லேவியரின் பட்டணங்கள்
அதன்பின் லேவி கோத்திரத்தின் குடும்பத் தலைவர்கள், ஆசாரியன் எலெயாசாரையும், நூனின் மகனாகிய யோசுவாவையும், மற்றும் இஸ்ரயேல் கோத்திரத் தலைவர்களையும் யோசு 14:1யோசு 17:4யோசு 19:51யாத் 6:14யாத் 6:25எண் 34:17-29 கானான் தேசத்தில் உள்ள சீலோ நகரில் சந்தித்தார்கள். அவர்கள், “யெகோவா மோசே மூலமாக நாங்கள் வசிப்பதற்குப் பட்டணங்களையும் எங்கள் மந்தைகளுக்கு மேய்ச்சல் நிலங்களையும் நீங்கள் கொடுக்கவேண்டும் எனக் கட்டளையிட்டிருந்தார்” என்று அவர்களுக்கு நினைவுபடுத்தினார்கள். யோசு 18:1எண் 35:2-81 தீமோ 5:17-18எசேக் 48:9-18கலா 6:6மத் 10:10
எனவே யெகோவா கட்டளையிட்டபடியே இஸ்ரயேலர், லேவியர்களுக்குத் தமது சொத்துரிமையில் இருந்து, பின்வரும் பட்டணங்களையும், மேய்ச்சல் நிலங்களையும் கொடுத்தார்கள். ஆதி 49:71 நாளாக 6:54-81உபா 33:8-10
முதலாவது சீட்டு வம்சம் வம்சமாக கோகாத்தியருக்கு விழுந்தது. ஆசாரியன் ஆரோனின் வழித்தோன்றிய லேவியருக்கு யூதா, சிமியோன், பென்யமீன் ஆகிய கோத்திரங்களின் பங்கில் இருந்து பதின்மூன்று பட்டணங்கள் வழங்கப்பட்டன. 1 நாளாக 6:54-60யோசு 21:8-19யோசு 24:33
கோகாத்தின் மற்ற வம்சங்களுக்கு, எப்பிராயீம், தாண், மனாசேயின் அரைக்கோத்திரம் ஆகிய வம்சங்களுக்கும் நியமித்த பகுதியிலிருந்து பத்துப் பட்டணங்கள் வழங்கப்பட்டன. யோசு 21:20-261 நாளாக 6:18-191 நாளாக 6:611 நாளாக 6:66-70யாத் 6:16-25ஆதி 46:11எண் 3:27
கெர்சோனின் வழித்தோன்றலுக்கு இசக்கார், ஆசேர், நப்தலி கோத்திரங்களிலும், பாசானில் தங்கிய மனாசேயின் அரைக் கோத்திரத்திலும் உள்ள வம்சங்களின் பங்கில் இருந்து பதின்மூன்று பட்டணங்கள் வழங்கப்பட்டன. யோசு 21:27-331 நாளாக 6:621 நாளாக 6:71-76யாத் 6:16-17எண் 3:21-22
மெராரி சந்ததிகள் வம்சம் வம்சமாக ரூபன், காத், செபுலோன் ஆகிய கோத்திரங்களிலிருந்து பன்னிரண்டு பட்டணங்களைப் பெற்றார்கள். யோசு 21:34-401 நாளாக 6:631 நாளாக 6:77-81யாத் 6:19எண் 3:20
யெகோவா மோசேயின் மூலம் கட்டளையிட்டபடியே, இஸ்ரயேல் மக்கள் இந்தப் பட்டணங்களையும், அவற்றின் மேய்ச்சல் நிலங்களையும் லேவியர்களுக்குக் கொடுத்தார்கள். யோசு 21:3யோசு 18:6எண் 32:2எண் 33:54எண் 35:3நீதி 16:33நீதி 18:18
