யூதாவின் அரசன் ஆகாஸ்
ரெமலியாவின் மகன் பெக்காவின் ஆட்சியின் பதினேழாம் வருடத்தில், யூதாவின் அரசனான யோதாமின் மகன் ஆகாஸ் அரசாளத் தொடங்கினான். ஏசா 1:12 நாளாக 28:1-42இராஜா 15:27-302இராஜா 15:32-332இராஜா 15:38ஓசி 1:1ஏசா 7:1மீகா 1:1 ஆகாஸ் அரசனானபோது இருபது வயதுள்ளவனாயிருந்தான். இவன் எருசலேமில் பதினாறு வருடங்கள் அரசாண்டான். தன் முற்பிதாவான தாவீதைப்போல் அவன் தனது இறைவனாகிய யெகோவாவின் பார்வையில் சரியானதைச் செய்யவில்லை. 2 நாளாக 28:1-41 இராஜா 11:4-81 இராஜா 15:31 இராஜா 3:141 இராஜா 9:42 நாளாக 17:32 நாளாக 29:22 நாளாக 34:2-3 அவன் இஸ்ரயேல் அரசர்களின் வழிகளில் நடந்தான். இவன் இஸ்ரயேலருக்கு முன்பாக யெகோவா துரத்திவிட்ட நாடுகளின் அருவருப்பான வழிகளைப் பின்பற்றி, தனது மகனையும் நெருப்பிலே பலியிட்டான். உபா 12:31லேவி 18:212இராஜா 21:22இராஜா 17:172இராஜா 21:11சங் 106:37-381 இராஜா 12:28-301 இராஜா 14:24 அவன் மலை உச்சியிலுள்ள மேடைகளிலும், அடர்ந்த மரங்களின் கீழும் பலிசெலுத்தி, தூபங்காட்டினான். உபா 12:21 இராஜா 14:232இராஜா 14:4எசேக் 20:28-29ஏசா 57:5-7ஏசா 65:4ஏசா 66:17எரே 17:2
அப்பொழுது சீரிய அரசன் ரேத்சீனும் ரெமலியாவின் மகனான இஸ்ரயேலின் அரசன் பெக்காவும் எருசலேமுக்கு எதிராக அணிவகுத்துச் சென்றார்கள். அவர்கள் ஆகாசை சூழ்ந்துகொண்டபோதும், அவனை மேற்கொள்ள முடியவில்லை. 2இராஜா 15:37ஏசா 7:1-9ஏசா 7:14ஏசா 8:9-10ஏசா 9:6-71 இராஜா 11:361 இராஜா 15:42 நாளாக 28:5-15 அந்த நேரத்தில் சீரிய அரசன் ரேத்சீன் யூதாவின் மனிதரைத் துரத்திவிட்டு, ஏலாத்தை சீரியாவுக்குத் திரும்பப் பெற்றுக்கொண்டான். அப்பொழுது ஏதோமியர் ஏலாத்துக்குக் குடியிருக்கப் போனார்கள். அவர்கள் இன்றுவரையும் அங்கேயே வாழ்கிறார்கள். 2இராஜா 14:221 இராஜா 9:262 நாளாக 26:2உபா 2:8
அரசன் ஆகாஸ், அசீரியாவின் அரசன் திக்லாத்பிலேசருக்குத் தூதுவரை அனுப்பி, “நான் உமது பணியாளனும், உமக்கு வரி செலுத்துகிறவனுமாய் இருக்கிறேன். இப்போது என்னை எதிர்த்துத் தாக்குகின்ற சீரிய அரசனிடமிருந்தும், இஸ்ரயேல் அரசனிடமிருந்தும் என்னைக் காப்பாற்றும்” என்று கேட்டான். 2இராஜா 15:291 நாளாக 5:261 இராஜா 20:32-331 இராஜா 20:42 நாளாக 28:162 நாளாக 28:20ஓசி 14:3எரே 17:5 அத்துடன் ஆகாஸ் யெகோவாவின் ஆலயத்திலும், அரண்மனைத் திரவிய அறையிலும் இருந்த வெள்ளியையும், தங்கத்தையும் எடுத்து அவற்றை அசீரிய அரசனுக்கு ஒரு அன்பளிப்பாக அனுப்பினான். 2இராஜா 12:17-182 நாளாக 16:22 நாளாக 28:20-212இராஜா 16:17-182இராஜா 18:15-16ஏசா 7:17ஏசா 8:7-8சங் 7:15-16 அசீரிய அரசன் இவனுடைய வேண்டுகோளுக்கு இணங்கி தமஸ்குவை தாக்கி அதைக் கைப்பற்றினான். அங்கிருந்த குடிமக்களை கீருக்கு நாடுகடத்தி ரேத்சீனையும் கொலைசெய்தான். ஆமோ 9:7ஏசா 22:6ஆமோ 1:3-52 நாளாக 28:212 நாளாக 28:5ஏசா 7:16ஏசா 9:11
