கொலோசெயர் 3

Colossians 3

பரிசுத்த வாழ்வுக்கு நிபந்தனைகள்

நீங்கள் கிறிஸ்துவுடனேகூட உயிருடன் எழுப்பப்பட்டிருக்கிறபடியால், பரலோக காரியங்களிலேயே நாட்டம் உடையவர்களாயிருங்கள். அங்கே கிறிஸ்து, இறைவனுடைய வலதுபக்கத்தில் உட்கார்ந்திருக்கிறார். ரோம 8:6மத் 6:332 கொரி 4:18கொலோ 3:2மத் 6:20சங் 73:25-26எபி 12:2கலா 2:19-20 பூமிக்குரிய காரியங்களிலல்ல, பரலோக காரியங்களில் உங்கள் மனதைச் செலுத்துங்கள். 1 யோவா 2:15-171 நாளாக 22:19கொலோ 3:1மத் 16:23ரோம 8:4-6மத் 6:19சங் 119:36-37கொலோ 3:5 ஏனெனில் நீங்கள் இறந்துவிட்டீர்கள், இப்பொழுதோ உங்கள் வாழ்க்கை கிறிஸ்துவுடன் இறைவனில் மறைந்திருக்கிறது. கலா 2:20ரோம 6:2கொலோ 2:20யோவா 5:24ரோம 8:2ரோம 5:101 பேது 1:3-52 கொரி 5:14 உங்கள் வாழ்வாய் இருக்கிற கிறிஸ்து தோன்றும்போது, நீங்களும் அவருடனேகூட மகிமையில் தோன்றுவீர்கள். 1 யோவா 3:2யோவா 11:25கலா 2:201 பேது 1:13பிலி 3:21யோவா 17:241 பேது 5:4வெளி 22:14

ஆகவே பூமிக்குரிய இயல்புக்குச் சொந்தமானவைகளான முறைகேடான பாலுறவுகள், அசுத்தமான பழக்கவழக்கங்கள், காமவேட்கைகள், தீய ஆசைகள், விக்கிரக வழிபாடுகளாகிய பேராசை ஆகிய எல்லாவற்றையும் சாகடித்துவிடுங்கள். ரோம 8:13கலா 5:19-21கலா 5:241 பேது 2:11ரோம 6:131 கொரி 6:9-10எபே 5:3-61 கொரி 6:18 இவற்றின் காரணமாகவே, இறைவனுடைய கோபம் வருகிறது. எபே 5:6ரோம 1:181 பேது 1:14எசேக் 16:45-46ஏசா 57:4வெளி 22:152 பேது 2:14எபே 2:2-3 முன்பு நீங்கள் வாழ்ந்த வாழ்வில், இவ்விதமான வழிகளில் நடப்பதே உங்கள் வழக்கமாயிருந்தது. எபே 2:21 பேது 4:3-4ரோம 6:19-20தீத் 3:31 கொரி 6:11கொலோ 2:13ரோம 7:5 ஆனால் இப்பொழுதோ, நீங்கள் இப்படிப்பட்ட காரியங்களை உங்களைவிட்டு அகற்றிவிடவேண்டும்: கோபம், சினம், கேடுசெய்யும் எண்ணம், அவதூறு பேசுதல் ஆகியவற்றுடன், உங்கள் உதடுகளிலிருந்து தீய வார்த்தைகளையும் விலக்கிவிட வேண்டும். எபே 4:29எபே 4:22யாக் 1:20-21எபே 5:4கொலோ 3:5எபே 4:26எபே 4:31-32எபி 12:1 நீங்கள் உங்கள் பழைய மனித சுபாவத்தையும், அதன் செய்கைகளையும் உங்களைவிட்டு விலக்கியிருக்கிறபடியால், ஒருவருக்கொருவர் பொய் சொல்லாதிருங்கள். எபே 4:22எபே 4:25லேவி 19:11ரோம 6:6யோவா 8:44வெளி 22:15செப்ப 3:13வெளி 21:27 நீங்கள் புதிதாக்கப்பட்ட மனிதனுக்குரிய சுபாவத்தை தரித்துக்கொண்டவர்களாய் இருக்கிறீர்கள். அந்த சுபாவம் படைத்தவருடைய சாயலில், அவரைப்பற்றிய அறிவில் புதிதாக்கப்படுகிறது. எபே 4:23-24ரோம 12:2கொலோ 3:12எபே 2:102 கொரி 5:17சங் 51:10எசேக் 11:19கொலோ 3:14 இந்தப் புதிதாக்கப்பட்ட சுபாவத்தைப் பொறுத்தவரையில், கிரேக்கன், யூதன் என்று வித்தியாசம் இல்லை. விருத்தசேதனம் பெற்றவன், விருத்தசேதனம் பெறாதவன் என்றோ; அந்நியன், பண்பாடற்றவன் என்றோ; அடிமை, சுதந்திரக் குடிமகன் என்றோ வித்தியாசம் இல்லை. கிறிஸ்துவே எல்லாமாய் இருக்கிறார். அவர் இவர்கள் எல்லோரிலும் இருக்கிறார். கலா 3:28-291 கொரி 12:13ரோம 10:12எபே 3:6எபே 1:23ரோம 9:24-26ரோம 3:29கலா 5:6

