2 கொரிந்தியர் 3

2 Corinthians 3

நாங்களே மறுபடியும் எங்களை பாராட்டிக்கொள்ளத் தொடங்குகிறோமா? அல்லது சில மனிதருக்கு நற்சான்றுக் கடிதங்கள் தேவைப்படுகிறது போல, நாங்கள் உங்களுக்கு நற்சான்றுக் கடிதங்களைக் காட்டவேண்டுமா? அல்லது உங்களிடமிருந்தும் நற்சான்றுக் கடிதங்கள் எங்களுக்குத் தேவையா? 2 கொரி 10:122 கொரி 12:112 கொரி 5:12அப் 18:271 கொரி 16:31 கொரி 10:331 கொரி 3:101 கொரி 4:15 இல்லையே; நீங்களே எங்கள் இருதயங்களில் எழுதப்பட்டும், எல்லோராலும் அறிந்து, வாசிக்கப்படுகின்ற எங்கள் நற்சான்றுக் கடிதமாயிருக்கிறீர்கள். 1 கொரி 9:1-21 தெச 1:8ரோம 1:8பிலி 1:71 கொரி 3:102 கொரி 11:112 கொரி 12:152 கொரி 7:3 நீங்கள் எங்கள் ஊழியத்தின் பலனாக, கிறிஸ்துவிடமிருந்து கிடைக்கப்பெற்ற ஒரு கடிதம் என்பதைக் காண்பிக்கிறீர்கள். அது மையினால் எழுதப்படவில்லை, ஜீவனுள்ள இறைவனின் ஆவியானவராலே எழுதப்பட்டிருக்கிறது. கற்பலகைகளில் எழுதப்படவில்லை, மனித இருதயங்களில் எழுதப்பட்டிருக்கிறது. எசேக் 11:19எரே 31:33எபி 8:10எபி 10:16சங் 40:8யாத் 31:182 கொரி 6:16எசேக் 36:25-27

இப்படிப்பட்ட மனவுறுதி, இறைவனுக்கு முன்பாக கிறிஸ்துவின் மூலமாய் எங்களுக்கு உண்டு. பிலி 1:6எபே 3:121 தெச 1:82 கொரி 2:14யாத் 18:19 நாங்கள் எங்கள் இயல்பினால் எதையும் செய்யமுடியும் என்று சொல்வதற்குத் தகுதியானவர்கள் அல்ல. எங்கள் தகுதி இறைவனிடமிருந்தே வருகிறது. 2 கொரி 12:9பிலி 4:131 கொரி 15:10யோவா 15:5பிலி 2:13யாக் 1:17மத் 10:19-201 கொரி 3:6 அவர் எங்களை ஒரு புது உடன்படிக்கையின் ஊழியக்காரராய் இருப்பதற்கு தகுதியுள்ளவராக்கினார். அந்த உடன்படிக்கை எழுதப்பட்ட மோசேயின் சட்டத்தைச் சார்ந்ததல்ல, ஆவியையே சார்ந்தது. எழுதப்பட்ட மோசேயின் சட்டம் கொல்லுகிறது, ஆனால் ஆவியானவரோ வாழ்வைக் கொடுக்கிறார். யோவா 6:63ரோம 7:6எரே 31:31ரோம 8:2எபி 8:6-101 கொரி 15:452 கொரி 3:14எபி 12:24

