யாத்திராகமம் 35

Exodus 35

ஓய்வுநாளின் விதிமுறைகள்

பின்பு மோசே முழு இஸ்ரயேல் சமுதாயத்தையும் கூடிவரச்செய்து அவர்களிடம், “நீங்கள் செய்யவேண்டுமென்று யெகோவா கட்டளையிட்டவைகள் இவையே: யாத் 34:32யாத் 25:1-40யாத் 31:1-11யாக் 1:22மத் 7:21-27ரோம 2:13 நீங்கள் ஆறு நாட்களுக்கு வேலைசெய்யவேண்டும். ஆனால் ஏழாம்நாளோ உங்களுக்குப் பரிசுத்த நாள். அது யெகோவாவுக்கான ஓய்வுநாள். அந்த நாளிலே வேலைசெய்பவன் எவனும் கொலைசெய்யப்படுவான். லேவி 23:3லூக் 13:14-15யாத் 20:9-10யாத் 34:21எண் 15:32-36யாத் 23:12யாத் 31:13-16எபி 10:28-29 ஓய்வுநாளில் நீங்கள் வசிக்கும் எந்தக் குடியிருப்புகளிலும் நெருப்பு மூட்டக்கூடாது” என்றான். யாத் 16:23யாத் 12:16எண் 15:32-36ஏசா 58:13

இறைசமுகக் கூடாரத்திற்கான பொருட்கள்

பின்னும் மோசே முழு இஸ்ரயேல் சமுதாயத்திடமும், யெகோவா கட்டளையிட்டிருப்பது இதுவே: யாத் 25:1-2 உங்களிடம் இருப்பதிலிருந்து யெகோவாவுக்காக ஒரு காணிக்கையை எடுங்கள். யெகோவாவுக்குக் காணிக்கை கொண்டுவர விரும்பும் ஒவ்வொருவனும் கொண்டுவர வேண்டியதாவன: 2 கொரி 9:7சங் 110:3யாத் 25:2-72 கொரி 8:11-12நியாயாதி 5:9மாற் 12:41-44

“தங்கம், வெள்ளி, வெண்கலம்,

நீலம், ஊதா, கருஞ்சிவப்புநூல்; மென்பட்டுத் துணி, யாத் 26:1யாத் 26:31யாத் 26:36யாத் 26:7-14யாத் 28:15யாத் 28:33யாத் 28:5-6

வெள்ளாட்டு உரோமம்,

சிவப்புச் சாயம் தோய்ந்த செம்மறியாட்டுக் கடாவின் தோல், கடல்பசுவின் தோல்,

சித்தீம் மரம்,

வெளிச்சத்திற்கான ஒலிவ எண்ணெய், யாத் 25:1-40யாத் 27:20யாத் 30:23யாத் 30:28

அபிஷேக எண்ணெய்க்கும், நறுமண தூபத்திற்குமான வாசனைப் பொருட்கள்;

ஏபோத்திலும், மார்புப் பதக்கத்திலும் பதிப்பதற்கான கோமேதகக் கற்கள் மற்றும் இரத்தினக் கற்கள் ஆகியவையே.” யாத் 25:5யாத் 28:17-21யாத் 28:9யாத் 39:6-14

உங்களில் தொழில் திறமையுள்ளவர்கள் எல்லோரும் வந்து, யெகோவா கட்டளையிட்ட வேலைகளையெல்லாம் செய்யவேண்டும். யாத் 31:1-6யாத் 36:1-4

“அவையாவன: இறைசமுகக் கூடாரமும் அதற்குரிய மூடுதிரையும், கொக்கிகளும், மரச்சட்டங்களும், குறுக்குச் சட்டங்களும், கம்பங்களுடன் அதன் அடித்தளங்களும், யாத் 26:1-37யாத் 31:7-9யாத் 36:8-34

அத்துடன் சாட்சிப்பெட்டி, அதற்குரிய கம்புகள், கிருபாசனம், சாட்சிப்பெட்டியை மறைக்கும் திரை, யாத் 25:10-22யாத் 26:31-33யாத் 26:7யாத் 36:35-36யாத் 37:1-9

மேஜை, அதற்குரிய கம்புகள், மேஜைக்குரிய பொருட்கள், இறைசமுக அப்பம், யாத் 25:23-30லேவி 24:5-6யாத் 37:10-16