ஆகவே இறைவனால் தெரிந்துகொள்ளப்பட்ட மக்களும், பரிசுத்தமுள்ளவர்களும், அன்பு காட்டப்பட்டவர்களுமாய் இருக்கிற நீங்கள் இரக்கம், தயவு, தாழ்மை, சாந்தம், பொறுமை ஆகிய குணங்களை அணிந்துகொள்ளுங்கள். எபே 4:32எபே 4:21 யோவா 4:192 பேது 1:5-8கலா 5:22-23கொலோ 3:102 பேது 1:10யாக் 3:17-18 ஒருவரையொருவர் சகித்து நடவுங்கள். ஒருவருக்கு விரோதமாய் உங்களுக்கு ஒரு மனத்தாங்கல் இருக்குமேயானால், அதை அவர்களுக்கு மன்னியுங்கள். கர்த்தர் உங்களுக்கு மன்னித்ததுபோல, நீங்களும் மன்னியுங்கள். எபே 4:32மாற் 11:25யாக் 2:13எபே 4:2மத் 6:14-15ரோம 15:1-2லூக் 6:35-37லூக் 17:3-4 இந்த நற்குணங்கள் எல்லாவற்றுக்கும் மேலாக, அன்பை உடுத்திக்கொள்ளுங்கள். அதுவே அவை எல்லாவற்றையும் ஒரு பூரண ஒருமைப்பாட்டில் கட்டி வைத்துக்கொள்கிறது. 1 பேது 4:8எபே 5:21 கொரி 13:1-13கொலோ 2:2யோவா 13:34ரோம 13:8எபே 4:31 யோவா 4:21

கிறிஸ்துவின் சமாதானம் உங்கள் இருதயங்களை ஆளுகை செய்யட்டும். ஏனெனில் ஒரே உடலின் பல அங்கங்களாக இந்தச் சமாதானத்துக்கே நீங்கள் அழைக்கப்பட்டுள்ளீர்கள். நன்றியுள்ளவர்களாயும் இருங்கள். யோவா 14:27பிலி 4:6-7ஏசா 26:3ரோம 15:13சங் 29:111 தெச 5:18கொலோ 3:17ரோம 5:1 கிறிஸ்துவின் வார்த்தை உங்களுக்குள் எல்லா ஞானத்தோடும் நிறைவாய் குடியிருக்கட்டும். சங்கீதங்களினாலும், கீர்த்தனைகளினாலும், ஆவிக்குரிய பாடல்களினாலும் ஒருவருக்கொருவர் போதித்து, அறிவுரை கூறி, உங்கள் இருதயங்களில் இறைவனுக்கு நன்றியுடன் பாடி, சங் 119:11எபே 5:19யோவா 15:7ரோம 10:17எரே 15:161 யோவா 2:24எபி 4:12-13உபா 6:6-9 சொல்லின் மூலமோ, செயலின் மூலமோ நீங்கள் எதைச் செய்தாலும், கர்த்தராகிய இயேசுவின் பெயரிலேயே எல்லாவற்றையும் செய்யுங்கள். அவர்மூலம் பிதாவாகிய இறைவனுக்கு நன்றி செலுத்தியே அவைகளைச் செய்யுங்கள். 1 கொரி 10:31கொலோ 3:23நீதி 3:6எபே 5:201 தெச 5:181 பேது 4:111 பேது 2:5எபி 13:15