புது உடன்படிக்கையின் மகிமை

கற்களின்மேல் எழுத்துக்களால் பொறிக்கப்பட்டு, மரணத்தைக் கொண்டுவந்த பணி மகிமையுடன் வந்தது. மோசேயின் முகம் பிரகாசிக்கின்ற ஒளியாய் இருந்தபடியினால், இஸ்ரயேலர்களால் அவனுடைய முகத்தை நேராகப் பார்க்க முடியாதிருந்தது! ஆனால், அது மங்கிப்போகின்ற ஒளியாகவே இருந்தது. 2 கொரி 3:9-111 கொரி 13:10யாத் 31:18ரோம 10:42 கொரி 3:32 கொரி 3:6யாத் 24:12உபா 10:1-4 அதுவே அப்படியிருந்தது என்றால், பரிசுத்த ஆவியானவரின் பணி எத்தனை அதிக மகிமையுள்ளதாய் இருக்கும்? 1 கொரி 3:16எபே 2:181 பேது 1:22 தெச 2:13கலா 3:14கலா 5:22-23ஏசா 59:21யோவா 1:17 மனிதருக்குத் தண்டனைத்தீர்ப்பு கொடுக்கும் பணி இத்துணை மகிமையுடையதாய் இருந்தால், அவர்களுக்கு நீதியைக் கொண்டுவரும் பணி எத்தனை மகிமையுள்ளதாய் இருக்கும்? எபி 12:18-21ரோம 3:21-222 கொரி 5:211 கொரி 1:301 கொரி 15:412 கொரி 3:10-112 கொரி 3:6-72 பேது 1:1 முந்திய மகிமையுடன் இப்பொழுதுள்ள மகிமையை ஒப்பிடும்போது, இப்பொழுதுள்ள மகிமைக்கு முன்பாக இணையற்றது. 2 பேது 1:17ஆகா 2:7-9அப் 26:13ஆகா 2:3ஏசா 24:23யோபு 25:5பிலி 3:7-8வெளி 21:23-24 அன்றியும், மங்கிப்போகும் தன்மையுடையதே மகிமையுடன் வந்ததானால், நிலைத்திருப்பதின் மகிமை எவ்வளவு பெரிதானது? எபி 8:13ரோம 5:20-21எபி 7:21-252 கொரி 3:6-72 கொரி 4:1எபி 12:25-29

ஆகவே, இத்தகைய ஒரு எதிர்பார்ப்பு நமக்கிருப்பதால், நாங்கள் மிகவும் துணிவுள்ளவர்களாய் இருக்கிறோம். 2 கொரி 7:4எபே 6:19-20அப் 4:13யோவா 16:29பிலி 1:201 கொரி 14:191 தெச 2:21 தீமோ 3:13 நாங்கள் மோசேயைப் போன்றவர்கள் அல்ல. மறைந்துபோகும் மகிமையை, இஸ்ரயேலர் பார்க்காதபடி மோசே தன் முகத்தின்மேல் முக்காடு போட்டுக்கொண்டான். யாத் 34:33-35எபே 2:14-152 கொரி 3:7கொலோ 2:17எபி 10:1-9கலா 3:23-24ரோம 10:4 ஆனால், அவர்களின் மனது மழுங்கிப் போயிற்று. ஏனெனில், இந்நாள்வரை அவர்கள் பழைய உடன்படிக்கையை வாசிக்கும்போது, அந்த முக்காடு நீக்கப்படாமலேயே இருக்கிறது. ஏனெனில் அது கிறிஸ்துவில் மட்டுமே நீக்கப்படுகிறது. 2 கொரி 4:3-4அப் 26:18ரோம 11:252 கொரி 4:6எபே 1:17-20ரோம 11:7-10யோவா 12:40எசேக் 12:2 இன்றுவரை மோசேயின் சட்டங்கள் வாசிக்கப்படும்போது, அவர்களுடைய இருதயங்களை ஒரு முக்காடு மூடிக்கொண்டிருக்கிறது. அப் 13:27-29 ஆனால், யாராவது கர்த்தரிடத்தில் திரும்பும்போது, அந்த முக்காடு நீக்கப்படுகிறது. யாத் 34:34ஏசா 25:7ஏசா 29:18யோவா 6:45-46எரே 31:34ரோம 11:23ரோம 11:25-27புலம் 3:40 இப்பொழுதும், ஆவியானவரே கர்த்தர். கர்த்தருடைய ஆவியானவர் எங்கே இருக்கிறாரோ, அங்கே அவர் விடுதலை கொடுக்கிறார். ரோம 8:2யோவா 8:32கலா 5:13கலா 4:6கலா 5:1ஏசா 61:1-2யோவா 6:632 தீமோ 1:7 நாம் எல்லோரும் முக்காடு இடப்படாத முகங்களுடன், கர்த்தருடைய மகிமையைப் பிரதிபலிக்கிறோம். இவ்விதமாக மகிமையான நிலையிலிருந்து, மகிமையின்மேல் மகிமையை அடைந்து, அவருடைய சாயலாக மாற்றமடைகிறோம். இது கர்த்தரிடமிருந்தே வருகிறது. அவரே ஆவியானவர். 2 கொரி 4:6எபே 4:22-24ரோம 12:22 கொரி 4:41 கொரி 13:12கொலோ 3:101 கொரி 15:49ரோம 8:29