பத்துக் கட்டளைகள்
இறைவன் இந்த வார்த்தைகள் எல்லாவற்றையும் பேசினார்: உபா 5:22உபா 5:4உபா 4:36அப் 7:38உபா 4:33அப் 7:53
“அடிமைத்தன நாடாகிய எகிப்திலிருந்து உன்னை வெளியே அழைத்துக்கொண்டுவந்த உன் இறைவனாகிய யெகோவா நானே. உபா 5:6ஓசி 13:4லேவி 26:13சங் 81:10யாத் 13:3லேவி 19:36உபா 26:6-8ஆதி 17:7-8
“நீ என்னைத்தவிர வேறு தெய்வங்களை உனக்காக வைத்திருக்காதே. உபா 5:7மத் 4:10சங் 81:9ஏசா 46:9உபா 6:14உபா 6:5எரே 25:6யோசு 24:18-24
நீ உனக்காக ஒரு விக்கிரகத்தைச் செய்யாதே. மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின்கீழ் தண்ணீரிலும் உள்ள எதனுடைய உருவத்திலும் விக்கிரகத்தைச் செய்யாதே. உபா 5:8லேவி 26:1உபா 4:15-19சங் 97:7லேவி 19:4உபா 27:15அப் 17:29வெளி 16:2 நீ அவற்றை வணங்கவோ வழிபடவோ வேண்டாம். ஏனெனில், உன் இறைவனான யெகோவாவாகிய நான் எனக்குரிய வழிபாட்டைக் குறித்து வைராக்கியமுடைய இறைவன். என்னை வெறுக்கிறவர்கள் மத்தியில் பெற்றோரின் பாவத்திற்காக மூன்றாம், நான்காம் தலைமுறை மட்டும் அவர்களுடைய பிள்ளைகளைத் தண்டிக்கிறவராயும் இருக்கிறேன். உபா 5:9எண் 14:18உபா 4:24யாத் 34:14யோசு 24:19உபா 6:15யாத் 34:6-7ஏசா 65:6-7 ஆனால் என்னிடம் அன்பாயிருந்து, என் கட்டளைகளைக் கைக்கொள்கிறவர்களுக்கோ, ஆயிரம் தலைமுறைகளுக்கும் அன்பு காட்டுகிறவராயும் இருக்கிறேன். உபா 7:91 யோவா 5:3யோவா 14:21எரே 32:39-40உபா 5:29அப் 2:39யோவா 14:15ரோம 11:28-29
உன் இறைவனாகிய யெகோவாவின் பெயரைத் தவறாகப் பயன்படுத்த வேண்டாம். ஏனெனில், யெகோவா தனது பெயரை தவறாகப் பயன்படுத்துகிற ஒருவனையும் தண்டிக்காமல் விடுவதில்லை. உபா 5:11லேவி 19:12யாக் 5:12மத் 5:33-37சங் 50:14-16எரே 4:2யோசு 9:20மத் 26:63-64
ஓய்வுநாளைப் பரிசுத்தமாய்க் கைக்கொள்ளும்படி அதை நினைவில் வைத்துக்கொள். லேவி 26:2லேவி 19:3யாத் 31:13-16ஆதி 2:3லேவி 23:3லேவி 19:30யாத் 16:23-30யாத் 23:12 ஆறு நாட்களும் உழைத்து உன் வேலையை எல்லாம் செய்யவேண்டும். லூக் 13:14யாத் 23:12யாத் 34:21லேவி 23:3யாத் 35:2 ஏழாம்நாளோ உன் இறைவனாகிய யெகோவாவின் ஓய்வுநாள். அந்த நாளில் நீ எந்த வேலையையும் செய்யக்கூடாது, நீயோ, உன் மகனோ, உன் மகளோ, உன் வேலைக்காரனோ, வேலைக்காரியோ எந்த வேலையையும் செய்யக்கூடாது. உன் மிருகங்களோ, உன் பட்டணங்களுக்குள் வாழும் பிறநாட்டினனோ எந்த வேலையும் செய்யக்கூடாது. உபா 5:14-15யாத் 34:21யாத் 16:27-28எண் 15:32-36உபா 24:14-22யாத் 23:9-12யாத் 31:13ஆதி 2:2-3 ஏனெனில், யெகோவா வானத்தையும் பூமியையும், கடலையும் அவற்றிலுள்ள எல்லாவற்றையும் ஆறு நாட்களில் படைத்தார். ஏழாம் நாளிலோ அவர் ஓய்ந்திருந்தார். அதனால் ஓய்வுநாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார். ஆதி 1:1-2ஆதி 2:2-3யாத் 31:17மாற் 2:27-28சங் 95:4-7ஆதி 1:28அப் 20:7
உன் தகப்பனையும் தாயையும் கனம்பண்ணு. அப்பொழுது உன் இறைவனாகிய யெகோவா உனக்குக் கொடுக்கும் நாட்டிலே நீ நீடித்து வாழ்வாய். எபே 6:1-3கொலோ 3:20உபா 5:16மாற் 7:10நீதி 23:22-25லேவி 19:3நீதி 30:17நீதி 1:8-9
கொலைசெய்ய வேண்டாம். ரோம 13:9உபா 5:17ஆதி 9:5-6யாத் 21:14மத் 5:21-221 யோவா 3:12-15உபா 19:11-13யாக் 2:11
