உபாகமம் 27

Deuteronomy 27

ஏபால் மலையின் பலிபீடம்

மோசேயும் இஸ்ரயேலரின் சபைத்தலைவர்களும் மக்களுக்குக் கட்டளையிட்டதாவது: “இன்று நாங்கள் உங்களுக்குக் கொடுக்கும் கட்டளைகளையெல்லாம் கைக்கொள்ளுங்கள். யோவா 15:14யாக் 2:10லூக் 11:281 தெச 4:1-2உபா 11:32உபா 26:16உபா 4:1-3 நீங்கள் யோர்தானைக் கடந்து, உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களுக்குக் கொடுக்கிற நாட்டிற்குள் போகும்போது, சில பெரிய கற்களை நாட்டி அவற்றிற்குச் சாந்து பூசுங்கள். எசேக் 11:19எசேக் 36:26யோசு 4:1யோசு 8:31உபா 11:31உபா 26:1உபா 27:3உபா 6:1 நீங்கள் யோர்தானைக் கடந்து உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களுக்குக் கொடுக்கும் நாட்டிற்குள், அதாவது உங்கள் முற்பிதாக்களின் இறைவனாகிய யெகோவா, உங்களுக்கு வாக்குக்கொடுத்த பாலும் தேனும் வழிந்தோடும் 1 நாட்டிற்குள் போகும்போது, இந்த சட்டத்தின் வார்த்தைகளை எல்லாம் அந்தக் கற்களின்மேல் எழுதுங்கள். யோசு 8:32உபா 26:92 கொரி 3:2-3எபி 10:16எரே 31:31-33யோசு 5:6எண் 13:27எண் 14:8 நீங்கள் யோர்தானைக் கடந்துபோகும்போது, இன்று உங்களுக்கு நான் கட்டளையிட்டபடியே ஏபால் மலையில் இந்தக் கற்களை நாட்டி, அவற்றுக்குச் சாந்து பூசுங்கள். உபா 11:29-30யோசு 8:30-33 அங்கே நீங்கள் உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்குக் கற்களினால் ஒரு பலிபீடத்தைக் கட்டுங்கள். இரும்பு ஆயுதங்கள் எதையும் அதன்மேல் பயன்படுத்த வேண்டாம். யாத் 20:25யாத் 24:41 இராஜா 18:31-32யோசு 8:30-31 வெட்டப்படாத கற்களால் உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்கு பலிபீடத்தைக் கட்டுங்கள். அதன்மேல் உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்குத் தகன காணிக்கைகளைச் செலுத்துங்கள். எபே 5:2லேவி 1:1-17 அங்கே சமாதான காணிக்கைகளையும் செலுத்தி, உங்கள் இறைவனாகிய யெகோவா முன்னிலையில், நீங்களும் சாப்பிட்டு மகிழ்ந்திருங்கள். அப் 10:36உபா 12:7ஆப 3:18எபி 13:20-21ஏசா 12:3லேவி 3:1-17சங் 100:1-22 நாளாக 30:23-27 நீங்கள் நாட்டிய இந்தக் கற்களின்மேல் இந்த சட்டங்களின் வார்த்தைகளையெல்லாம் மிகத் தெளிவாக எழுதவேண்டும்” என்றார்கள். ஆப 2:2யோவா 16:252 கொரி 3:12

ஏபால் மலையிலிருந்து சாபங்கள்

அதன்பின் மோசேயும், லேவிய ஆசாரியரும் எல்லா இஸ்ரயேலரிடமும் சொன்னதாவது, “இஸ்ரயேலர்கள், மவுனமாய் இருந்து செவிகொடுங்கள். இப்பொழுது நீங்கள் உங்கள் இறைவனாகிய யெகோவாவின் சொந்த மக்களாகிவிட்டீர்கள். 1 பேது 2:10-11உபா 26:16-181 கொரி 6:9-11எபே 5:8-9ரோம 6:17-18ரோம 6:22 ஆகவே உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்குக் கீழ்ப்படிந்து, இன்று நான் உங்களுக்குக் கொடுக்கிற அவருடைய கட்டளைகளையும், விதிமுறைகளையும் பின்பற்றுங்கள்” என்றார்கள். 1 பேது 1:14-16உபா 11:1உபா 11:7-8மத் 5:48மீகா 6:81 பேது 4:1-3உபா 10:12-13எபே 4:17-24

மேலும் அதே நாளில் மோசே மக்களுக்குக் கட்டளையிட்டதாவது:

நீங்கள் யோர்தான் நதியைக் கடந்தவுடன், சிமியோன், லேவி, யூதா, இசக்கார், யோசேப்பு, பென்யமீன் ஆகிய கோத்திரங்கள் மக்களுக்கு ஆசீர்வாதத்தைக் கூறும்படி, கெரிசீம் மலையில் நிற்கவேண்டும். நியாயாதி 9:7உபா 11:26-29ஆதி 29:33-35ஆதி 30:18ஆதி 30:24ஆதி 35:18யோசு 8:33-35 ரூபன், காத், ஆசேர், செபுலோன், தாண், நப்தலி ஆகிய கோத்திரங்கள் சாபங்களைக் கூறும்படி ஏபால் மலையில் நிற்கவேண்டும். உபா 27:4உபா 11:29ஆதி 29:32ஆதி 30:20ஆதி 30:6-13ஆதி 49:3-4யோசு 8:33

