மறுபிறப்பைப் பற்றிய போதனை
பரிசேயர்களில் நிக்கொதேமு என்னும் பெயருடைய ஒரு மனிதன் இருந்தான். அவன் யூத ஆளுநர் குழுவின் உறுப்பினரில் ஒருவன். யோவா 19:39யோவா 3:10யோவா 7:47-50லூக் 23:13 அவன் ஒரு இரவிலே இயேசுவினிடத்தில் வந்து, “போதகரே, நீர் இறைவனிடத்திலிருந்து வந்த ஒரு போதகர் என்று எங்களுக்குத் தெரியும். ஏனெனில் இறைவன் ஒருவரோடு இல்லாவிட்டால், நீர் செய்கிற அடையாளங்களைச் செய்யமுடியாது” என்றான். யோவா 5:36அப் 10:38அப் 2:22அப் 4:16-17யோவா 9:16யோவா 9:30-33மத் 22:16யோவா 1:38
இயேசு அதற்குப் பதிலாக, “ஒருவர் மறுபடியும் பிறக்காவிட்டால், இறைவனுடைய அரசை அவரால் காணமுடியாது என்று மெய்யாகவே மெய்யாகவே நான் உனக்குச் சொல்கிறேன்” என்றார். 2 கொரி 5:17யோவா 3:5-61 பேது 1:23-251 யோவா 3:91 யோவா 5:1தீத் 3:5யோவா 1:131 யோவா 2:29
அப்பொழுது நிக்கொதேமு இயேசுவிடம், “வயதான ஒருவர் மீண்டும் பிறப்பது எப்படி? அவர் மீண்டும் பிறப்பதற்காக, தமது தாயின் கர்ப்பத்தில் இரண்டாவது முறை போகமுடியாதே” என்றான். 1 கொரி 2:141 கொரி 1:18யோவா 3:3யோவா 4:11-12யோவா 6:53யோவா 6:60
இயேசு அதற்குப் பதிலாக, “மெய்யாகவே மெய்யாகவே, ஒருவர் தண்ணீரினாலும் ஆவியானவரினாலும் பிறவாவிட்டால், அவர் இறைவனுடைய அரசுக்குள் செல்லமுடியாது என்று நான் உனக்குச் சொல்கிறேன். எசேக் 36:25-27எபே 5:26அப் 2:381 பேது 3:211 கொரி 6:111 யோவா 5:6-8ஏசா 44:3-4மத் 3:11 மாமிசம், மாமிசத்தைப் பிறப்பிக்கிறது. ஆனால் ஆவியானவரோ, ஆவியை பிறப்பிக்கிறார். கலா 5:16-21எசேக் 36:26-27ரோம 8:4-92 கொரி 5:171 கொரி 15:47-501 கொரி 6:17ரோம 7:181 யோவா 3:9 ‘நீங்கள் மறுபடியும் பிறக்க வேண்டும்’ என்று நான் உனக்குச் சொன்ன வார்த்தையைக் குறித்து நீ வியப்படையக் கூடாது. எபே 4:22-24யோவா 3:3ரோம 12:1-21 பேது 1:22யோவா 3:12வெளி 21:271 பேது 1:14-16கொலோ 1:12 காற்று தான் விரும்பிய இடத்தை நோக்கியே வீசுகிறது; அதன் சத்தத்தைக் கேட்கிறீர்கள். ஆனால் அது எங்கிருந்து வருகிறது என்றோ, அது எங்கே போகிறது என்றோ உங்களால் சொல்லமுடியாது. ஆவியானவரால் பிறந்த ஒவ்வொரு பிறப்பும் இப்படியே” என்றார். பிரச 11:4-51 கொரி 2:11அப் 2:2எசேக் 37:91 யோவா 2:29மாற் 4:26-29அப் 4:31யோவா 1:13
அப்பொழுது நிக்கொதேமு, “இது எப்படி ஆகும்?” என்று கேட்டான். ஏசா 42:16யோவா 6:52யோவா 6:60லூக் 1:34யோவா 3:4மாற் 8:24-25நீதி 4:18
