இயேசு உயிர்த்தெழுதல்
ஓய்வுநாளின் மறுநாளான வாரத்தின் முதலாவது நாள் அதிகாலையில், மகதலேனா மரியாளும் மற்ற மரியாளும் கல்லறையைப் பார்க்கும்படி சென்றார்கள். மாற் 16:1-8யோவா 20:1-10லூக் 23:56மத் 27:56லூக் 24:22மத் 27:61
அப்பொழுது திடீரென ஒரு பெரிய பூமியதிர்ச்சி ஏற்பட்டது. கர்த்தரின் தூதன் ஒருவன் பரலோகத்திலிருந்து இறங்கி கல்லறைக்குப் போய், அதன் வாசற்கல்லைப் புரட்டித் தள்ளி, அதன்மேல் உட்கார்ந்திருந்தான்: இதனால் பயங்கரமான பூமி அதிர்ச்சி ஏற்பட்டது. அப் 16:26யோவா 20:12-13லூக் 24:2-5மாற் 16:3-51 தீமோ 3:16யோவா 20:1மத் 27:51-531 பேது 1:12 அவனுடைய தோற்றம் மின்னலைப் போல இருந்தது. அவனுடைய உடைகள் உறைபனியைப்போல் வெண்மையாய் இருந்தன. அப் 1:10மாற் 9:3மாற் 16:5யோவா 20:12வெளி 18:1மத் 17:2வெளி 1:14-16வெளி 10:1 காவல் செய்த அந்தக் காவலாளர்கள் மிகவும் பயமடைந்து நடுங்கிச் செத்தவர்கள் போலானார்கள். வெளி 1:17தானி 10:7அப் 16:29மத் 27:65-66மத் 28:11அப் 9:3-7யோபு 4:14சங் 48:6
அப்பொழுது இறைத்தூதன் அந்தப் பெண்களிடம், “பயப்படவேண்டாம். நீங்கள் சிலுவையில் அறையப்பட்ட இயேசுவைத் தேடுகிறீர்கள் என்று எனக்குத் தெரியும். எபி 1:14ஏசா 41:10வெளி 1:17-18லூக் 1:30லூக் 24:5தானி 10:12தானி 10:19ஏசா 35:4 அவர் இங்கே இல்லை; தாம் சொன்னதுபோலவே, அவர் உயிருடன் எழுந்துவிட்டார். அவர் கிடத்தப்பட்டிருந்த இடத்தை வந்து பாருங்கள்” என்றான். மாற் 16:6மத் 12:40லூக் 24:6-8மத் 16:21லூக் 24:23யோவா 20:4-9மத் 27:63லூக் 24:44 “நீங்கள் விரைவாகப் போய், அவருடைய சீடர்களிடம் சொல்லவேண்டியதாவது: ‘அவர் மரணத்திலிருந்து எழுந்துவிட்டார், உங்களுக்கு முன்பாக அவர் கலிலேயாவுக்குப் போகிறார். அங்கே நீங்கள் அவரைக் காண்பீர்கள்.’ இதோ நான் உங்களுக்கு அறிவித்தேன்” என்றும் சொன்னான். மத் 26:32லூக் 24:22-24மத் 28:10யோவா 16:4மாற் 16:7-8ஏசா 45:21யோவா 20:17-18யோவா 21:1-14
எனவே, அந்தப் பெண்கள் பயமடைந்தவர்களாகவும், மகிழ்ச்சி நிறைந்தவர்களாகவும் கல்லறையைவிட்டு விரைந்து, நடந்ததை சீடர்களிடம் சொல்லும்படி ஓடினார்கள். சங் 2:11மாற் 16:8லூக் 24:36-41யோவா 16:20எஸ்றா 3:12-13யோவா 16:22யோவா 20:20-21 ஆனால் திடீரென இயேசு அவர்களைச் சந்தித்து வாழ்த்தினார். அவர்களும் அவரிடமாய் வந்து, அவருடைய பாதங்களைப் பற்றிப்பிடித்து, அவரை வழிபட்டார்கள். மத் 28:17மத் 14:33யோவா 20:14-17யோவா 20:28லூக் 24:52யோவா 12:3வெளி 5:11-14லூக் 1:28 இயேசு அவர்களிடம், “பயப்படவேண்டாம். நீங்கள் போய், என் சகோதரரிடம் கலிலேயாவுக்குப் போகும்படி சொல்லுங்கள்; அங்கே அவர்கள் என்னைக் காண்பார்கள்” என்றார். ரோம 8:29யோவா 20:17மத் 28:7மத் 14:27மத் 28:5மாற் 16:7யோவா 6:20லூக் 24:36-38