அப்பொழுது லேவியர், இஸ்ரயேல் மக்கள் யாவருக்கும் உரத்த குரலில் கூறவேண்டியதாவது: தானி 9:11உபா 33:9-10யோசு 8:33மல்கி 2:7-9நெகே 8:7-8

“யெகோவாவுக்கு அருவருப்பானதும், கைவினைக் கலைஞனின் வேலையுமான ஒரு உருவச்சிலையை செதுக்கி, ஒரு விக்கிரகத்தை வார்ப்பித்து, அதை மறைவிடத்தில் வைக்கிற மனிதன் சபிக்கப்பட்டவன்.” யாத் 34:17யாத் 20:4உபா 5:8லேவி 19:4லேவி 26:11 கொரி 14:16உபா 4:16-23யாத் 20:23

அப்பொழுது எல்லா மக்களும், “ஆமென்!” என்று சொல்லவேண்டும்.

“தகப்பனையோ, தாயையோ கனம் பண்ணாதவன் சபிக்கப்பட்டவன்.” லேவி 19:3யாத் 21:17உபா 21:18-21யாத் 20:12எசேக் 22:7லேவி 20:9மத் 15:4-6நீதி 30:11-17

அப்பொழுது எல்லா மக்களும், “ஆமென்!” என்று சொல்லவேண்டும்.

“அயலானின் எல்லைக்கல்லைத் தள்ளி நாட்டுகிறவன் சபிக்கப்பட்டவன்.” உபா 19:14நீதி 22:28நீதி 23:10-11

அப்பொழுது எல்லா மக்களும், “ஆமென்!” என்று சொல்லவேண்டும்.

“குருடனை வீதியில் தவறாக வழிநடத்துகிறவன் சபிக்கப்பட்டவன்.” லேவி 19:14மத் 15:14நீதி 28:10ஏசா 56:10யோபு 29:15வெளி 2:14

அப்பொழுது எல்லா மக்களும், “ஆமென்!” என்று சொல்லவேண்டும்.

“அந்நியனுக்கும், தந்தையற்றவனுக்கும், விதவைக்கும் நீதி வழங்காதிருக்கிறவன் சபிக்கப்பட்டவன்.” உபா 10:18உபா 24:17யாத் 22:21-24யாத் 23:2மல்கி 3:5நீதி 17:23சங் 82:2-4யாத் 23:8-9

அப்பொழுது எல்லா மக்களும், “ஆமென்!” என்று சொல்லவேண்டும்.

“தகப்பனின் மறுமனைவியுடன் உடலுறவுகொள்பவன் தன் தகப்பனை அவமதித்தபடியால் அவன் சபிக்கப்பட்டவன்.” உபா 22:30லேவி 18:81 கொரி 5:1லேவி 20:111 நாளாக 5:12 சாமு 16:22ஆமோ 2:7எசேக் 22:10

அப்பொழுது எல்லா மக்களும், “ஆமென்!” என்று சொல்லவேண்டும்.

“எந்த மிருகத்துடனும் பாலுறவுகொள்பவன் சபிக்கப்பட்டவன்.” லேவி 18:23யாத் 22:19லேவி 20:15

அப்பொழுது எல்லா மக்களும், “ஆமென்!” என்று சொல்லவேண்டும்.

“தனது தகப்பனுக்காவது, தாய்க்காவது பிறந்த தன் சகோதரியுடன் உறவுகொள்பவன் சபிக்கப்பட்டவன்.” லேவி 18:9லேவி 20:17எசேக் 22:112 சாமு 13:12 சாமு 13:8-14

அப்பொழுது எல்லா மக்களும், “ஆமென்!” என்று சொல்லவேண்டும்.

“தன் மனைவியின் தாயுடன் உறவுகொள்பவன் சபிக்கப்பட்டவன்.” லேவி 20:14லேவி 18:17

அப்பொழுது எல்லா மக்களும், “ஆமென்!” என்று சொல்லவேண்டும்.

“இரகசியமாக தன் அயலானைக் கொலைசெய்பவன் சபிக்கப்பட்டவன்.” எண் 35:31லேவி 24:172 சாமு 11:15-172 சாமு 12:9-122 சாமு 13:282 சாமு 20:9-102 சாமு 3:27உபா 19:11-12

அப்பொழுது எல்லா மக்களும், “ஆமென்!” என்று சொல்லவேண்டும்.

“குற்றமில்லாதவனைக் கொலைசெய்வதற்குக் கைக்கூலி வாங்குபவன் சபிக்கப்பட்டவன்.” உபா 10:17யாத் 23:7-8சங் 15:5உபா 16:19அப் 1:18எசேக் 22:12-13மத் 26:15மத் 27:3-4

அப்பொழுது எல்லா மக்களும், “ஆமென்!” என்று சொல்லவேண்டும்.

“இந்த சட்டங்களையெல்லாம் கைக்கொண்டு, அதன்படி நடக்காதவன் சபிக்கப்பட்டவன்.” கலா 3:10உபா 28:15-68ரோம 10:5எசேக் 18:24சங் 119:211 கொரி 16:22உபா 27:15எரே 11:3-5

அப்பொழுது எல்லா மக்களும், “ஆமென்!” என்று சொல்லவேண்டும்.