அதன்பின் யெகோவா நோவாவிடம், “நீயும் உன் முழுக் குடும்பமும் பேழைக்குள் போங்கள், ஏனெனில், உன்னையே நான் இந்த சந்ததியில் நீதியானவனாகக் கண்டேன். மத் 24:37-392 பேது 2:5-9ஆதி 6:9எபி 11:71 பேது 3:20ஆதி 7:13ஏசா 3:10-11எசேக் 9:4-6 மேலும், நீ சுத்தமான விலங்குகளில் ஒவ்வொரு வகையிலுமிருந்து ஆணும் பெண்ணுமாக ஏழு ஜோடிகளையும், சுத்தமில்லாத விலங்குகளில் ஒவ்வொரு வகையிலுமிருந்து ஆணும் பெண்ணுமாக ஒரு ஜோடியையும், ஆதி 8:20லேவி 10:10லேவி 11:1-47அப் 10:11-15ஆதி 7:8எசேக் 44:23உபா 14:1-21ஆதி 6:19-21 பறவைகளில் ஒவ்வொரு வகையிலுமிருந்து ஆணும் பெண்ணுமாக ஏழு ஜோடிகளையும் உன்னுடன் எடுத்துக்கொள்; ஏனெனில் பூமி முழுவதிலும் அவைகளின் பல்வேறு வகைகள் தொடர்ந்து உயிர் வாழவேண்டும். இன்னும் ஏழு நாட்களில், நாற்பது இரவுகளும் நாற்பது பகல்களும் தொடர்ந்து பூமியின்மேல் மழையை அனுப்பி, நான் உண்டாக்கிய எல்லா உயிரினங்களையும் பூமியின் மேற்பரப்பிலிருந்து அழித்துப்போடுவேன்” என்றார். ஆதி 6:13ஆதி 7:12ஆதி 7:17ஆதி 6:17ஆதி 6:7சங் 69:28ஆமோ 4:7ஆதி 8:12
யெகோவா தனக்குக் கட்டளையிட்ட எல்லாவற்றையும் நோவா செய்தான். ஆதி 6:22லூக் 8:21யாத் 39:32யாத் 39:42-43சங் 119:6யாத் 40:16எபி 5:8யோவா 13:17
பூமியின்மேல் பெருவெள்ளம் உண்டானபோது, நோவாவுக்கு 600 வயதாய் இருந்தது. ஆதி 5:32ஆதி 8:13 பெருவெள்ளத்துக்குத் தப்பும்படி நோவாவும், அவன் மனைவியும், அவனுடைய மகன்களும், அவர்களின் மனைவிமாரும் பேழைக்குள் போனார்கள். லூக் 17:272 பேது 2:5ஆதி 6:18ஆதி 7:1மத் 24:381 பேது 3:20ஆதி 7:13-15எபி 11:7 சுத்தமானதும், அசுத்தமானதுமான மிருகங்கள், பறவைகள், நிலத்தில் ஊரும் உயிரினங்கள் யாவும் ஜோடி ஜோடியாக, இறைவன் நோவாவுக்குக் கட்டளையிட்டபடியே, ஆணும் பெண்ணுமாக நோவாவிடம் வந்து பேழைக்குள் சென்றன. ஆதி 2:19ஆதி 7:16அப் 10:11-12கொலோ 3:11கலா 3:28ஏசா 11:6-9ஏசா 65:25எரே 8:7 ஏழு நாட்களுக்குப்பின், பூமியின்மேல் பெருவெள்ளம் வந்தது. ஆதி 6:17ஆதி 7:4லூக் 17:27ஆதி 7:17-20யோபு 22:16மத் 24:38-39
நோவாவுக்கு 600 வயதான அந்த வருடம், இரண்டாம் மாதம், பதினேழாம் நாள் பூமியின் அதிக ஆழத்திலிருந்த ஊற்றுகள் எல்லாம் வெடித்துப் பீறிட்டன; வானத்தின் மதகுகளும் திறக்கப்பட்டன. ஆதி 8:2மல்கி 3:10நீதி 8:28-29ஆமோ 9:5-62இராஜா 7:19எரே 5:22எரே 51:16சங் 78:23-24 நாற்பது பகல்களும் நாற்பது இரவுகளும் பூமியில் அடைமழை பெய்தது. ஆதி 7:4ஆதி 7:17மத் 4:21 இராஜா 19:8உபா 10:10உபா 9:18உபா 9:9யாத் 24:18
