபோல் அவர்களுடைய மனைவிகளும், மதிப்புக்குரிய பெண்களாய் இருக்கவேண்டும். அவர்கள் அவதூறு பேசுகிறவர்களாக இருக்காமல், எல்லாவற்றிலும் கட்டுப்பாடு உள்ளவர்களாகவும் நம்பத்தகுந்தவர்களாகவும் இருக்கவேண்டும். தீத் 2:3தீத் 3:21 தீமோ 3:21 பேது 5:82 தீமோ 3:3நீதி 10:181 தெச 5:6-81 தீமோ 1:12

ஒரு திருச்சபையின் உதவி ஊழியன், ஒரு மனைவியை மட்டும் உடைய கணவனாக இருக்கவேண்டும்; அவன் தனது பிள்ளைகளையும், தனது குடும்பத்தையும் நல்லமுறையில் நடத்துகிறவனாகவும் இருக்கவேண்டும். 1 தீமோ 3:21 தீமோ 3:4-51 தீமோ 3:8பிலி 1:1 நல்லமுறையில் இந்த பணியைச் செய்கிறவர்கள் பிறரிடமிருந்து உயர் மதிப்பைப் பெறுவார்கள். கிறிஸ்து இயேசுவிலுள்ள தங்கள் விசுவாசத்தில் மிகுந்த உறுதியையும் பெற்றுக்கொள்வார்கள். மத் 25:21எபி 6:101 கொரி 16:151 பேது 4:10-111 தெச 2:22 தீமோ 2:1அப் 21:35அப் 6:15

பவுலின் அறிவுறுத்தல்களுக்கான காரணங்கள்

நான் விரைவில் உன்னிடம் வருவேன் என எதிர்பார்க்கிறேன். ஆனால், இந்த அறிவுறுத்தல்களை உனக்கு எழுதுகிறேன். 1 கொரி 11:34பிலே 1:221 தெச 2:181 தீமோ 4:132 கொரி 1:15-172 யோவா 1:123 யோவா 1:14எபி 13:23 ஏனெனில் நான் வரத்தாமதித்தாலும், இறைவனின் குடும்பத்தில் மக்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று நீ அறிந்துகொள்ளும்படியே இதை எழுதுகிறேன்; இறைவனின் குடும்பமானது ஜீவனுள்ள இறைவனின் திருச்சபையாயிருக்கிறது. அதுவே சத்தியத்தைத் தாங்கும் தூணும், அஸ்திபாரமுமாயிருக்கிறது. 1 பேது 2:5எபே 2:21-221 நாளாக 22:131 இராஜா 2:41 தெச 1:9மத் 16:18-191 நாளாக 28:9-211 சாமு 17:26 இறை பக்தியைக்குறித்த இரகசியம் மிகப்பெரியது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை: யோவா 1:14எபி 1:3மாற் 16:19ரோம 16:251 யோவா 5:6-81 யோவா 1:2பிலி 2:6-8கொலோ 1:23

இறைவன் மாம்சத்தில் வெளிப்பட்டார்.

ஆவியானவரால் நிரூபிக்கப்பட்டார்.

இறைத்தூதர்களால் காணப்பட்டார்.

அவர் யூதரல்லாதவர்கள் மத்தியில் பிரசங்கிக்கப்பட்டார்.

அவர் உலகத்திலுள்ளவர்களால் விசுவாசிக்கப்பட்டார்.

அவர் மகிமையில் எடுத்துக்கொள்ளப்பட்டார்.