வெளிச்சத்திற்கான குத்துவிளக்கு, அதற்குரிய உபகரணங்கள், விளக்குகள், வெளிச்சத்திற்கான எண்ணெய், யாத் 25:31-39யாத் 37:17-24மத் 5:14-15சங் 148:3

தூபபீடம், அதற்குரிய கம்புகள், அபிஷேக எண்ணெய், நறுமணத் தூபம், யாத் 30:1-10யாத் 26:36-37யாத் 30:22-38யாத் 36:37-38யாத் 37:25-28சங் 141:2

இறைசமுகக் கூடார நுழைவு வாசலுக்கான திரைச்சீலை,

தகன பலிபீடம், அதற்குரிய வெண்கலச் சல்லடை, அதற்குரிய கம்புகள், அதற்குரிய எல்லா பாத்திரங்கள், யாத் 27:1-8யாத் 30:18-21யாத் 38:1-8

வெண்கலத் தொட்டி, அதற்குரிய கால்,

முற்றத்திற்கான திரைகள், அதற்குரிய கம்புகள், அடித்தளங்கள், முற்ற வாசலுக்கான திரைகள், 2 சாமு 7:2யாத் 27:9-19யாத் 38:9-20

இறைசமுகக் கூடாரத்திற்கும், முற்றத்திற்கும் வேண்டிய கூடார முளைகள், அதற்குரிய கயிறுகள், யாத் 27:19

பரிசுத்த இடத்தின் ஆசாரியப் பணிசெய்ய உடுத்தப்படும் நெய்யப்பட்ட உடைகள், ஆசாரியனாகிய ஆரோனுக்கு வேண்டிய பரிசுத்த உடைகள், அவனுடைய மகன்கள் ஆசாரியராகப் பணிசெய்யும்போது அவர்களுக்கு வேண்டிய உடைகள் ஆகியனவாகும்.” யாத் 31:10யாத் 28:1-43யாத் 39:1-31யாத் 39:41எண் 4:5-15

அதன்பின் முழு இஸ்ரயேல் சமுதாயமும் மோசேயின் முன்னின்று விலகிப்போனது. அவர்களில் விருப்பமுடையவர்களும், இருதயத்தில் ஏவப்பட்டவர்களும், சபைக்கூடார வேலைக்கும் அதன் எல்லா பணிகளுக்கும், பரிசுத்த உடைகளுக்கும் வேண்டிய காணிக்கைகளை யெகோவாவுக்குக் கொண்டுவந்தார்கள். யாத் 25:21 நாளாக 29:14யாத் 35:26யாத் 35:29யாத் 35:5யாத் 35:22யாத் 36:21 நாளாக 28:2 விருப்பமுள்ள எல்லா ஆண்களும் பெண்களும் ஒரேவிதமாகவே உடையலங்கார ஊசிகள், காதணிகள், மோதிரங்கள், ஆபரணங்கள் முதலிய எல்லாவித தங்க நகைகளையும் கொண்டுவந்தார்கள். அவர்கள் எல்லோரும் தமது தங்கத்தை யெகோவாவுக்கு அசைவாட்டும் காணிக்கையாகச் செலுத்தினார்கள். எஸ்றா 2:68-69மத் 2:11நெகே 7:70-721 நாளாக 29:6-72 நாளாக 24:9-14யாத் 32:3எசேக் 16:11ஏசா 3:19 அத்துடன் ஒவ்வொருவரும் தங்களிடமிருந்த நீலநூல், ஊதாநூல், கருஞ்சிவப்புநூல், மென்பட்டுத் துணி, வெள்ளாட்டு உரோமம், சிவப்புச் சாயம் தோய்க்கப்பட்ட ஆட்டுக்கடா தோல், கடல்பசுத் தோல் ஆகியவற்றையும் கொண்டுவந்தார்கள். 1 நாளாக 29:8யாத் 25:2-7யாத் 35:6-10 வெள்ளியையும், வெண்கலத்தையும் காணிக்கையாகக் கொடுக்க விரும்பியவர்கள் அதை யெகோவாவுக்குக் காணிக்கையாகக் கொண்டுவந்தார்கள். மற்றெந்த வேலைகளுக்கும் பயன்படக்கூடிய சித்தீம் மரத்தை வைத்திருந்தவர்களும் அதைக் கொண்டுவந்தார்கள். 2 கொரி 8:12 திறமையுள்ள பெண்கள் தங்கள் கைகளினால் நீலம், ஊதா, கருஞ்சிவப்பு நூல்களையும், மென்பட்டுத் துணிகளையும் திரித்துக் கொண்டுவந்தார்கள். லூக் 8:2-3நீதி 14:1ரோம 16:12அப் 9:39யாத் 28:3யாத் 31:6யாத் 36:1கலா 3:28 திறமையுள்ள ஊக்கமான பெண்கள் யாவரும் வெள்ளாட்டு உரோமத்தையும் திரித்தார்கள். யாத் 35:21யாத் 35:29யாத் 36:8 மக்களின் தலைவர்கள் ஏபோத்திற்கும், மார்பு அணிக்கும் பதிப்பதற்கான கோமேதகக் கற்களையும், இரத்தினக் கற்களையும் கொண்டுவந்தார்கள். 1 நாளாக 29:6எஸ்றா 2:68யாத் 35:9 அவர்கள் வெளிச்சத்திற்கும், அபிஷேக எண்ணெய்க்கும், நறுமணத்தூளுக்கும் தேவையான ஒலிவ எண்ணெயையும், வாசனைப் பொருட்களையும் கொண்டுவந்தார்கள். யாத் 30:23-38யாத் 35:8 யெகோவா மோசே மூலமாக அவர்கள் செய்யும்படி கட்டளையிட்ட எல்லா விதமான வேலைகளுக்காகவும் மனதில் விருப்பமுள்ள எல்லா இஸ்ரயேல் ஆண்களும், பெண்களும் சுயவிருப்பக் காணிக்கைகளை யெகோவாவுக்குக் கொண்டுவந்தார்கள். 2 கொரி 9:7யாத் 35:21-22யாத் 35:41 நாளாக 29:141 நாளாக 29:171 நாளாக 29:31 நாளாக 29:61 நாளாக 29:9-10

