யாத்திராகமம் 11

Exodus 11

பத்தாம் வாதை தலைமகன்கள்மேல்

அப்பொழுது யெகோவா மோசேயிடம் சொன்னதாவது, “நான் பார்வோன்மேலும், எகிப்தின்மேலும் இன்னுமொரு வாதையைக் கொண்டுவருவேன். அதன்பின் அவன் உங்களை இங்கிருந்து போகவிடுவான்; அதுவுமன்றி, உங்களை முழுவதும் துரத்தியும் விடுவான். ஆதி 15:14லேவி 26:21யாத் 3:20யாத் 9:14உபா 4:34யாத் 12:31-39வெளி 16:91 சாமு 6:4 ஆண்களும் பெண்களும் வேறுபாடின்றி தங்களுடைய அயலவர்களிடத்தில் தங்க நகைகளையும், வெள்ளி நகைகளையும் கேட்டு வாங்கிக்கொள்ள வேண்டும் என்று நீ இஸ்ரயேல் மக்களுக்குச் சொல்” என்றார். யாத் 3:22யாத் 12:35-36ஆகா 2:8மத் 20:15நீதி 13:22சங் 105:37சங் 24:1யாத் 12:1-2 யெகோவா இஸ்ரயேல் மக்களுக்கு எகிப்தியரின் கண்களில் தயவு கிடைக்கும்படி செய்தார். அதுவுமன்றி, மோசே எகிப்திலே பார்வோனின் அதிகாரிகளாலும், எகிப்திய மக்களாலும் பெரிதும் மதிக்கப்பட்டான். யாத் 12:36யாத் 3:21ஆதி 39:21ஏசா 60:14சங் 106:46வெளி 3:92 சாமு 7:9அப் 7:22

அப்பொழுது மோசே பார்வோனிடம், “யெகோவா சொல்வது இதுவே: ‘நான் நடு இராத்திரியளவில் எகிப்து எங்கும் கடந்துபோவேன். யாத் 12:29ஆமோ 4:10யாத் 12:12யோபு 34:20சங் 60:102 சாமு 5:24ஆமோ 5:17யாத் 12:23 எகிப்தில் முதற்பேறான ஒவ்வொரு மகனும் சாவான். அரியணையில் இருக்கும் பார்வோனின் முதல் ஆண்பிள்ளைமுதல், திரிகை ஆட்டும் அடிமைப்பெண்ணின் முதல் ஆண்பிள்ளை வரையுள்ள முதல் பிறந்த எல்லா மகன்களும் சாவார்கள்; அத்துடன் மிருகங்களின் தலையீற்றுகள் அனைத்தும் சாகும். சங் 78:51யாத் 12:12யாத் 12:29யாத் 13:15யாத் 4:23மத் 24:41சங் 105:36சங் 135:8 எகிப்து நாடெங்கும் முன்பும் பின்பும் இனி ஒருபோதும் இருக்காத பெரிய அழுகுரல் உண்டாகும். யாத் 12:30ஆமோ 5:17யாத் 3:7ஏசா 15:4-5ஏசா 15:8எரே 31:15புலம் 3:8லூக் 13:28 ஆனால் இஸ்ரயேலர் மத்தியில் மனிதரையோ, மிருகங்களையோ பார்த்து ஒரு நாயாவது குரைக்கமாட்டாது.’ இதனால் யெகோவா எகிப்தியருக்கும் இஸ்ரயேலருக்கும் இடையே வித்தியாசத்தைக் காட்டுகிறார் என்பதை நீ அறிந்துகொள்வாய். யோசு 10:21யாத் 8:22யாத் 10:23மல்கி 3:18யாத் 9:4யோபு 5:161 கொரி 4:7யாத் 7:22 அப்பொழுது உம்முடைய அதிகாரிகள் எல்லோரும் என்முன் பணிந்து, ‘நீயும் உன்னைப் பின்பற்றுகிறவர்கள் யாவரும் எங்களைவிட்டுப் புறப்பட்டுப் போங்கள்!’ என்று சொல்வார்கள். அதன்பின் நான் புறப்படுவேன்” என்று சொல்லி மோசே கடுங்கோபத்துடன் பார்வோனைவிட்டுப் புறப்பட்டான். யாத் 12:31-33தானி 3:19எசேக் 3:141 இராஜா 20:102இராஜா 3:9உபா 29:24உபா 32:24ஏசா 49:23

அப்பொழுது யெகோவா மோசேயிடம், “பார்வோன் உங்களுக்குச் செவிகொடுக்க மறுப்பான். இதினிமித்தம் எகிப்தில் என்னுடைய அதிசயங்கள் அதிகரிக்கும்” என்றார். யாத் 7:3-4யாத் 10:1யாத் 3:19ரோம 9:16-18 இப்படியாக மோசேயும் ஆரோனும் இந்த அதிசயங்களையெல்லாம் பார்வோனுக்கு முன்பாகச் செய்தார்கள், ஆனாலும் பார்வோனின் இருதயத்தை யெகோவா கடினப்படுத்தினார், அவன் இஸ்ரயேலரைத் தன் நாட்டிலிருந்து போகவிடவில்லை. யாத் 4:21யாத் 10:20யாத் 10:271 சாமு 6:6உபா 2:30யாத் 7:13-14யோபு 9:4ரோம 2:4-5