உபாகமம் 5

Deuteronomy 5

பத்துக் கட்டளைகள்

மோசே இஸ்ரயேலர் எல்லோரையும் அழைத்துச் சொன்னதாவது: உபா 4:1மத் 23:3உபா 29:10உபா 1:1உபா 29:2

இஸ்ரயேலரே கேளுங்கள், நான் இன்று உங்களுக்கு அறிவிக்கும் விதிமுறைகளையும் சட்டங்களையும் கேளுங்கள். அவற்றைக் கற்று, அவைகளைப் பின்பற்றும்படி கவனமாயிருங்கள். நமது இறைவனாகிய யெகோவா ஓரேபிலே, நம்முடன் ஒரு உடன்படிக்கை செய்தார். உபா 4:23யாத் 19:5-8யாத் 24:8எபி 8:6-13எபி 9:19-23 அவர் அந்த உடன்படிக்கையை யெகோவா நம்முடைய முற்பிதாக்களோடு மட்டும் செய்யவில்லை. இன்று உயிரோடு இருக்கும் நம் அனைவருடனும் அதைச் செய்தார். உபா 29:10-15கலா 3:17-21ஆதி 17:21ஆதி 17:7எபி 8:8-9எரே 32:38-40மத் 13:17சங் 105:8-10 யெகோவா மலையின்மேலே நெருப்பின் நடுவில் இருந்து உங்களுடன் முகமுகமாய்ப் பேசினார். யாத் 19:18-19உபா 34:10உபா 4:33உபா 4:36யாத் 19:9உபா 5:24-26யாத் 20:18-22யாத் 33:11 நீங்கள் நெருப்புக்குப் பயந்து மலைக்குமேல் ஏறாதிருந்தபடியால், நான் அவ்வேளையில் யெகோவாவினுடைய வார்த்தையை உங்களுக்கு அறிவிக்கும்படியாக யெகோவாவுக்கும், உங்களுக்கும் இடையில் நின்றேன். கலா 3:19யாத் 19:16யாத் 20:18-21எபி 12:18-24உபா 5:27யாத் 24:2-3ஆதி 18:22எபி 9:24

அவர் சொன்னதாவது:

“அடிமைத்தன நாடாகிய எகிப்திலிருந்து உன்னை வெளியே அழைத்துக்கொண்டுவந்த உன் இறைவனாகிய யெகோவா நானே. யாத் 20:2-17சங் 81:5-10உபா 4:4லேவி 26:1-2

“நீ என்னைத்தவிர வேறு தெய்வங்களை உனக்காக வைத்திருக்காதே. யாத் 20:3மத் 4:101 யோவா 5:21யோவா 5:23

நீ உனக்காக எந்தவொரு விக்கிரகத்தையும் செய்யாதே. மேலே வானத்திலும், கீழே பூமியிலும், கீழேயுள்ள தண்ணீரிலும் இருக்கிறவைகளின் உருவத்தில் எந்த விக்கிரகத்தையும் செய்யாதே. யாத் 20:4உபா 4:15-19 நீ அவற்றை வணங்கவோ வழிபடவோ வேண்டாம்; ஏனெனில், உன் இறைவனான யெகோவாவாகிய நான் எனக்குரிய வழிபாட்டைக் குறித்து, வைராக்கியமுடைய இறைவன். என்னை வெறுக்கிறவர்கள் மத்தியில் பெற்றோரின் பாவத்திற்காக மூன்றாம், நான்காம் தலைமுறை மட்டும் அவர்களுடைய பிள்ளைகளைத் தண்டிக்கிறவராயும் இருக்கிறேன். யாத் 20:4-6யாத் 34:7தானி 9:4-9எண் 14:18யாத் 34:14மத் 23:35-36எரே 32:18ரோம 11:28-29 ஆனால் என்னிடம் அன்பாயிருந்து, என் கட்டளைகளைக் கைக்கொள்கிறவர்களுக்கோ, ஆயிரம் தலைமுறைகளுக்கும் அன்பு காட்டுகிறவராயும் இருக்கிறேன். ரோம 8:281 யோவா 1:7எரே 32:18தானி 9:4உபா 6:5-6யோவா 15:14கலா 5:6யாக் 1:25

உன் இறைவனாகிய யெகோவாவின் பெயரைத் தவறான முறையில் பயன்படுத்த வேண்டாம். ஏனெனில், யெகோவா தமது பெயரைத் தவறான முறையில் பயன்படுத்தும் எவனையும் குற்றமற்றவனாகக் கருதமாட்டார். யாத் 20:7உபா 6:13லேவி 19:12யாக் 5:12மத் 5:33-34எரே 4:2சங் 139:20

