அம்மோனுக்கு எதிரான இறைவாக்கு
யெகோவாவின் வார்த்தை எனக்கு வந்தது. “மனுபுத்திரனே, நீ அம்மோனியருக்கு எதிராக உன் முகத்தைத் திருப்பி அவர்களுக்கு விரோதமாய் இறைவாக்கு உரைத்து. எரே 49:1-6ஆமோ 1:13-15எசேக் 6:2எசேக் 20:46எசேக் 21:2எசேக் 21:28-32எசேக் 35:2ஆதி 19:38 அவர்களுக்குச் சொல்லவேண்டியதாவது: ஆண்டவராகிய யெகோவா சொல்வதைக் கேளுங்கள். ‘ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே. என் பரிசுத்த ஆலயம் தூய்மைக் கேடாக்கப்பட்டபோதும், இஸ்ரயேல் பாழாக்கப்பட்டபோதும், யூதா மக்கள் நாடுகடத்தப்பட்டபோதும் “ஆகா!” என்று நீங்கள் சொன்னீர்கள் அல்லவா? எசேக் 36:2நீதி 17:5சங் 70:2-3எசேக் 25:6மீகா 7:8நீதி 24:17-18எசேக் 25:8எசேக் 26:2-21 ஆகவே நான் உங்களைக் கீழ்த்திசையைச் சேர்ந்த மக்களுக்கு உரிமையாகக் கொடுக்கப்போகிறேன். அவர்கள் உங்கள் மத்தியில் தங்களுக்கு முகாம்களை அமைத்துத் தங்கள் கூடாரங்களையும் போடுவார்கள். உங்கள் பழங்களைச் சாப்பிட்டு, உங்கள் பாலைக் குடிப்பார்கள். உபா 28:33நியாயாதி 6:331 இராஜா 4:30உபா 28:51ஏசா 1:72 சாமு 12:26ஆதி 29:1ஏசா 32:8-9 நான் ரப்பா பட்டணத்தை ஒட்டகங்களின் மேய்ச்சலிடமாக மாற்றுவேன். அம்மோனை செம்மறியாடுகளின் இளைப்பாறுகிற இடமாகவும் மாற்றுவேன். அப்பொழுது நானே யெகோவா என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள். எசேக் 21:202 சாமு 12:26ஏசா 17:2உபா 3:11எசேக் 24:24எசேக் 25:8எசேக் 26:6எசேக் 30:8 ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே. நீங்கள் கைகொட்டி, துள்ளிக் குதித்து, இஸ்ரயேல் நாட்டுக்கு விரோதமாக உங்கள் மனதில் தீய எண்ணங்கொண்டு மகிழ்ந்தீர்கள். ஒபதி 1:12செப்ப 2:8செப்ப 2:10எசேக் 25:15எசேக் 36:5எசேக் 6:11யோபு 27:23நாகூ 3:19 ஆகவே நான் உங்களுக்கு விரோதமாய் என் கையை நீட்டி, பல நாடுகளுக்கும் கொள்ளைப்பொருளாக உங்களை ஒப்புவிப்பேன். உங்களைப் பல நாடுகளிலிருந்தும் வேரறுத்து, நாடுகளிலிருந்து முற்றிலும் அழிப்பேன். நான் உங்களை அழிப்பேன். அப்பொழுது நானே யெகோவா’ ” என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள். செப்ப 1:4எசேக் 25:13எசேக் 25:16எசேக் 6:14ஆமோ 1:14-15எசேக் 14:9எசேக் 35:3எரே 49:2
மோவாபுக்கு எதிரான இறைவாக்கு
“ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே: ‘ “பாருங்கள் யூதா குடும்பத்தார் மற்ற எல்லா ஜனங்களைப் போலானார்கள்” என மோவாபும் சேயீரும் சொன்னார்களே. ஏசா 15:1-9எரே 25:21எரே 48:1-47ஆமோ 2:1-3ஆமோ 2:11-12உபா 2:5எசேக் 25:12-14எசேக் 35:1-15 ஆகவே நான் மோவாபின் மலைப்பக்கங்களை பகைவர்கள் தாக்க அனுமதிப்பேன். அவர்கள் அந்த நாட்டின் மகிமையான எல்லைப் பட்டணங்களான