2 நாளாகமம் 4

2 Chronicles 4

ஆலயத்தின் அலங்காரப் பொருட்கள்

சாலொமோன் இருபதுமுழ நீளம், முப்பதுமுழ அகலம், பத்துமுழ உயரமுடைய ஒரு வெண்கலப் பலிபீடத்தைச் செய்தான். 1 இராஜா 8:64எசேக் 43:13-171 இராஜா 8:221 இராஜா 9:252 நாளாக 1:52இராஜா 16:14-15யாத் 27:1-8 அவன் வார்ப்பிக்கப்பட்ட உலோகத்தினால் வார்க்கப்பட்ட ஒரு பெரிய தொட்டியைச் செய்தான். அது வட்ட வடிவமானதும், ஒரு விளிம்பிலிருந்து மறு விளிம்புவரை பத்து முழமாயும், ஐந்துமுழ உயரமுள்ளதுமாயிருந்தது. அதன் சுற்றளவோ முப்பதுமுழ நூலளவுமாயிருந்தது. 1 இராஜா 7:23-26யாத் 30:18-21வெளி 7:14தீத் 3:5சகரி 13:1 அதன் விளிம்பின் கீழ்ப்பகுதியில் ஒரு முழத்திற்கு பத்து காளைகளின் உருவங்கள் இருக்கும்படி சுற்றிலும் அமைக்கப்பட்டிருந்தன. அவை இரண்டு வரிசைகளில் தொட்டியுடன் சேர்த்து வார்ப்பிக்கப்பட்டிருந்தன. 1 கொரி 9:9-101 இராஜா 7:24-26எசேக் 1:10எசேக் 10:14வெளி 4:7

வெண்கலத் தொட்டி பன்னிரண்டு எருதுகளின்மேல் நிறுத்தப்பட்டிருந்தது. அவற்றுள் மூன்று கிழக்கு நோக்கியும், மூன்று மேற்கு நோக்கியும், மூன்று வடக்கு நோக்கியும், மூன்று தெற்கு நோக்கியும் பார்த்துக் கொண்டிருந்தன. அவைகளுக்குமேல் வெண்கலத் தொட்டி வைக்கப்பட்டிருந்தது. எருதுகளின் பின்பக்கம் தொட்டியின் மையத்தை நோக்கியிருந்தன. அப் 9:15எபே 2:20லூக் 24:46-47மத் 16:18மத் 28:19-20மாற் 16:15வெளி 21:14 தொட்டியின் கனம் நான்கு விரல் அளவு தடிப்புடையது. அதன் விளிம்பு ஒரு கிண்ணத்தின் விளிம்பு போலவும், விரிந்த லில்லி பூவைப்போலவும் இருந்தது. அது கிட்டத்தட்ட 60,000 லிட்டர் 1 தண்ணீர் பிடிக்கத்தக்கதாக இருந்தது. 1 இராஜா 7:26

அதன்பின் அவன், கழுவுவதற்காக பத்து தண்ணீர்த் தொட்டிகளையும் செய்து, ஐந்து தொட்டிகளை தெற்குப் பக்கத்திலும் ஐந்து தொட்டிகளை வடக்குப் பக்கத்திலும் வைத்தான். அவைகளிலேயே தகன காணிக்கைக்குரிய பொருட்கள் கழுவப்பட்டன. ஆனால் அந்தப் பெரிய தொட்டியோ ஆசாரியர்கள் கழுவுவதற்கென இருந்தது. 1 இராஜா 7:38யாத் 30:18-211 இராஜா 7:40எசேக் 40:38சங் 51:21 கொரி 6:111 யோவா 1:72 நாளாக 4:2

அவன் பத்து தங்க விளக்குத் தாங்கிகளைக் குறிக்கப்பட்ட விதிப்படி செய்தான். அவற்றில் ஐந்தை தெற்குப் பக்கத்திலும், ஐந்தை வடக்குப் பக்கத்திலுமாக ஆலயத்தில் வைத்தான். 1 இராஜா 7:49யாத் 25:31-401 நாளாக 28:12யோவா 8:121 நாளாக 28:151 நாளாக 28:19எபி 8:5மத் 5:14-16

அவன் பத்து மேஜைகளையும் செய்து, அவற்றில் ஐந்தை தெற்குப் பக்கத்திலும், ஐந்தை வடக்குப் பக்கத்திலுமாக ஆலயத்தில் வைத்தான். அத்துடன் தங்கத்தினால் நூறு தெளிக்கும் கிண்ணங்களையும் செய்தான். 1 இராஜா 7:481 கொரி 10:21யாத் 25:23-30யாத் 37:10-16எசேக் 44:16ஏசா 25:6மல்கி 1:12சகரி 14:20

