இயேசுவின் வம்சவரலாறு
இயேசுகிறிஸ்துவின் வம்சவரலாறு; இவர் ஆபிரகாமின் வம்சத்தானாகிய தாவீதின் வம்சத்தினராவார். ஆதி 22:18ரோம 1:3கலா 3:16வெளி 22:16சங் 132:11எரே 23:5ஏசா 11:1ஏசா 9:6-7
ஆபிரகாம் ஈசாக்கின் தகப்பன், அப் 7:8ஆதி 21:2-5எபி 11:17-18ஆதி 25:26ஆதி 46:8-271 நாளாக 1:281 நாளாக 1:341 நாளாக 2:1-8
ஈசாக்கு யாக்கோபின் தகப்பன்,
யாக்கோபு யூதாவுக்கும் அவன் சகோதரர்களுக்கும் தகப்பன்,
யூதா பாரேஸுக்கும் சாராவுக்கும் தகப்பன், அவர்களின் தாய் தாமார், ஆதி 38:24-27ஆதி 38:29-30ஆதி 46:121 நாளாக 4:1ரூத் 4:18-22லூக் 3:33எண் 26:20-211 நாளாக 2:1-15
பாரேஸ் எஸ்ரோமுக்குத் தகப்பன்,
எஸ்ரோம் ஆராமுக்குத் தகப்பன்,
ஆராம் அம்மினதாபின் தகப்பன், 1 நாளாக 2:10-12எண் 1:7எண் 7:12எண் 2:3லூக் 3:32எண் 10:14எண் 7:17ரூத் 4:19-20
அம்மினதாப் நகசோனின் தகப்பன்,
நகசோன் சல்மோனின் தகப்பன்,
சல்மோன் போவாஸின் தகப்பன், போவாஸினுடைய தாய் ராகாப், ரூத் 1:16-17எபி 11:31யாக் 2:25யோசு 6:22-25ரூத் 1:22ரூத் 1:41 நாளாக 2:11-12ரூத் 4:21
போவாஸ் ஓபேத்தின் தகப்பன், ஓபேத்தினுடைய தாய் ரூத்,
ஓபேத் ஈசாயின் தகப்பன்,
ஈசாய் தாவீது அரசனுக்குத் தகப்பன். 1 இராஜா 15:51 சாமு 17:122 சாமு 12:24-252 சாமு 23:11 சாமு 16:12 சாமு 11:26-271 நாளாக 11:411 நாளாக 14:4
தாவீது சாலொமோனுக்குத் தகப்பன், இவனது தாய் உரியாவின் மனைவியாயிருந்தவள்.
சாலொமோன் ரெகொபெயாமுக்குத் தகப்பன், 2 நாளாக 14:1-151 நாளாக 3:10-141 இராஜா 15:8-231 இராஜா 11:431 இராஜா 14:312 நாளாக 12:12 நாளாக 13:72 நாளாக 9:31
ரெகொபெயாம் அபியாவுக்குத் தகப்பன்,
அபியா ஆசாவுக்குத் தகப்பன்,
ஆசா யோசபாத்தின் தகப்பன், 1 நாளாக 3:112 நாளாக 26:1-231 இராஜா 15:241 இராஜா 22:2-502 நாளாக 17:1-192 நாளாக 21:12இராஜா 14:212இராஜா 15:1-6
யோசபாத் யோராமுக்குத் தகப்பன்,
யோராம் உசியாவின் தகப்பன்,
உசியா யோதாமின் தகப்பன், 1 நாளாக 3:11-132 நாளாக 26:212 நாளாக 27:12இராஜா 15:322இராஜா 15:72இராஜா 18:1-20ஏசா 36:1-22ஏசா 7:1-13
யோதாம் ஆகாஸின் தகப்பன்,
ஆகாஸ் எசேக்கியாவின் தகப்பன்,
எசேக்கியா மனாசேயின் தகப்பன், 2 நாளாக 32:331 நாளாக 3:13-151 இராஜா 13:22இராஜா 20:212இராஜா 24:3-4எரே 1:2-3
மனாசே ஆமோனின் தகப்பன்,
ஆமோன் யோசியாவின் தகப்பன்,
யோசியா எகோனியாவுக்கும் அவன் சகோதரர்களுக்கும் தகப்பன். அக்காலத்தில் யூதர்கள் பாபிலோனுக்கு நாடுகடத்தப்பட்டார்கள். எரே 27:20எரே 52:11-15எரே 52:28-301 நாளாக 3:15-172 நாளாக 36:1-82 நாளாக 36:102 நாளாக 36:202இராஜா 23:31
பாபிலோனுக்கு நாடுகடத்தப்பட்டபின்: 1 நாளாக 3:17எஸ்றா 3:21 நாளாக 3:19-24ஆகா 1:14லூக் 3:272இராஜா 25:27எஸ்றா 5:2ஆகா 1:1
எகோனியா சலாத்தியேலுக்குத் தகப்பனானான்,
சலாத்தியேல் செருபாபேலுக்குத் தகப்பன்,
செருபாபேல் அபியூதுக்குத் தகப்பன்,
அபியூத் எலியாக்கீமுக்குத் தகப்பன்,
எலியாக்கீம் ஆசோருக்குத் தகப்பன்,
ஆசோர் சாதோக்கிற்குத் தகப்பன்,
சாதோக் ஆகீமிற்குத் தகப்பன்,
