சிதேக்கியா அரசனின் ஆட்சியின் ஒன்பதாம் வருடம், பத்தாம் மாதம், பத்தாம் தேதியில், பாபிலோனிய அரசன் நேபுகாத்நேச்சார் தனது முழு படைகளுடனும் எருசலேமுக்கு எதிராக வந்தான். அவன் பட்டணத்துக்கு வெளியில் முகாமிட்டு அதைச் சுற்றிவளைத்து முற்றுகைக் கொத்தளங்களைக் கட்டினான். எரே 52:4-111 நாளாக 6:15ஏசா 29:3எரே 34:1-6எரே 43:102 நாளாக 36:17-212இராஜா 24:12இராஜா 24:10 சிதேக்கியா அரசனின் ஆட்சியில் பதினோராம் வருடம்வரை, பட்டணம் முற்றுகை போடப்பட்டிருந்தது.
அதே வருடத்தில் நான்காம் மாதம், ஒன்பதாம் நாளில் பட்டணத்தில் பஞ்சம் மிகவும் கொடியதாய் இருந்ததினால் அங்கிருந்த மக்களுக்கு சாப்பிடுவதற்கு உணவு இல்லாதிருந்தது. உபா 28:52-53எசேக் 14:21எசேக் 5:12எசேக் 7:15எரே 38:2எரே 52:6புலம் 4:4-10லேவி 26:26 கல்தேயர் 1 பட்டணத்தைச் சூழ்ந்திருந்தபோதிலுங்கூட, பட்டணத்தின் மதில் உடைக்கப்பட்டது. இரவு நேரத்தில் முழு இராணுவமும் அரசனுடைய தோட்டத்துக்குப் பக்கத்திலுள்ள இரு மதில்களுக்கிடையில் இருந்த வாசல் வழியாகத் தப்பி ஓடியது. அவர்கள் அரபாவை நோக்கி ஓடினார்கள். எசேக் 33:212இராஜா 25:5உபா 28:25உபா 32:24-25உபா 32:30எசேக் 12:12எரே 39:2-7எரே 5:10 ஆனால் கல்தேயரின் படை அரசனைப் பின்தொடர்ந்து சென்று எரிகோவின் சமவெளியில் அவர்களை மேற்கொண்டனர். அவனுடைய இராணுவத்தினர் அவனைவிட்டுப் பிரிந்து சிதறடிக்கப்பட்டு ஓடினார்கள். ஆமோ 2:14-16ஏசா 30:16எரே 24:8எரே 39:5எரே 52:8 அரசன் பிடிக்கப்பட்டான். 2இராஜா 23:33எரே 34:21-222 நாளாக 33:11எசேக் 17:20-21எசேக் 21:25-27எரே 21:7எரே 32:4எரே 38:23
பின்பு ரிப்லாவிலிருந்த பாபிலோன் அரசனிடம் கொண்டுபோகப்பட்டான். அங்கு அவனுக்கு தண்டனை விதிக்கப்பட்டது. அவர்கள் சிதேக்கியாவின் கண்களுக்கு முன்பாகவே அவனுடைய மகன்களைக் கொலைசெய்தார்கள். அதன்பின் அவர்கள் அவனுடைய கண்களைப் பிடுங்கி, வெண்கலச் சங்கிலிகளால் கட்டி, அவனைப் பாபிலோனுக்குக் கொண்டுபோனார்கள். எரே 32:4-52 நாளாக 33:112 நாளாக 36:6உபா 28:34எசேக் 12:13-16எசேக் 17:16-20எசேக் 7:27ஆதி 21:16
பாபிலோன் அரசனான நேபுகாத்நேச்சார் ஆட்சி செய்த பத்தொன்பதாம் வருடம், ஐந்தாம் மாதம், ஏழாம்நாளில், பாபிலோன் அரசனின் அதிகாரியும், பேரரசின் மெய்க்காவல் தளபதியான நேபுசராதான் எருசலேமுக்கு வந்தான். எரே 52:12-162இராஜா 24:122இராஜா 25:27எரே 39:8-14எரே 40:1-4புலம் 4:12சகரி 8:19 அவன் யெகோவாவின் ஆலயத்தையும், அரண்மனையையும், எருசலேமிலிருந்த வீடுகள் அனைத்தையும் சுட்டெரித்தான். முக்கியமான கட்டிடங்கள் எல்லாவற்றையும் அவன் எரித்துப்போட்டான். ஆமோ 2:5சங் 74:3-71 இராஜா 9:82 நாளாக 36:19மீகா 3:12சங் 79:1அப் 6:13-14ஏசா 64:10-11 பேரரசின் மெய்க்காவல் தளபதியின் தலைமையில் முழு பாபிலோனியப் படையும், எருசலேமைச் சுற்றியிருந்த மதிலை உடைத்து வீழ்த்தியது. நெகே 1:3எரே 39:8எரே 5:10எரே 52:14-23 காவல் தளபதி நேபுசராதான் பட்டணத்தில் மீந்திருந்தவர்களையும், பாபிலோன் அரசனிடம் சரணடைந்தவர்களையும், மற்ற மக்கள் கூட்டத்தினரையும் சிறைபிடித்துக் கொண்டுபோனான். 