எபேசியர் 6

Ephesians 6

பிள்ளைகளே, நீங்கள் கர்த்தரைப் பின்பற்றுகிறவர்களாக, உங்கள் பெற்றோருக்குக் கீழ்ப்படியுங்கள். இதுவே சரியானது. கொலோ 3:20-25நீதி 23:22நீதி 6:20கொலோ 3:16-17நீதி 1:8உபா 21:18லேவி 19:3ரோம 12:2 “உங்கள் தகப்பனையும், தாயையும் மதித்து நடவுங்கள்.” இதுவே வாக்குத்தத்தத்துடன் சேர்த்துக்கொடுக்கப்பட்ட முதலாவது கட்டளை. யாத் 20:12உபா 27:16மத் 15:4-6நீதி 20:20எசேக் 22:7மல்கி 1:6எரே 35:18மாற் 7:9-13 “மதித்து நடந்தால், உங்களுக்கு நன்மை உண்டாகும். நீங்களும் இந்தப் பூமியில் நீடித்து வாழ்வீர்கள்” 1 என எழுதப்பட்டிருக்கிறது. உபா 5:16உபா 4:40உபா 12:28உபா 12:25உபா 22:7உபா 6:18உபா 6:3ஏசா 3:10

தந்தையரே, உங்கள் பிள்ளைகளைக் கோபமூட்டாதீர்கள்; பிள்ளைகளைக் கர்த்தரின் பயிற்சியிலும், அறிவுறுத்தல்களிலும் வளர்த்திடுங்கள். கொலோ 3:21நீதி 22:6நீதி 29:15நீதி 19:18உபா 6:72 தீமோ 3:15நீதி 29:17நீதி 23:13-14

அடிமைகளே, இந்தப் பூமியில் உங்களுக்கு எஜமான்களாய் இருக்கிறவர்களுக்கு பயத்துடனும் மரியாதையுடனும் கீழ்ப்படியுங்கள். நீங்கள் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிவதுபோல, அவர்களுக்கு உண்மையான மனதுடன் கீழ்ப்படியுங்கள். 1 பேது 2:18-21தீத் 2:9-10கொலோ 3:17-24சங் 86:11எபே 5:22மல்கி 1:61 தீமோ 6:1-3பிலி 2:12 அவர்களுடைய நன்மதிப்பைப் பெறுவதற்காக அவர்கள் உங்களைக் கவனிக்கும்போது மட்டும் அப்படிக் கீழ்ப்படியாமல், உங்கள் முழு இருதயத்தோடும் இறைவனுடைய சித்தத்தைச் செய்யும் கிறிஸ்துவின் அடிமைகளைப்போல கீழ்ப்படியுங்கள். கொலோ 3:22-231 தெச 2:4கலா 1:10எபே 5:171 பேது 4:2பிலி 2:12மத் 12:50மத் 7:21 நீங்கள் மனிதருக்கு பணிசெய்கிறவர்களைப் போலல்லாமல், கர்த்தருக்குப் பணிசெய்கிறவர்களாக, முழு இருதயத்துடனும் உங்கள் பணியைச் செய்யுங்கள். கொலோ 3:231 கொரி 10:31எபே 6:5-62இராஜா 5:13ஆதி 31:38-402இராஜா 5:2-3ஆதி 31:6 ஏனெனில் ஒருவன் அடிமையாயினும் சுதந்திரமுடையவனாயினும் அவனவன் செய்கின்ற நன்மைக்குப் பதிலாக, கர்த்தர் ஒவ்வொருவனுக்கும் அதற்குரிய பலனைக் கொடுப்பார் என்பது உங்களுக்குத் தெரியும். கொலோ 3:24லூக் 14:142 கொரி 5:10மத் 16:27மத் 6:4நீதி 11:18லூக் 6:35மத் 10:41-42