பெசலெயேலும் அகோலியாபும்

பின்பு மோசே இஸ்ரயேல் மக்களிடம் சொன்னதாவது: “பாருங்கள், யெகோவா யூதா கோத்திரத்தைச் சேர்ந்த ஊர் என்பவனுடைய பேரனும் ஊரியின் மகனுமான பெசலெயேலைத் தெரிந்தெடுத்திருக்கிறார். யாத் 31:1-6யாக் 1:171 கொரி 12:111 கொரி 12:41 கொரி 3:101 இராஜா 7:13-14ஏசா 28:26 அவர் அவனை இறைவனுடைய ஆவியானவரால் நிரப்பி, எல்லா வகையான வேலைகளையும் செய்யக்கூடிய ஞானத்தையும், புரிந்துகொள்ளுதலையும், அறிவையும் கொடுத்திருக்கிறார். யாக் 1:172 நாளாக 2:14ஏசா 11:2-5ஏசா 61:1-31 கொரி 12:4-10கொலோ 2:3ஏசா 28:26 தங்கத்தினாலும், வெள்ளியினாலும், வெண்கலத்தினாலும், சித்திர வேலைப்பாடுகளைச் செய்வதற்கும், இரத்தினக் கற்களை வெட்டவும், அவற்றைப் பதிக்கவும், மரத்தைச் செதுக்கி வெவ்வேறு வினோதமான வேலைகளைச் செய்யவும் ஆற்றலைக் கொடுத்திருக்கிறார். அவனுக்கும் தாண் கோத்திரத்து அகிசாமாகின் மகன் அகோலியாபுக்கும் மற்றவர்களுக்குப் போதிக்கும் ஆற்றலைக் கொடுத்தார். 2 நாளாக 2:14யாத் 31:61 கொரி 1:5-71 கொரி 12:7எஸ்றா 7:27யாக் 1:16-17எஸ்றா 7:10நெகே 2:12 அவர்களுடைய கைவினைஞர்களும், சித்திரக்காரர்களும் நீலம், ஊதா, கருஞ்சிவப்பு, மென்பட்டு ஆகியவற்றைக்கொண்டு அழகான தையல் வேலைகளைச் செய்யக்கூடியவர்களாகவும், நெசவாளர்களாகவும் ஆகும்படி அவர்களை ஆற்றலினால் நிரப்பினார். அவர்கள் தலைச்சிறந்த கைவினைஞரும், சித்திரக்காரருமாய் இருந்தார்கள். யாத் 35:311 இராஜா 7:14ஏசா 28:26யாத் 31:32 தீமோ 2:15யாத் 31:61 கொரி 1:51 கொரி 1:7