எரேமியா 37

Jeremiah 37

சிறையில் எரேமியா

பாபிலோன் அரசன் நேபுகாத்நேச்சார் யோசியாவின் மகன் சிதேக்கியாவை யூதாவுக்கு அரசனாக்கினான். அவன் யோயாக்கீமுடைய மகன் கோனியாவின் 1 இடத்தில் அரசாண்டான். எரே 22:242இராஜா 24:172இராஜா 24:121 நாளாக 3:15-162 நாளாக 36:9-10எசேக் 17:12-21எரே 22:28எரே 24:1 ஆயினும் அவனோ, அவனுடைய வேலையாட்களோ, அந்த நாட்டு மக்களோ, இறைவாக்கினன் எரேமியாவின் மூலம் யெகோவா பேசிய வார்த்தைகளுக்கு எவ்வித கவனமும் செலுத்தவில்லை. 1 தெச 4:82 நாளாக 36:12-162இராஜா 24:19-20நீதி 29:121 இராஜா 14:181 இராஜா 16:72 சாமு 10:22 சாமு 12:25

அப்படியிருந்தும் சிதேக்கியா அரசன், செலேமியாவின் மகன் யூகாலை, மாசெயாவின் மகனும் ஆசாரியனுமாகிய செப்பனியாவுடன் இறைவாக்கினன் எரேமியாவிடம் அனுப்பி, “தயவுசெய்து நம் இறைவனாகிய யெகோவாவிடம் எங்களுக்காக மன்றாடும்” என்று செய்தி அனுப்பினான். எரே 21:1-21 இராஜா 13:6எரே 2:27எரே 29:25எரே 42:2-4எரே 42:20எரே 52:241 சாமு 12:19

இப்பொழுது எரேமியாவுக்கு மக்கள் மத்தியில் போய் வரக்கூடிய சுதந்தரம் இருந்தது. ஏனெனில், அவன் இன்னும் சிறையில் அடைக்கப்படவில்லை. எரே 37:15எரே 32:2-3 இதற்கிடையில் பார்வோனின் இராணுவம் எகிப்தைவிட்டுப் புறப்பட்டது. எருசலேமை முற்றுகையிட்டிருந்த பாபிலோனியர், எகிப்தியரைப் பற்றிய செய்தியைக் கேட்டபோது எருசலேமைவிட்டு போனார்கள். எசேக் 17:152இராஜா 24:7எரே 34:21எரே 37:11எரே 37:7

அப்பொழுது இறைவாக்கினன் எரேமியாவுக்கு யெகோவாவின் வார்த்தை வந்தது: “இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவா சொல்வது இதுவே, என்னிடம் விசாரிக்கும்படி உன்னை அனுப்பிய யூதா அரசனிடம் நீ கூறவேண்டியதாவது: ‘உனக்கு உதவிசெய்ய புறப்பட்ட பார்வோனின் இராணுவம், தன் சொந்த நாடாகிய எகிப்திற்குத் திரும்பிப் போய்விடும். புலம் 4:172இராஜா 22:18எசேக் 17:17ஏசா 31:1-3எரே 21:2எரே 37:3எசேக் 29:16எசேக் 29:6-7 அப்பொழுது பாபிலோனியர் திரும்பிவந்து இப்பட்டணத்தைத் தாக்குவார்கள். அவர்கள் அதைக் கைப்பற்றி எரித்துப் போடுவார்கள்.’ எரே 38:23எரே 39:2-8எரே 32:29எரே 34:21-22

“யெகோவா கூறுவது இதுவே: ‘பாபிலோனியர் நிச்சயமாக எம்மைவிட்டுப் போய்விடுவார்கள்’ என எண்ணி உங்களை ஏமாற்றிக்கொள்ள வேண்டாம். அவர்கள் அப்படிச் செய்யமாட்டார்கள். ஒபதி 1:32 தெச 2:3கலா 6:3கலா 6:7யாக் 1:22எரே 29:8மத் 24:4-5எபே 5:6 உங்களை தாக்குகிற பாபிலோனிய இராணுவத்தை நீங்கள் முற்றிலும் தோற்கடித்து, அவர்களில் காயப்பட்டவர்கள் மாத்திரம் கூடாரங்களில் மீந்திருந்தாலுங்கூட, அவர்கள் வெளியே வந்து இந்தப் பட்டணத்தை எரித்துவிடுவார்கள்” என்று சொல்லுங்கள் என்றார். ஏசா 30:17எரே 50:45யோவே 2:11லேவி 26:36-38ஏசா 10:4ஏசா 13:15ஏசா 14:19எரே 21:4-7