காவலாளரின் அறிக்கை
அந்தப் பெண்கள் வழியில் போய்க்கொண்டிருக்கையில், அந்தக் காவலாளர்களில் சிலர் பட்டணத்திற்குள் போய், தலைமை ஆசாரியர்களிடம் நடந்த எல்லாவற்றையும் அறிவித்தார்கள். மத் 27:65-66மத் 28:4 தலைமை ஆசாரியர் யூதரின் தலைவர்களைச் சந்தித்து, திட்டம் ஒன்றைத் தீட்டினார்கள். அவர்கள் அந்தப் படை வீரர்களுக்கு ஒரு பெருந்தொகையான பணத்தைக் கொடுத்து, அப் 4:5-22அப் 5:40மத் 26:3-4மத் 27:1-2மத் 27:62-64அப் 5:33-34யோவா 11:47யோவா 12:10-11 “நீங்கள் போய், ‘இரவிலே நாங்கள் உறங்கிக் கொண்டிருக்கையில், அவருடைய சீடர்கள் வந்து அவரது உடலைத் திருடிச் சென்றுவிட்டார்கள்’ என்று சொல்லுங்கள். மத் 26:64 இந்தச் செய்தி ஆளுநனுக்கு எட்டினால், நாங்கள் அவனைச் சமாளித்து, உங்களுக்குப் பிரச்சனை ஏற்படாதபடி பார்த்துக் கொள்வோம்” என்றார்கள். மத் 27:2அப் 12:19 எனவே படைவீரர்களும் அந்தப் பணத்தைப் பெற்றுக்கொண்டு, தங்களுக்குக் கூறப்பட்டதையே சொன்னார்கள். இந்தக் கதை இந்நாள்வரை யூதர்கள் மத்தியில் பரவலாய் அறியப்பட்டிருக்கிறது. 1 தீமோ 6:10மத் 27:8மத் 26:15
முக்கிய பொறுப்பை ஒப்படைத்தல்
அப்பொழுது பதினொரு சீடர்களும் கலிலேயாவுக்குச் சென்றார்கள். அவர்கள் தாங்கள் போக வேண்டுமென்று இயேசுவினால் குறிப்பிட்டுச் சொல்லப்பட்டிருந்த மலைக்குச் சென்றார்கள். மத் 26:32மத் 28:10மத் 28:7மாற் 16:14அப் 1:13-261 கொரி 15:15யோவா 6:70 அவர்கள் இயேசுவைக் கண்டபோது, அவரை வழிபட்டார்கள்; சிலரோ சந்தேகப்பட்டார்கள். சங் 45:11யோவா 5:23மத் 16:28மத் 28:9சங் 2:121 கொரி 15:6 பின்பு இயேசு அவர்களிடம் வந்து, “வானத்திலும், பூமியிலும் எல்லா அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கின்றது. யோவா 3:351 பேது 3:22மத் 11:27எபே 1:20-22எபி 2:81 கொரி 15:27தானி 7:13-14யோவா 17:2 எனவே நீங்கள் புறப்பட்டுப்போய் எல்லா நாட்டின் மக்களையும் எனக்குச் சீடராக்குங்கள். பிதா, மகன், பரிசுத்த ஆவியானவருடைய பெயரில் அவர்களுக்கு திருமுழுக்கு கொடுத்து, மாற் 16:15-16அப் 2:38-39அப் 1:8லூக் 24:47-48அப் 19:3-5ஏசா 49:6கலா 3:27அப் 10:47-48 நான் உங்களுக்குக் கட்டளையிட்ட எல்லாவற்றிற்கும் கீழ்ப்படியும்படி அவர்களுக்குப் போதித்து, அவர்களைச் சீடராக்குங்கள். இந்த உலகம் முடியும்வரை, நான் எப்பொழுதும் நிச்சயமாகவே உங்களுடனேகூட இருக்கிறேன்!” என்றார். ஏசா 41:10யோசு 1:5அப் 18:9-10யோவா 14:18-23சங் 46:71 யோவா 2:3-4ஆதி 39:2-3மத் 18:20