ஏழாம் மாதம் இருபத்தோராம் நாள், யெகோவாவின் வார்த்தை ஆகாய் என்னும் இறைவாக்கினன் மூலமாக வந்தது. 2 பேது 1:21ஆகா 1:1ஆகா 2:20ஆகா 1:15ஆகா 2:10 “நீ யூதாவின் ஆளுநரான செயல்தியேலின் மகன் செருபாபேலிடமும், தலைமை ஆசாரியனான யெகோசாதாக்கின் மகன் யோசுவாவிடமும், மக்களில் மீதியானோரிடமும் பேசி கேட்கவேண்டியதாவது: ஆகா 1:1எஸ்றா 1:8எஸ்றா 2:63ஆகா 1:14நெகே 8:9 இந்த ஆலயத்தின் முந்திய மகிமையை கண்டவர்கள் யாராவது, உங்களுக்குள்ளே இருக்கிறார்களா? இப்பொழுது இது உங்களுக்கு எப்படித் தோன்றுகிறது? உங்களுக்கு இது ஒரு பொருட்டாகத் தோன்றவில்லை அல்லவா? எஸ்றா 3:12லூக் 21:5-6எசேக் 7:20ஆகா 2:9சகரி 4:9-10 ஆயினும் செருபாபேலே, நீ இப்பொழுது திடமனதாயிரு என யெகோவா அறிவிக்கிறார். யெகோசாதாக்கின் மகனும் தலைமை ஆசாரியனுமாகிய யோசுவாவே, நீயும் திடமனதாயிரு; நாட்டிலுள்ள மக்களே, நீங்கள் எல்லோரும் திடமனதாயிருந்து வேலையை செய்யுங்கள் என யெகோவா அறிவிக்கிறார். ஏனெனில் நான் உங்களுடனே இருக்கிறேன், என சேனைகளின் யெகோவா அறிவிக்கிறார். 1 நாளாக 28:20உபா 31:23யோசு 1:9சகரி 8:92 சாமு 5:102 தீமோ 2:11 நாளாக 22:131 கொரி 16:13 நீங்கள் எகிப்திலிருந்து புறப்பட்டு வருகையில் இதுவே நான் உங்களுடன் செய்த உடன்படிக்கை. என் ஆவியானவர் உங்கள் மத்தியில் தங்கியிருக்கிறார். பயப்படாதிருங்கள். யாத் 29:45-46யாத் 34:10ஏசா 41:13நெகே 9:20யாத் 33:12-14சகரி 8:13சகரி 8:15அப் 27:24
“சேனைகளின் யெகோவா சொல்வது இதுவே: ‘இன்னும் கொஞ்சக்காலத்தில் இன்னும் ஒருமுறை நான் வானத்தையும், பூமியையும் அசைப்பேன், கடலையும், வெட்டாந்தரையையும் அசைப்பேன். எபி 12:26-28ஏசா 10:25அப் 2:19லூக் 21:25-27மாற் 13:24-26ஆகா 2:21-22யோவே 2:30-32யோவே 3:16 எல்லா நாடுகளையும் அசைப்பேன், எல்லா மக்களாலும் விரும்பப்படுகிறவர் வருவார், நான் இந்த ஆலயத்தை என் மகிமையால் நிரப்புவேன்,’ என சேனைகளின் யெகோவா சொல்கிறார். மல்கி 3:11 இராஜா 8:11யோவா 7:37-39தானி 2:44-45லூக் 2:10-11எசேக் 21:27ஆதி 22:18ஆதி 49:10 ‘வெள்ளியும் என்னுடையதே, தங்கமும் என்னுடையதே,’ என சேனைகளின் யெகோவா சொல்கிறார். சங் 50:10-12சங் 24:11 நாளாக 29:14-16ஏசா 60:17ஏசா 60:131 இராஜா 6:20-35 ‘ஆயினும் முந்திய ஆலயத்தின் மகிமையைவிட இந்த ஆலயத்தின் மகிமை பெரியதாயிருக்கும்,’ என சேனைகளின் யெகோவா சொல்கிறார். ‘இந்த இடத்திலே நான் என் சமாதானத்தைக் கொடுப்பேன்,’ என சேனைகளின் யெகோவா அறிவிக்கிறார்.” சங் 85:8-9கொலோ 1:19-212 கொரி 3:9-10சங் 24:7-101 தீமோ 3:16ஏசா 9:6-7மீகா 5:5அப் 10:36