எஜமான்களே, உங்கள் அடிமைகளை நீங்களும் அப்படியே நடத்துங்கள். அவர்களை பயமுறுத்தவேண்டாம். நீங்களும் உங்கள் அடிமைகளும் பரலோகத்திலுள்ள ஒரே எஜமானுக்கே உரியவர்கள் என்பதையும், அவர் பாரபட்சம் காட்டுகிறவர் அல்ல என்பதையும் நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். அப் 10:34கொலோ 3:25ரோம 2:11யோபு 31:13-15உபா 10:17லூக் 6:31மத் 7:121 கொரி 1:2

இறைவனின் போர்க்கவசம்

இறுதியாக, கர்த்தரிலும், அவருடைய பெரிதான வல்லமையில் பெலப்பட்டிருங்கள். பிலி 4:13ஏசா 40:31யோசு 1:91 கொரி 16:131 பேது 5:10கொலோ 1:112 கொரி 12:9-10உபா 20:3-4 நீங்கள் பிசாசின் எல்லாவித தந்திரங்களை எதிர்த்து நிற்கக் கூடியவர்களாய் இருக்கும்படி, இறைவனின் முழுப் போர்க்கவசத்தையும் அணிந்துகொள்ளுங்கள். 2 கொரி 10:4ரோம 13:12எபே 6:131 தெச 5:81 பேது 5:82 கொரி 2:11எபே 4:14ரோம 13:14 ஏனெனில், நமது போராட்டம் மனித எதிரிகளோடு அல்ல. அது தீமையான ஆட்சியாளர்களுக்கும், காணக்கூடாத உலகத்தின் அதிகாரங்களுக்கும், இந்த இருள் உலகில் ஆட்சிசெய்யும் வல்லமைகளுக்கும் எதிரானதுமாய் இருக்கிறது; அது வான மண்டலங்களிலுள்ள தீய ஆவிகளின் சேனைகளுக்கும் எதிரானதாயிருக்கிறது. கொலோ 1:132 கொரி 4:4எபே 2:2கொலோ 2:15அப் 26:18எபே 1:21ரோம 8:381 கொரி 9:25-27 எனவே, தீமையின் நாள் வரும்போது, எதிரியின் தாக்குதலை எதிர்த்து நிற்கவும், எல்லாவற்றையும் செய்துமுடித்த பின்பு, வெற்றி பெற்று உறுதியுடன் நிலைநிற்கவும், இறைவனின் முழுப் போர்கவசத்தையும் அணிந்துகொள்ளுங்கள். 2 கொரி 10:4லூக் 21:36எபே 6:11-17எபே 5:16வெளி 3:10கொலோ 4:12லூக் 8:13மல்கி 3:2 உங்கள் இடுப்பைச் சுற்றி, சத்தியம் என்னும் இடைக்கச்சையைக் கட்டிக்கொண்டு. நீதி ஆகிய மார்கவசத்தை அணிந்துகொண்டு, உறுதியாய் நில்லுங்கள். ஏசா 59:171 தெச 5:8ஏசா 11:5லூக் 12:352 கொரி 6:71 பேது 1:13எபே 5:9வெளி 9:17 சமாதானத்தின் நற்செய்தியை அறிவிக்கும் ஆயத்தத்தை உங்கள் பாதரட்சைகளாகப் போட்டுக்கொள்ளுங்கள். ஏசா 52:7ரோம 10:152 கொரி 5:18-21ஆப 3:19லூக் 15:22உன்னத 7:1உபா 33:25 இவை எல்லாவற்றிலும், விசுவாசம் என்னும் கேடயத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அதைக்கொண்டே, தீமைசெய்பவன் எய்துவிடும் நெருப்பு அம்புகளை உங்களால் அணைத்துவிட முடியும். 1 பேது 5:8-91 யோவா 5:4-5நீதி 18:10சங் 56:3-4ஆதி 15:1சங் 56:10-112 கொரி 4:16-18எபி 11:24-34 இரட்சிப்பைத் தலைக்கவசமாக அணிந்துகொள்ளுங்கள். இறைவனுடைய வார்த்தையாகிய பரிசுத்த ஆவியானவரின் வாளை எடுத்துக்கொள்ளுங்கள். எபி 4:12ஏசா 59:17வெளி 19:151 தெச 5:8ஏசா 49:2மத் 4:10-11வெளி 2:16ஓசி 6:5