இயேசு அவனிடம், “நீ இஸ்ரயேலரில் போதகனாய் இருக்கிறாயே, உன்னால் இவைகளை விளங்கிக்கொள்ள முடியவில்லையா? மத் 22:29எரே 8:8-9எசேக் 11:19மத் 15:14எசேக் 36:25-27சங் 51:10சங் 51:6சங் 73:1 நான் உனக்கு மெய்யாகவே மெய்யாகவே சொல்கிறேன், நாங்கள் அறிந்ததைப் பேசுகிறோம். நாங்கள் கண்டதைக் குறித்துச் சாட்சி சொல்கிறோம். ஆனால் நீங்களோ எங்களுடைய சாட்சியை ஏற்றுக்கொள்ளாமல் இருக்கிறீர்கள். யோவா 8:381 யோவா 5:6-12யோவா 1:18யோவா 12:49யோவா 14:24யோவா 8:14யோவா 7:16யோவா 8:28-29 பூமிக்குரிய காரியங்களைக்குறித்தே நான் உங்களுக்குச் சொன்னேன், நீங்கள் அதை விசுவாசிக்காமல் இருக்கிறீர்கள்; அப்படியிருக்க பரலோக காரியங்களைக்குறித்து நான் பேசினால், அதை நீங்கள் எப்படி விசுவாசிப்பீர்கள்? 1 கொரி 3:1-21 கொரி 2:7-9எபி 5:11யோவா 3:31-361 பேது 2:1-3யோவா 1:1-14யோவா 3:13-17யோவா 3:5 பரலோகத்திலிருந்து வந்த மானிடமகனாகிய என்னைத்தவிர, ஒருவரும் ஒருபோதும் பரலோகத்திற்குள் சென்றதில்லை. நீதி 30:4அப் 2:34யோவா 6:38யோவா 1:181 கொரி 15:47யோவா 13:3எபே 4:9-10யோவா 6:62 பாலைவனத்திலே மோசே பாம்பை உயர்த்தியதுபோல, மானிடமனாகிய நானும் உயர்த்தப்பட வேண்டும். எண் 21:7-9யோவா 8:28யோவா 12:32-34லூக் 24:26-27லூக் 24:44-462இராஜா 18:4சங் 22:16அப் 2:23 அப்போது மானிடமகனாகிய என்மீது விசுவாசமாயிருக்கிற ஒவ்வொருவரும், நித்திய ஜீவனைப் பெறுவார்கள்.” யோவா 3:16யோவா 6:40யோவா 3:361 யோவா 5:11-13யோவா 12:44-461 யோவா 5:11 யோவா 5:20ரோம 10:9-14
இறைவன் தமது ஒரே மகனை ஒப்புக்கொடுத்து அவரில் விசுவாசிக்கிற ஒருவரும் அழிந்து போகாமல் நித்திய ஜீவனைப் பெறும்படி இவ்வளவாய் உலகத்தினரை அன்புகூர்ந்தார். ரோம 5:81 யோவா 4:9-10ரோம 8:32யோவா 3:15யோவா 11:25-26யோவா 6:40யோவா 3:361 யோவா 4:19 உலகத்தைக் குற்றவாளி என்று தீர்ப்பதற்காக இறைவன் தமது மகனை அனுப்பாமல், தமது மகனின் மூலமாய் உலகத்தவர்களை இரட்சிப்பதற்காகவே அனுப்பினார். 1 யோவா 4:14லூக் 19:10யோவா 12:47-48யோவா 6:57யோவா 6:401 தீமோ 2:5-6யோவா 6:29யோவா 20:21 இறைவனுடைய மகனில் விசுவாசிக்கிற யாவருக்கும் நியாயத்தீர்ப்பு இல்லை. ஆனால் அவரை விசுவாசிக்காதவருக்கோ ஏற்கெனவே நியாயத்தீர்ப்பு வழங்கப்பட்டு விட்டது. ஏனெனில் அவர்கள் இறைவனுடைய ஒரே மகனின் பெயரில் விசுவாசம் வைக்கவில்லை. 