கறைப்பட்ட மக்களுக்கு ஆசீர்வாதம்
தரியு அரசாண்ட இரண்டாம் வருடம் ஒன்பதாம் மாதம் இருபத்து நான்காம் நாள், ஆகாய் என்னும் இறைவாக்கினனுக்கு யெகோவாவின் வார்த்தை வந்தது. ஆகா 2:20ஆகா 1:1ஆகா 1:15 “சேனைகளின் யெகோவா சொல்வது இதுவே: ‘நீ ஆசாரியர்களிடம், சட்டம் சொல்வது என்ன? என்று கேள்: லேவி 10:10-11உபா 33:10மல்கி 2:7உபா 17:8-11எசேக் 44:23-24தீத் 1:9 உங்களில் ஒருவன் தன் அங்கியின் மடிப்பில் அர்ப்பணிக்கப்பட்ட இறைச்சியை கொண்டுபோகையில், அங்கியின் மடிப்பு, அப்பத்தையோ சமைக்கப்பட்ட உணவையோ திராட்சை இரசத்தையோ எண்ணெயையோ வேறு ஏதாவது தின்பண்டத்தையோ தொட்டால் அது பரிசுத்தமாக்கப்படுமா?’ ” என்று கேட்டான். லேவி 6:27மத் 23:19யாத் 29:37எசேக் 44:19லேவி 6:29லேவி 7:6
அதற்கு ஆசாரியர்கள், “இல்லை” என விடையளித்தனர்.
அப்பொழுது ஆகாய், “பிணத்தைத் தொட்டதால் அசுத்தமான ஒருவன், இவற்றில் எதையாகிலும் தொட்டால், அது அசுத்தமாகுமா?” என்று கேட்டான். லேவி 22:4-6எண் 19:11-22எண் 5:2-3எண் 9:6-10
அதற்கு ஆசாரியர்கள், “ஆம், அசுத்தமாகும்” என்றார்கள்.
அப்பொழுது ஆகாய் அவர்களிடம் சொன்னதாவது, “ ‘அப்படியே இந்த மக்களும், இந்த நாடு முழுவதும் என் பார்வையில் இருக்கிறார்கள்,’ என யெகோவா அறிவிக்கிறார். ‘அவர்கள் எதைச் செய்தாலும், அவர்கள் எதைச் செலுத்தினாலும் அவை எல்லாம் அவருக்கு அசுத்தமுள்ளதாய் இருக்கின்றன. நீதி 28:9தீத் 1:15ஆகா 1:4-11ஏசா 1:11-15நீதி 15:8எஸ்றா 3:2-3யூதா 1:23நீதி 21:27
“ ‘இப்போதாவது, இதை மிகக் கவனமாய் சிந்தியுங்கள். யெகோவாவின் ஆலயத்தைத் திரும்பக் கட்டும்படி, அஸ்திபாரம் போட்டும் ஒரு கல்லின்மேல் ஒரு கல் வைக்கப்படும் முன்பு நிலைமை எவ்வாறு இருந்தது என சிந்தித்துப் பாருங்கள். ஆகா 1:5எஸ்றா 3:10எஸ்றா 4:24ஆகா 1:7ஆகா 2:181 கொரி 11:31ஓசி 14:9ஏசா 5:12 இருநூறு கிலோகிராம் தானியக் குவியலுக்கு அருகில் ஒருவன் வந்தபோது, அங்கு பத்து நூறு கிலோகிராம் மட்டுமே இருந்தன. திராட்சை ஆலையின் தொட்டிக்கு ஒருவன் ஐம்பது குடங்கள் திராட்சை