விபசாரம் செய்யவேண்டாம். எபி 13:4உபா 5:18ரோம 7:2-3ரோம 13:9லேவி 20:10மத் 5:27-28வெளி 21:8லேவி 18:20
களவு செய்யவேண்டாம். ரோம 13:9எபே 4:28லேவி 19:11லேவி 19:13மத் 19:181 கொரி 6:10லேவி 6:1-7நீதி 1:13-15
உன் அயலானுக்கு எதிராகப் பொய்ச்சாட்சி சொல்லாதே. நீதி 19:5மத் 19:18சங் 15:3யாத் 23:1உபா 19:15-21மத் 26:59-60நீதி 10:18அப் 6:13
உன் அயலானுடைய வீட்டை அபகரிக்க ஆசைகொள்ளாதே. உன் அயலானின் மனைவியையோ, அவனுடைய வேலைக்காரனையோ, வேலைக்காரியையோ, அவனுடைய எருதையோ, கழுதையையோ, அவனுக்குரிய எதையும் அபகரிக்க ஆசைகொள்ளாதே.” ரோம 13:9லூக் 12:15எபி 13:5எபே 5:5கொலோ 3:5எபே 5:3ரோம 7:71 கொரி 6:10
மக்கள் இடிமுழக்கத்தையும், மின்னலையும் கண்டு, எக்காள சத்தத்தையும் கேட்டு, மலை புகையால் சூழப்பட்டதைக் கண்டபோது பயத்தினால் நடுங்கினார்கள். அவர்கள் தூரத்திலே நின்று, யாத் 19:16-18எபி 12:18-19எரே 23:23சங் 139:7-8 மோசேயிடம், “நீரே எங்களுடன் பேசும்; நாங்கள் கேட்போம். இறைவனை எங்களுடன் பேச விடவேண்டாம். இல்லையெனில் நாங்கள் சாவோம்” என்றார்கள். உபா 18:16அப் 7:38உபா 5:23-27யாத் 33:20உபா 5:5கலா 3:19ஆதி 32:30எபி 12:19
அப்பொழுது மோசே மக்களிடம், “பயப்படவேண்டாம். பாவம் செய்வதிலிருந்து உங்களை விலக்கிக் காக்கும்படி, இறைவனைப்பற்றிய பயம் உங்களோடிருக்க வேண்டும் என்பதற்காகவே, இறைவன் உங்களைப் சோதிக்க வந்திருக்கிறார்” என்றான். உபா 13:3நீதி 3:71 சாமு 12:20ஏசா 8:13உபா 8:2ஆதி 22:1யோபு 28:28நீதி 16:6
இறைவன் இருந்த காரிருளை நோக்கி மோசே போகையில், மக்கள் தூரத்திலே நின்றார்கள். 1 இராஜா 8:12சங் 97:2சங் 18:91 தீமோ 6:162 நாளாக 6:1உபா 5:5யாத் 19:16-17சங் 104:2
விக்கிரகங்களும் பலிபீடங்களும்
அப்பொழுது யெகோவா மோசேயிடம், “நீ இஸ்ரயேல் மக்களுக்குச் சொல்லவேண்டியது இதுவே: ‘நான் வானத்திலிருந்து உங்களோடு பேசியதை நீங்களே பார்த்திருக்கிறீர்கள். நெகே 9:13உபா 4:36எபி 12:25-26 ஆகவே என்னோடு சேர்த்து வழிபடும்படி வேறொரு தெய்வத்தையும் செய்யவேண்டாம். வெள்ளியினால் தெய்வங்களையும், தங்கத்தினால் தெய்வங்களையும் உங்களுக்காக செய்யவேண்டாம். எசேக் 20:392இராஜா 17:33செப்ப 1:51 கொரி 10:21-221 யோவா 5:20-21யாத் 20:3-5யாத் 32:31வெளி 22:15
“ ‘எனக்காக மண்ணினாலே ஒரு பலிபீடத்தைக் கட்டி, அதன்மேல் எனக்கு செம்மறியாடுகளையும், வெள்ளாடுகளையும், மாடுகளையும் தகன காணிக்கையாகவும், சமாதான காணிக்கையாகவும் 1 பலி செலுத்துங்கள். எங்கெல்லாம் என் பெயரை கனமடையும்படி நான் செய்கிறேனோ, அங்கெல்லாம் நான் உங்களிடத்தில் வந்து உங்களை ஆசீர்வதிப்பேன். உபா 12:5சங் 132:13-142 நாளாக 6:61 இராஜா 9:32 நாளாக 7:16உபா 12:11உபா 16:11உபா 26:2 எனக்குக் கல்லினால் ஒரு பலிபீடத்தைக் கட்டவேண்டுமானால், அதை வெட்டப்பட்ட கற்களினால் கட்டவேண்டாம். ஏனெனில் அதன்மேல் ஒரு ஆயுதத்தைப் பயன்படுத்தும்போது நீங்கள் அதைக் கறைப்படுத்துவீர்கள். உபா 27:5-6யோசு 8:31 உங்கள் நிர்வாணம் காணப்படாதபடி, நீங்கள் என் பலிபீடத்திற்கு படிகளில் ஏறிப்போகவேண்டாம்’ என்றார். 1 பேது 1:16பிரச 5:1எபி 12:28-29லேவி 10:3சங் 89:7