பெலிஸ்தியரைப் பற்றிய செய்தி
பார்வோன், காசாவைத் தாக்குவதற்கு முன் பெலிஸ்தியரைக் குறித்து, இறைவாக்கினன் எரேமியாவுக்கு வந்த யெகோவாவின் வார்த்தை இதுவே: எரே 25:20ஆதி 10:191 இராஜா 4:24யாத் 25:15-17சகரி 9:5-7ஆமோ 1:6-8செப்ப 2:4-7
யெகோவா கூறுவது இதுவே: ஏசா 15:2-5ஏசா 8:7-8எரே 1:14எரே 46:20எரே 8:161 கொரி 10:261 கொரி 10:28ஆமோ 9:5-6
“பாருங்கள், வடக்கிலே வெள்ளம் எவ்வளவாய் பொங்கி எழுகிறது.
அது கரைபுரண்டோடும் வெள்ளமாகும்.
அது நாட்டின்மேலும், அதிலுள்ள எல்லாவற்றின்மேலும் புரண்டோடும்.
பட்டணங்கள்மேலும், அதில் வாழும் யாவர்மேலும் புரண்டோடும்.
மக்கள் அலறி அழுவார்கள்.
நாட்டில் குடியிருப்போர் எல்லோரும் புலம்புவார்கள்.
பாய்ந்தோடும் குதிரைகளின் குளம்புகளின் ஒலியையும், நியாயாதி 5:22எரே 8:16உபா 28:54-55எசேக் 26:10-11எரே 46:9யோபு 39:19-25புலம் 4:3-4நாகூ 2:4
பகைவர்களின் தேர்களின் சத்தத்தையும்,
தேர்ச்சக்கரங்களின் இரைச்சலையும் கேட்டு ஓலமிடுவார்கள்.
தந்தையர் தங்கள் பிள்ளைகளுக்கு உதவிசெய்யும்படி திரும்பமாட்டார்கள்.
அவர்களுடைய கைகள் சோர்ந்துபோகும்.
ஏனெனில் பெலிஸ்தியர் அனைவரையும் ஆமோ 9:7உபா 2:23ஏசா 20:6ஆமோ 1:8-10எசேக் 21:25எசேக் 21:29எசேக் 7:12எசேக் 7:5-7
அழிக்கும் நாள் வந்திருக்கிறது.
தீருவுக்கும் சீதோனுக்கும் உதவிசெய்யக்கூடிய,
இன்னும் தப்பியிருப்பவர்களை அழிப்பதற்கான நாள் வந்திருக்கிறது.
கப்தோரின் கரையோரத்தில் மீதியாயிருக்கும்
பெலிஸ்தியரை யெகோவா அழிக்கப்போகிறார்.
காசா துக்கங்கொண்டாடுதலுக்காக தன் தலையை மொட்டையடிக்கும். எரே 48:37எரே 25:20எரே 41:5மீகா 1:161 இராஜா 18:28ஆமோ 1:6-8உபா 14:1எசேக் 25:16
அஸ்கலோன் மவுனமாய் இருக்கும்.
சமவெளியில் மீதியாயிருப்பவர்களே,
எவ்வளவு காலத்திற்கு உங்களை நீங்களே வெட்டிக்கொள்வீர்கள்?
“ ‘ஐயோ! யெகோவாவின் வாளே! எசேக் 21:3-5எரே 12:12எசேக் 21:30யோவா 18:111 நாளாக 21:272 சாமு 2:26உபா 32:41-42எசேக் 14:17
நீ ஓய்வதற்கு எவ்வளவு காலம் செல்லும்?
உறைக்குத் திரும்பி அங்கு ஓய்ந்திரு
என்று நீங்கள் கதறுகிறீர்களே!’
ஆனால் அஸ்கலோனையும், எசேக் 14:17மீகா 6:9ஏசா 10:61 சாமு 15:3ஆமோ 3:6எசேக் 25:16ஏசா 13:3ஏசா 37:26
கரையோரப் பகுதிகளையும் தாக்கும்படி,
யெகோவா கட்டளையிட்டு உத்தரவு கொடுத்திருக்க
அது எப்படி ஓய்ந்திருக்கும்?”