யூதா, சிமியோன் கோத்திரங்களின் பங்கிலிருந்து கொடுக்கப்பட்ட பெயர்களின்படி பட்டணங்களாவன: 1 நாளாக 6:65யோசு 21:13-18 ஆரோனின் வழித்தோன்றல்களுக்கு முதல் சீட்டு விழுந்ததால் இப்பட்டணங்கள் அவர்களுக்கென ஒதுக்கப்பட்டன. இவர்கள் லேவி கோத்திரத்தில் கோகாத்தின் வம்சத்தைச் சேர்ந்தவர்கள். யோசு 21:4யாத் 6:18யாத் 6:20-26எண் 3:19எண் 3:2-4எண் 3:27எண் 4:2
இவ்விதமாக இஸ்ரயேலர் யூதாவின் மலைநாட்டிலுள்ள எப்ரோனையும் அதாவது கீரியாத் அர்பா அதைச் சுற்றியிருந்த மேய்ச்சல் நிலத்தையும் அவர்களுக்குக் கொடுத்தார்கள். அர்பா என்பவன் ஏனாக்கியரின் முற்பிதா. 1 நாளாக 6:55லூக் 1:392 சாமு 15:72 சாமு 2:1-32 சாமு 5:1-5ஆதி 23:2ஆதி 35:27நியாயாதி 1:10 ஆனால் அந்நகரைச் சுற்றியிருந்த வெளிநிலங்களையும், கிராமங்களையுமோ எப்புன்னேயின் மகனாகிய காலேபுக்குச் சொந்தமாகக் கொடுத்திருந்தார்கள். 1 நாளாக 6:55-57யோசு 14:13-15 இவ்வாறு ஆசாரியனான ஆரோனின் சந்ததிகளுக்கு கொலைக்குற்றம் சுமத்தப்பட்டவனுக்கு அடைக்கலப் பட்டணமாயிருந்த எப்ரோனைக் கொடுத்தார்கள். லிப்னா, யோசு 15:42யோசு 10:29யோசு 15:54யோசு 20:71 நாளாக 6:56-57ஏசா 37:8எண் 35:6 யாத்தீர், எஸ்தெமோவா, யோசு 15:48யோசு 15:501 சாமு 30:27-28 ஓலோன், தெபீர், யோசு 15:49யோசு 15:511 நாளாக 6:58யோசு 12:13 ஆயின், யுத்தா, பெத்ஷிமேஷ் ஆகிய பட்டணங்களையும் அத்துடன் அவற்றின் மேய்ச்சல் நிலங்களையும் கொடுத்தார்கள். யூதா, சிமியோன் கோத்திரத்திலிருந்து எல்லாமாக ஒன்பது பட்டணங்கள் வழங்கப்பட்டன. 1 நாளாக 6:59யோசு 15:10யோசு 15:551 சாமு 6:121 சாமு 6:9யோசு 15:42
பென்யமீன் கோத்திரத்தின் பங்கிலிருந்து யோசு 18:24-25யோசு 9:31 நாளாக 6:60
கிபியோன், கேபா, ஆனதோத், அல்மோன் ஆகிய நான்கு பட்டணங்களுடன் அவற்றின் மேய்ச்சல் நிலங்களையும் கொடுத்தான். 1 நாளாக 6:601 இராஜா 2:26ஏசா 10:30எரே 1:1
ஆரோனின் வழித்தோன்றலான ஆசாரியருக்கு மொத்தம் பதின்மூன்று பட்டணங்களும் அவற்றின் மேய்ச்சல் நிலங்களும் வழங்கப்பட்டன.