இரசம் மொள்ள வந்தபோது, அங்கு இருபது குடங்கள் மட்டுமே இருந்தன. ஆகா 1:6நீதி 3:9-10ஆகா 1:9-11மல்கி 2:2சகரி 8:10-12 நான், நீங்கள் கையிட்டுச் செய்த பயிர்களை இலைசுருட்டி வியாதியினாலும், பூஞ்சண வியாதியினாலும், பனிக்கட்டி மழையினாலும் அழித்தேன். அப்படியிருந்தும் நீங்கள் என்னிடமாய்த் திரும்பவில்லை,’ என யெகோவா அறிவிக்கிறார். உபா 28:22ஆகா 1:11ஆகா 1:91 இராஜா 8:37ஆமோ 4:8-11எரே 5:32 நாளாக 28:222 நாளாக 6:28 ‘யெகோவாவின் ஆலயத்தின் அஸ்திபாரம் போடப்பட்ட அந்த நாளிலிருந்து, ஒன்பதாம் மாதம் இருபத்து நான்காம் நாளாகிய இந்த நாள்வரை, நடந்தவற்றைக் கவனமாய் சிந்தித்துப் பாருங்கள். சகரி 8:9எஸ்றா 5:1-2ஆகா 2:15சகரி 8:12உபா 32:29ஆகா 1:14-15ஆகா 2:10லூக் 15:17-20 களஞ்சியத்தில் இன்னும் விதைத்தானியம் ஏதாவது மீதியாயிருக்கிறதா? திராட்சைக்கொடியும், அத்திமரமும், மாதுளஞ்செடியும், ஒலிவமரமும் இதுவரை காய்க்கவில்லையே. மல்கி 3:10ஆப 3:17-18நீதி 3:9-10மத் 6:33ஆதி 26:12சகரி 8:11-15உபா 15:10சங் 128:1-5
“ ‘ஆனால், இன்றுமுதல் உங்களை நான் ஆசீர்வதிப்பேன்.’ ”
செருபாபேல் யெகோவாவின் முத்திரை மோதிரம்
அம்மாதம் இருபத்து நான்காம் தேதியாகிய அதேநாளிலே, இரண்டாம் முறையும், இறைவாக்கினன் ஆகாய் என்பவனுக்கு யெகோவாவின் வார்த்தை வந்தது: “யூதாவின் ஆளுநரான செருபாபேலுக்கு நீ சொல்லவேண்டியதாவது, நான் வானத்தையும், பூமியையும் அசைப்பேன். ஆகா 2:6-7சகரி 4:6-10எஸ்றா 5:2ஆகா 1:1எபி 12:26-27சங் 46:6வெளி 16:17-191 நாளாக 3:19 அரச அரியணைகளையும் கவிழ்ப்பேன். அந்நிய அரசுகளின் வல்லமையையும் சிதறடிப்பேன். தேர்களையும், அதில் ஏறியிருக்கிறவர்களையும் கவிழ்த்துப் போடுவேன்; குதிரைகளுடன் அதில் ஏறிச்செல்வோர் ஒவ்வொருவரும் தங்கள் சகோதரனின் வாளினால் வெட்டுண்டு விழுவார்கள். மீகா 5:10நியாயாதி 7:22எசேக் 39:20மத் 24:7மீகா 5:15சங் 46:9சகரி 10:11சகரி 4:6
“சேனைகளின் யெகோவா அறிவிக்கிறதாவது, ‘என் பணியாளனாகிய செருபாபேலே! செயல்தியேலின் மகனே, அப்போது நான் உன்னை எடுத்து என் முத்திரை மோதிரத்தைப் போலாக்குவேன் என யெகோவா அறிவிக்கிறார், ஏனெனில் நானே உன்னைத் தெரிந்துகொண்டேன்,’ என சேனைகளின் யெகோவா அறிவிக்கிறார்.” ஏசா 43:10ஏசா 42:1எரே 22:24உன்னத 8:6சகரி 4:6-141 பேது 2:4மத் 12:182 தீமோ 2:19