எரேமியா 45

Jeremiah 45

பாரூக்கிற்குச் செய்தி

யூதாவின் அரசன் யோசியாவின் மகன் யோயாக்கீம் அரசாண்ட நான்காம் வருடத்தில், இறைவாக்கினனான எரேமியா நேரியாவின் மகன் பாரூக்குக்குச் சொன்னதாவது: எரேமியா சொல்லச்சொல்ல, பாரூக் அவைகளைப் புத்தகத்தில் எழுதிய பின்பே இச்செய்தி கிடைத்தது: எரே 36:1எரே 32:12எரே 36:4எரே 36:322 நாளாக 36:5எரே 25:1எரே 32:16எரே 36:26 “பாரூக்கே! இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவா உனக்குக் கூறுவது இதுவே: 2 கொரி 1:42 கொரி 7:6எபி 2:18எபி 4:15ஏசா 63:9மாற் 16:7 நீயோ, ‘ஐயோ! எனக்குக் கேடு, யெகோவா என்னுடைய வேதனையுடன், துக்கத்தையும் சேர்த்திருக்கிறாரே; நான் துக்கத்தின் அழுகையினால் இளைப்படைந்தேன். ஆறுதலையும் நான் காணவில்லை’ என்று சொன்னாய். 2 கொரி 4:12 கொரி 4:16கலா 6:92 தெச 3:13ஆதி 37:34-35ஆதி 42:36-38எபி 12:3-5எரே 15:10-21 அதற்கு யெகோவா, இதை அவனுக்குச் சொல் என்கிறார். ‘யெகோவா கூறுவது இதுவே: நாடெங்கும் நான் கட்டியிருப்பதை கவிழ்த்துப் போடுவேன். நான் நாட்டினதை வேரோடு பிடுங்குவேன். எரே 1:10எரே 18:7-10எரே 31:28ஆதி 6:6-7ஏசா 5:2-7எரே 11:17சங் 80:8-16 அப்படியிருக்கையில் நீ உனக்கென்று பெரிய காரியங்களைத் தேடவேண்டுமோ? நீ அவைகளைத் தேடவேண்டாம். ஏனெனில் நான் எல்லா மக்கள்மேலும் அழிவைக் கொண்டுவரப் போகிறேன் என்று யெகோவா அறிவிக்கிறார். ஆனாலும் நீ எங்கே போகிறாயோ அங்கெல்லாம் உன்னை உயிருடன் தப்பவிடுவேன்’ என்றார்.” எரே 39:181 தீமோ 6:6-9எபி 13:5எரே 21:9மத் 6:25-32ரோம 12:16எரே 25:26ஆதி 6:12