2 நாளாக 36:20எசேக் 12:15-16எசேக் 22:15-16எசேக் 5:2எரே 15:1-2எரே 39:9எரே 52:12 ஆனால் அந்த மெய்க்காவல் தளபதி மிகவும் ஏழைகளான சிலரை திராட்சைத் தோட்டங்களிலும் வயல்களிலும் வேலைசெய்வதற்காக விட்டுச்சென்றான். 2இராஜா 24:14எரே 40:7எசேக் 33:24எரே 39:10எரே 52:16
கல்தேயர் யெகோவாவின் ஆலயத்திலிருந்த வெண்கலத் தூண்களையும், ஆதாரங்களையும், வெண்கல தண்ணீர் தொட்டியையும் உடைத்து அவைகளிலிருந்த வெண்கலத்தை பாபிலோனுக்குக் கொண்டுபோனார்கள். 2 நாளாக 36:181 இராஜா 7:152இராஜா 20:17எரே 52:17-20புலம் 1:101 இராஜா 7:23-452 நாளாக 4:12-162 நாளாக 4:2-6 அதோடு ஆலய வழிபாடுகளில் பயன்படுத்தப்பட்ட பானைகளையும், சாம்பல் கரண்டிகளையும், கத்திகளையும், தட்டங்களையும் மற்றும் எல்லா வெண்கலப் பொருட்களையும் எடுத்துக்கொண்டு போனார்கள். யாத் 27:31 இராஜா 7:47-502 நாளாக 24:142 நாளாக 4:20-22யாத் 38:3 மெய்க்காவல் தளபதி சுத்தத் தங்கத்தினாலும் வெள்ளியினாலும் செய்யப்பட்ட தூபகிண்ணங்களையும், தெளிக்கும் பாத்திரங்களையும் எடுத்துக்கொண்டு போனான். தானி 5:2-31 இராஜா 7:48-512 நாளாக 24:14யாத் 37:23எஸ்றா 1:9-11எண் 7:13-14
யெகோவாவின் ஆலயத்துக்காக சாலொமோன் செய்த இரண்டு தூண்களிலும், தண்ணீர் தொட்டியிலும், உருளக்கூடிய தாங்கிகளிலும் இருந்த வெண்கலத்தின் எடை, நிறுக்கமுடியாத அளவு அதிகமாயிருந்தன. 1 இராஜா 7:47 ஒவ்வொரு தூணும் இருபத்தேழு அடி உயரமுள்ளதாயிருந்தது. ஒரு தூணிலிருந்த வெண்கலத்தால் செய்யப்பட்ட கும்பம் நாலரை அடி உயரமுள்ளதும், வெண்கலத்தினாலான பின்னல் வேலைப்பாட்டினாலும், மாதுளம் பழங்களினாலும், சுற்றிலும் அலங்கரிக்கப்பட்டதாயும் இருந்தது. மற்ற தூணும் அதன் வேலைப்பாடுகளும் இதையே ஒத்திருந்தது. 1 இராஜா 7:15-22எரே 52:21-23
மெய்க்காவல் தளபதி, தலைமை ஆசாரியன் செராயாவையும், இரண்டாவது ஆசாரியனான செப்பனியாவையும் மூன்று வாசல் காவலரையும் கைதிகளாகக் கொண்டுபோனான். 1 நாளாக 6:14எஸ்றா 7:1எரே 21:1எரே 29:25எரே 29:29எரே 52:242இராஜா 25:24-26 மேலும் அவன், பட்டணத்தில் இருந்தவர்களில், இராணுவவீரருக்குப் பொறுப்பாயிருந்த அதிகாரியையும், ஐந்து அரச ஆலோசகர்களையும் கொண்டுபோனான். அவன் இராணுவத்திற்கு ஆள் சேர்ப்பதற்குப் பொறுப்பாயிருந்த பிரதான அதிகாரியாயிருந்த செயலாளரையும், பட்டணத்தில் அவனோடிருந்த அறுபதுபேரையும் கொண்டுபோனான். எஸ்த 1:14 தளபதியான நேபுசராதான், இவர்களை ரிப்லாவிலிருந்த பாபிலோன் அரசனிடம் கொண்டுபோனான். 2இராஜா 23:33எரே 52:26-27புலம் 4:16 அங்கே ஆமாத் நாட்டிலிருந்த ரிப்லாவிலே பாபிலோனிய அரசன் அவர்களைக் கொலைசெய்தான். 2இராஜா 23:27உபா 28:642இராஜா 17:20ஆமோ 5:27உபா 28:36உபா 4:26எசேக் 12:25-28எசேக் 24:14
இவ்விதமாக யூதா தன் சொந்த நாட்டிலிருந்து சிறைப்பிடிக்கப்பட்டுப் போனாள்.