குடும்பத்திற்கான ஒழுங்குவிதிகள்

மனைவிகளே, உங்கள் கணவருக்குப் பணிந்து நடவுங்கள். இதுவே கர்த்தரில் உங்களுக்கு ஏற்ற நடத்தையாயிருக்கிறது. எபே 5:22தீத் 2:4-51 கொரி 11:31 பேது 3:1-6ஆதி 3:161 தீமோ 2:12எஸ்த 1:201 கொரி 14:34

கணவர்களே, உங்கள் மனைவியிடம் அன்பாய் இருங்கள். அவர்களுடன் கடுமையாய் நடந்துகொள்ளாதிருங்கள். 1 பேது 3:7ஆதி 2:23-24எபே 5:25கொலோ 3:21எபே 5:28-29எபே 5:33எபே 4:31நீதி 5:18-19

பிள்ளைகளே, எல்லாவற்றிலும் உங்கள் பெற்றோருக்குக் கீழ்ப்படியுங்கள். ஏனெனில், இது கர்த்தரைப் பிரியப்படுத்துகிறது. யாத் 20:12எபே 6:1-3நீதி 6:20மத் 15:4-6மத் 19:19உபா 27:16லேவி 19:3நீதி 30:17

தந்தையரே, உங்கள் பிள்ளைகளுக்கு மனக்கசப்பை ஏற்படுத்தாதீர்கள். அப்படிச் செய்தால், அவர்கள் சோர்ந்துபோவார்கள். நீதி 4:1-4எபே 6:4சங் 103:13நீதி 3:121 தெச 2:11எபி 12:5-11

அடிமைகளே, உங்கள் பூமிக்குரிய எஜமான்களுக்கு எல்லாவற்றிலும் கீழ்ப்படிந்திருங்கள்; அவர்கள் உங்களைக் கவனிக்கும்போது மட்டும், அவர்களுடைய நன்மதிப்பைப் பெறுவதற்காக அல்ல, கர்த்தரில் பயபக்தியுள்ளவர்களாய் உண்மையான இருதயத்தோடு அவர்களுக்குக் கீழ்ப்படியுங்கள். எபே 6:5-71 தீமோ 6:1-2கலா 1:101 பேது 2:18-19தீத் 2:9-101 தெச 2:4கொலோ 3:20பிரச 5:7 நீங்கள் எதைச் செய்தாலும், அதை மனிதருக்குச் செய்வதாக அல்ல, கர்த்தருக்குச் செய்வதாக முழு இருதயத்தோடும் செய்யுங்கள். கொலோ 3:17எபே 6:6-7ரோம 14:82 நாளாக 31:21பிரச 9:101 பேது 2:151 பேது 2:13சங் 119:10 உங்களுக்கான வெகுமதியாக உரிமைச்சொத்தை கர்த்தரிடமிருந்து பெற்றுக்கொள்வீர்கள் என்று அறிவீர்களே. கிறிஸ்துவாகிய கர்த்தருக்கே நீங்கள் ஊழியம் செய்கிறீர்கள். எபே 6:8அப் 20:32கலா 1:101 கொரி 7:22லூக் 14:14எபி 10:35எபே 6:6எபி 11:6 தவறுசெய்கிற யாரும் தான் செய்கிற தவறுக்கான தண்டனையைப் பெற்றுக்கொள்வான். பாரபட்சம் காட்டப்படவே மாட்டாது. அப் 10:34ரோம 2:112 கொரி 5:10உபா 10:171 தெச 4:6எபே 6:91 பேது 1:172 நாளாக 19:7