பார்வோனின் இராணுவத்தினிமித்தம் பாபிலோனியப் படையினர் எருசலேமைவிட்டுப் போனபின்பு, எரே 37:5 எரேமியா பென்யமீன் நாட்டு மக்களிடையே உள்ள தன் சொத்தின் பங்கைப் பெற்றுக்கொள்வதற்கு, எருசலேமைவிட்டு அங்கே போகப் புறப்பட்டான். எரே 1:11 நாளாக 6:601 இராஜா 19:31 இராஜா 19:9எரே 32:8-9யோசு 21:17-18மத் 10:23நெகே 6:11 ஆனால் எரேமியா பென்யமீன் வாசலை அடைந்தபோது அனனியாவின் பேரனும், செலேமியாவின் மகனுமான யெரியா என்ற காவலாளர்களின் தலைவன் இறைவாக்கினனான எரேமியாவை கைது செய்தான். அவன், “நீ எங்களைவிட்டு பாபிலோனியரிடம் சேரப்போகிறாய்” என்று குற்றஞ்சாட்டினான். எரே 38:7சகரி 14:10அப் 24:13அப் 24:5-9அப் 6:11எரே 18:18எரே 20:10எரே 21:9

அதற்கு எரேமியா, “அது பொய்; நான் பாபிலோனியரைச் சேரப்போகவில்லை” என்றான். ஆனால் யெரியா அதை ஏற்றுக்கொள்ளாமல் எரேமியாவைக் கைதுசெய்து அதிகாரிகளிடத்தில் கொண்டுபோனான். எரே 40:4-6மத் 5:11-12சங் 27:12சங் 52:1-21 பேது 3:161 பேது 4:14-16லூக் 6:22-23லூக் 6:26 அப்பொழுது அந்த அதிகாரிகள் எரேமியாவின்மீது கோபங்கொண்டு, அவனை அடித்து, செயலாளராகிய யோனத்தான் வீட்டில் காவலில் அடைத்தார்கள். அவர்கள் அதைக் காவற்கூடமாக மாற்றியிருந்தார்கள். எரே 38:262 நாளாக 16:102 நாளாக 18:26அப் 5:18ஆதி 39:20எரே 20:1-3எரே 26:16மத் 21:35

எரேமியா இருட்டான ஒரு காவற்கிடங்கில் போடப்பட்டு, அநேக காலம் அங்கேயிருந்தான். எரே 38:6எரே 38:10-13ஆதி 40:15புலம் 3:53புலம் 3:55 அதன்பின் சிதேக்கியா அரசன் ஆளனுப்பி அவனை அரண்மனைக்கு அழைப்பித்து அவனிடம் “யெகோவாவிடமிருந்து ஏதேனும் வார்த்தை உண்டோ?” என்று தனிப்பட்ட முறையில் கேட்டான். எரே 21:71 இராஜா 14:1-41 இராஜா 22:16எசேக் 12:12-13எரே 21:1-2எரே 24:8எரே 37:3எரே 38:14-16

அதற்கு எரேமியா, “ஆம்; நீ பாபிலோன் அரசனுடைய கையில் ஒப்புக்கொடுக்கப்படுவாய்” என்று பதிலளித்தான்.

பின்பு எரேமியா சிதேக்கியா அரசனிடம், “நீர் என்னைச் சிறையில் அடைத்திருப்பதற்கு உமக்கோ, உமது அதிகாரிகளுக்கோ, இந்த மக்களுக்கோ விரோதமாக நான் செய்த குற்றம் என்ன? அப் 25:8யோவா 10:32அப் 25:11அப் 25:25தானி 6:221 சாமு 24:9-151 சாமு 26:18-21அப் 23:1 ‘பாபிலோன் அரசன் உம்மையோ, இந்த நாட்டையோ தாக்கமாட்டான்’ என்று இறைவாக்கு சொல்லிய உம்முடைய இறைவாக்கு உரைப்போர் எங்கே? எரே 2:28எரே 28:10-172இராஜா 3:13எரே 14:13-15எரே 23:17எரே 27:14-18எரே 28:1-5எரே 29:31 என் தலைவனான அரசே! தயவுசெய்து கேளும். என் விண்ணப்பத்தை உமக்கு முன்பாகச் சமர்ப்பிக்க அனுமதியும். என்னை விண்ணப்பிக்கவிடும். என்னை செயலாளராகிய யோனத்தானுடைய வீட்டுக்குத் திரும்பவும் அனுப்பவேண்டாம். அனுப்பினால், நான் அங்கேயே இறந்துவிடுவேன்” என்றான். எரே 36:7அப் 23:16-22அப் 25:10-11அப் 28:18-19எரே 26:15எரே 38:26எரே 38:6-9

அப்பொழுது சிதேக்கியா அரசன் எரேமியாவைக் காவற்கூட முற்றத்தில் சிறை வைக்கும்படி கட்டளையிட்டான். மேலும் பட்டணத்தில் அப்பம் முடியும்வரை அப்பம் சுடுவோரின் தெருவிலிருந்து தினமும் அவனுக்கு அப்பம் கொடுக்கும்படியும் கட்டளையிட்டான்; எனவே எரேமியா காவற்கூட முற்றத்தில் இருந்தான். எரே 38:13எரே 38:28எரே 32:2எரே 38:9எரே 52:62இராஜா 25:3ஏசா 33:16யோபு 5:20