அவன் ஆசாரியருக்கான முற்றத்தையும், பெரிய முற்றத்தையும், அந்த முற்றங்களுக்குரிய கதவுகளையும் செய்து, கதவுகளை வெண்கலத் தகட்டால் மூடினான். 1 இராஜா 6:362இராஜா 21:51 இராஜா 7:12 அவன் அந்தப் பெரிய தொட்டியைத் தெற்கு பக்கத்தில் தென்கிழக்கு மூலையில் வைத்தான். 1 இராஜா 7:39

அத்துடன் ஈராம் பானைகளையும், நீண்ட பிடியுள்ள கரண்டிகளையும், தெளிக்கும் கிண்ணங்களையும் செய்தான். 1 இராஜா 7:141 இராஜா 7:40-51

இவ்வாறு ஈராம் சாலொமோன் அரசனிடமிருந்து பொறுப்பெடுத்த, இறைவனின் ஆலய வேலைகளைச் செய்துமுடித்தான்:

இரண்டு தூண்கள், 1 இராஜா 7:412 நாளாக 3:15-17

தூண்களின் உச்சியில் இரண்டு கிண்ண வடிவமான கும்பங்கள்,

தூண்களின் உச்சியில் இருந்த இரண்டு கும்பங்களையும் அலங்கரிப்பதற்கு இரண்டு வரிசை பின்னல் வேலைகள்,

தூண்களின் உச்சியில் இருக்கும் இரண்டு கிண்ண வடிவங்களான கும்பங்களை அலங்கரிக்க இரண்டு பின்னல் வேலைகளுக்கு நானூறு மாதுளம் பழங்கள், 1 இராஜா 7:201 இராஜா 7:42யாத் 28:33-34எரே 52:23உன்னத 4:13

தாங்கும் கால்களுடன் அதன் தொட்டிகள்; 1 இராஜா 7:27-43

பெரிய தொட்டி, அதன் கீழிருக்கும் பன்னிரண்டு காளைகள்,

பானைகள், நீண்ட பிடியுள்ள கரண்டிகள், இறைச்சி குத்தும் முட்கரண்டிகள் இன்னும் தேவையான மற்றும் எல்லாப் பொருட்களுமே. 2 நாளாக 2:131 நாளாக 28:171 இராஜா 7:13-142 நாளாக 4:111 இராஜா 7:451 சாமு 2:13-14யாத் 27:3யாத் 38:3

யெகோவாவினுடைய ஆலயத்தின் இப்பொருட்கள் எல்லாவற்றையும் ஈராம் அபி என்பவன் அரசன் சாலொமோனுக்கு பளபளக்கும் வெண்கலத்தினால் செய்துமுடித்தான். இவை எல்லாவற்றையும் அரசன் சுக்கோத்துக்கும், சேரேதாவுக்கும் இடையிலுள்ள யோர்தானின் சமபூமியில் களிமண் அச்சுகளில் வார்ப்பித்தான். 1 இராஜா 7:46 இப்பொருட்களைச் செய்வதற்கு சாலொமோன் பயன்படுத்திய வெண்கலம் மிக அதிகமாய் இருந்தபடியால் அதன் எடை எவ்வளவு எனத் தீர்மானிக்கப்படவில்லை. 1 இராஜா 7:47எரே 52:201 நாளாக 22:141 நாளாக 22:3

அத்துடன் இன்னும் இறைவனின் ஆலயத்திலுள்ள பொருட்களை சாலொமோன் செய்தான். அவையாவன: வெளி 9:131 நாளாக 28:161 இராஜா 7:48-502 நாளாக 26:16-182 நாளாக 36:102 நாளாக 36:182 நாளாக 4:82இராஜா 24:13

தங்க பலிபீடம்,

இறைசமுகத்து அப்பங்களை வைப்பதற்கான மேஜைகள்,

உட்புற பரிசுத்த இடத்தின் முன்பகுதியில் நிர்ணயித்த முறைப்படி எரிப்பதற்கு, சுத்தத் தங்கத்தினாலான விளக்குத் தாங்கிகளுடன் அதன் விளக்குகள், 2 நாளாக 4:7யாத் 25:31-371 இராஜா 6:16-171 இராஜா 6:51 இராஜா 8:6யாத் 27:20-21சங் 28:2

கட்டித் தங்கத்தினாலான பூ வேலைப்பாடுகள், அகல்விளக்குகள், இடுக்கிகள். 1 இராஜா 6:181 இராஜா 6:291 இராஜா 6:352 நாளாக 4:5யாத் 25:31-40யாத் 37:20

சுத்தத் தங்கத்தினாலான திரிவெட்டிகள், தெளிக்கும் கிண்ணங்கள், அகப்பைகள், தூப கலசங்கள், ஆலயத்திற்கு தங்கக் கதவுகள், அதாவது மகா பரிசுத்த இடத்தின் உட்புறக் கதவுகள், பிரதான மண்டபத்தின் கதவுகள் ஆகியனவாகும். 1 இராஜா 6:31-321 இராஜா 7:502இராஜா 12:132இராஜா 25:14யாத் 37:23எரே 52:18