இறைவனுடைய சித்தத்தினாலே, கிறிஸ்து இயேசுவின் அப்போஸ்தலனாகிய பவுல், கொலோ 1:22 கொரி 1:11 கொரி 1:1-2ரோம 1:1கலா 1:1வெளி 2:10ரோம 1:71 கொரி 4:17
கிறிஸ்து இயேசுவில் விசுவாசம் உள்ளவர்களாய், எபேசு பட்டணத்தில் இருக்கின்ற பரிசுத்தவான்களுக்கு எழுதுகிறதாவது:
நம்முடைய பிதாவாகிய இறைவனாலும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக. ரோம 1:7கலா 1:3தீத் 1:42 கொரி 1:2
கிறிஸ்துவிற்குள் ஆவிக்குரிய ஆசீர்வாதங்கள்
இறைவனும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவுமாயிருக்கிறவருக்கு துதி உண்டாவதாக. அவர் பரலோகத்தின் உயர்வான இடங்களில் எல்லா ஆவிக்குரிய ஆசீர்வாதங்களினாலும் நம்மை கிறிஸ்துவில் ஆசீர்வதித்திருக்கிறார். 1 பேது 1:32 கொரி 1:3எபே 2:6வெளி 5:9-14ஆதி 22:18யோவா 10:29-30எபே 1:20எபே 6:12 நாம் இறைவனுடைய பார்வையிலே, பரிசுத்தமுள்ளவர்களாயும், குற்றமற்றவர்களாயும் இருக்கும்படி, உலகம் படைக்கப்படுவதற்கு முன்னதாகவே, அவர் நம்மை கிறிஸ்துவில் தெரிந்துகொண்டார். இறைவன் தம்முடைய அன்பின் நிமித்தமாக, 2 தீமோ 1:9ரோம 8:28-30எபே 2:10மத் 25:341 பேது 2:9யாக் 2:5யோவா 15:161 பேது 1:20 இயேசுகிறிஸ்துவின் மூலமாய் சொந்த பிள்ளைகளாக்கிக்கொள்ள நம்மை முன்குறித்தார். இதை அவர் தமது சித்தத்தின்படியும், விருப்பத்தின்படியும் செய்தார். ரோம 8:29-30எபே 1:11கலா 4:5-6யோவா 1:121 யோவா 3:1ரோம 8:14-17கலா 3:26ரோம 8:23 தாம் அன்பு செலுத்திய கிறிஸ்துவில், நமக்கு இலவசமாய் வழங்கப்பட்டுள்ள இந்த மகிமையான கிருபையின் நிமித்தம் இறைவனைப் புகழ்வோமாக. ரோம 3:22-26கொலோ 1:13எபே 1:12பிலி 4:19மத் 3:17எபே 1:7-81 பேது 2:9எபே 1:14 கிறிஸ்து சிந்திய இரத்தத்தின் மூலமாக நமக்கு மீட்பு உண்டு. அது இறைவனுடைய கிருபையின் நிறைவிலிருந்து கிடைக்கும் பாவங்களுக்கான மன்னிப்பு. 1 பேது 2:24ரோம 3:24கொலோ 1:141 யோவா 1:7-91 பேது 1:18-19எபி 9:22எபி 9:12-15மத் 26:28 அந்தக் கிருபையை, இறைவன் நமக்கு எல்லா ஞானத்துடனும், விளங்கும் ஆற்றலுடனும் சேர்த்து, நிறைவாய் கொடுத்திருக்கிறார். வெளி 5:12கொலோ 2:3எபே 3:10ரோம 5:151 கொரி 1:19-241 கொரி 2:7தானி 2:20-21எபே 1:11 இறைவன் தமது திட்டத்தின் இரகசியத்தை நமக்குத் தெரியப்படுத்தினார். அது அவருடைய விருப்பத்தின்படி, தாம் கிறிஸ்துவில் செய்யவிருந்த நோக்கமாயிருந்தது. கொலோ 1:26-28ரோம 16:25-27எபே 3:3-92 தீமோ 1:9எபே 1:11கலா 1:12ரோம 8:28எபே 3:11 பரலோகத்திலும் பூமியிலுமுள்ள எல்லாவற்றையும், கிறிஸ்துவின் தலைமையின்கீழ் ஒன்றுசேர்ப்பதே அந்த இரகசியம். காலங்கள் அவற்றின் நிறைவை அடையும்போது, இறைவன் அதை நிறைவேற்றுவார். கொலோ 1:20பிலி 2:9-10கலா 4:4தானி 2:44மாற் 1:15எபி 1:2ஏசா 2:2-4கொலோ 1:16
தம்முடைய திட்டத்தின் நோக்கத்திற்கேற்ப எல்லாவற்றையும் நிறைவேற்றுகிற, இறைவனுடைய தீர்மானத்தின்படியே நாமும் முன்குறிக்கப்பட்டு, கிறிஸ்துவில் தெரிந்துகொள்ளப்பட்டிருக்கிறோம். ரோம 8:281 பேது 1:4ஏசா 46:10-11எபே 1:14எபே 1:5எபே 3:11கொலோ 1:12கலா 3:18 இதனால் கிறிஸ்துவில் முதலாவதாக நம்பிக்கை கொண்டிருக்கிற நாம், அவருடைய மகிமைக்குப் புகழ்ச்சியாய் இருக்கும்படி, இறைவன் விரும்பினார். எபே 1:6எரே 17:5-7எபே 1:13-14எபே 3:21ஏசா 12:2ஏசா 42:1-4ஏசா 45:23எரே 23:6 அப்படியே நீங்களும் சத்திய வார்த்தையை, அதாவது உங்களுக்கு இரட்சிப்பைக் கொடுக்கிற நற்செய்தியைக் கேட்டபோது, கிறிஸ்துவுக்கு உட்பட்டவர்களானீர்கள். அதை நீங்கள் விசுவாசித்தபோது, வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட பரிசுத்த ஆவியானவராலே, அவரில் முத்திரை பொறிக்கப்பட்டு அடையாளமிடப்பட்டு இருக்கிறீர்கள். 