யாக்கோபு 5

James 5

ஒடுக்கும் செல்வந்தருக்கு எச்சரிக்கை

செல்வந்தர்களே, கேளுங்கள், கவனமாய் நடவுங்கள். உங்கள்மேல் வரப்போகும் துன்பங்களுக்காக அழுது புலம்புங்கள். நீதி 11:281 தீமோ 6:9-10நீதி 11:4யாக் 1:11எரே 9:23லூக் 12:16-21லூக் 6:24-25லூக் 16:19-25 உங்கள் செல்வம் அழிவுக்குள்ளானது. உங்கள் உடைகளையோ பூச்சிகள் அரித்துவிட்டன. மத் 6:19-20யோபு 13:28லூக் 12:33ஏசா 50:9ஏசா 51:81 பேது 1:4எரே 17:11சங் 39:11 உங்கள் தங்கமும் வெள்ளியும் துருப்பிடித்துவிட்டன. அவற்றில் ஏற்பட்ட துருவே, உங்களுக்கு எதிராகச் சாட்சி சொல்லும். அது உங்கள் உடலை நெருப்பைப்போல் தின்றுவிடும். இந்தக் கடைசிக் காலத்தில் செல்வத்தைக் குவித்து வைத்திருக்கிறீர்களே. ரோம 2:5யாக் 5:7-8வெளி 21:8ஏசா 2:2வெளி 20:152 பேது 3:32 தீமோ 2:17உபா 32:33-34 இதோ, உங்கள் வயல்களின் வேலையாட்களுக்கு நீங்கள் கொடுக்கத் தவறிய கூலிப்பணம் உங்களுக்கு எதிராய் கூக்குரலிடுகிறதே! அறுவடை செய்தவர்களின் அழுகைக்குரல், எல்லாம் வல்ல கர்த்தரின் காதுகளுக்கு எட்டியிருக்கிறதே! லேவி 19:13எரே 22:13உபா 24:14-15ரோம 9:29மல்கி 3:5யோபு 24:10-11யாத் 22:27யாத் 3:9 பூமியிலே நீங்கள் சொகுசாக உங்கள் சொந்த இன்பங்களுக்காகவே வாழ்ந்தீர்கள். அவ்வாறு நீங்கள், அறிவில்லாமல் உங்கள் இருதயங்களைக் கொழுக்கப் பண்ணியிருக்கிறீர்கள்! 1 தீமோ 5:6லூக் 16:25லூக் 16:19ஆமோ 6:1எரே 12:3வெளி 19:17-181 சாமு 25:36ஏசா 22:13 உங்களை எதிர்க்காத குற்றமற்ற மனிதர்களையும்கூட குற்றவாளிகளாய்த் தீர்த்து கொலைசெய்தீர்கள். 1 பேது 2:22-23யோவா 19:9-11அப் 8:32ஏசா 53:7லூக் 22:51-53மத் 5:391 தெச 2:15-16அப் 2:22-23

துன்பத்தில் பொறுமை

ஆகையால் பிரியமானவர்களே, கர்த்தருடைய வருகைவரைக்கும் பொறுமையுள்ளவர்களாக இருங்கள். இதோ, நிலம் அதன் மதிப்புமிக்க விளைச்சலைக் கொடுக்கும்வரைக்கும் பயிரிடுகிறவன் எவ்வளவாய் காத்திருக்கிறான். அவன் கோடை மழைக்காகவும், மாரி மழைக்காகவும் எவ்வளவு பொறுமையாகக் காத்திருக்கிறான். எபி 12:1-3யாக் 5:8-9யோவே 2:23கலா 6:9உபா 11:14கொலோ 1:112 கொரி 6:4-5ரோம 2:7 நீங்களும் பொறுமையுடையவர்களாய், உறுதியுடன் நில்லுங்கள். ஏனெனில் கர்த்தருடைய வருகை நெருங்கி இருக்கிறது. கலா 5:22யாக் 5:9சங் 37:71 பேது 4:7சங் 27:14பிலி 4:51 தெச 3:13புலம் 3:25-26 பிரியமானவர்களே, ஒருவருக்கொருவர் விரோதமாக முறுமுறுக்காதீர்கள். அப்படிச் செய்தால், நீங்கள் நியாயத்தீர்ப்புக்கு உட்படுவீர்கள். நியாயாதிபதி வாசற்படியிலே நிற்கிறாரே! லேவி 19:181 கொரி 4:5யாக் 4:11மத் 24:33கலா 5:14மத் 6:14-151 பேது 4:9ஆதி 4:7

