பஸ்கா பண்டிகை
ஆபீப் மாதத்தில் 1, உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்கு பஸ்கா பண்டிகையைக் கொண்டாடுங்கள். ஏனெனில் ஆபீப் மாதத்தில் ஒரு இரவில் அவர் உங்களை எகிப்திலிருந்து வெளியே கொண்டுவந்தார். யாத் 13:4யாத் 34:18யாத் 12:2-20எண் 28:16லேவி 23:5யாத் 23:15எண் 9:2-5யாத் 12:29-42 நீங்கள் உங்கள் ஆட்டு மந்தையிலிருந்தோ, மாட்டு மந்தையிலிருந்தோ ஒரு மிருகத்தை எடுத்து, அதை உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்குப் பஸ்காவாகப் பலியிடுங்கள். அதை யெகோவா தமது பெயர் விளங்குவதற்காக தாம் தெரிந்துகொள்ளும் இடத்திலே பலியிடுங்கள். உபா 12:5உபா 12:261 கொரி 5:7லூக் 22:15லூக் 22:8மத் 26:17மாற் 14:12எண் 28:16-19 அதை புளிப்பூட்டப்பட்ட அப்பத்தோடு சாப்பிடவேண்டாம், ஏழுநாட்களுக்கு உபத்திரவத்தின் அப்பமான புளிப்பில்லாத அப்பத்தைச் சாப்பிடுங்கள், நீங்கள் எகிப்திலிருந்து அவசரமாய் வெளியேறினீர்களே. எனவே உங்கள் வாழ்நாளெல்லாம் நீங்கள் எகிப்திலிருந்து வெளியேறிய அந்த வேளையை நினைவுகூருங்கள். யாத் 12:39யாத் 12:19-20யாத் 34:18யாத் 12:14-15யாத் 12:8யாத் 13:3-9லூக் 22:19எண் 9:11 அந்த ஏழுநாளளவும் உங்கள் நாடு முழுவதிலும் புளிப்பூட்டும் பதார்த்தம் உங்களுக்குள் இருக்கக்கூடாது. முதல்நாள் மாலையில் பலியிட்ட இறைச்சியில் எதையாகிலும் விடியும்மட்டும் வைத்திருக்கவும்கூடாது. யாத் 12:10யாத் 34:25யாத் 13:7யாத் 12:15யாத் 12:8
உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களுக்குக் கொடுக்கும் எந்த ஒரு பட்டணத்திலாவது பஸ்காவை பலியிடக்கூடாது. உபா 12:5-6உபா 16:2 உங்கள் இறைவனாகிய யெகோவா தமது பெயர் விளங்கும்படி தெரிந்துகொண்ட இடத்திலேயே அதைப் பலியிடவேண்டும். நீங்கள் எகிப்திலிருந்து வெளியேறிய அந்த நாளில் சூரியன் மறையும் நேரமான அந்த மாலைவேளையில் பஸ்காவை அங்கே பலியிடவேண்டும். 1 பேது 1:19-20உபா 12:5யாத் 12:6-9எபி 9:26மத் 26:20எபி 1:2-3எண் 9:11எண் 9:3 உங்கள் இறைவனாகிய யெகோவா தெரிந்துகொள்ளும் இடத்தில் பலியை நெருப்பில் வாட்டிச் சாப்பிடுங்கள். காலையில் உங்கள் கூடாரங்களுக்குத் திரும்பிப்போங்கள். 2 நாளாக 35:132இராஜா 23:23உபா 16:2உபா 16:6யாத் 12:8-9யோவா 11:55யோவா 2:13யோவா 2:23 தொடர்ந்து ஆறு நாட்களுக்கு நீங்கள் புளிப்பில்லாத அப்பத்தைச் சாப்பிடுங்கள். ஏழாம்நாளில் உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்கு பரிசுத்த சபையைக் கூட்டுங்கள். அந்த நாளில் எந்தவொரு வேலையையும் செய்யவேண்டாம். யாத் 12:15-16யாத் 13:6-8லேவி 23:36லேவி 23:6-8எண் 28:17-192 நாளாக 7:9யோவே 1:14நெகே 8:18
வாரங்களின் பண்டிகை
அறுவடைக்கு ஆயத்தமான கதிரில் அரிவாளை வைக்கத்தொடங்கும் நாள் முதல் ஏழு வாரங்களை எண்ணுங்கள். யாத் 23:16யாத் 34:22அப் 2:12 நாளாக 8:13உபா 16:10உபா 16:16லேவி 23:15-16எண் 28:26-30 உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களுக்குக் கொடுக்கும் ஆசீர்வாதத்திற்குத் தக்கபடியே நீங்கள் சுயவிருப்பக் காணிக்கையைச் செலுத்தி, உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்கு வாரங்களின் பண்டிகையைக் கொண்டாடுங்கள். 1 கொரி 16:22 கொரி 8:102 கொரி 9:5-11உபா 16:16-17ஆகா 2:15-19யோவே 2:14லேவி 12:8லேவி 25:26 அவருடைய பெயருக்கான உறைவிடமாக அவர் தெரிந்துகொள்ளும் இடத்தில் உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்கு முன்பாகக் களிகூருங்கள். நீங்களும், உங்கள் மகன்களும், மகள்களும், வேலைக்காரரும், வேலைக்காரிகளும், உங்கள் பட்டணங்களிலுள்ள லேவியரும், உங்கள் மத்தியில் வாழும் அந்நியரும், தந்தையற்றவர்களும், விதவைகளுமான எல்லோரும் களிகூருங்கள். உபா 12:12உபா 12:7உபா 12:182 கொரி 1:24உபா 16:14ஆப 3:18ஏசா 64:5ஏசா 66:10-14 நீங்கள் எகிப்தில் அடிமையாய் இருந்ததை நினைவுகூர்ந்து, இந்த விதிமுறைகளைக் கவனமாய்ப் பின்பற்றுங்கள். உபா 15:15உபா 16:15எபே 2:1-3எபே 2:11புலம் 3:19-20ரோம 6:17-18
