ஆபகூக் 1

Habakkuk 1

இறைவாக்கினன் ஆபகூக் என்பவனுக்கு வெளிப்படுத்தப்பட்ட இறைவாக்கு. நாகூ 1:1ஏசா 22:1

ஆபகூக்கின் முறைப்பாடு

யெகோவாவே, நான் எவ்வளவு காலத்திற்கு உதவிகேட்டு உம்மைக் கூப்பிட வேண்டும்? சங் 22:1-2சங் 13:1-2புலம் 3:8எரே 14:9சங் 94:3வெளி 6:10சங் 74:9-10

நீரோ இன்னும் செவிகொடாமல் இருக்கிறீரே.

எவ்வளவு காலத்திற்கு உம்மிடம், “வன்முறை” எனக் கதறவேண்டும்?

இன்னும் காப்பாற்றாமல் இருக்கிறீரே.

நீர் ஏன் என்னை அநீதியைப் பார்க்கும்படி செய்கிறீர்? சங் 55:9-11பிரச 5:8எரே 20:8எரே 9:2-6மீகா 7:1-42 பேது 2:8பிரச 4:1எசேக் 2:6

ஏன் அநியாயத்தைச் சகித்துக் கொண்டிருக்கிறீர்?

அழிவும், வன்செயலும் என் முன்னே இருக்கின்றனவே;

போராட்டமும், வாதையும் பெருகுகின்றன.

ஆதலால் சட்டம் வலுவிழந்துள்ளது, ஏசா 1:21-23யோபு 21:7சங் 119:126சங் 94:20-21எசேக் 9:9எரே 12:1ஏசா 5:20ஏசா 59:13-15

நீதி நடைமுறைப் படுத்தப்படுவதில்லை.

கொடுமையானவர்கள் நேர்மையானவர்களை ஒடுக்குகிறார்கள்.

அதனால் நீதி புரட்டப்படுகிறதே.

யெகோவாவின் பதில்

“பிற நாடுகளைக் கவனித்துப் பாருங்கள், அப் 13:40-41ஏசா 29:14புலம் 4:12எரே 5:12-13ஏசா 29:9எரே 18:18எரே 25:14-29எரே 9:25-26

பார்த்து முழுவதுமாய் வியப்படையுங்கள்.

உங்களுக்குச் சொன்னாலும்,

உங்களால் நம்பமுடியாத ஒரு செயலை,

உங்கள் நாட்களிலேயே நான் செய்யப்போகிறேன்.

இரக்கமற்றவர்களும், 2இராஜா 24:22 நாளாக 36:172 நாளாக 36:6எரே 5:15உபா 28:49-52ஏசா 23:13எரே 25:9எரே 4:6

மூர்க்கம் கொண்டவர்களுமான பாபிலோனியரை 1 நான் எழுப்புகிறேன்.

அவர்கள் தங்களுக்குச் சொந்தமல்லாத இருப்பிடங்களைக் கைப்பற்றும்படி,

பூமியெங்கும் அணியணியாய் செல்வார்கள்.

அவர்கள் பயமும் திகிலும் ஊட்டும் மக்கள்; எரே 39:5-9உபா 5:19உபா 5:27ஏசா 18:7எரே 52:25-27எரே 52:9-11

அவர்கள் தாங்கள் செய்வதே சரியானதும் சட்டமும் என்று எண்ணுகிறவர்கள்.

தங்கள் சொந்த மேன்மையை மாத்திரமே தேடுகிறவர்கள்.

அவர்களுடைய குதிரைகள் சிறுத்தைப் புலிகளைவிட வேகமானவை, எரே 4:13செப்ப 3:3உபா 28:49எசேக் 17:3ஓசி 8:1எரே 5:6எசேக் 17:12ஏசா 5:26-28

சாயங்காலத்தில் நடமாடும் ஓநாயிலும் பயங்கரமானவை.

அவர்களுடைய குதிரைப்படை தலைதெறிக்க ஓடிவரும்;

அவர்களுடைய குதிரைவீரர்களோ, தொலைவிலிருந்து வருகிறார்கள்.

இரைமேல் பாயும் கழுகைப்போல, அவர்கள் வருகிறார்கள்;

அவர்கள் எல்லோரும் வன்முறையை நாடியே வருகிறார்கள். எரே 25:9உபா 28:51-52எசேக் 17:10எசேக் 19:12ஆதி 41:49ஆப 1:6ஆப 2:5-13ஓசி 1:10

அவர்களுடைய படைகள், பாலைவனக் காற்றுப்போல் முன்னேறிச் சென்று,

கைதிகளை மணலைப்போல வாரிச் சேர்த்துக்கொள்வார்கள்.

