எபேசியர் 3

Ephesians 3

யூதரல்லாதவர்களின் பிரசங்கியாளனான பவுல்

இதனாலேயே, யூதரல்லாதவர்களான உங்களுக்காக பவுலாகிய நான் கிறிஸ்து இயேசுவின் கைதியாய் இருக்கிறேன். கொலோ 1:242 தீமோ 1:8எபே 4:1எபே 6:20பிலி 1:13-16லூக் 21:12பிலே 1:9பிலி 1:7

இறைவன் உங்களுக்காக தமது கிருபையை நிர்வாகிக்கும் வேலையை எனக்குக் கொடுத்திருக்கிறார் என்பதை நீங்கள் நிச்சயமாய் கேள்விப்பட்டிருப்பீர்கள். 1 தீமோ 1:11கொலோ 1:25-272 தீமோ 1:11கலா 1:15-16ரோம 1:5எபே 4:71 கொரி 4:11 கொரி 9:17-22 இந்த இரகசியத்தை இறைவன், தனது வெளிப்படுத்துதலினால் எனக்குத் தெரிவித்திருக்கிறார். நான் இதைக்குறித்து ஏற்கெனவே சுருக்கமாய் எழுதியிருக்கிறேன். கலா 1:12ரோம 16:25எபே 1:9-11எபே 3:9கொலோ 1:26-27அப் 22:17எபே 3:41 கொரி 2:9-10 நான் உங்களுக்கு எழுதியதை நீங்கள் வாசிப்பீர்களானால், கிறிஸ்துவினுடைய இரகசியத்தைக்குறித்து எனக்குள் உண்டாயிருக்கிற நுண்ணறிவை, நீங்களும் விளங்கிக்கொள்ளக்கூடியதாய் இருக்கும். 2 கொரி 11:6கொலோ 4:31 கொரி 4:11 கொரி 2:6-7கொலோ 2:21 தீமோ 3:161 தீமோ 3:9எபே 1:9 இறைவன் இந்த இரகசியத்தை முன்னிருந்த தலைமுறையினருக்குச் சொல்லவில்லை. ஆனால் இப்பொழுதோ, இறைவனின் பரிசுத்த அப்போஸ்தலருக்கும், இறைவாக்கினர்களுக்கும் பரிசுத்த ஆவியானவராலே அது வெளிப்படுத்தப்பட்டுள்ளது. 1 பேது 1:10-122 பேது 3:2யூதா 1:17தீத் 1:1-3அப் 10:28எபே 2:20எபே 3:9லூக் 10:24 அந்த இரகசியம் என்னவென்றால், நற்செய்தியின் மூலமாய் யூதரல்லாத மக்களும், இஸ்ரயேலருடன் உரிமைப் பங்கு உடையவர்களாயும், அவர்களுடன் கிறிஸ்து இயேசுவின் ஒரே உடலின் அங்கத்தினர்களாயும், அவரது வாக்குத்தத்தத்தில் பங்குள்ளவர்களாயும் இருக்கிறார்கள் என்பதாகும். கலா 3:26-291 யோவா 1:31 யோவா 2:25கலா 3:14ரோம 8:15-171 கொரி 12:27கலா 4:5-7கொலோ 2:19

இறைவனுடைய வல்லமை எனக்குள் செயலாற்றுவதன் மூலம், எனக்குக் கொடுக்கப்பட்ட அவருடைய கிருபையின் கொடையினால், நான் இந்த நற்செய்தியின் ஊழியனானேன். எபே 1:192 கொரி 3:6எபே 3:2எபே 3:20எபி 13:21கொலோ 1:23-251 கொரி 3:5கொலோ 1:29 நான் இறைவனுடைய எல்லா மக்களையும்விட குறைவுள்ளவனாய் இருந்தும், கிறிஸ்துவின் அளவற்ற நிறைவை யூதரல்லாதவர்களுக்குப் பிரசங்கிக்க இந்தக் கிருபை எனக்குக் கொடுக்கப்பட்டது. 1 கொரி 15:9கொலோ 1:271 தீமோ 1:13எபே 2:7எபே 3:161 தீமோ 2:7கலா 1:16ரோம 11:33 அது செயல்படுவதை எல்லோருக்கும் தெளிவுபடுத்தவுமே, எனக்கு இந்த ஊழியம் கொடுக்கப்பட்டது. ஏனெனில், எல்லாவற்றையும் படைத்த இறைவனால் கடந்த காலங்களில் இந்த இரகசியம் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. கொலோ 1:26மத் 13:352 தீமோ 1:9கொலோ 3:3எபி 3:3-4மத் 28:19எபி 1:2-3ஏசா 44:24 இப்பொழுது இறைவனின் மகத்துவமான ஞானம் வானமண்டலங்களில் ஆளுகை செய்யும் தூதர்களுக்கும் அதிகாரங்களுக்கும் திருச்சபையின் மூலமாய் அறிவிக்கப்பட வேண்டும் என்பதே அவரின் நோக்கமாகும். 1 பேது 1:12எபே 6:121 கொரி 2:7ரோம 11:33எபே 1:21எபே 1:31 கொரி 1:241 பேது 3:22 இவ்விதமாக அவர் தமது நித்திய நோக்கத்தை நமது கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவில் நிறைவேற்றினார். 2 தீமோ 1:9எபே 1:11எபே 1:4ரோம 9:11ஏசா 46:10-11எபே 1:9ஏசா 14:24-27ரோம 8:28-30 நாம் அவரில் இருப்பதினாலும், அவரில் கொண்டிருக்கும் விசுவாசத்தினாலும், நாங்கள் சுதந்தரமாய் மனவுறுதியுடன் இறைவனுக்கு முன்பாக வரக்கூடியவர்களாய் இருக்கிறோம். எபே 2:18ரோம 5:2எபி 4:14-16எபி 10:19-22யோவா 14:62 கொரி 3:4 எனவே நான் துன்பம் அனுபவிப்பதால், நீங்கள் மனசோர்வடையக் கூடாது என்று உங்களைக் கேட்டுக்கொள்கிறேன். அவைகள் உங்களுக்கு மகிமையாக இருக்கிறது என்பதால் உற்சாகமடையுங்கள். 2 தெச 3:13கொலோ 1:242 கொரி 1:6ஏசா 40:30-31எபே 3:1பிலி 1:12-14உபா 20:3கலா 6:9