1 யோவா 5:10மாற் 16:16ரோம 8:1யோவா 5:241 யோவா 5:12யோவா 3:36ரோம 5:11 யோவா 4:9 அந்த நியாயத்தீர்ப்பு என்னவென்றால்: உலகத்திற்குள் வெளிச்சம் வந்தது. மனிதர் வெளிச்சத்தை அல்ல, இருளையே விரும்பினார்கள். ஏனெனில் அவர்களது செயல்கள் தீயவைகளாய் இருந்தன. யோவா 8:122 தெச 2:12யோவா 9:39-41ரோம 2:8யோவா 12:43யோவா 5:44ரோம 1:322 பேது 3:3 தீயசெயலைச் செய்கிற ஒவ்வொருவரும் வெளிச்சத்தை வெறுக்கிறார்கள். தமது தீய செயல்கள் வெளியரங்கமாகிவிடும் என்று அவர்கள் வெளிச்சத்திற்குள் வரமாட்டார்கள். எபே 5:11-13யோவா 7:7யோபு 24:13-17நீதி 1:29நீதி 4:18யாக் 1:23-251 இராஜா 22:8சங் 50:17 ஆனால் சத்தியத்தின்படி வாழ்கிறவர்களோ வெளிச்சத்திற்குள் வருகிறார்கள். தமது செயல்கள் எல்லாம் இறைவனுக்குள்ளாகவே செய்யப்பட்டிருப்பதால், அது தெளிவாய்த் தெரியும்படி அவர்கள் வெளிச்சத்திற்குள் வருகிறார்கள் என்றார். 1 யோவா 1:6சங் 139:23-243 யோவா 1:11எபே 5:9பிலி 2:131 யோவா 4:15-16சங் 119:1051 யோவா 2:27-29
இயேசுவைப்பற்றிய யோவான் ஸ்நானகனின் சாட்சி
இதற்குப் பின்பு, இயேசுவும் அவருடைய சீடர்களும் யூதேயாவின் நாட்டுப் புறத்துக்குச் சென்றார்கள். அங்கே இயேசு சிறிதுகாலம் அவர்களுடன் தங்கி, மக்களுக்குத் திருமுழுக்கு கொடுத்து வந்தார். யோவா 4:1-3யோவா 3:26யோவா 7:3யோவா 2:13 யோவானும் சாலிமுக்கு அருகே இருந்த அயினோன் என்ற இடத்தில் திருமுழுக்கு கொடுத்துக் கொண்டிருந்தான். ஏனெனில் அங்கே தண்ணீர் அதிகமாய் இருந்ததுடன், திருமுழுக்கு பெறும்படி மக்களும் தொடர்ச்சியாக வந்து கொண்டிருந்தார்கள். மாற் 1:4-51 சாமு 9:4எசேக் 43:2லூக் 3:7மத் 3:5-6எசேக் 19:10ஆதி 33:18எரே 51:13 இது யோவான் சிறையில் போடப்படும் முன்னே நடைபெற்றது. மத் 4:12மத் 14:3மாற் 6:17லூக் 3:19-20லூக் 9:7-9 யோவானுடைய சீடர்களுக்கும் சில யூதர்களுக்கும் இடையில் சடங்காச்சார சுத்திகரிப்பைக் குறித்து விவாதம் ஏற்பட்டது. யோவா 2:6மத் 3:11எபி 6:21 பேது 3:21எபி 9:10எபி 9:23எபி 9:13-14மாற் 7:8 யோவானுடைய சீடர்கள் யோவானிடத்தில் வந்து அவனிடம், “போதகரே, யோர்தானுக்கு அக்கரையில் உம்மோடிருந்த ஒருவரைக் குறித்து நீர் சாட்சி கொடுத்தீரே. அவரும் திருமுழுக்கு கொடுக்கிறார். எல்லோரும் அவரிடத்தில் போய்க்கொண்டிருக்கிறார்களே” என்றார்கள். யோவா 1:7கலா 6:12-13யாக் 3:14-18யோவா 1:15யோவா 12:191 கொரி 3:3-5அப் 19:26-27கலா 5:20-21