அவர்கள் அரசர்களை கேலிசெய்து, 2 நாளாக 36:62 நாளாக 36:10ஏசா 14:16எரே 32:242இராஜா 24:122இராஜா 25:6-7எரே 33:4எரே 52:4-7

ஆளுநர்களை ஏளனம் செய்கிறார்கள்.

அரண்செய்த பட்டணங்களையெல்லாம் பார்த்து நகைக்கிறார்கள்;

முற்றுகை அரண்களை மண்ணினால் கட்டி, அவற்றைக் கைப்பற்றுகிறார்கள்.

காற்றைப்போல் கடந்து போகிறார்கள். தானி 5:20தானி 4:30-34தானி 5:3-4எரே 4:11-12

அவர்கள் தங்கள் சுயபெலத்தையே தெய்வமாகக் கொண்டிருக்கும் குற்றவாளிகள்.”

ஆபகூக்கின் இரண்டாவது முறைப்பாடு

யெகோவாவே, என் இறைவனே, என் பரிசுத்தமானவரே, உபா 32:4சங் 90:2உபா 33:27எரே 30:11எரே 46:28சங் 93:2ஆமோ 9:8-9எசேக் 30:25

நீர் நித்தியத்தில் இருந்தே உள்ளவர் அல்லவோ?

நாங்களும் அழிக்கப்பட்டுப் போவோமா?

யெகோவாவே, எங்கள் நலனுக்காகத்தானே நியாயத்தீர்ப்பை நிறைவேற்ற

நீர் பாபிலோனியரை நியமித்திருக்கிறீர்;

கன்மலையே, எங்களைத் தண்டிக்க நீர் அவர்களை அமர்த்தியிருக்கிறீர்.

உம்முடைய கண்கள் அதிக தூய்மையானதால், சங் 5:4-5சங் 34:15-16எரே 12:1-2ஆப 1:3-4நீதி 31:8-91 பேது 1:15-162 சாமு 4:11சங் 10:15

அவை தீமையைப் பார்ப்பதில்லை;

அநியாயத்தை சகிக்க உம்மால் முடியாது.

அப்படியானால் துரோகிகளை நீர் ஏன் சகிக்கிறீர்?

கொடியவர்களான பாபிலோனியர் தங்களைவிட நீதியானவர்களை விழுங்கும்போது

நீர் ஏன் மவுனமாய் இருக்கிறீர்?

நீர் எங்களை கடலில் உள்ள மீன்களைப் போலவும், நீதி 6:7

தலைவனில்லாத கடல் பிராணிகளைப் போலவுமா காண்கிறீர்?

பாபிலோனியனான கொடிய எதிரிகள் எல்லோரையும் தூண்டிலினால் இழுக்கிறான். ஆமோ 4:2எரே 16:16யோவா 21:6-11சங் 10:9எசேக் 25:6எசேக் 26:2எசேக் 29:4-5எசேக் 35:15

தனது வலையினால் அவர்களைப் பிடிக்கிறான்.

தனது இழுவை வலையினால் அவர்களை ஒன்றாய் அள்ளிச் சேர்க்கிறான்.

இவ்விதம் அவன் மகிழ்ச்சிகொண்டு களிகூருகிறான்.

ஆதலினால் அவன் தனது வலைகளுக்குப் பலியிட்டு, தானி 4:30உபா 8:17எசேக் 28:3ஆப 1:11தானி 5:23எசேக் 29:3ஏசா 10:13-15ஏசா 37:24

தனது இழுவை வலைக்கு தூபங்காட்டுகிறான்.

ஏனெனில் தனது வலையினால் அவன் செல்வச் சிறப்புடன் வாழ்ந்து

சிறந்த உணவைச் சாப்பிட்டு மகிழ்கிறான்.

அப்படியாயின் அவன் நாடுகளை இரக்கமின்றி அழிக்க இடங்கொடுப்பீரோ? எசேக் 25:1-17ஆப 1:9-10ஆப 2:17ஆப 2:5-8ஏசா 14:16-17ஏசா 14:6ஏசா 19:8எரே 25:9-26

அவன் தனது வலையை தொடர்ந்து நிரப்பிக்கொண்டே இருக்கவேண்டுமோ?