யூதாவில் மீதியாக வைத்த மக்களின் மேலாக சாப்பானின் மகனாகிய அகீக்காமின் மகன் கெதலியாவை பாபிலோன் அரசனான நேபுகாத்நேச்சார் நியமித்தான். எரே 39:142 நாளாக 34:202இராஜா 22:12எரே 26:24எரே 41:22இராஜா 25:25எரே 40:5-12 யூதாவின் இராணுவ அதிகாரிகளும், அவர்களைச் சேர்ந்த எல்லா மனிதரும், பாபிலோன் அரசன், கெதலியாவை நாட்டுக்கு ஆளுநனாக நியமித்தான் என்று கேள்விப்பட்டபோது, மிஸ்பாவில் இருக்கும் கெதலியாவிடம் சென்றார்கள். இவ்வாறு சென்றவர்கள் நெத்தனியாவின் மகன் இஸ்மயேலும், கரேயாவின் மகன் யோகனானும், நெத்தோபாத்தியனான தன்கூமேத்தின் மகன் செராயாவும், மாகாத்தியரின் மகன் யசனியாவும், அவர்களுடைய மனிதரும் ஆவர். எரே 40:7-9எரே 40:11-12யோசு 18:26 அப்பொழுது கெதலியா அவர்களுக்கும், அவர்களுடைய மனிதர்களுக்கும் நம்பிக்கையூட்டும்படி ஒரு ஆணையைச் செய்தான். அவன், “கல்தேயரின் அதிகாரிகளுக்கு நீங்கள் பயப்படவேண்டாம். நீங்கள் நாட்டில் வாழ்ந்து, பாபிலோன் அரசனுக்குப் பணிசெய்யுங்கள். அப்பொழுது உங்களுக்கு எல்லாம் நன்மையாக இருக்கும்” என்றான். 2 சாமு 14:112 சாமு 19:23எசேக் 33:24-29எரே 40:9-10எரே 43:6
ஏழாம் மாதத்தில் எலிசாமாவின் பேரனும் நெத்தனியாவின் மகனும், அரச குலத்தைச் சேர்ந்தவனுமான இஸ்மயேல், பத்து மனிதரோடு வந்து கெதலியாவையும், யூதாவின் மனிதரையும், மிஸ்பாவில் அவனோடிருந்த கல்தேயரையும் கொன்றான். சகரி 7:5சகரி 8:19எரே 40:152இராஜா 11:1 இதனால் சிறியோரிலிருந்து பெரியோர்வரை எல்லா மக்களும் இராணுவ அதிகாரிகளுடன் சேர்ந்து கல்தேயருக்குப் பயந்து எகிப்திற்கு ஓடிப்போனார்கள். எரே 43:4-7எரே 41:16-18எரே 42:14-22
யோயாக்கீனை விடுதலை செய்தல்
ஏவில் மெரொதாக் என்பவன் பாபிலோனுக்கு அரசனானபோது யூதாவின் அரசனான யோயாக்கீனைச் சிறையிலிருந்து விடுதலை செய்தான். இது யூதாவின் அரசனான யோயாக்கீன் சிறைப்பட்டுப்போன முப்பத்தேழாம் வருடம் பன்னிரண்டாம் மாதம் இருபத்தேழாம் நாளில் நடந்தது. ஆதி 40:20எரே 52:31-342இராஜா 24:12ஆதி 40:13நீதி 21:12இராஜா 24:15எரே 24:5-6 அவன் யோயாக்கீனுடன் தயவாய்ப் பேசி தன்னோடு பாபிலோனில் இருந்த மற்ற அரசர்களைக் காட்டிலும் உயர்ந்த பதவியை அவனுக்குக் கொடுத்தான். தானி 2:37எரே 27:6-11தானி 5:18-19 அப்பொழுது யோயாக்கீன் தன் சிறைச்சாலை உடைகளை மாற்றி, மீதியான தன் வாழ்நாளெல்லாம் அரசனுடைய பந்தியிலே தினமும் சாப்பிட்டான். 2 சாமு 9:7ஏசா 61:3ஆதி 41:422இராஜா 24:12எஸ்த 4:4எஸ்த 8:15லூக் 15:22சகரி 3:4 யோயாக்கீன் உயிர்வாழ்ந்த நாளெல்லாம், அரசனால் அவனுக்கு நாள்தோறும் உதவிப்பணம் கொடுக்கப்பட்டு வந்தது. லூக் 11:3மத் 6:11நெகே 11:23தானி 1:5நெகே 12:47அப் 6:1ஆதி 48:15-16