யோவான் அதற்குப் பதிலாக, “ஒருவர், பரலோகத்திலிருந்து கொடுக்கப்படுவதை மட்டுமே பெற்றுக்கொள்ள முடியும். யாக் 1:171 கொரி 4:71 கொரி 15:101 பேது 4:10-11ஆமோ 7:151 கொரி 2:12-14எரே 1:5மத் 25:15 ‘நான் கிறிஸ்து அல்ல, அவருக்கு முன்பாக அனுப்பப்பட்டவன்’ என்று நான் சொன்னதற்கு நீங்களே எனக்குச் சாட்சிகள். யோவா 1:20யோவா 1:23லூக் 1:16-17மத் 3:11-12யோவா 1:25மல்கி 3:1லூக் 1:76மத் 3:3 மணவாளனுக்கே மணப்பெண் உரியவள். மணவாளனின் தோழனோ, மணவாளனின் அருகே நின்று அவன் சொல்வதைக் கேட்கிறான். அவன் மணவாளனுடைய குரலைக் கேட்டு மிகவும் மகிழ்ச்சி அடைகிறான். அந்த மகிழ்ச்சியே எனக்குரியது. அது இப்போது நிறைவடைந்தது. எபே 5:25-27ஓசி 2:19ஏசா 54:5மத் 9:15எசேக் 16:8வெளி 19:7-9வெளி 21:9பிலி 2:2 அவரோ மிகுதிப்பட வேண்டும்; நானோ குறைந்துபோக வேண்டும். கொலோ 1:18சங் 72:17-19எபி 3:2-6ஏசா 9:71 கொரி 3:5வெளி 11:15அப் 13:36-37தானி 2:34-35
“மேலே இருந்து வருகிறவர் எல்லோருக்கும் மேலானவராகவே இருக்கிறார்; கீழே பூமியிலிருந்து வருகிறவனோ பூமிக்கே சொந்தமாயிருக்கிறான். அவன் பூமிக்குரிய காரியங்களைப் பேசுகிறான். பரலோகத்திலிருந்து வருகிறவரோ எல்லோரிலும் மேன்மையானவராகவே இருக்கிறார். யோவா 8:23மத் 28:18ரோம 9:5யோவா 6:331 யோவா 4:5யோவா 3:12-13பிலி 2:9-11யோவா 6:51 அவர் தாம் கண்டதையும் கேட்டதையும் குறித்து சாட்சி கூறுகிறார். ஆனால் அவருடைய சாட்சியையோ ஒருவரும் ஏற்றுக்கொள்ளுகிறதில்லை. யோவா 3:11யோவா 15:15யோவா 1:11யோவா 8:26யோவா 5:20யோவா 3:33ஏசா 50:2ஏசா 53:1 அவருடைய சாட்சியை ஏற்றுக் கொள்கிறவர்களோ, இறைவன் உண்மை உள்ளவர் என்று உறுதிப்படுத்துகிறார்கள். எபே 1:13எபி 6:172 கொரி 1:18தீத் 1:1-22 கொரி 1:22யோவா 6:27ரோம 3:3-4ரோம 4:18-21 இறைவனால் அனுப்பப்பட்டவரோ இறைவனுடைய வார்த்தைகளைப் பேசுகிறார். ஏனெனில், இறைவன் அவருக்கு ஆவியானவரை அளவின்றிக் கொடுத்திருக்கிறார். அப் 10:38மத் 12:18யோவா 15:26யோவா 5:26கொலோ 2:9ஏசா 11:2-5லூக் 4:18யோவா 7:37-39 பிதா மகனை நேசிக்கிறார். அவர் எல்லாவற்றையும் மகனுடைய கைகளிலே ஒப்படைத்திருக்கிறார். மத் 28:18யோவா 5:20லூக் 10:22யோவா 5:22யோவா 17:2மத் 11:27எபே 1:221 கொரி 15:27 இறைவனின் மகனில் விசுவாசமாயிருக்கிறவர் எவரோ, அவருக்கு நித்திய ஜீவன் உண்டு. இறைவனின் மகனைப் புறக்கணிக்கிறவர் எவரோ, அவர்கள் அந்த ஜீவனைக் காணமாட்டார்கள். ஏனெனில் இறைவனுடைய கோபம் அவர்கள்மேல் நிலைத்திருக்கும்” என்றான். யோவா 5:24யோவா 1:121 தெச 5:9எபே 5:6யோவா 3:15-161 யோவா 5:10-13ரோம 1:17-18ரோம 5:9