ஆகீம் எலியூத்திற்குத் தகப்பன்,
எலியூத் எலெயாசாருக்குத் தகப்பன்,
எலெயாசார் மாத்தானுக்குத் தகப்பன்,
மாத்தான் யாக்கோபுக்குத் தகப்பன்,
யாக்கோபு யோசேப்புக்குத் தகப்பன், யோசேப்பு மரியாளின் கணவன், மரியாளிடம் கிறிஸ்து 1 எனப்படுகிற இயேசு பிறந்தார். மத் 27:17யோவா 4:25லூக் 3:23லூக் 1:31-35மத் 27:22லூக் 1:27லூக் 2:10-11லூக் 2:4-5
இவ்வாறு ஆபிரகாமிலிருந்து தாவீதுவரை பதினான்கு தலைமுறைகளும், தாவீதிலிருந்து பாபிலோனுக்கு நாடுகடத்தப்படும்வரை பதினான்கு தலைமுறைகளும், பாபிலோனுக்கு நாடுகடத்தப்பட்டதில் இருந்து கிறிஸ்துவரை பதினான்கு தலைமுறைகளும் இருந்தன. மத் 1:11-122இராஜா 24:14எரே 27:20யோவா 1:41மத் 11:2
இயேசுகிறிஸ்துவின் பிறப்பு
இயேசுகிறிஸ்துவின் பிறப்பு இவ்வாறு நிகழ்ந்தது: இயேசுவின் தாய் மரியாள் யோசேப்பைத் திருமணம் செய்வதற்கென நிச்சயிக்கப்பட்டிருந்தாள். ஆனால் அவர்கள் ஒன்றுசேர்ந்து வாழும் முன்பே அவள் பரிசுத்த ஆவியினால் கருவுற்றிருந்தது தெரியவந்தது. கலா 4:4-5லூக் 1:27-38எபி 10:5யோபு 14:4ஆதி 3:15எபி 7:26யோபு 15:14லூக் 1:25 அவளது கணவன் யோசேப்பு ஒரு நீதிமானாயிருந்தான். எனவே அவளை மக்கள் முன்பு வெளிப்படையாக அவமானப்படுத்த விரும்பாமல், திருமண ஒப்பந்தத்தை இரகசியமாக முறித்துவிட நினைத்தான். உபா 22:21-24உபா 24:1-4யோவா 8:4-5மாற் 6:20ஆதி 38:24லேவி 20:10லூக் 2:25சங் 112:4-5
யோசேப்பு இவ்வாறு சிந்தித்துக் கொண்டிருந்தபோது, கர்த்தரின் தூதன் அவனுக்குக் கனவில் தோன்றி, “தாவீதின் மகனாகிய யோசேப்பே, நீ மரியாளை உனது மனைவியாக சேர்த்துக்கொள்ளத் தயங்காதே, ஏனெனில் அவள் பரிசுத்த ஆவியாலேயே கருவுற்றிருக்கிறாள். நீதி 3:5-6லூக் 1:19மத் 1:18யோவே 2:28லூக் 2:4மத் 2:19ஆதி 31:11ஏசா 26:3 அவள் ஒரு மகனைப் பெறுவாள்; நீ அவருக்கு, ‘இயேசு’ 2 என்று பெயரிட வேண்டும். ஏனெனில் அவர் தமது மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து இரட்சிப்பார்” என்றான். அப் 13:23அப் 4:12யோவா 1:291 யோவா 3:5கொலோ 1:20-23லூக் 2:21அப் 5:31லூக் 1:31
கர்த்தர் தமது இறைவாக்கினன் மூலமாகச் சொல்லியிருந்தது நிறைவேறவே இவை நடந்தன: லூக் 24:441 இராஜா 8:15மத் 2:23அப் 3:181 இராஜா 8:24எஸ்றா 1:1யோவா 17:12யோவா 18:9 “ஒரு கன்னிப்பெண் கர்ப்பவதியாகி ஒரு மகனைப் பெறுவாள். அவரை இம்மானுயேல் என அழைப்பார்கள்.” 3 இம்மானுயேல் என்பதன் அர்த்தம், “இறைவன் நம்மோடு இருக்கிறார்” என்பதே. ஏசா 7:14ஏசா 9:6-7சங் 46:11யோவா 1:14ஏசா 12:21 தீமோ 3:16சங் 46:7ரோம 1:3-4
யோசேப்பு நித்திரையை விட்டெழுந்ததும், கர்த்தரின் தூதன் தனக்குக் கட்டளையிட்டபடியே, மரியாளைத் தனது மனைவியாக வீட்டிற்குக் கூட்டிச்சென்றான். யாக் 2:21-26யோவா 15:14யாத் 40:16யாத் 40:27யாத் 40:32ஆதி 22:2-3எபி 11:7-8யோவா 2:5-8 ஆனால் அவள் ஒரு மகனைப் பெற்றெடுக்கும்வரை யோசேப்பு அவளுடன் சேரவில்லை. யோசேப்பு அவருக்கு இயேசு என்று பெயரிட்டான். லூக் 2:21யாத் 13:2யாத் 22:29லூக் 2:7மத் 1:21ரோம 8:29