பெத்யெசிமோத், பாகால் மெயோன், கீரியாத்தாயீம் ஆகியவற்றைத் தாக்குவார்கள். எரே 48:23யோசு 13:17யோசு 13:19-20எண் 32:37-381 நாளாக 5:8எரே 48:1யோசு 12:3எண் 32:3 மோவாபியரை அம்மோனியரோடுகூட கீழ்த்திசை மக்களுக்கு உரிமையாகக் கொடுப்பேன். அப்பொழுது அம்மோனியர் பல நாடுகளுக்குள்ளும் நினைக்கப்படமாட்டார்கள். எசேக் 21:32எசேக் 25:4ஏசா 23:16சங் 83:3-6 நான் மோவாபியரையும் தண்டிப்பேன். அப்பொழுது அவர்கள் நானே யெகோவா என்பதை அறிந்துகொள்வார்கள்.’ ” எசேக் 11:9எசேக் 16:41எசேக் 25:17எசேக் 25:5எசேக் 30:14எசேக் 30:19எசேக் 35:15எசேக் 39:21
ஏதோமுக்கு எதிரான இறைவாக்கு
“ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே: ‘ஏதோம் யூதா வீட்டாரைப் பழிவாங்கி, அதன் காரணமாக பெரும் குற்றவாளியாகிவிட்டது. எரே 49:7-22எசேக் 25:8சங் 137:7ஆமோ 1:11-12ஒபதி 1:10-162 நாளாக 28:17-18எசேக் 35:1-15ஆதி 27:41-42 ஆகவே ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே. நான் ஏதோமுக்கெதிராக எனது கரத்தை நீட்டி, அதன் மனிதரையும் அவர்களுடைய மிருகங்களையும் கொல்லுவேன். அதை நான் பாழாக்குவேன். அங்குள்ளோர் தேமானிலிருந்து தேதான்வரை வாளினால் மடிவார்கள். எசேக் 29:8எரே 25:23மல்கி 1:3-4எரே 49:7-8ஆமோ 1:12எசேக் 14:13எசேக் 14:17எசேக் 14:19-21 நான் என் மக்களாகிய இஸ்ரயேலரின் கைகளினால் ஏதோமைப் பழிவாங்குவேன். அவர்கள் என் கோபத்திற்கும் கடுங்கோபத்திற்கும் ஏற்றபடி ஏதோமுக்குச் செய்வார்கள். அப்பொழுது நான் பழிவாங்குவது இன்னதென்று அறிந்துகொள்வார்கள் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்.’ ” ஆதி 27:29ஏசா 11:14உபா 32:35-36எசேக் 35:11எபி 10:30-31ஏசா 63:1-6எரே 49:2நாகூ 1:2-4
பெலிஸ்தியாவுக்கு எதிரான இறைவாக்கு
“ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே. ‘பெலிஸ்தியர் பழைய பகையினிமித்தம் யூதாவை அழிக்க எண்ணி, தங்கள் உள்ளத்தின் தீய எண்ணங்களால் பழிவாங்கினார்கள். எசேக் 25:6ஏசா 14:29-312 நாளாக 28:18எசேக் 25:12எரே 25:20சகரி 9:5-81 நாளாக 7:211 சாமு 13:1-14 ஆகவே ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே. நான் பெலிஸ்தியருக்கு விரோதமாய் எனது கரத்தை நீட்டப்போகிறேன். கிரேத்தியரை நான் வேரோடழிப்பேன். கடற்கரையில் எஞ்சி இருப்பவர்களையும் அழிப்பேன். 1 சாமு 30:14செப்ப 2:4-15எசேக் 25:13எரே 47:1-72 சாமு 15:18எசேக் 25:7 நான் அவர்களைக் கொடுமையாய்ப் பழிவாங்கி, என் கோபத்தில் அவர்களைத் தண்டிப்பேன். அவர்களை நான் பழிவாங்கும்போது, நானே யெகோவா என்பதை அவர்கள் அறிந்துகொள்வார்கள்’ ” என்றார். எசேக் 25:11எசேக் 25:14எசேக் 5:15சங் 9:16எசேக் 25:5எசேக் 6:7