2 கொரி 1:22எபே 4:302 தீமோ 2:191 தெச 2:13கலா 3:14ரோம 4:11ரோம 1:16தீத் 2:11 இறைவனுக்கு உரிமையானவர்களான நாம் மீட்கப்படும் வரைக்கும், நமக்குரிய உரிமைச்சொத்தை அடைவோம் என்பதற்கு இந்தப் பரிசுத்த ஆவியானவரே உத்தரவாதமாய் இருக்கிறார். அவருடைய மகிமையின் நிமித்தம் அவரைப் புகழ்வோமாக. 2 கொரி 1:222 கொரி 5:5எபே 4:30கலா 4:6ரோம 8:15-17ரோம 8:23எபே 1:121 பேது 2:9
நன்றி செலுத்துதலும் மன்றாடுதலும்
இக்காரணத்தினாலே, கர்த்தராகிய இயேசுவில் நீங்கள் வைத்திருந்திருக்கிற விசுவாசத்தைக்குறித்தும், பரிசுத்தவான்கள் எல்லோரிலும் உங்களுக்கிருக்கிற அன்பைக்குறித்தும் நான் கேள்விப்பட்டதிலிருந்து, பிலே 1:5கொலோ 1:3-42 தெச 1:3எபி 6:101 யோவா 3:171 யோவா 4:211 பேது 1:221 தெச 1:3 என் மன்றாட்டுகளில் உங்களை நினைவுகூர்ந்து, உங்களுக்காக இடைவிடாமல் இறைவனுக்கு நன்றி செலுத்துகிறேன். ரோம 1:8-9கொலோ 1:92 தெச 1:3கொலோ 1:31 சாமு 12:23பிலி 1:3-41 சாமு 7:81 தெச 1:2 நீங்கள் இறைவனை இன்னும் அதிகமாய் அறிந்துகொள்ளும்படி, அவர் உங்களை ஞானத்தையும் வெளிப்படுத்துதலையும் கொடுக்கும் பரிசுத்த ஆவியானவரால் நிரப்பும்படி மன்றாடுகிறேன். இதற்காக நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் இறைவனாயிருக்கிற மகிமையுள்ள பிதாவை நோக்கி மன்றாடுகிறேன். ஏசா 11:2யாக் 3:17-18கொலோ 1:9-10நீதி 2:52 பேது 1:3எபே 3:18-192 பேது 3:18யோவா 17:3 உங்கள் மனக்கண்கள் தெளிவடைய வேண்டும் என்றும் மன்றாடுகிறேன். அப்பொழுதே, இறைவன் உங்களை அழைத்ததன் எதிர்பார்ப்பை அறிந்து நீங்கள் பரிசுத்தவான்களில் அவருடைய மகிமையான உரிமைச்சொத்தின் நிறைவைக் குறித்தும் தெரிந்துகொள்வீர்கள். அப் 26:182 கொரி 4:6லூக் 24:451 யோவா 3:1-3எபே 1:7சங் 119:18எபே 3:16எபே 5:8 விசுவாசிக்கிறவர்களாகிய நமக்கு இறைவன் கொடுத்திருக்கிற அளவிடமுடியாத பெரிதான வல்லமையைக்குறித்தும் அறிந்துகொள்வீர்கள். இந்த வல்லமை நம்மிடம் செயலாற்றுகிற அவருடைய ஆற்றல் மிகுந்த சக்தியைப் போலவே இயங்குகிறது. பிலி 2:13கொலோ 2:12எபே 3:202 கொரி 4:7கொலோ 1:29எபே 6:10எபே 3:7எபே 2:10 இறைவன் இந்த வல்லமையையே, கிறிஸ்துவை மரணத்திலிருந்து உயிருடன் எழுப்பி, பரலோக அரசிலே தமது வலதுபக்கத்தில் உட்காரச்செய்து கிறிஸ்துவில் செயல்படுத்தினார். எபி 10:12மாற் 16:19சங் 110:1அப் 2:24-36எபி 1:3மத் 22:43-45மத் 28:18கொலோ 3:1 அதன்மூலம் அவர் எல்லா ஆளுகைக்கும், அதிகாரங்களுக்கும், வல்லமைகளுக்கும், அரசாட்சிகளுக்கும் மேலாக கிறிஸ்துவை உயர்த்தினார். இவ்வுலகில் மாத்திரமல்ல, இனிவரப்போகும் உலகிலும் பெயரிடப்பட்டிருக்கிற எல்லாப் பெயர்களுக்கும் மேலாகவும் அவரையே உயர்த்தினார். பிலி 2:9-11கொலோ 2:10கொலோ 1:15-161 பேது 3:22எபி 1:4தானி 7:27அப் 4:12கொலோ 2:15 இறைவன் எல்லாவற்றையும் கிறிஸ்துவினுடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தி, கொலோ 1:18கொலோ 2:101 கொரி 15:25-27சங் 8:6-8கொலோ 2:19எபி 2:81 கொரி 11:3எபே 4:15-16 எல்லாவற்றையும் எல்லாவற்றாலும் நிரப்புகிறவருடைய உடலாகிய திருச்சபைக்கு, அவரை எல்லாவற்றையும் ஆளுகை செய்கிற தலையாக நியமித்தார். கொலோ 1:18-19யோவா 1:16கொலோ 2:9-10எபே 4:12எபே 3:19எபே 4:101 கொரி 15:28கொலோ 1:24