இதன்பின் அரசன் ஆகாஸ், அசீரிய அரசன் திக்லாத்பிலேசரைச் சந்திப்பதற்கு தமஸ்குவுக்குப் போனான். அவன் தமஸ்குவில் ஒரு பலிபீடத்தைக் கண்டு, அதன் அளவு விபரங்கள் உள்ளடங்கிய வரைபடத்தை ஆசாரியனான உரியாவுக்கு அனுப்பினான். எசேக் 23:16-17ஏசா 8:2ரோம 12:21 நாளாக 28:11-121 நாளாக 28:191 பேது 1:182 நாளாக 28:23-252இராஜா 15:29 அப்படியே ஆசாரியனான உரியா தமஸ்குவிலிருந்து ஆகாஸ் தனக்கு அனுப்பிய வரைபடத்தின்படியே, ஆகாஸ் அரசன் திரும்பி வருவதற்கு முன்பே ஒரு பலிபீடத்தைக் கட்டிமுடித்தான். 1 இராஜா 21:11-132 நாளாக 26:17-18தானி 3:7எசேக் 22:26கலா 1:10ஓசி 4:6ஓசி 5:11ஏசா 8:2 ஆகாஸ் அரசன் தமஸ்குவிலிருந்து திரும்பிவந்தபோது, பலிபீடத்தைக் கண்டு அதன் கிட்டப்போய் காணிக்கைகளைச் செலுத்தினான். 2 நாளாக 26:16-191 இராஜா 13:12 நாளாக 28:232 நாளாக 28:25எண் 18:4-7 அவன் தன் தகன காணிக்கையையும் தானிய காணிக்கையையும் செலுத்தி, பானகாணிக்கைகளையும் ஊற்றி, சமாதான காணிக்கையின் இரத்தத்தையும் பலிபீடத்தில் தெளித்தான். லேவி 1:1-3 யெகோவாவுக்கு முன்பாக இருந்த வெண்கல பலிபீடம், புதிய பலிபீடத்துக்கும் யெகோவாவின் ஆலயத்துக்கும் நடுவில் இருந்தது. அதை ஆலயத்தின் முன் பக்கத்திலிருந்து எடுத்துக்கொண்டுவந்து, புதிய பலிபீடத்தின் வடக்குப் பக்கத்தில் வைத்தான். 2 நாளாக 4:1யாத் 40:29யாத் 40:62 நாளாக 1:52இராஜா 16:11மத் 23:35
இதன்பின் ஆகாஸ் அரசன் ஆசாரியனான உரியாவுக்குப் பின்வரும் கட்டளையைக் கொடுத்தான். அவன், “இனிமேல் காலையில் செலுத்தும் தகன காணிக்கையையும், மாலையில் செலுத்தும் தானிய காணிக்கையையும், அரசனுடைய தகன காணிக்கை, தானிய காணிக்கை ஆகியவற்றையும், எல்லா நாட்டு மக்களுடைய தகன காணிக்கைகள், தானிய காணிக்கை, பானகாணிக்கை ஆகிய யாவும் புதிய, பெரிய பலிபீடத்தில் செலுத்தப்பட வேண்டும். அத்துடன் எல்லா தகன காணிக்கையின், பலிகளின், இரத்தம் முழுவதையும் புதிய பலிபீடத்தில் தெளிக்கவேண்டும். ஆனால் அந்த வெண்கலப் பலிபீடத்தையோ நான் எனக்கு வழிகாட்டுதலை அறிவதற்காக உபயோகிப்பேன்” என்றான். யாத் 29:39-411 இராஜா 8:642 நாளாக 29:21-242இராஜா 18:41 இராஜா 3:42 நாளாக 29:322 நாளாக 29:352 நாளாக 33:6 ஆகாஸ் அரசன் கட்டளையிட்டது போலவே ஆசாரியன் உரியா செய்தான். 1 தெச 2:42இராஜா 16:11அப் 4:19அப் 5:29யூதா 1:11
ஆகாஸ் அரசன், நகர்த்தும் வெண்கலத்தாங்கிகளின் பக்கத் துண்டுகளையும் எடுத்து தொட்டிகளையும் அகற்றினான். பெரிய தொட்டியை, அதைத் தாங்கிக்கொண்டிருந்த வெண்கல எருதுகளின் மேலிருந்து எடுத்து ஒரு கல் தளத்தின்மேல் வைத்தான். 1 இராஜா 7:23-392 நாளாக 28:242 நாளாக 29:192 நாளாக 4:14-152இராஜா 25:13-16எரே 52:20 அசீரிய அரசனை திருப்திப்படுத்துவதற்காக, ஆலய வாசலில் கட்டப்பட்டிருந்த ஓய்வுநாள் பயன்பாட்டிற்குரிய கூடாரத்தையும் எடுத்துவிட்டு, யெகோவாவின் ஆலயத்துக்கு வெளியே அமைந்திருந்த அரசர் உட்செல்லும் வாசலையும் அகற்றிவிட்டான். 1 இராஜா 10:52இராஜா 11:5எசேக் 46:2
ஆகாஸினுடைய ஆட்சியின் மற்ற நிகழ்வுகளும், அவன் செய்தவைகளும் யூதா அரசர்களின் வரலாற்றுப் புத்தகத்தில் அல்லவோ எழுதப்பட்டுள்ளன. 1 இராஜா 14:292 நாளாக 28:262இராஜா 15:362இராஜா 15:382இராஜா 15:6-72இராஜா 20:20-21 ஆகாஸ் தன் முற்பிதாக்களைப்போல இறந்து தாவீதின் நகரத்தில் அவர்களுடன் அடக்கம் செய்யப்பட்டான். அவனுடைய மகன் எசேக்கியா அவனுக்குப்பின் அரசனானான். ஏசா 1:1மத் 1:91 நாளாக 3:132 நாளாக 28:272இராஜா 18:12இராஜா 21:18ஓசி 1:1மீகா 1:1