பிரியமானவர்களே, துன்புறுத்தலின் மத்தியிலும், பொறுமைக்கு உதாரணமாக, கர்த்தருடைய பெயரில் பேசிய இறைவாக்கினரையே எடுத்துக்கொள்ளுங்கள். எபி 11:32-38மத் 5:11-12எபி 13:71 தெச 2:14-15அப் 7:52அப் 3:21லூக் 6:232 நாளாக 36:16 நீங்கள் அறிந்திருக்கிறபடி, சகிப்புடன் செயல்பட்டவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்று நாங்கள் எண்ணுகிறோமே. யோபுவின் சகிப்புத் தன்மையைப்பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். இறுதியில் கர்த்தர் என்ன செய்தார் என்பதையும் கண்டுகொண்டீர்கள். கர்த்தர் மனதுருக்கமும் இரக்கமும் நிறைந்தவராய் இருக்கிறாரே. யாக் 1:12யாத் 34:6யோபு 1:21-22ஏசா 55:6-7மத் 10:22மத் 5:10-11யோபு 2:10யோபு 42:10-17

எல்லாவற்றிற்கும் மேலாக, எனக்கு பிரியமானவர்களே, ஆணையிட வேண்டாம். பரலோகத்தின்மேலோ, பூமியின்மேலோ, அல்லது வேறு எதன்மேலோ ஆணையிட வேண்டாம். நீங்கள் நியாயந்தீர்க்கப்படாதபடிக்கு உங்கள் பேச்சு, ஆம் என்றால் “ஆம்” என்றும்; இல்லை என்றால் “இல்லை” என்றும் இருக்கட்டும். மத் 5:33-37மத் 23:16-222 கொரி 1:17-201 பேது 4:8யாக் 3:1-21 கொரி 11:343 யோவா 1:2

விசுவாசமுள்ள மன்றாட்டு

உங்களில் யாராவது துன்பப்பட்டால், அவன் மன்றாடட்டும். யாராவது மகிழ்ச்சியாக இருந்தால், அவன் துதிப் பாடல்களைப் பாடட்டும். சங் 50:15யோனா 2:2எபே 5:19அப் 16:24-25எபி 5:7வெளி 19:1-6வெளி 5:9-14ஓசி 6:1 உங்களில் யாராவது வியாதிப்பட்டால், அவன் திருச்சபையின் தலைவர்களை அழைக்கட்டும், தலைவர்கள் கர்த்தருடைய பெயராலே எண்ணெய் பூசி, அவனுக்காக மன்றாடுவார்கள். மாற் 6:13அப் 28:8மாற் 16:182இராஜா 4:332இராஜா 5:11அப் 9:40அப் 14:23அப் 15:4 விசுவாசத்துடன் செய்யப்படும் மன்றாட்டு நோயாளியைச் சுகமடையச் செய்யும்; கர்த்தர் அவனை எழுப்புவார். அவன் பாவம் செய்திருந்தால், அது அவனுக்கு மன்னிக்கப்படும். 1 யோவா 5:14-16யாக் 5:13யாக் 5:16மத் 21:21-22யாக் 1:6மத் 17:20மாற் 2:5-11ஏசா 33:24 ஆகவே நீங்கள், உங்களுடைய பாவங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு, நீங்கள் சுகமடைவதற்காக, ஒருவருக்காக ஒருவர் மன்றாடுங்கள். ஒரு நீதிமானின் மன்றாட்டு வல்லமையுடையதாகவும், பயனை விளைவிக்கிறதாகவும் இருக்கிறது. எரே 29:12-13நீதி 15:29மத் 21:22சங் 34:15யோவா 9:31சங் 145:18-19எரே 33:31 பேது 2:24

எலியா நம்மைப்போன்ற ஒரு மனிதனே. அவன் மழை பெய்யக்கூடாது என்று ஊக்கமாய் மன்றாடினான்; அதனால் அந்த நாட்டின்மேல் மூன்றரை வருடங்களாக மழை பெய்யவில்லை. 1 இராஜா 17:1லூக் 4:251 இராஜா 18:1வெளி 11:6அப் 14:15அப் 10:26ரோம 11:2 எலியா மீண்டும் மன்றாடினான்; அப்பொழுது வானம் மழையைப் பொழிந்தது. பூமியும் அதன் விளைச்சலைக் கொடுத்தது. 1 இராஜா 18:42-45எரே 14:221 இராஜா 18:18அப் 14:17

எனக்கு பிரியமானவர்களே, உங்களில் யாராவது சத்தியத்தைவிட்டு வழிவிலகிப் போகும்போது, ஒருவன் அவனைத் திரும்பவும் நல்வழிக்குக் கொண்டுவந்தால், கலா 6:1மத் 18:15யாக் 5:20யூதா 1:22-23லூக் 22:32எசேக் 34:162 பேது 3:171 தீமோ 6:10 இதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்: ஒரு பாவியை அவனுடைய குற்றவழியிலிருந்து திரும்பச் செய்கிறவன், மரணத்திலிருந்து அவனை இரட்சித்து, அந்தப் பாவியின் ஏராளமான பாவங்கள் மன்னிக்கப்பட்டு, மூடப்படுவதற்கு வழிவகுக்கிறான். 1 பேது 4:8நீதி 10:121 தீமோ 4:16நீதி 11:30யாக் 5:19ரோம 11:141 கொரி 9:22யாக் 1:15