எபேசியருக்கான மன்றாட்டு

நான் அவருடைய ஞானத்தையும் திட்டத்தையும் நினைக்கும்போது, பிதாவுக்கு முன்பாக முழங்காற்படியிடுகிறேன். சங் 95:6எபே 1:16-19பிலி 2:10அப் 21:5எபே 1:3தானி 6:10எஸ்றா 9:5ஏசா 45:23 அவரிடமிருந்து பரலோகத்திலும் பூமியிலும் இருக்கும், அவருடைய முழுக் குடும்பமும் சிறப்பியல்பைப் பெறுகின்றன. எபே 1:10வெளி 5:8-14எபே 1:21எரே 33:16வெளி 2:17வெளி 3:12அப் 11:26கொலோ 1:20 நீங்கள் உங்கள் உள்ளத்தில் உறுதியுடையவர்களாய் இருப்பதற்கு, இறைவன் தமது மகிமையான நிறைவிலிருந்து, தமது ஆவியானவரினாலே வல்லமையினால் உங்களைப் பெலப்படுத்தவேண்டும் என்று நான் அவரிடம் மன்றாடுகிறேன். கொலோ 1:11பிலி 4:13ஏசா 40:29-31ஏசா 41:10சகரி 10:122 தீமோ 4:172 கொரி 4:16எபே 6:10 அதனால் விசுவாசத்தின் மூலமாக கிறிஸ்து உங்கள் இருதயங்களில் குடியிருப்பார். நீங்கள் அன்பிலே வேரூன்றியவர்களாகவும், அதில் அஸ்திபாரம் இடப்பட்டவர்களாகவும் இருக்கவேண்டும் என்றும் மன்றாடுகிறேன். கொலோ 2:7யோவா 14:231 யோவா 4:16கலா 2:20ரோம 5:5எபே 2:21-22வெளி 3:201 யோவா 4:4 இவ்விதம் நீங்கள் மற்றெல்லாப் பரிசுத்தவான்களோடுங்கூட, கிறிஸ்துவின் அன்பு எவ்வளவு விசாலமானதாயும், நீளமானதாயும், உயரமானதாயும், ஆழமானதாயும் இருக்கிறது என்பதை, விளங்கிக்கொள்ளும் வல்லமையைப் பெற்றுக்கொள்வீர்களாக, சங் 103:11-12யோபு 11:7-9எபே 1:18-23யோவா 15:13எபே 3:19சங் 103:17கலா 2:20ஏசா 55:9 உங்கள் அறிவாற்றலுக்கு அப்பாற்பட்ட கிறிஸ்துவின் அன்பை நீங்கள் அறியவேண்டும் என்றும், நீங்கள் இறைவனின் முழுநிறைவினால் முழுவதும் நிரப்பப்பட வேண்டும் என்றும் மன்றாடுகிறேன். எபே 1:23கொலோ 2:9-10கொலோ 1:101 யோவா 4:9-142 கொரி 5:14யோவா 1:16பிலி 4:7கலா 2:20

நமக்குள் செயலாற்றுகிறவரும் தம்முடைய வல்லமையின் மூலமாய், நாம் கேட்பதையும் நாம் நினைத்துப் பார்ப்பதைவிட, மிக அதிகமாக செய்வதற்கு வல்லமையுடையவராய் இருக்கிறவருக்கே, 2 கொரி 9:8ரோம 4:21எரே 32:271 கொரி 2:9யூதா 1:24எபே 1:19எரே 32:17எபி 7:25 கிறிஸ்து இயேசுவின் மூலமாக, திருச்சபையில் எல்லாத் தலைமுறை தலைமுறையாக, என்றென்றைக்குமாக மகிமை உண்டாவதாக. ஆமென். யூதா 1:25ரோம 11:362 பேது 3:18வெளி 7:12-171 பேது 5:111 நாளாக 29:11ஏசா 6:3பிலி 4:20