லேவியரான கோகாத்தின் வம்சத்தைச் சேர்ந்த பிறருக்கு எப்பிராயீம் கோத்திரத்தின் பங்கிலிருந்து பட்டணங்கள் வழங்கப்பட்டன. 1 நாளாக 6:66யோசு 21:5
எப்பிராயீம் மலைநாட்டில் கொலைக்குற்றம் சுமத்தப்பட்டவனுக்கு யோசு 20:71 நாளாக 6:671 இராஜா 12:11 இராஜா 9:15-17ஆதி 33:19நியாயாதி 9:1யோசு 16:10
அடைக்கலப் பட்டணமாயிருந்த சீகேம், கேசேர், கிப்சாயீம், பெத் ஓரோன் ஆகிய நான்கு பட்டணங்களுடன் அவற்றின் மேய்ச்சல் நிலங்களும் வழங்கப்பட்டன. 1 நாளாக 6:68யோசு 16:3யோசு 16:5யோசு 18:13-14
அதோடு தாண் கோத்திரத்தாரின் பங்கிலிருந்து யோசு 19:44-45
எல்தெக்கே, கிபெத்தோன், ஆயலோன், காத்ரிம்மோன் ஆகிய நான்கு பட்டணங்களுடன் அவற்றின் மேய்ச்சல் நிலங்களையும் பெற்றார்கள். 1 நாளாக 6:69யோசு 10:12யோசு 19:42
மனாசேயின் பாதிக் கோத்திரத்திலிருந்து நியாயாதி 5:19யோசு 17:11
தானா, காத்ரிம்மோன் ஆகிய இரு பட்டணங்களுடன் அவற்றின் மேய்ச்சல் நிலங்களையும் பெற்றார்கள்.
மேற்கூறிய பத்துப் பட்டணங்களும் அவற்றின் மேய்ச்சல் நிலங்களும் கோகாத்தியரின் வம்சங்களில் எஞ்சியோருக்கு வழங்கப்பட்டன.
லேவி கோத்திரத்தின் கெர்சோன் வம்சத்தினருக்கு 1 நாளாக 6:71உபா 1:4உபா 4:43யோசு 20:8
மனாசேயின் அரைக் கோத்திரத்திலிருந்து பாசானிலுள்ள கொலைக்குற்றம் சுமத்தப்பட்டவனுக்கு அடைக்கலப் பட்டணமான
கோலானும், பெயெஷ்தெராவுமான இரு பட்டணங்களும் அவற்றின் மேய்ச்சல் நிலங்களும் வழங்கப்பட்டன.
இசக்கார் கோத்திரத்தின் பங்கிலிருந்து 1 நாளாக 6:72-73யோசு 19:12
கிசோயோன் தாபேராத், யர்மூத், என்கன்னீம் ஆகிய நான்கு பட்டணங்களும் அவற்றின் மேய்ச்சல் நிலங்களும் வழங்கப்பட்டன. யோசு 10:23யோசு 10:3யோசு 12:11
ஆசேர் கோத்திரத்தின் பங்கிலிருந்து 1 நாளாக 6:74-75யோசு 19:25-28
மிஷாயால், அப்தோன், எல்காத், ரேகோப் ஆகிய நான்கு பட்டணங்களும் அவற்றின் மேய்ச்சல் நிலங்களும் கொடுக்கப்பட்டன. 1 நாளாக 6:75நியாயாதி 1:31நியாயாதி 18:21
நப்தலி கோத்திரத்திலிருந்து 1 நாளாக 6:76யோசு 20:7யோசு 19:35யோசு 19:37
கலிலேய பிரதேசத்தில் உள்ள கொலைக்குற்றம் சாட்டப்பட்டவனுக்கு அடைக்கலப் பட்டணமான கேதேஷ், அமோத்தோர், கர்தான் ஆகிய மூன்று பட்டணங்களும் அவற்றின் மேய்ச்சல் நிலங்களும் வழங்கப்பட்டன.
கெர்சோனிய வம்சங்களுக்கு மேய்ச்சல் நிலங்களோடு வழங்கப்பட்ட பட்டணங்கள் எல்லாம் பதின்மூன்றாக இருந்தன.