மழை தொடங்கிய அன்றே நோவாவும், அவன் மனைவியும், சேம், காம், யாப்பேத் என்னும் அவனுடைய மகன்களும், அவர்களுடைய மனைவிமாரும் பேழைக்குள் போனார்கள். ஆதி 6:18ஆதி 7:11 நாளாக 1:4-281 பேது 3:202 பேது 2:5ஆதி 10:1-2ஆதி 10:21ஆதி 10:6 எல்லாவித காட்டு மிருகங்களும் அதினதின் வகைகளின்படியும், எல்லாவித வளர்ப்பு மிருகங்களும் அதினதின் வகைகளின்படியும், தரையில் ஊரும் எல்லாவித உயிரினங்களும் அதினதின் வகைகளின்படியும், எல்லாவித பறவைகளும் அதினதின் வகைகளின்படியும், சிறகுகளுடைய யாவும் அவர்களோடு இருந்தன. ஆதி 7:2-3ஆதி 7:8-9 பூமியிலுள்ள உயிர்மூச்சுள்ள எல்லா உயிரினங்களும் ஜோடி ஜோடியாக நோவாவிடம் வந்து பேழைக்குள் சென்றன. ஆதி 6:19-20ஏசா 11:6 இறைவன் நோவாவுக்குக் கட்டளையிட்டபடியே, உட்சென்ற எல்லா விலங்குகளும் ஒவ்வொரு உயிரினத்தையும் சேர்ந்த ஆணும் பெண்ணுமாகவே இருந்தன. யெகோவா நோவாவை உள்ளேவிட்டுக் கதவை அடைத்தார். லூக் 13:25மத் 25:10ஆதி 7:2-3சங் 91:1-102இராஜா 4:4-51 பேது 1:5உபா 33:27யோவா 10:27-30
வெள்ளம் நாற்பது நாட்களாகப் பூமியின்மேல் பெருகிக்கொண்டே இருந்தது, வெள்ளம் பெருகியபோது அது பேழையை நிலத்திற்கு மேலாக உயர்த்தியது. ஆதி 7:4ஆதி 7:12 பூமியின்மேல் வெள்ளம் உயர்ந்து, பேழை நீரின்மேல் மிதந்தது. யாத் 14:28யோபு 22:16சங் 104:26சங் 69:15 வெள்ளம் பூமியின்மேல் அதிகமாய்ப் பெருகியதால், வானத்தின் கீழுள்ள உயர்ந்த மலைகளெல்லாம் மூடப்பட்டன. சங் 104:6-92 பேது 3:6எரே 3:23யோபு 12:15சங் 46:2-3 வெள்ளம் மலைகளுக்கு மேலாக பதினைந்து முழத்திற்கு மேல் உயர்ந்து அவைகளை மூடியது. எரே 3:23சங் 104:6 அப்பொழுது பூமியில் நடமாடிய பறவைகள், காட்டு மிருகங்கள், வளர்ப்பு மிருகங்கள் ஆகிய எல்லா உயிரினங்களும், பூமியில் கூட்டமாய்த் திரியும் எல்லா பிராணிகளும் அழிந்துபோயின; அத்துடன் மனுக்குலம் முழுவதும் அழிந்துபோனது. ஆதி 6:13ஆதி 6:17ஆதி 7:4ஆதி 6:6-7ரோம 8:202 பேது 2:5ஓசி 4:3ஏசா 24:19 நிலத்தில் வாழ்ந்த தங்களது நாசியில் உயிர்மூச்சுள்ள யாவும் மாண்டுபோயின. ஆதி 2:7ஆதி 6:17 பூமியிலிருந்த எல்லா உயிரினங்களும் அழிக்கப்பட்டன; மனிதர்களுடன், மிருகங்கள், தரையில் ஊரும் உயிரினங்கள், ஆகாயத்துப் பறவைகள் ஆகிய எல்லாமே பூமியிலிருந்து அழிக்கப்பட்டன. நோவாவும் அவனுடன் பேழைக்குள் இருந்தவர்களும் மாத்திரம் உயிர் தப்பினார்கள். 2 பேது 2:51 பேது 3:20எபி 11:7லூக் 17:26-272 பேது 3:6மத் 24:37-39ஆதி 7:21-22ஏசா 24:1-8
பெருவெள்ளம் நூற்று ஐம்பது நாட்களாக பூமியை மூடியிருந்தது. ஆதி 8:3-4