உன் இறைவனாகிய யெகோவா உனக்குக் கட்டளையிட்டபடியே ஓய்வுநாளைப் பரிசுத்தமாய்க் கைக்கொள். யாத் 20:8-11ஏசா 58:13ஏசா 56:6 ஆறு நாட்களிலும் நீ உழைத்து, உன் வேலைகளையெல்லாம் செய்யலாம். எசேக் 20:12யாத் 23:12யாத் 35:2-3லூக் 13:14-16லூக் 23:56 ஏழாம்நாளோ உன் இறைவனாகிய யெகோவாவின் ஓய்வுநாள். அந்த நாளில் நீ எந்த வேலையையும் செய்யக்கூடாது. நீயோ, உன் மகனோ, உன் மகளோ, உன் வேலைக்காரனோ, வேலைக்காரியோ, உன் எருதோ, கழுதையோ, உன் மிருகங்களில் எதுவோ, உன் பட்டணங்களுக்குள் வாழும் பிறநாட்டினனோ எந்த வேலையையும் செய்யக்கூடாது. நீ ஓய்வெடுப்பதுபோலவே உன் வேலைக்காரனும், வேலைக்காரியும் ஓய்வெடுக்கவேண்டும். எபி 4:4ஆதி 2:2யாத் 16:29-30யாத் 23:12நெகே 13:21நெகே 5:5லேவி 25:44-46நெகே 13:15 நீ எகிப்திலே அடிமையாக இருந்தாய் என்றும், உன் இறைவனாகிய யெகோவா தமது வல்லமையான கையினாலும், நீட்டப்பட்ட கரத்தினாலும் அங்கிருந்து உன்னை மீட்டு, வெளியே கொண்டுவந்தார் என்றும் ஞாபகத்தில் வைத்துக்கொள். அதினாலேயே உன் இறைவனாகிய யெகோவா ஓய்வுநாளை நீ கைக்கொள்ளும்படி உனக்குக் கட்டளையிட்டிருக்கிறார். உபா 5:6உபா 15:15உபா 16:12உபா 24:18-22எபே 2:11-12உபா 4:34-37ஏசா 51:1-2ஏசா 63:9

உன் இறைவனாகிய யெகோவா கட்டளையிட்டிருக்கிறபடியே உன் தகப்பனையும், உன் தாயையும் கனம்பண்ணு, அப்பொழுது உன் இறைவனாகிய யெகோவா உனக்குக் கொடுக்கும் நாட்டிலே நீ நீடித்து வாழ்ந்து நலமாயிருப்பாய். யாத் 20:12எபே 6:1-3கொலோ 3:20உபா 27:16உபா 4:40மத் 15:4-6மத் 19:19மாற் 10:19

கொலைசெய்ய வேண்டாம். யாத் 20:13ரோம 13:9மத் 5:21-22ஆதி 9:6யாக் 2:11மத் 19:18

விபசாரம் செய்யவேண்டாம். யாத் 20:14லூக் 18:20லேவி 20:10மத் 5:27-28யாக் 2:10-11நீதி 6:32-33

களவு செய்யவேண்டாம். யாத் 20:15ரோம 13:9எபே 4:28

உன் அயலானுக்கு எதிராகப் பொய்ச்சாட்சி சொல்லாதே. யாத் 20:16யாத் 23:1நீதி 19:9நீதி 19:51 இராஜா 21:13உபா 19:16-21மல்கி 3:5நீதி 6:19

உன் அயலானுடைய மனைவியை அபகரிக்க ஆசைகொள்ளாதே. உன் அயலானுடைய வீட்டையோ, நிலத்தையோ வேலைக்காரனையோ, வேலைக்காரியையோ, அவனுடைய எருதையோ, கழுதையையோ, அவனுக்குச் சொந்தமான வேறு எதையுமோ அபகரிக்க ஆசைகொள்ளாதே.” யாத் 20:17ரோம 13:91 இராஜா 21:1-4லூக் 12:151 தீமோ 6:9-10மீகா 2:2ஆப 2:9எபி 13:5

மேகமும், காரிருளும் சூழ்ந்த அந்த மலையின்மேல், நெருப்பின் நடுவிலிருந்து உங்கள் முழு சபையாருக்கும் உரத்த குரலில் யெகோவா அறிவித்த கட்டளைகள் இவையே; அவற்றுடன் அவர் எதையும் கூட்டவில்லை. அவர் அக்கட்டளைகளை இரண்டு கற்பலகைகளில் எழுதி, அவற்றை என்னிடத்தில் கொடுத்தார். யாத் 24:12யாத் 31:18உபா 4:12-15உபா 4:36உபா 5:4யாத் 19:18-19