மற்ற லேவியர்களாகிய மெராரி வம்சங்களுக்குச் 1 நாளாக 6:77யோசு 12:22யோசு 19:11யோசு 19:15யோசு 21:7
செபுலோன் கோத்திரத்திலிருந்து
யொக்னீம், கர்தா, திம்னா, நகலால் ஆகிய நான்கு பட்டணங்களும் அவற்றின் மேய்ச்சல் நிலங்களும் வழங்கப்பட்டன.
ரூபனின் கோத்திரத்திலிருந்து யோசு 20:8உபா 4:431 நாளாக 6:78-79யோசு 13:18எண் 21:23
பேசேர், யாகாசா, கெதெமோத், மேபாகாத் ஆகிய நான்கு பட்டணங்களும் அவற்றின் மேய்ச்சல் நிலங்களும் வழங்கப்பட்டன.
காத் கோத்திரத்திலிருந்து ஆதி 32:21 நாளாக 6:801 இராஜா 22:32 சாமு 17:242 சாமு 19:32உபா 4:43யோசு 20:8
கீலேயாத்திலுள்ள கொலைக்குற்றம் சுமத்தப்பட்டவனுக்கு அடைக்கலப் பட்டணமான ராமோத், மகனாயீம் எஸ்போன், யாசேர் ஆகிய நான்கு பட்டணங்களும் அவற்றின் மேய்ச்சல் நிலங்களும் வழங்கப்பட்டன. 1 நாளாக 6:81ஏசா 16:8-9எரே 48:32யோசு 13:17யோசு 13:21எண் 21:26-30எண் 32:1எண் 32:3
லேவி கோத்திரத்தின் எஞ்சிய பகுதியினரான மெராரியர் வம்சங்களுக்கு வழங்கப்பட்ட பட்டணங்களின் எண்ணிக்கை பன்னிரண்டு ஆகும்.
இஸ்ரயேலரிடம் இருந்த நிலப்பரப்பில், மேய்ச்சல் நிலத்தோடு லேவியருக்கு கொடுக்கப்பட்ட பட்டணங்களின் எண்ணிக்கை எல்லாமாக நாற்பத்தெட்டாக இருந்தது. உபா 33:10ஆதி 49:7எண் 35:1-8 வழங்கப்பட்ட பட்டணங்கள் ஒவ்வொன்றைச் சுற்றிலும் மேய்ச்சல் நிலங்கள் இருந்தன. எல்லாப் பட்டணங்களும் அவ்வாறே அமைந்திருந்தன.
இவ்விதமாய் யெகோவா இஸ்ரயேலரின் முற்பிதாக்களுக்குக் கொடுப்பதாக வாக்களித்த எல்லா நிலங்களையும் இஸ்ரயேலருக்கு வழங்கினார். அவர்கள் அந்த நிலத்தை உரிமையாக்கி அங்கே குடியேறினார்கள். ஆதி 13:15யாத் 23:27-31ஆதி 28:4சங் 106:42-45சங் 44:3ஆதி 15:13-21உபா 11:31யாத் 3:8 யெகோவா இஸ்ரயேலரின் முற்பிதாக்களுக்கு ஆணையிட்டபடியே, அவர்களுக்கு நாற்புறமும் அமைதியைக் கொடுத்தார். அவர்களின் எதிரிகளில் ஒருவராயினும் அவர்களை எதிர்த்துநிற்க முடியவில்லை. ஏனெனில் எதிரிகள் அனைவரையும் யெகோவா அவர்களுடைய கையில் ஒப்படைத்தார். யோசு 11:23உபா 31:3-5எபி 4:9உபா 7:22-24யாத் 23:31யோசு 1:13யோசு 1:15யோசு 22:4 இஸ்ரயேலருக்கு யெகோவா வழங்கிய நல்வாக்குத்தத்தங்களில் ஒன்றாயினும் தவறிப்போகவில்லை. அவை ஒவ்வொன்றும் நிறைவேற்றப்பட்டன. 1 இராஜா 8:56யோசு 23:14-15எண் 23:191 தெச 5:241 கொரி 1:9எபி 6:18தீத் 1:2