எல்லாச் சந்தர்ப்பங்களிலும் எல்லா விதமான வேண்டுதல்களையும் விண்ணப்பங்களையும் பரிசுத்த ஆவியானவரின் வல்லமையோடு மன்றாடுங்கள். இதை மனதில்கொண்டு, விழிப்புணர்வுள்ளவர்களாய் இருங்கள். எல்லாப் பரிசுத்தவான்களுக்காகவும் எப்பொழுதும் மன்றாடுங்கள். 1 தெச 5:17கொலோ 4:2பிலி 4:61 தீமோ 2:1யூதா 1:20ரோம 8:26-27மாற் 14:38லூக் 21:36 எனக்காகவும் மன்றாடுங்கள், நான் செய்தி கொடுக்கும் போதெல்லாம் இறைவன் எனக்கு நற்செய்தியின் இரகசியத்தை பயமின்றி எடுத்துக்கூற வார்த்தைகளைக் கொடுக்கும்படி மன்றாடுங்கள். கொலோ 4:3அப் 4:292 தெச 3:11 தெச 5:25எபி 13:18அப் 4:311 தெச 2:22 கொரி 8:7 அந்த நற்செய்திக்காகவே நான் இப்பொழுது விலங்கிடப்பட்ட ஒரு தூதுவனாக இருக்கிறேன். நான் பேசவேண்டிய விதமாய் பயமின்றி அறிவிக்க மன்றாடுங்கள். 2 கொரி 5:20கொலோ 4:42 தீமோ 2:91 தெச 2:21 யோவா 3:16அப் 26:29பிலி 1:20பிலி 1:7

கடைசி வாழ்த்துதல்

நமது அன்பு சகோதரனும், கர்த்தருடைய ஊழியத்தில் உண்மையுள்ள ஊழியக்காரனுமான தீகிக்கு என்னைப்பற்றிய எல்லாவற்றையும் உங்களுக்குத் தெரிவிப்பான். அப்பொழுது நான் எப்படியிருக்கிறேன் என்றும், என்ன செய்கிறேன் என்றும் நீங்கள் அறிந்துகொள்ளலாம். அப் 20:42 தீமோ 4:12தீத் 3:12கொலோ 4:7-91 கொரி 4:171 பேது 5:121 தீமோ 4:62 பேது 3:15 நாங்கள் எல்லோரும் எப்படியிருக்கிறோம் என்பதை அவன் உங்களுக்குச் சொல்லி, உங்களை மனதளவில் உற்சாகப்படுத்தும் நோக்கத்திற்காகவேதான், நான் அவனை உங்களிடம் அனுப்புகிறேன். கொலோ 4:7-8பிலி 2:251 தெச 3:22 தெச 2:17கொலோ 2:2பிலி 2:19

பிதாவாகிய இறைவனிடமும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவிடமும் இருந்து, எல்லாச் சகோதரருக்கும் சமாதானமும், விசுவாசத்துடன் இணைந்த அன்பும் இருப்பதாக. கலா 6:161 பேது 5:14கலா 5:61 தீமோ 1:142 தெச 3:16சங் 122:6-91 கொரி 1:31 சாமு 25:6

நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை அழிந்துபோகாத அன்புடன் நேசிக்கும் அனைவருடனும் கிருபை இருப்பதாக. மத் 22:371 கொரி 16:22-23மத் 6:132 கொரி 13:142 கொரி 8:122 தீமோ 4:22தீத் 2:7தீத் 3:15