கூடாரங்களின் பண்டிகை
நீங்கள் உங்கள் சூடடிக்கும் களத்திலிருந்தும், திராட்சை ஆலையிலிருந்தும் அவற்றின் பலனைச் சேர்த்தபின், ஏழுநாட்களுக்குக் கூடாரப்பண்டிகையைக் கொண்டாடுங்கள். யாத் 23:16யோவா 7:22 நாளாக 5:3லேவி 23:34-36யாத் 34:22எண் 29:12-40சகரி 14:16-182 நாளாக 7:8-10 நீங்கள் இந்த பண்டிகையில் மகிழ்ச்சியாயிருங்கள். நீங்களும், உங்கள் மகன்களும், மகள்களும் வேலைக்காரரும், வேலைக்காரிகளும், உங்கள் பட்டணங்களில் வாழ்கின்ற லேவியர், அந்நியர், தந்தையற்றவர்கள், விதவைகள் ஆகிய எல்லோருமே மகிழ்ந்திருங்கள். நெகே 8:9-12உபா 16:111 தெச 5:16உபா 26:11பிரச 9:7ஏசா 12:1-6ஏசா 25:6-8ஏசா 30:29 யெகோவா தெரிந்துகொள்ளும் இடத்தில் உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்கு ஏழு நாட்கள் இந்தப் பண்டிகையை கொண்டாடுங்கள். உங்கள் இறைவனாகிய யெகோவா உங்கள் எல்லா அறுவடையிலும், உங்கள் கையின் வேலையிலும் உங்களை ஆசீர்வதிப்பார். உங்கள் மகிழ்ச்சியும் நிறைவாயிருக்கும். உபா 30:16லேவி 23:36-42உபா 16:10உபா 28:8-12உபா 7:13எண் 29:12-38
உங்கள் எல்லா ஆண்களும், உங்கள் இறைவனாகிய யெகோவா தெரிந்துகொள்ளும் இடத்தில் வருடத்திற்கு மூன்றுமுறை யெகோவாவுக்கு முன்பாக வரவேண்டும். புளிப்பில்லாத அப்பம் சாப்பிடும் பண்டிகை, வாரங்களின் பண்டிகை, கூடாரப்பண்டிகை ஆகிய இந்த மூன்று பண்டிகைகளுக்கும் இவ்வாறு வரவேண்டும். யெகோவாவுக்கு முன்பாக ஒருவரும் வெறுங்கையுடன் வரக்கூடாது. நீதி 3:9-10சங் 96:8ஆகா 1:9யாத் 23:14-17மத் 2:11யாத் 34:201 நாளாக 29:14-171 நாளாக 29:3-9 உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களை ஆசீர்வதித்திருக்கும் விதத்திற்கேற்றபடி ஒவ்வொருவனும் தனது கொடையைக் கொண்டுவர வேண்டும். 2 கொரி 9:6-72 கொரி 8:12உபா 16:10மாற் 12:41-44லேவி 27:8எஸ்றா 2:63
நீதிபதிகள்
உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களுக்குக் கொடுக்கும் ஒவ்வொரு பட்டணங்களிலும் உங்களுடைய கோத்திரங்கள் ஒவ்வொன்றுக்குமென நீதிபதிகளையும், அதிகாரிகளையும் நியமியுங்கள். அவர்கள் மக்களுக்கு நியாயமாகத் தீர்ப்புச்செய்யவேண்டும். 1 நாளாக 23:41 நாளாக 26:292 நாளாக 19:5-11உபா 1:15-17உபா 17:12உபா 17:9உபா 19:17-18உபா 21:2 நீதியைப் புரட்டவேண்டாம். பட்சபாதம் காட்டவேண்டாம். இலஞ்சம் வாங்கவேண்டாம். இலஞ்சம் ஞானமுள்ளவர்களின் கண்களைக் குருடாக்கி, நீதியானவர்களின் வார்த்தைகளைத் தாறுமாறாக்குகிறது. லேவி 19:15யாத் 23:2நீதி 17:23உபா 10:17உபா 24:17ஆப 1:4உபா 27:19பிரச 7:7 நீதியைப் பின்பற்றுங்கள்; நீதியை மட்டுமே பின்பற்றுங்கள். அப்பொழுது நீங்கள் வாழ்ந்து உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களுக்குக் கொடுக்கிற அந்த நாட்டை உரிமையாக்கிக்கொள்வீர்கள். பிலி 4:8எசேக் 18:9எசேக் 18:5மீகா 6:8உபா 25:13-16உபா 4:1ரோம 10:5
வேறு தெய்வங்களின் வழிபாடு
உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்கு நீங்கள் கட்டும் பலிபீடத்திற்கு அருகே மரத்தாலான அசேரா விக்கிரகக் கம்பத்தை நாட்டவேண்டாம், 2 நாளாக 33:32இராஜா 17:162இராஜா 21:3யாத் 34:131 இராஜா 14:151 இராஜா 16:33நியாயாதி 3:7உபா 7:5 அங்கு புனிதக் கல் எதையும் நிறுத்தவேண்டாம், இவற்றை உங்கள் இறைவனாகிய யெகோவா வெறுக்கிறார். லேவி 26:1யாத் 20:4உபா 12:31எரே 44:4வெளி 2:15வெளி 2:6சகரி 8:17