அந்த மலை நெருப்புப் பற்றி எரியும்பொழுது, இருளிலிருந்து உண்டான குரலை நீங்கள் கேட்டீர்கள். அப்போது உங்கள் கோத்திரங்களின் தலைவர்களும் உங்கள் சபைத்தலைவர்களும் என்னிடத்தில் வந்து சொன்னதாவது: யாத் 20:18-19எபி 12:18-21 “எங்கள் இறைவனாகிய யெகோவா தமது மகிமையையும் மகத்துவத்தையும் எங்களுக்குக் காட்டியிருக்கிறார். நாங்கள் நெருப்பிலிருந்து வருகிற அவர் குரலைக் கேட்டோம். இறைவன் ஒரு மனிதனோடு பேசிய பின்பும் அவன் உயிரோடிருப்பான் என்பதை இன்று கண்டோம். உபா 4:33யாத் 19:19யாத் 33:20ஆதி 32:30உபா 5:4-5நியாயாதி 13:22 ஆனாலும் இப்பொழுது ஏன் நாங்கள் சாகவேண்டும்? இந்தப் பெரிய நெருப்பு எங்களை எரித்து அழித்துவிடும். தொடர்ந்து நாங்கள் எங்கள் இறைவனாகிய யெகோவாவின் குரலைக் கேட்டால், நாங்கள் இறந்துபோவோம். உபா 18:162 கொரி 3:7-9உபா 33:2கலா 3:10கலா 3:21-22எபி 12:29 நாங்கள் இன்று கேட்டதுபோல உயிருள்ள இறைவனின் குரல் நெருப்பிலிருந்து பேசுவதைக் கேட்டும் உயிர்த்தப்பியிருக்கிற மனிதர் யார்? உபா 4:33ரோம 3:201 தெச 1:92 கொரி 6:16அப் 14:15தானி 6:26ஆதி 6:12ஏசா 40:6 நீரே கிட்டப்போய் நமது இறைவனாகிய யெகோவா சொல்வதெல்லாவற்றையும் கேளும். பின் எங்கள் இறைவனாகிய யெகோவா உமக்குச் சொல்லும் அனைத்தையும் எங்களுக்குச் சொல்லும். நாங்கள் அதற்குச் செவிகொடுத்துக் கீழ்ப்படிவோம்” என்றீர்கள். யாத் 20:19எபி 12:19

நீங்கள் என்னோடு பேசுவதை யெகோவா கேட்டார். அவர் என்னிடம், “இந்த மக்கள் உனக்குச் சொன்னவற்றை எல்லாம் நான் கேட்டேன். அவர்கள் சொன்னதெல்லாம் நல்லதே. உபா 18:17எண் 27:7எண் 36:5 அவர்களுடைய இருதயங்கள் எனக்குப் பயந்து, எப்பொழுதும் என் கட்டளைகளைக் கைக்கொண்டால் அவர்களும் அவர்களுடைய பிள்ளைகளும் என்றென்றைக்கும் நலமாய் இருப்பார்களே! ஏசா 48:18உபா 11:1எசேக் 33:31-32மத் 23:37லூக் 19:42உபா 4:40உபா 32:29-30உபா 5:16

“நீ போய் அவரவர் கூடாரங்களுக்குப் போகும்படி அவர்களுக்குச் சொல். ஆனால் நீயோ இங்கே என்னிடம் தங்கியிரு. அவர்கள் உரிமையாக்கிக்கொள்ளும்படி நான் அவர்களுக்குக் கொடுக்கிற நாட்டில், அவர்கள் பின்பற்றும்படி நீ அவர்களுக்குப் போதிக்கவேண்டிய எல்லா கட்டளைகளையும், விதிமுறைகளையும், சட்டங்களையும் நான் உனக்குக் கொடுப்பேன்” என்றார். கலா 3:19உபா 11:1உபா 12:1உபா 4:1உபா 4:45உபா 4:5உபா 5:1யாத் 24:12

ஆகவே நீங்கள் உங்கள் இறைவனாகிய யெகோவா கட்டளையிட்டிருக்கிறதை கைக்கொள்ளக் கவனமாயிருங்கள். அதைவிட்டு வலதுபக்கமோ, இடது பக்கமோ விலகிப்போக வேண்டாம். நீதி 4:27யோசு 23:6யோசு 1:7உபா 17:20உபா 28:14உபா 8:1உபா 11:32உபா 12:32 உங்கள் இறைவனாகிய யெகோவா கட்டளையிட்டிருக்கிற வழிகளிலெல்லாம் நடவுங்கள், அப்பொழுது நீங்கள் உரிமையாக்கிக்கொள்ளும் அந்த நாட்டில் வாழ்ந்து, செழித்து நீடித்திருப்பீர்கள். எரே 7:23உபா 4:40லூக் 1:6உபா 10:121 தீமோ 4:8ரோம 2:7சங் 119:6உபா 5:29